வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - அணிந்துரை

பாதை செய்வதற்கு உதவி செய்யும் வண்ணம், திருத்தலப் பேராலயத்திலிருந்து மாதா குளத்திற்குச் செல்லும் சாலையின் ஒரு மருங்கில் பாடுகளின் நிலைகள், ஆள் உயர அமைப்பில் நிறுவப்பட்டுள்ளன. அதன் மறு மருங்கே, திருப்பயணிகள் மாதா குளத்திலிருந்து திரும்பித் திருத்தலத்திற்கு வரும்போது, செபமாலை செய்வதற்கு ஏற்ற வண்ணம் தேவ இரகசியங்கள் அடங்கிய பதினைந்து மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதுமை திருத்தலத்திற்குக் கத்தோலிக்கர் மட்டுமன்றி, நம்பிக்கையுடைய பிற சமயத்தினரும் ஒவ்வொரு நாளும் குறிப்பாகத் திருவிழா நாட்களிலும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடக்கும் நவநாட்களிலும் திரண்டு வருகிறார்கள்.

பயணிகளுக்குப் பெரும் வகையில் உதவும் என்ற எண்ணத்தோடு திருத்தல வரலாறு, அதன் வளர்ச்சி, விழா, அங்கே நடத்தப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிகள், தரிசிக்க வேண்டிய இடங்கள், பயணிகளின் வசதிகள் முதலியவை இச்சிறு நூலில், அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சிறப்பாக புனித கன்னிமரிக்கும், அவள் மகன் இறை இயேசுவுக்கும் உள்ள உறவைப் பற்றியும், அவரிடமிருந்து அவள் எண்ணற்ற நன்மை களைத் தம் பக்தர்களுக்கு வாரி வழங்குவது பற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆரோக்கிய அன்னை ஏன் இந்தத் திருத்தலத்தில் வணக்கத்துக்குரியவளாக விளங்குகிறாள் என்பது மற்ற சமய நோக்குடையவர்களுக்கு விளங்காத புதிராக இருக்கலாம். இவற்றிற்கெல்லாம் இந்த நூலானது தெளிவு தரும் வகையில் அமைந்துள்ளது.

'புனித ஆரோக்கிய அன்னை' என்று அன்பொழுக அழைக்கப்படும் புனித கன்னிமரியின் பக்தி, இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் வளர்வதற்கு, இந்தப் புத்தாக்கம் பெற்ற பதிப்பான 'வேளாங்கண்ணி திருத்தல வரலாறு' ஒரு சிறந்த வரமாக அன்னையின் பக்தர்களுக்கு அமையும் என்று நம்புகிறேன்.


இரா. ஆரோக்கியசாமி சுந்தரம்,
தஞ்சை ஆயர்.
தஞ்சாவூர், 
25-3-1981.