ஒறுத்தலுக்குத் தேவைப்படும் பண்புகள்!

196. அரை மனதான ஒறுத்தலோ, அல்லது ஒரு சில நாட்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒறுத்தலோ ஞானமானவரைத் திருப்திப்படுத்துவதில்லை. மாறாக, அவர் தம்மையே நமக்குத் தருவதற்கு முழுமையானதும், தொடர்ச்சியானதும், தைரியமுள்ள தும், விவேகமுள்ளதுமான ஒறுத்தல் அவருக்குத் தேவைப் படுகிறது.

நாம் ஞானமானவரைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டுமானால் 

197.1. அப்போஸ்தலர்களும், சீடர்களும், ஆதிக் கிறீஸ்தவர்களும் செய்தது போல, நாமும் நம் உலக உடமைகளை உண்மையாகவே துறக்க வேண்டும் -- இதுவே ஞானமானவரை சுதந்தரித்துக் கொள்ள அனைத்திலும் அதிக வேகமானதும், அனைத்திலும் சிறந்ததும், அனைத்திலும் அதிக நிச்சயமானது மாகிய வழியாக இருக்கிறது -- அல்லது குறைந்த பட்சம் நாம் நம் இருதயத்தை உலகப் பொருட்களின் மீது பற்றற்றதாக ஆக்க வேண்டும், அவை நமக்குச் சொந்தமில்லை என்பது போல அவற்றை நாம் கொண்டிருக்க வேண்டும் (1கொரி.7.30). இன்னும் அதிகம் பெற்றுக் கொள்ள ஆவலுள்ளவர்களாகவோ, அவற்றில் எதையும் இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளக் கவலையுள்ள வர்களாகவும் இருக்கக் கூடாது. அவற்றை இழக்க நேரிட்டால் முறையிடவோ, கவலைப்படவோ கூடாது. இது மனித சுபாவத்திற்கு மிகக் கடினமான காரியம். 

198. 2. நம் உடைகளிலும், தட்டுமுட்டுப்பொருட்களிலும், நம் வசிப்பிடங்களிலும் உலகத்தின் படாடோபமான ஆடம்பரப் பாணிகளை நாம் பின்பற்றக் கூடாது. சுவையான உணவுகள் அல்லது மற்ற உலகத்தன்மையான பழக்கங்களிலும், வாழ்க்கை முறைகளிலும் நாம் ஆர்வம் கொள்ளக் கூடாது. "நீங்கள் இவ்வுலகத்திற்கு ஏற்றபடி நடக்கக்கூடாது" (உரோ 12 2). இதை அனுசரிப்பது அதிக அவசியமானது. 

199. 3. நாம் உலகத்தின் பொய்யான வாழ்க்கை விதிகளை நம்பவோ, பின்பற்றவோ, அல்லது உலகத்தன்மையான மனிதர் களைப் போல சிந்திக்கவோ, பேசவோ, அல்லது செயல்படவோ கூடாது. இருள் ஒளிக்கும், மரணம் வாழ்வுக்கும் எதிராயிருப்பது போலவே, உலகத்தின் கொள்கை அவதரித்த ஞானமானவரின் கொள்கைக்கு எதிரானதாயிருக்கிறது. அவர்களுடைய கருத்துக் களையும், வார்த்தைகளையும் கவனமாக உற்று நோக்கு அவர்கள் நம் பரிசுத்த வேதத்தின் மாபெரும் சாத்தியங்கள் அனைத்தைப் பற்றியும் விமர்சனக் கண்களோடு பார்க்கிறார்கள், சிந்திக் கிறார்கள், பேசுகிறார்கள். அவர்கள் வெட்கங்கெட்ட முறையில் வெளிப்படையாகப் பொய் பேசுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் தங்கள் பொய்மையை உண்மை யின் தோற்றம் ஒன்றைக் கொண்டு மறைக்கிறார்கள். தாங்கள் உண்மையற்றவர்களாக இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை, என்றாலும் அவர்கள் பொய் பேசுகிறார்கள். பொதுவில் அவர்கள் பாவத்தை வெளிப்படையாக போதிப்பதில்லை. ஆயினும் அது புண்ணியத் தன்மையுள்ளது. அல்லது குற்றமற்றது, அல்லது அது அலட்சியம் செய்யப்பட வேண்டிய, அல்லது அற்பமான விளை வைக் கொண்டுள்ள காரியம் என்பது போல அவர்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். பாவத்தின் அருவருப்பையும், பொய்மை யையுமய் மறைக்கும்படி பசாசு உலகத்திற்குக் கற்றுத் தந்துள்ள இந்த வெளிவேடம்தான் அர்ச். அருளப்பர் பேசுகிற தீமையாக இருக்கிறது. "உலகம் முழுவதும் தின்மையில் அமிழ்ந்தியிருக் கிறது" (1 அரு.5.19) என்று அவர் கூறிய போது இந்தத் தீமையைப் பற்றித்தான் பேசுகிறார். இன்று நிலைமை முன் எப்போதையும் விட அதிக மோசமாக இருக்கிறது. 

200. 4. நாம் நம்மால் முடிந்த வரை, மற்றவர்களின் தோழமை யிலிருந்து விலகியோட வேண்டும். தீமை பயப்பதும், ஆபத் தானதுமான உலகத்தன்மையான மனிதர்களின் தோழமையில் இருந்து மட்டுமல்ல, மாறாக வேதம் சார்ந்த மனிதர்களின் நட்பு பயனற்றதாகவும், கால விரயமாகவும் இருக்கும் போது, அவர் களுடைய தோழமையிலிருந்தும் நாம் விலகியோட வேண்டும். ஞானமுள்ளவனாகவும், உத்தமனாகவும் ஆக விரும்புபவன் எவனும் நித்திய ஞானமானவர் அர்ச். ஆர்செனியுஸுக்குத் தந்த "விலகியோடு , ஒளிந்து கொள், மவுனமாயிரு" என்ற இந்த மூன்று பொன்னான ஆலோசனைகளை நடைமுறையில் அனுசரிக்க வேண்டும். மிகப் பெரும் புனிதர்கள் செய்தது போல, மனிதர் களின் தோழமையிலிருந்து முடிந்த வரை தூரமாக விலகியோடு. உன் ஜீவியம் கிறீஸ்துநாதரோடு, சர்வேசுரனில் மறைந்திருப்பதாக (கொலோ. 3.3). சுருங்கச் சொல்வதானால், தேவ ஞானமானவ ரோடு உரையாடும்படி மற்றவர்களோடு மவுனமாயிரு. "மவுனமா யிருக்கத் தெரிந்தவன் ஞானமுள்ள மனிதன்' (சர்வப் 20:5).

201. 5. ஞானத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டு மானால் நாம் நம் சரீரத்தை ஒறுக்க வேண்டும். நம் உடல் நோய் களைப் பொறுமையோடு ஏற்று தாங்கிக்கொள்வது, கால நிலை களின் அசௌகரியங்கள், மற்ற மனிதர்களின் செயல்களால் விளையும் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்வது. இவற்றால் மட்டுமின்றி, நாமாகவே முன்வந்து, உபவாசங்கள், கண்விழிப்புக்கள், பரிசுத்த வனவாசிகள் அனுசரித்த கடுமையான தபசுகள் போன்ற சில தவமுயற்சிகளையும், ஒறுத்தல்களையும், ஒழுங்குகளையும் அனுசரிக்க வேண்டும்.

அதைச் செய்ய தைரியம் தேவைப்படுகிறது. ஏனெனில் சரீரம் இயல்பாகவே தன்னைத்தானே அளவுக்கு அதிகமாக நேசிக்கிறது. உலகமானது, சரீர ரீதியான தவ முயற்சிகள் அனைத்தும் பொருளற்றவை என்று எண்ணி, அவற்றைப் புறக்கணிக்கிறது. புனிதர்களின் கடும் தவமுயற்சிகளை மக்கள் பயிற்சி செய்யாதபடி அவர்களைத் தடுப்பதற்கு உலகம் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறது. சொல்கிறது. ஒவ்வொரு புனிதரைப் பற்றியும் கூடக்குறைய , "ஞானமுள்ளவன் அல்லது புனிதமான மனிதன் கண்விழிப்புகள், உபவாசங்கள் மற்றும் ஒழுங்குகளைக் கொண்டும், குளிர், நிர்வாணம், மற்றும் ஒவ்வொரு வகையான கடுந்தவ முயற்சியையும் தாங்கியும், தன் சரீரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறான், அவன் இவ்வுலகில் தன் சரீரத்திற்கு எந்த ஓய்வும் தருவதில்லை என்று உடன்படிக்கை செய்திருக்கிறான்" (அர்ச். அல்காந்தரா இராயப்பருக்குரிய உரோமை கட்டளை ஜெபம்) என்ற வார்த்தை களைச் சொல்லலாம். புனிதர்கள் அனைவரும் மாம்சமாகிய கறைபட்ட ஆடையின் எதிரிகள் என்று அவர்களைப் பற்றிப் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் (யூதா 23). 

202. 6. வெளியரங்கமானதும், தானே முன்வந்து ஏற்றுக்கொள் வதுமாகிய ஒறுத்தல் பலனுள்ளதாக இருப்பதற்கு அத்துடன் சேர்த்து, பரிசுத்த கீழ்ப்படிதலைக் கொண்டு மனிதத் தீர்மானமும் சித்தமும் ஒறுக்கப்படுவதும் அவசியம். ஏனெனில் இந்தக் கீழ்ப்படிதல் இன்றி, ஒறுத்தல்கள் அனைத்தும் சுய சித்தத்தால் கறைப்படுத்தப்பட்டு, பெரும்பாலும் கடவுளை விட பசாசுக்கே அதிகப் பிரியமுள்ளவையாக மாறிப் போகின்றன.

அதனால் தான் ஆலோசனையைத் தேடாமல் எந்த விதமான விதிவிலக்கான ஒறுத்தலும் யாராலும் செய்யப்படக் கூடாது. "ஞானமாகிய நான் தேவ ஆலோசனையில் வசிக்கின்றேன்" (பழ. 812). "தன் மன வலிமையில் நம்பிக்கையாயிருக்கிறவன் மதியீனனாயிருக்கிறான்" (பழ. 28. 26). 'விவேகமுள்ளவன் ஆலோசனையோடு அனைத்தையும் செய்கிறான்" (பழ. 13.16). "மகனே, யோசியாமல் ஒன்றும் செய்யாதே. அப்போது செய்த பின் வருத்தப்பட மாட்டாய்" (சர்வப். 32.24). "ஞானமுள்ளவ னிடத்தில் எப்போதும் ஆலோசனை கேள்" (தோபி. 4 19).

பரிசுத்த கீழ்ப்படிதலைக் கொண்டு, எல்லாவற்றையும் கெடுக்கும் சுய நேசத்தை நாம் அகற்றலாம். கீழ்ப்படிதலால் நம் மிகச் சிறிய செயல்களும் கூட பேறுபலன் உள்ளவை ஆகின்றன. அது பசாசின் மாயத் தோற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நம் எதிரிகளை வெற்றி கொள்ள நமக்கு உதவுகிறது. நம்மை நிச்சயமாக, இரட்சணியத்தின் துறைமுகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறது.

நான் இப்போதுதான் சொன்ன அனைத்தும் இந்த ஒரே பெரும் ஆலோசனையில் அடங்கியுள்ளன "எல்லாக் காரியங் களையும் விட்டு விலகு அப்போது அவதரித்த ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதரைக் கண்டுபிடிப்பதன் மூலம் எல்லாக் காரியங்களையும் கண்டுபிடிப்பாய் " (கிறீஸ்துநாதர் அனுசாரம், மூன்றாம் பிரிவு, அத். 32, எண் 1).