இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதி வரை நிலை நிற்க இப்பக்தி முயற்சி ஒரு வியக்கத்தக்க வழியாயிருக்கிறது

173. இறுதியாக, நாம் புண்ணியத்தில் நீடித்து பிர மாணிக்கமுடன் இருப்பதற்கு மாதா மீது கொள்ளும் இப் பக்தி ஆச்சரியமான ஒரு வழியாக இருக்கிறது. ஒரு வகையில் இதுவே நம்மை இப்பக்தி முயற்சியின் மீது நாம் பற்றுக்கொள்ளும்படி அதிக வலிமையுடன் நம்மை இழுக்கிறது. மனம் திரும்பும் பாவிகளில் பெரும் பான்மையோர் ஏன் அதில் நீடிப்பதில்லை? நாம் ஏன் இவ்வளவு எளிதாக பாவத்தில் மீண்டும் விழுகிறோம்? விசுவாசிகளில் பெரும்பான்மையோர் புண்ணியத்திலிருந்து புண்ணியத்திற்கு முன்னேறிச் செல்லாமலும் புதிய வரப் பிரசாதங்களைப் பெறாமலும் இருப்பதுடன், பல சந்தர்ப் பங்களில் தங்களிடமுள்ள கொஞ்ச வரப்பிரசாதத்தையும் இழந்து விடுவது ஏன்? இந்தக் கேடு எதிலிருந்து வருகிற தென்றால் நான் முன்பு கூறியுள்ளது போல (எண் 87-89), இவ்வளவு கெட்டுப் போன மனிதன், இவ்வளவு பல வீனமும், நிலையாமையும் கொண்ட அவன், தன்னை நம் புகிறான். தன் பலத்தில் ஊன்றுகிறான். தன் பொக்கிஷங் களாகிய வரப்பிரசாதங்களையும் தன் புண்ணியங்களையும் பேறு பலன்களையும் காப்பாற்றிக் கொள்ள தன்னால் கூடும் என்று நினைக்கிறான்!

இப்பக்தி முயற்சியினால் நாம் பிரமாணிக்கமுள்ள கன்னிகையான மரியாயிடம் நமக்குள்ள யாவற்றையும் ஒப்படைக்கிறோம். சுபாவ நிலையிலும் வரப்பிரசாத நிலை யிலும் நமக்குள்ள எல்லா உடமைகளின் மொத்த காப்பாளராக மாதாவைத் தெரிந்து கொள்கிறோம். இத்தாயின் பிரமாணிக்கமுள்ள தன்மையை நாம் நம்புகிறோம். மரி யாயின் பலத்தில் நாம் ஊன்றுகிறோம். அவர்களின் இரக் கத்தையும் கருணையையும் நாம் ஆதாரமாகக்கொள்கிறோம். நம்முடைய புண்ணியங்களையும் பேறுபலன்களையும் உலக மும் பசாசும் சரீரமும் நம்மிடமிருந்து பிடுங்க முயற்சித்தாலும், அவற்றுக்கெதிராக, மாதா அவற்றை நமக்குக் காப்பாற்றி வளர்த்துத் தருமாறு அவ்விதம் செய்கிறோம் ஒரு குழந்தை தன் தாயிடம் கூறுவது போலவும் ஒரு உண்மை ஊழியன் தன் தலைவியிடம் சொல்வது போல வும் நாம் மரியாயை நோக்கிக் கூறுவோம்: உம்மிடம் ஒப்பிக்கப்பட்டதைக் காத்துக் கொள்வீராக. (1 திமோ 6,20)-கனிவுள்ள என் தாயே, என் தலைவியே, உங்கள் மன் றாட்டால் நான் இது வரையிலும் என் தகுதிக்கும் அதிக மான வரப்பிரசாதங்களை கடவுளிடமிருந்து பெற்றிருக் கிறேன். இந்தத் திரவியத்தை நான் எளிதில் உடைந்து போகக் கூடிய பாத்திரத்தில் கொண்டிருக்கிறேன் என்றும் நானே அதைக் காத்துக் கொள்வதென்றால் அதற்கு நான் அதிக பலவீனனாகவும் பரிதாப நிலையிலும் இருக்கிறேன் என்றும், துயரமான என் அனுபவத்தால் அறிகிறேன். "நான் சிறியவனும் நிந்திக்கப்பட்டவனுமாயிருக்கிறேன்" (சங். 118, 141). எனக்குள்ள யாவற்றையும் நீங்களே உங்கள் அடைக்கலப் பொருளாக ஏற்றுக் கொண்டு உங் களுடைய பிரமாணிக்கத்தாலும் வல்லமையாலும் அவற்றை எனக்காக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது காவல் புரிந்தால் நான் எதையும் இழந்து போகமாட்டேன். நீங்கள் என்னைத் தாங்கிக் கொண்டால் நான் கீழே விழ மாட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றினால் நான் என் எல்லா எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றப்படுவேன்.

174. இப்பக்தி முயற்சியில் நம்மை ஊக்கப்படுத்தும் படி மிகத் தெளிவான வார்த்தைகளில் அர்ச். பெர்னார்ட் இவ்விதம் கூறுகிறார்: மாதா உன்னைத் தாங்கிக் கொள்ளும் போது நீ கீழே விழமாட்டாய். மாதா உன்னைக் காக்கும் போது நீ பயப்பட மாட்டாய். மாதா உன்னை வழி நடத் தும்போது நீ சோர்ந்து போகமாட்டாய். மாதா உனக்குச் சலுகையாயிருந்தால் நீ இரட்சண்யத்துறை சேர்வாய். (Ipsa tenente non corrujs; Ispa protegente non metuis; Ispa duce non fatigaris; Ispa propitia pervenis. (Sermo Super Missus est)) இதைவிடத் தெளிவாக அர்ச். பொனவெந்தூர் என்பவர் சொல்வதாகத் தெரிகிறது: '' மாதா புனிதர்களுடைய நிறைவில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்ல, அந் நிறைவு குறையாமலிருக்க அர்ச்சிஷ்டவர்களையும் அவர் களுடைய நிறைவில் நிலைப்படுத்துகிறார்கள், அர்ச்சிஷ்ட வர்களுடைய புண்ணியங்கள் சிதறிப் போகாமலிருக்க அவைகளைக் காப்பாற்றி வைக்கிறார்கள்; பேறுபலன்கள் கரைந்து விடாதிருக்க அவைகளைக் காக்கிறார்கள். பசாசு புனிதர்களுக்குத் தீங்கு செய்யாதபடி தடுத்துக் கொள்கி றார்கள்; அவர்கள் பாவத்தில் விழும்போது தன் திருக் குமாரன் அவர்களைத் தண்டியாமல் நிறுத்திக் கொள்கி றார்கள்'' (St, Bonav In Speculo B. V.)

175. பிரமாணிக்கமற்ற ஏவாள் தன்னுடைய நம் பிக்கைத் துரோகத்தால் விளைவித்த கஷ்டங்களை, தன் பிரமாணிக்கத்தால் ஈடுசெய்கின்ற கன்னிகை மகாப் புனித மரியாயே. தள்னுடன் யார் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு இவ்வன்னை, கடவுளுடன் பிரமாணிக்கமாயிருத்தலையும் இறுதிவரை நிலைபெறுதலை யும் பெற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் ஒரு அர்ச்சிஷ் டவர் மரியாயை ஒரு உறுதியான நங்கூரத்திற்கு ஓப் பிடுகிறார். இந் நங்கூரம் மரியாயுடன் தங்களை இணைத் துக் கொள்ளுகிறவர்களை நன்றாகத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. உலகமென்னும் கொந்தளிக்கும் கடலில் கப்பல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இச்சமுத்திரத் தில் எத்தனையோ பேர் இந்த நங்கூரத்துடன் இணைக்கப் படாததால் அழிவடைகிறார்கள். "ஓரு நங்கூரத்துடன் இணைத்துக் கட்டுவது போல் மாதாவே நாங்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையுடன் ஆன்மாக்களை இணைத்துக் கட் டுகிறோம்'' என்கிறார் அவர். (அர்ச். தமாசின் அருளப்பர் Sermo in dormitione B. M. V.)) இரட்சண்யம் அடைந் துள்ள அர்ச்சிஷ்டவர்கள் புண்ணியத்தில் நிலைத்திருக்கும் படியாக தங்களையும் மற்றவர்களையும் மரியா யு டன் உறுதியாகப் பிணைத்திருந்தார்கள். தங்களை முழுவது மாக ஓரு நங்கூரத்துடன் இணைத்துக் கொள்வது போல் மரியாயுடன் பிரமாணிக்கமாய் இணைத்துக் கொள்ளும்

கிறீஸ்தவர்கள் ஆயிரம் தடவை பாக்கியசாலிகள்! இந்த உலகப் புயல்களின் வேகம் அவர்களைத் தடுமாறச் செய் யாது. அவர்களுடைய பரலோக திரவியங்களையும் அவர்களிடமிருந்து பிரிக்காது. நோவேயின் பேழையுட் புகு பவது போல் மரியாயுட் புகுவோர் பாக்கியசாலிகள்! எத்தனை யோ பேரை மூழ்கடிக்கும் ஜலப்பிரளயத் தண் ணீர் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது. ஏனென்றால் தேவ ஞானமாயிருப்பவர்களுடன் மாதா கூறுகிறார்கள் : ''என்னில் தங்கள் கிரியைகளைச் செய்கிறவர்கள் பாவஞ் செய்ய மாட்டார்கள்'' (சர்வ. 24, 30). பரிதாபக்குரிய ஏவாளின் பிரமாணிக்கமற்ற பிள்ளைகள், பிரமாணிக்க முள்ள கன்னியும் தாயுமான மரியாயுடன் தங்களை இணைத்துக் கொள்வார்களானால் பாக்கியசாலிகள். மாதா எப்பொழுதும் பிரமாணிக்கமாயிருக்கிறார்கள். ஒரு போதும் மறுதலிக்கமாட்டார்கள். (|| திமோ . 2, 13.) நேசிப்பவர்களை மாதா எப்போதும் நேசிக்கிறார்கள். (பழ. 8, 17) மரியாயின் அன்பு, விரும்பி நேசிக்கும் அன்பு. அது மட்டுமல்ல. செயலாற்றலுள்ள அன்பு. பெரும் வரப்பிரசாத மிகுதி யில் தன் பிள்ளைகளை வைத்து, புண்ணியப் பயிற்சியில் அவர்கள் தவறி விடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள் மாதா.

176. சுத்தமான பிறர் சிநேகத்தால் தூண்டப்பட்டு இந்நல்ல அன்னை தன்னிடம் ஒப்படைக்கப்படுவதையெல் லாம் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏதாவதொன்றை இவ் வாறு அடைக்கலப் பொருளாக ஏற்றுக் கொண்டபின், பாதுகாக்கும் ஒப்பந்தத்தினிமித்தம் அதைப் பத்திரமாக நமக்கென காப்பாற்றும் பொறுப்பு நீதிப்படி அவர் களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இது எவ்வாறெனில் ஒரு வரிடம் நான் நூறு பொன்னை அடைக்கலமாக ஓப் படைத்திருந்தால், அவருடைய கவனக் குறைவால் அது தொலைந்து போனால், அதற்கு நீதிப்படி அவரே பொறுய் பாளி ஆவது போல்! ஆனால் நாம் மரியாயிடம் ஓப் படைக்கும் எதுவும் ஒருபோதும் அவர்களின் கவனக் குறைவால் தொலைந்து போகவே போகாது. மாதா தன்னை நம்பியிருக்கிறவர்களைப் பற்றி கவனக் குறைவாக வும் பிரமாணிக்கமின்றியும் இருக்க வேண்டுமானால் அதற்கு முன்பே வானமும் பூமியும் இல்லாமல் போய்விடும்.

177. மரியாயின் எளிய மைந்தர்களே! உங்கள் பல வவீனம் மிக அதிகமாயிருக்கிறது. உங்கள் நிலையற்ற தனம் பெரிதாயிருக்கிறது. உங்கள் மனித சுபாவமோ மிகவும் கேடுள்ளதாயிருக்கிறது. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளு டைய கெட்டுப்போன சந்ததியிலிருந்துதான் நீங்கள் கொண்டுவரப்பட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆயினும் அதற்காக மனந்தளர்ந்து போகவேண்டாம். ஆனால் ஆறுதலடைந்திருங்கள். அகமகிழ்ந்திருங்கள். நான் உங்களுக்குக் கற்றுத் தரும் இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். இந்த இரகசியம் ஏறக்குறைய எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் - அவர்களில் மிகவும் பக்தி யுடையவர்களுக்கும் கூட தெரியாத ஒன்றாக இருக்கிறது.

உங்கள் பொன்னையும் வெள்ளியையும் உங்கள் திரவிய பேழைகளுக்குள் விட்டு வையாதீர்கள். உங் களைச் சூறையாடிய கெட்ட அரூபி அப்பேழையை ஏற்கெனவே உடைத்து திறந்து விட்டான். மேலும் அப்பேழைகள் இவ்வளவு பெரிய, இவ்வளவு விலைமதிப் புள்ள கருவூலத்தைக் கொண்டிருக்க மிகவும் சிறியவை; மிகவும் பலவீனமானவை; மிகவும் பழசானவை. பாவத் தால் அசுத்தமடைந்து தீட்டுப்பட்ட பாத்திரங்களில் சுத் தமான தெள்ளிய சுனை நீரை வைக்க வேண்டாம். அதில் பாவம் இல்லாவிட்டாலும் பாவத்தின் நாற்றம் இருக்கிறது. எனவே இந்நீர் மாசுபடுத்தப்பட்டுவிடும். கெட்டுப்போன திராட்சை இரசத்தை வைத்த பழைய உபயோகிக்கப்பட்ட சித்தைகளிலே உங்கள் சிறந்த இர சத்தை வார்க்காதேயுங்கள். அது கெட்டுவிடும். சிந்தி விடும் ஆபத்தும் இருக்கிறது.

178: முன் குறிக்கப்பட்ட ஆன்மாக்களே, நீங்கள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆயினும் இன் நானும் அதிகத் தெளிவாகக் கூறுகிறேன். உங்கள் அன்பு என்னும் பொன்னையும் உங்கள் தூய்மை என்னும் வெள்ளியையும், பரலோக வரப்பிரசாதங்கள் என்னும் சுனை நீரையும், உங்கள் பேறு பலன்கள் புண்ணியங் களாகிய திராட்சை ரசத்தையும் ஒரு கிழிந்த சாக்குப் பையிலோ உடைந்த பழைய பெட்டிக்குள்ளோ, கறை பிடித்து பழுதுபட்ட சித்தைகளிலோ வைக்காதீர்கள் - நீங்கள் தான் இவைகள். ஏனென்றால் இரவும் பகலும் திருடுவதற்குத் தகுந்த ஒரு சந்தர்ப்பம் தேடி காத்தி ருக்கும் கள்ளர்களான பசாசுக்களால் பறிக்கப்படுவீர் கள். அல்லது கடவுளின் மிகப்புனிதமான கொடைகளை யெல்லாம் சுயவிருப்பம் சுயநம்பிக்கை என்ற நாற்றத் தால்.கறைபடுத்தி விடுவீர்கள்.

உங்களுடைய திரவியங்களையெல்லாம், உங்கள் வரப்பிரசாதங்கள் புண்ணியங்களையெல்லாம் மரியாயின் நெஞ்சுக்குள்ளே, மாதாவின் இருதயத்துக்குள்ளே வையுங்கள். மரியாயே ஞானப் பாத்திரம், மகிமைக்குரிய பாத்திரம். சிறந்த பக்தியுடைய பாத்திரம். எப்பொழுது கடவுள் தமது இலட்சணங்களுடன் இந்த பாத்திரத்துள் தம்மையே மறைத்துக் கொண்டாரோ அப்பொழுதிருந்தே இந்தப் பாத்திரம் முழுவதும் ஞானமயமாகி விட்டது. மிக்க ஞானமுடைய எல்லா ஆன்மாக்களும் தங்கும் இட மாகி விட்டது. இந்தப் பாத்திரம் மகிமைக்குரியதாகி விட்டது. நித்தியத்தின் மிகப் பெரும் இளவல்களின் மகிமை பொருந்திய அரியாசனமாகிவிட்டது. பக்தியிலே இது தனிச் சிறந்ததாகி விட்டது. சாந்தத்திலும், வரப் பிரசாதத்திலும், புண்ணியத்திலும் மிகச் சிறந்தவர்களின் வாசஸ்தலமாகிவிட்டது. இறுதியாய் இப்பாத்திரம் சொர்ண மயமான ஆலயம் போன்று செல்வம் நிறைந்ததாய், தாவீதின் உப்பரிகை (கோட்டை) போன்று வலிமை யுடைய தாய் தந்தமயமான உப்பரிகை போன்று தூய் மையான தாய். ஆகிவிட்டது.

179. யாவற்றையும் மரியாயிடம் கொடுத்து விட்ட மனிதன் எவ்வளவு பாக்கியவான்! யாவற்றையும் மரியாயை நம்பியிருப்பவன் எவ்வளவோ பாக் கியவான். மாதாவிலே மூழ்கியிருப்பவன் எவ்வளவு பேறு பெற்றவன்! அவன் முழுவதும் மாதாவுக்குச் சொந்தமாயிருக்கிறான். மாதா அவனுக்குச் சொந்தமாயி யிருக்கிறார்கள். அவன் தாவீதரசனுடன் சேர்ந்து "இது (மாதா) எனக்கு நிகழ்ந்துள்ளது'' என்று சொல்லலாம் - (சங். 118, 56)! (Haec facta est mihi) அல்லது நேசிக்கப்பட்ட சீடருடன் "(மாதாவை) என் இல்லத்தில் ஏற்றுக் கொண்டேன் - என் னுடைய எல்லாமாக ஏற்றுக் கொண்டேன்'' (அரு. 19, 27) என்று சொல்லலாம். அல்லது சேசு கிறீஸ்துவுடன் சேர்ந்து ''என்னுடையவைகளெல்லாம் உம்முடையவை கள், உம்முடையவைகள் எல்லாம் என்னுடையவைகள்'' (அரு. 17, 10) என்று கூறலாம்.

180. இதை வாசித்துக் குறைகாணும் யாராவது நான் அதிகப்படியாகக் கூறுகிறேன் என்றோ மிஞ்சிய பக்தியில் சொல்லுகிறேன் என்றோ நினைத்தால் அது என்னைக் கண்டு பிடிக்கவில்லை என்றே ஆகும். ஆவிக்குரியவற்றை ஏற்காத மாம்ச சம்பந்தமுள்ளவனாக அவன் இருப்பதால் அப்படியிருக்கலாம்; அல்லது உலகத்தினுடையவனாக இருப்பதால், பரிசுத்த ஆவியை அடைய முடியாததால் இருக்கலாம். அல்லது தான் அகங்காரியாயும் குறைகண்டுபிடிப்பவனாகவும் இருப் பதால், தான் கண்டு பிடிக்காத எதையும் வெறுப் பதனால் அப்படி இருக்கலாம். ஆனால் இரத்தத்தினாலோ அல்லது மாம்சத்தினாலோ அல்லது மனிதனின் சித்தத்தி னாலோ பிறவாமல், சர்வேசுரனாலும், மாதாவாலும் பிறந்தவர்கள் நான் கூறுவதைக் கண்டு பிடிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கே நான் எழுது கிறேன்.

181. இவை தொடர்பின்றிக் கூறப்பட நேர்ந்துவிட் டது. ஆயினும் நான் குறிப்பிட்டுள்ள இரு சாராருக்கும் நான் கூறுவது : எல்லா சிருஷ்டிகளிலும் தேவ மாதா அதிக நம்பிக்கைக் குரியவர்களாகவும் தாராள குணம் உள்ளவர்களாயுமிருப்பதால் அன்பிலும் தாராளத்திலும் தன்னைவிட யாரும் அதிகமாகச் செய்யும்படி விடமாட் டார்கள். மேலும் புனித வாழ்வுடைய ஒருவர் கூறியுள் ளபடி ஒரு காசு பெற்றால், மாதா ஒரு பொன் கொடுப் பார்கள் மாமரி அன்னை. அதாவது அவர்களுக்குக் கொடுக்கப்படும் கொஞ்ச அளவிற்குப் பதிலாக, கடவு ளிடம் தான் பெற்றவற்றிலிருந்து மிகுதியாகக் கொடுக்கி றார்கள். இதனால் ஒரு ஆன்மா தன்னை யாதொரு ஒதுக் கீடுமின்றி மரியாயிக்குக் கொடுத்தால் மாதாவும் தன்னிடம் எதையும் வைத்துக் கொள்ளாமல் தன்னை முழுவதும் கொடுத்து விடுகிறார்கள். - அந்த ஆன்மா மெத்தனமில்லாத நம்பிக்கை கொண்டு, புண்ணியங்களைப் பயிற்சி செய்து, தன் தவறான குணங்களை அடக்கி, தன் பாகத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்வதாயிருக்க வேண்டும்.

182. ஆகவே பரிசுத்த கன்னிமரியாயின் பிரமாணிக்க முள்ள ஊழியர்கள் அர்ச். தாமசின் அருளப்பருடன் சேர்ந்து தைரியமாக இவ்வாறு கூறுவார்களாக: 'ஓ கடவுளின் அன்னையே உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் நான் இரட்சிப்படைவேன். உங்களுடைய பாதுகாவலி னால் நான் எதற்கும் அஞ்சமாட்டேன். உங்கள் உதவி யுடன் என்னுடைய எல்லா எதிரிகளையும் எதிர்த்து விரட்டி விடுவேன். ஏனென்றால் கடவுள் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ அவர்களுக்கு அவர் கொடுக் கும் ஆயுதமே உங்கள் மீதுள்ள பக்தியாகும். (Sermo de Annuntiatione)

எங்கள் சந்தோஷத்தின் காரணமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!