நன்றி கெட்ட மகன்

தோமாஸ் தம் மனைவியுடன் தோட்டத்தில் வசித்தார். அவர்களுக்கு ஒரே மகன். தங்கள் உயிரைவிட அவனை அதிகமாக அவர்கள் நேசித்தார்கள். அவர்களுக்கு எல்லாம் அவனே. தங்களிடமிருந்ததையெல்லாம் அவனுக்காகவே அவர்கள் வைத்திருந்தார்கள்.

அவன் பெயர் அருள். அருள் பிறந்ததிலிருந்து அவனது வருங்கால வாழ்வைப்பற்றி அவர்கள் ஆகா சக் கோட்டை கட்டுவார்கள். அவன் பிரசித்தி பெற்ற வைத்தியனாகலாம், வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் மாகாண நீதிபதியாகலாம், ஏன், நாட் தின் தலைவராகலாம், என பகற் கனவு காண்பார்கள். இந்தப் பதவிகளுக்கு அவனைத் தயாரிக்கும் வண்ணம் தங்களால் இயன்ற அளவு அவனுக்கு உயர்ந்த கல்விப் பயிற்சியளிக்க அவர்கள் தீர்மானித்தார்கள்.

வெளியூரில் கல்வி கற்க அவனை அனுப்பப் பணம் வேண்டும். அவர்களது தோட்டத்தில் கிடைத்த வரும்படி அதற்குப்பற்றாது. பணம் சேர்த்து வைக்க இருவரும் உறுதி செய்தனர்.

ஒரு நாள் மாலை நேரத்தில் இருவரும் நெருப்பின ருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். "அருளுக்காக நான் ஏதாவது பரித்தியாகம் செய்ய வேண்டாமா? சுருட்டுப் புகைப்பதை நான் விட்டு விடப்போகிறேன். சுருட்டு வாங்க ஆசை வரும் பொழுதெல்லாம் காசை ஒரு பெட்டியில் போட்டு அருளின் கல்லூரிப் படிப்புக்காக சேர்த்து வைக்கப் போகிறேன்'' எனத் தந்தை மொழிந்தார்.

இதைக் கேட்ட தாய் திகைத்தாள். தந்தையின் தியாக குணத்தைக் கண்டு மகிழ்ந்தாள். தானும் அருளுக்காக ஏதாவது செய்யவேண்டாமா? சிறிது யோசித்துப் பார்த்தபின் "நானும் தம்பிக்காகச் சேர்த்து வைக்கப்போகிறேன். இனி நான் தேர் அருந்தமாட்டேன். தேயிலைத் தூள் வாங்க ஆசை வரும் பொழுதெல்லாம் அந்தப் பணத்தைப் பெட்டி ல்யி போட்டு வைப்பேன்" என்றனள்

இருவரும் தாங்கள் சொன்னது போலவே செய் தார்கள். பல ஆண்டுகள் கடந்தன. இருவரும் சிரமப்பட்டு உழைத்தார்கள். பொறுமையாக உழைத் தார்கள். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேமித்தார் கள். முணுமுணுக்கவில்லை. அவர்களது ஏக திரவிய மான அருளுக்காக, அவர்களது சந்தோஷமான மக னுக்காக ஆர்வத்துடன் சேர்த்துவைத்தார்கள். 5 அருள் கல்லூரிக்கு செல்லவேண்டிய நாள் இறுதி யாக வந்தது. அழகிய புத்தாடை அவனுக்குச் செய்து கொடுத்தார்கள். அவன் இருந்த அழகைப்பார்த்து இருவரும் பெருமை கொண்டார்கள். மகனைப் பிரிய வேண்டுமே எனத் தாய் கண்ணீர் வடித்தாள். தந்தை யோ துக்கத்தை மறைத்துக் கொண்டார். ரெயில் வண்டி வந்தது. அவன் ஏறுமுன் அவனை முத்தமிட்டு வழியனுப்பிவைத்தார்கள். பிரிதல் மிகத் துயரத்தைக் கொடுத்தது. ஏனெனில் ஐந்தாண்டுகளாக அவனைப் பார்க்கமுடியாது. சிறுவனது கல்லூரிச் செலவுக்கு அதிக பணம் வேண்டும். அவனைப் பார்க்கப்போவ தாக இருந்தால் மேலும் பணம் தேவை; பணத்துக்கு எங்கு செல்வது?

ஓர் ஆண்டு முடிந்தது. மகனைப் பார்க்கத் தந் தைக்கு ஆசை உண்டாயிற்று. வழிச் செலவுக்குப் பணம் தேவை. அந்தப் பணத்தை அனுப்பினால் அருளுக்கு ஒரு மாத சாப்பாட்டுக்கு அது போதுமே எனத் தந்தை நினைத்தார். மகனைப் பார்க்கச் செல்ல வில்லை. இன்னொரு வருடம் முடிந்தது. தந்தையால் ஆசையை அடக்க முடியவில்லை. “பையனைப் போய்ப் பார்க்கவேண்டும். அவன் சென்று இரு ஆண்டுக ளாகிவிட்டன. இன்னொரு ஆண்டு காத்திருக்க முடி யாது'' எனத்தந்தை கூறினார். "பையனது செல வுக்குப் பணம் வேண்டுமே'' எளத் தாய் நினை வூட்டினாள்.

"அதை நான் அறிவேன். எனக்கு ஒன்றும் தேவையில்லை. சாப்பிட எனக்கு ஏதாவது கட்டிக் கொடு. நமது குதிரை வண்டி இருக்கிறது. இர வில் எங்காவது படுத்து உறங்குவேன். வேறு ஒன் றும் வேண்டாம்.'' என அவர் மொழிந்தார். இது முடியாத காரியம் எனத் தாய் சாதித்தாள். அருளைப் பார்ப்பதற்கு எதையும் செய்ய நான் தயார் என அவர் சொல்லிப் புறப்பட்டார்.

பல குன்றுகளைக் கடக்க வேண்டியிருந்தது. பசியும் களைப்பும் அவரை வாட்டும். இதையெல் லாம் அவர் பொருட்படுத்தவில்லை. மகனைப் பார்க் கும் ஆசையால் தள்ளப்பட்டார்; ஊர் சமீபிக்க அவ ரது மகிழ்ச்சி அதிகரித்தது. அதிக உற்சாகத்து டன் வண்டியை ஓட்டிச் சென்றார்.

இவ்விதம் அநேக நாட்களாகப் பிரயாணம் செய்த பின், அருள் கற்று வந்த கல்லூரிப் பட்ட ணத்தை அடைந்தார், கல்லூரிக் கட்டடம் தூரத் தில் காட்சியளித்தது. குதிரையும் உணர்ந்தாப் போல் குதூகலத்துடன் விரைவாகச் சென்றது. இனிச் சிறிது நேரத்தில் தம் செல்வ மகனைச் சந்திக் கப் போகிறதை நினைத்து அவரது உள்ளம் அக்க ளித்தது.

தோமாஸ் ஓட்டிச் சென்ற வண்டி பழங்காலத்து வாகனம். தெருவில் நடந்து சென்றவர்கள் அவரது நாட்டுப்புற உடையையும் வண்டியையும் பார்த்து சிரித்துக்கொண்டு சென்றனர். அதை அவர் சட்டைபண்ணவில்லை. தன் மகனையே அவர் நினைத் துக்கொண்டிருந்தார். அவனைக் காண்பதால் ஏற்ப டும் மகிழ்ச்சியே அவர் கண் முன் நின்றது.

அருள் எங்கே? தந்தை தம் கரைத்து தலையை அங்குமிங்கும் திருப்பித் தம் மகனைத் தேடி மெத் துப் பேசிக்கொண்டும், மகிழ்ந்து பாடிக்கொண்டும், சென்ற வாலிபர்களிடையே தம் மகனைத் தேடினார், காணோம்.

சற்று பின் தூரத்தில் அருள் வருவதைக் கண் டார். தன் சிநேகிதர்களுடனும் சிநேகிதிகளுடனும் உல்லாசமாய்ப் பேசிக்கொண்டு கல்லூரி வாசல் வழி யாக அவன் வந்துகொண்டிருந்தான். வளர்ந்திருந் தான்; அழகுடன் தோன்றினான். அவனைக் கண்டு தந்தை பெருமிதம் கொண்டார். தம் மகன் பெரிய ஆளாகிவிட்டான். அவனுக்காக இன்னும் ஆயிரம் பரித்தியாகங்கள் செய்தாலும் தகும் என நினைத்தார்

"அருள்!" எனக் கத்தினார். வாலிப ஆண் பெண் களது சிரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மேலே கிழவனது சத்தம் கேட்டது. தந்தையின் நேசத்துடன், “அருள்!” எனக் கத்தினார். எல்லோரும் அந்தச் சத் தத்தைக் கேட்டார்கள். அந்தப் பழங்காலத்து வண்டியைக் கல்லூரியினருகிற் பார்த்ததும் அருளின் நண்பர்கள் சத்தமாகச் சிரித்தார்கள்.

அருளும் தந்தையின் சத்தத்தைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். அவனது முகம் வெளுத்தது. தந்தையைக் கண்டு அவன் புன்முறுவல் காண்பிக்க வில்லை. அவரைக் கண்டு வெட்கப்பட்டான். தாழ்ந்த நிலையிலிருந்து தான் வந்தவன் எனத் தன் நண்பர்கள் அறிய அவன் விரும்பவில்லை.

"அருள், என் மகனே, நான் யார் தெரியவில்லை யா?'' என அவர் கெஞ்சும் குரலில் கேட்டார். அரு ளுக்குத் தெரிந்தது, எனினும் பிறர் அதை அறிவதை அவன் வெறுத்தான். "ஆள் தெரியாமற் பேசுகிறீர் கள். இந்த ஓட்டை வண்டியைத் திருப்பிக்கொண்டு புறப்படவும் ” என அவன் பதிலளித்தான்.

தந்தையின் உள்ளம் நொறுங்கியது. அவர் முகம் செத்தவர்களது முகம் போலாயிற்று. வண்டியைத் திருப்பினார். மாணவர்கள் சத்தமாய்ப் பரிகசித்தனர். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஊரை நோக்கி வண்டியை விட்டார்.

அவர் வருவதை மனைவி பார்த்தாள். ஏதோ தவறு நடந்திருக்கிறது என உடனே அறிந்து கொண்டாள். இருபது வயது அதிகமானாப்போல் அவர் காணப்பட்டார்.

பெரியவர் வண்டியிலிருந்து இறங்கினார். ஒரு வார்த்தை முதலாய் மனைவியிடம் சொல்லாது வீட்டில் நுழைந்து தாம் வழக்கமாய் உட்காரும் நாற் காலியில் அமர்ந்தார். பட்டினியாய்க்கிடந்து மகனுக் காகச் சேர்த்து வந்த பணத்திற்கென வைக்கப்பட்டி ருந்த பெட்டி அவர் கண்ணிற்பட்டது. அவர் செய்து வந்த பரித்தியாகங்கள் யாவும் அவர் கண்முன் வந்தன.

ஏதோ விசனத்துக்குரிய காரியம் நடந்திருக்கிற தென அறிந்த மனைவி, சத்தமின்றி வீட்டு வேலை களைச் செய்து கணவனுக்கு உணவு தயாரிக்கலானாள். சீக்கிரம் தன் கணவர் தன்னிடம் ஏதாவது சொல்லு வார் என நினைத்தாள்.

திடீரென பயங்கரச் சத்தம் ஒன்று அவளது காதில் விழுந்தது. அதன் பின் கவலைக்குரல் ஒன்று. ஏதோ பொத்தென்று கீழே விழுந்தாப் போன்று சத் தமும் கேட்டது. தன் கணவர் இருந்த இடத்துக்கு ஓடிப் போய்ப் பார்த்தாள். அவர் உயிரற்ற பிரேத மாய்க் கீழே கிடந்தார். “உடைந்த உள்ளத்துடன் மடிந்தார். நன்றியின்மையால் கொல்லப்பட்டார்'' என அண்டை அயலார் மொழிந்தார்கள்.

இது விசனத்துக்குரிய சம்பவம். ஆனால் இது அடிக்கடி நடக்கும் காரியமே. பெற்றோரின் உருக்க மான அன்பையும் பொறுமை நிறை தியாகங்களையும் பிள்ளைகள் மறக்கிறார்கள், பெற்றோரை நிந்திக்கி றார்கள்.

உன் பெற்றோரை நீ எவ்விதம் நடத்துகிறாய்? அவர்களைப் பற்றி நீ எப்போதாவது வெட்கப்பட்ட துண்டா? அவர்கள் உன் மீது பொழிந்துள்ள நேசத் துக்கு நன்றியாக அவர்களுக்கு நீ போதிய மரியாதை செய்கிறாயா? உனக்காக அவர்கள் எவ்வளவு பணம் செலவழித்திருக்கின்றனர்? அவ்விதம் செலவழித் திராவிட்டால் அவர்கள் எத்தனை வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம் என நினைத்துப் பார்க்கிறாயா?

அவர்கள் உயிருடனிருக்கையிலும் உயிர் துறந்த பின்னரும் அவர்களை நேசிப்பாயாக. “உன் தேவ னாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப் போகிற பூமி யிலே நீ நெடுநாள் வாழும் பொருட்டு உனது தந்தை யையும் தாயையும் வந்தித்து வா' (கலாத். 2012)