இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார்கள்

211. இறுதியாக, இவ்வன்பு அன்னை தன் உண்மையுள்ள பக்தர்களுக்குச் செய்யும் ஐந்தாவதும் மிகப் பெரியது மான உதவி என்னவென்றால், அவர்களுக்காக தன் குமாரனிடம் பரிந்து பேசுவதும். தன் மன்றாட்டுக்களால் அவரைச் சாந்தப்படுத்துவதும், அவர்களை மிக நெருக்கமாக அவருடன் ஐக்கியமாக்குவதும், அந்த ஐக்கியத்தில் அவர்கள் - நீடிக்கச் செய்வதுமாகும். ரபேக்காள் யாக்கோபை தன் தந்தையின் கட்டிலை நெருங்கிச் செல்லுமாறு கூறினாள். பிதாப் பிதாவான ஈசாக் அவனைத் தொட்டுப் பார்த்தார். அரவணைத்தார். மகிழ்ச்சியோடு அவனை முத்தமிடவும் செய்தார். யாக் கோபு தனக்குக் கொண்டு வந்திருந்த சுவையுள்ள உண வால் திருப்தியும் பூரிப்பும் அடைந்திருந்தார். பின் அவனுடைய ஆடையின் அரிய நறுமணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் முகர்ந்தவராய் "இதோ என் குமாரனின் மணமானது ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போலிருக்கிறது.'' (ஆதி. 27, 27] என்று கூறினார்! யாக்கோபின் தந்தையின் இருதயத்தை மகிழ்வித்த நறு மண வாசனை - அந்த செழிப்புற்ற விளை நிலம் வேறு எது வுமல்ல , மரியாயின் பேறு பலன்கள் புண்ணியங்கள் ஆகியவற்றின் நறுமண வாசனையும், பிதாவாகிய சர்வே சுரன் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் கோதுமை மணி யான தமது ஏக திருக்குமாரனை விதைத்த மிகவும் செழிப்புள்ள வரப்பிரசாத விளை நிலமுமாகிய மரியா யேயாம்.

எதிர் கால உலகின் தந்தையான (இசை. 9, 6) சேசு கிறீஸ்து நாதருக்கு , மரியாயின் நறுமணத்தால் வாசனை யூட்டப் பெற்ற ஒரு குழந்தை எவ்வளவு பிரியமாயிருக் கும்! அக்குழந்தை எவ்வளவு உத்தம விதமாய் அவருடன் ஐக்கியமடைந்து விடும்! இதுபற்றி நாம் முன்பே விரிவாக உரைத்துள்ளோம்.

212. மேலும் மாதா தன் பிள்ளைகள் மீதும் உண்மை ஊழியரின் மீதும் தன் கொடைகளை அள்ளிக் குவித்தபின் அவர்களுக்கு பரலோக தந்தையின் ஆசீரையும் சேசு கிறீஸ்துவுடன் ஐக்கியமாவதையும் பெற்றுக் கொடுத்த பின், அவர்களை சேசு கிறீஸ்துவிலும் சேசு கிறீஸ்துவை அவர்களிலும் வைத்துக் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் கடவுளின் அருளை இழந்து விடாமலும் தங்கள் எதிரி களின் தந்திரங்களில் விழாமலும் மாதா அவர்களைக் காவல் புரிந்து இரவும் பகலும் கண்காணித்து வருகிறார் கள். புனிதர்களை அவர்களின் நிறைவில் நிலை நிறுத்தி'', (அர்ச். பொனவெந்தூர்) நாம் முன்பு கூறியது போல அவர்கள் இறுதி வரை நீடித்து நிலைத்திருக்கச் செய்கி றார்கள். 

முன் குறிக்கப்படுவதற்கும் தீர்ப்பிடப்படுவதற்கும் தரப்பட்டுள்ள தொன்மையான பெரிய இவ் அடையாளத்தின் விளக்கம் இதுவாகும். இது எவ்வளவோ மறைவானதும் மறை பொருள் நிரம்பியதாகவும் உள்ளது.

ஞான பாத்திரமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.