இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி ஆன்மாக்களைக் கடவுளிடம் ஐக்கியப்படுத்துகிறார்கள். அதற்கு இடையூறாக அவர்கள் இருப்பதேயில்லை

21. தப்பறையான போதனைகளால் வழிதவறிப் போகும் சிலரைப் போல், கடவுளுடன் நம் ஐக்கியத்திற்கு மாமரி இடையூறாக இருக்கிறார்கள் என்று நாம் கருதாதிருப்போமாக! 

இப்பொழுது வாழ்வது மரியாயல்ல, அவர்களிடம் ஜீவிக்கிற சேசு கிறீஸ்துவே வாழ்கிறார்--சர்வேசுரனே வாழ்கிறார்! - அர்ச். சின்னப்பரும் மற்றும் அர்ச்சிஷ்டவர்களும் கடவுளாக மாற்றம் அடைந்தார்களே, அதைவிட மாமரி கடவுளாக அடைந்த மாற்றம் பூமியிலிருந்து வானம் எவ்வளவு உயர்வோ அதற்கும் உயர்வானதாகும். 

மாமரி கடவுளுக்காக மாத்திரமே படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களிடத்திலே ஒரு ஆன்மாவைத் தங்க வைக்கவே மாட்டார்கள். மாறாக அவ்வான்மா தன்னிடம் எவ்வளவு உத்தமமாய் ஐக்கியப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிக உத்தமமாய் அதைக் கடவுளிடம் கொண்டு சேர்த்து அவருடன் ஐக்கியப்படுத்துகிறார்கள்.

கடவுளின் அதிசயிக்கத்தக்க எதிரொலியாக இருக்கிறார்கள் மரியன்னை. நாம் மரியாயே என்றழைக்கும் போது அவர்கள் கடவுள் என்று பதில் ஒலிக்கிறார்கள். அர்ச். எலிசபெத்தம்மாளுடன் நாம் அவர்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்னும்போது அவர்கள் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள். 

ஜெபிப்பதிலும் கூட மிகப் பரிதாபகரமாய் பசாசினால் மயக்கத்திற்குட்பட்டு பொய்யொளி பெற்றுள்ளவர்கள் மரியாயைக் கண்டடைந் திருப்பார்களானால், மாமரி வழியாக சேசுவையும், சேசுவின் வழியாக பிதாவையும் கண்டடைந்திருப்பார்களானால் இவ்வளவு கடும் வீழ்ச்சிகளை அடைந்திருக்க மாட்டார்கள். 

நாம் ஒரு தடவை மரியாயைக் கண்டு, அதனால் அவர்கள் வழியாக சேசுவையும், சேசு வழியாக பிதாவாகிய சர்வேசுரனையும் கண்டு கொண்டோமானால், நாம் எல்லா நன்மைகளையும் கண்டவர்களாவோம். griFOLUT50510- Si inveniat Maria, invenitur omne bonum--மரியாயைக் கண்டடைந்தால் நலன் அனைத்தும் கண்டடையப்படும் என்று கூறியுள்ளார்கள். அனைத்தும் என்றால் எதுவும் விடுபடுவதில்லை. 

அனைத்து வரப்பிரசாதமும் கடவுளுடன் முழு நட்புறவும் கடவுளின் எதிரிகளிடமிருந்து எல்லா பாதுகாப்பும், தப்பறைகளை நசுக்க எல்லா உண்மைகளும் இரட்சண்ய பாதையில் வரும் கஷ்டங்களை மேற்கொள்ள எல்லா உதவிகளும், வாழ்க்கையின் கசப்புகளின் நடுவில் எல்லா ஆறுதலும் மகிழ்வும் (அதில் அடங்கும்).