மாசற்றதனத்தைக் காத்துக்கொள்ளும் வழிகள்!

இங்கே இரண்டு கன்னியர்களும் சுற்றிலும் நடக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய உரையாடலின் கருத்து, மாசற்ற தனத்தைக் காத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளைப் பற்றியதாக இருந்தது. அவர்களில் ஒருத்தி கூறினாள்:

“சிறுவர்கள் செய்யும் ஒரு பெரிய தவறு, தவம் பாவிகளால் மட்டுமே அனுசரிக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதேயாகும். மாசற்றததனத்தைக் காப்பதற்கும் தவம் அவசியமானது. அர்ச். ஞானப்பிரகாசியார் தவம் செய்யாதிருந்தால், அவர் நிச்சயமாக சாவான பாவத்தில் விழுந்திருப்பார். இது குழந்தைகளுக்குத் தொடர்ந்து போதிக்கப்படவும், வற்புறுத்தப்படவும், கற்பிக்கப் படவும் வேண்டும். இது செய்யப்பட்டால், இப்போது மிகச் சிலர் மட்டுமே தங்கள் மாசற்றதனத்தைக் காப்பாற்றியிருக்க, எவ்வளவு அதிகமானோர் தங்கள் மாசற்றதனத்தைக் காப்பாற்றியிருப்பார்கள்!”

இயேசுசுகிறீஸ்துவின் ஒறுத்தலை நாம் நம் உடல்களில் எல்லா இடங்களிலும் நம்மோடு சுமந்து செல்ல வேண்டும் என்றும், இயேசுவின் வாழ்வு நம்மில் வெளிப்பட வேண்டும் என்றும் அப்போஸ்தலர் சொல்கிறார்.
பரிசுத்தரும், மாசற்றவருமான இயேசு தனிமையிலும், துன்பங்களிலும் தம் வாழ்வைக் கழித்தார்.

“மிகப் பரிசுத்த மாமரியும் அப்படியே செய்தார்கள்; புனிதர்களும் அப்படியே செய்தார்கள்.”

“இது எல்லா இளம் பருவத்தினருக்கும் ஒரு முன்மாதிரிகை யைத் தருவதற்காக. “ஊணியல்பின்படி நீங்கள் வாழ்வீர்கள் என்றால், சாவீர்கள்; ஆனால் ஆவியின்படி வாழ்வீர்கள் என்றால், சரீர நாட்டங்களுக்கு மரண அடி கொடுப்பீர்கள், நீங்கள் வாழ்வீர்கள்.”

“ஆகவே, தவம் இல்லாமல் மாசற்றதனத்தைக் காத்துக் கொள்ள முடியாது.”

“என்றாலும் பலர் தங்கள் மாசற்றதனத்தை காத்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில், ஒரு சுதந்திரமான, எளிதான வாழ்வு வாழவும் விரும்புகிறார்கள். ..”

"மூடர்கள்! “தீமை அவனுடைய ஆவியைக் கறைப்படுத்தாத படியும், சீர்கேடு அவனுடைய மனதைத் தப்பறைக்குள் இட்டுச் செல்லாதபடியும் அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான்” என்று எழுதப்பட்டிருக்கவில்லையா? ஏனெனில் வீண் பெருமையின் வசீகரம் எந்த நன்மையையும் கொண்ட வருவதில்லை. இச்சையின் நீர்ச்சுழல் மாசற்ற ஆன்மாவை மூழ்கடித்து விடுகிறது. அகவே மாசற்றவர்களுக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்: 1) தீயவர் களின் பொய்க் கொள்கைகளும், அசுத்த உரையாடல்களும், 2) இச்சை. இளம் வயதில் வரும் மரணம் மாசற்றவனுக்கு ஒரு வெகுமானமாக இருக்கிறது, அது அவனைப் போராட்டங்களி லிருந்து அகற்றி விடுகிறது” என்று நம் ஆண்டவர் கூறவில்லையா? “ஏனெனில் அவன் கடவுளை மகிழ்வித்தான், அவன் நேசிக்கப் பட்டான். மேலும் அவன் பாவிகள் மத்தியில் வாழ்ந்ததால், எடுத்துக் கொள்ளப்பட்டான். ஒரு குறுகிய காலத்தில் உத்தமமானவனாக ஆக்கப்பட்டு, அவன் ஒரு நீண்ட காலத்தை நிறைவு செய்தான். ஏனெனில் அவனுடைய ஆன்மா கடவுளை மகிழ்வித்தது; ஆகவே அவர் அக்கிரமங்களின் நடுவிலிருந்து அவனை வெளியே கொண்டு வர துரிதப்பட்டார். தீமை அவனுடைய புத்தியை மாற்றி விடாதபடியும், வஞ்சகம் அவனுடைய ஆன்மாவை வசீகரித்துக் கெடுத்துவிடாதபடியும், அவன் எடுத்துக் கொள்ளப்ப (ஞான.4:10-14).

"தவத்தின் சிலுவையை அரவணைத்துக் கொள்பவர்களும், யோபுவோடு சேர்ந்து, 'தோனெக் தெஃபீச்சியாம், நோன் ரேச்சேதாம் அப் இன்னோசெந்த்ஸியா மேயா - நான் சாகும் வரையில் என் மாசற்றதனத்தை விட்டு நான் விலக மாட்டேன்.”

“ஆகவே ஜெபத்தில் சோர்வை மேற்கொள்வதில் ஒறுத்தல் வேண்டும். “ஸால்லாம் எத் இந்த்தெல்லிகாம் இன் வியா இம்மாகுலாத்தா; . . . குவாந்தோ வெனியெஸ் அத் மே? . . . பெத்தித்தே எத் ஆக்சிப்பியேத்திஸ். பாத்தெர் நோஸ்தெர்! - நான் பாடுவேன், மாசற்ற விதத்தில் நான் புரிந்து கொள்வேன். நீர் எப்போது வருவீர்? கேளுங்கள், பெற்றுக் கொள்வீர்கள். எங்கள் பிதாவே!”

“தன்னைத் தாழ்த்துவதன் மூலம் அறிவை ஒறுத்தல்: மேலதிகாரிகளுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிதல்.”

“ஸி மேயி நோன் ஃபுவேரிந்த் தோமினாத்தி துங்க் இம்மாக் குலாத்துஸ் ஏரோ எத் எழுந்தாபோர் ஆ தெலிக்தோ மாக்ஸிமோ - அவைகள் என்னை ஆளாதிருந்தால், நான் களங்கமற்றவனாக இருப்பேன்' (சங்.18:14). இந்தப் பாவகரமான ஆளுகை அகங்கார மாகும். “கடவுள் அகங்காரிகளை எதிர்த்து நிற்கிறார், தாழ்ச்சியுள்ள வர்களுக்குத் தமது வரப்பிரசாதத்தைத் தருகிறார்.” “தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான், தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்!”

“உங்கள் மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”

“எப்போதும் உண்மை சொல்வதில், தன் குறைகளையும், தான் இருக்கக் காண்கிற ஆபத்துக்களையும் வெளிப்படுத்துவதில் ஒறுத்தல்கள். அப்போது ஒருவன் தனக்குப் பொருத்தமான அறிவுரையை, குறிப்பாக தனது ஆன்ம குருவிடமிருந்து எப்போதும் பெற்றுக் கொள்வான். 'ப்ரோ ஆனிமா தூவா நோன் கொன்ஃபுந்தாரிஸ் தீஷெரே வேரும் - ஏனெனில் உன் ஆன்மாவின் அன்பு உண்மையைச் சொல்ல வெட்கப்படாது.' ஏனெனில் பாவம் தன்னுடன் கொண்டு வருகிற ஒரு வெட்கம் இருக்கிறது. மகிமையையும், தேவ அருளையும் கொண்டு வரும் ஒரு வெட்கமும் இருக்கிறது.”

இருதயத்தின் சிந்தனையற்ற அசைவுகளைக் கட்டுப் படுத்துதல், கடவுளின் அன்பிற்காக அனைவரையும் அன்பு செய்தல், நம் மாசற்றதனத்திற்கு ஆபத்தாக இருக்கக் கூடும் என்று நாம் உணரும் யாரிடமிருந்தும் தீர்மானமான முறையில் தன்னைத் தானே பிய்த்து அகற்றுதல் ஆகியவற்றில் இருதயத்தின் ஒறுத்தல்கள். “உன் கையும் காலும் உனக்கு இடறலாயிருந்தால் அவற்றை வெட்டி எறிந்து விடு. இரண்டு கைகளும், இரண்டு கால்களும் உள்ளவனாய் நித்திய நெருப்பில் எறியப்படுவதை விட ஒற்றைக் கையோடும், ஒற்றைக் காலோடும் நித்திய வாழ்விற்குள் நுழைவது உனக்கு நலமாயிருக்கும்' என்று இயேசு கூறினார்.”

“மனித மரியாதையின் ஏளனத்தை தைரியத்தோடும், வெளிப்படையாகவும் தாங்கிக் கொள்வதில் ஒறுத்தல். ‘எக்ஸாக்குவேருந்த் ஆர்க்கும், ரெம் ஆமாராம், உத் சாஜித்தெந்த் இன் ஓக்குல்த்தும் இம்மாக்குலாத்தும் - அவர்கள் தங்கள் நாவுகளை ஒரு வாளைப் போலக் கூர்மையாக்கிக் கொண்டார்கள்; அவர்கள் மாசற்றவர்கள் மீது இரகசியத்தில் அம்பால் எய்யும்படி ஒரு கசப்பான காரியமாகிய தங்கள் வில்லை வளைத்தார்கள்.''

“மேலதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம் என்று பயப்படும்போது நம்மை ஏளனம் செய்கிற இந்த மனித மரியாதையை, “மனுமகன் தமது மாட்சிமையில் வரும்போது, என்னையும் என் வார்த்தைகளையும் பற்றி வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைக் குறித்துத் தாமும் வெட்கப்படுவார்” என்ற இயேசுக்கிறீஸ்து நாதரின் பயங்கரமுள்ள வார்த்தைகளை தியானிப் பதன் மூலம் நாம் வெற்றி கொள்ள முடியும்.”

“பார்வைகளிலும், வாசிப்பதிலும், கெட்ட, தகுதியற்ற நூல்களை விலக்குவதிலும் கண்களை ஒறுத்தல்.”

"ஓர் அத்தியாவசியமான விவரம்: “கன்னிப்பெண்ணை ஒரு போதும் உற்றுநோக்காதபடி நான் என் கண்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.” மேலும் சங்கீத ஆகமத்தில்: 'வீணானதை உன் கண்கள் காணாதபடி அவற்றைத் திருப்பிக் கொள்.''

“வினோதப் பிரியத்தால் வெற்றி கொள்ளப்பட தன்னையே அனுமதிக்காதபடி பேச்சில் ஒறுத்தல்.”

“ உன் வாய்க்கு ஒரு கதவும், தாழ்ப்பாளும் இடு. உன்னை எதிர்க்கிற எதிரிகளின் பார்வையில் நீ தரையில் விழாதபடியும், உன் வீழ்ச்சி குணமாக்கப்பட இயலாததாகவும், மரண ஆபத்துள்ள தாகவும் இராதவாறு, உன் நாவால் பாவம் செய்யாதபடி எச்சரிக்கையாயிரு' என்றும் எழுதப்பட்டுள்ளது.”

“அளவுக்கு அதிகமாக உண்ணாமலும் குடிக்காமலும் இருப்பதன் மூலம் உண்பதிலும், குடிப்பதிலும் ஒறுத்தல். அளவுக்கு அதிகமாக உண்பதும், குடிப்பதும் பூமியின் மீது பெருவெள்ளத் தையும், சோதோம், கொமோராவின் மீது நெருப்பையும், எபிரேயர்கள் மீது ஓராயிரம் தண்டனைகளையும் கொண்டு வந்தது.”

“சுருங்கச் சொல்வதானால், நாள் முழுவதும் நிகழும் எல்லாக் காரியங்களிலும் தன்னை ஒறுத்தல்: குளிரோ வெப்பமோ, ஒருபோதும் நம் சுய திருப்தியைத் தேடாதிருத்தல்: “உன் இவ்வுலக உறுப்புகளை ஒறுத்து அடக்கு.” இயேசு கட்டளையிட்டுள்ளதை நினைவில் கொள்: ‘R குயிஸ் வுல்த் போஸ்த் மே வெனிரே, அப்னேகெத் ஸெமெட்டிப்ஸும், தோல்லாத் க்ரூச்செம் சூவாம், எத் ஸெக்குவாத்துர் மே - என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னை மறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான்.'”