இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மன்னிப்பு

நெல்லி தங்கை, ஜார்ஜ் அண்ணன். இருவரும் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஏதோ அலுவலாய் வீட்டுக்குள் போய்விட்டு வந்த நெல்லி அண்ணனை நோக்கி, “வாயைத் திற, கண்களை மூடு'' என்றாள்.

ஜார்ஜ் நெல்லியைவிட இரண்டு வயது மூத்தவன். எப்பொழுதும் மகிழ்ச்சியுடனிருப்பவன். நெல்லியைப் பிரியப்படுத்தத் தீர்மானித்தான். அல் லாமலும் அவள் தன் கையில் சர்க்கரைபோன்ற வெள்ளைப் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருப் பதை அவன் கண்டான். ஆதலின் வாயை அகலத் திறந்து கண்களை இறுக மூடிக்கொண்டான்.

நடந்ததென்ன? இரண்டு நிமிட நேரம் அவன் துப்பிக்கொண்டிருக்க நேரிட்டது. ஜார்ஜ் எதிர் பார்த்த சர்க்கரை கிடைக்கவில்லை. உப்பையே நெல்லி அண்ணன் வாயிற் போட்டாள்.

தான் ஒரு பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைத்த நெல்லி ஆனந்தித்து ஆர்ப்பரித்துக்கொண் டிருந்தாள். திரும்பவும் வீட்டுக்குப் போய்வந்து, “வாயைத்திற, கண்களை மூடு" என்றாள்.

நெல்லி தான் செய்த குற்றத்துக்காக விசனிக் கிறாள். அதனாலேயே வீட்டிலிருந்து மிட்டாய் கொண்டு வந்திருக்கிறாள் என நினைத்த ஜார்ஜ், கள் ளம் கபடின்றி வாயைத் திறந்தான். இப்பொழுது அவள் ஒரு கரித்துண்டை அவன் வாயிற் போட்டு விட்டு ஓடினாள்.

ஜார்ஜ் ஒன்றுமே சொல்லவில்லை. தன் தங்கை நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவன் வருந்தி னான். "எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப் பொழுது அவளுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன்'' எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

மறுநாளே வாய்ப்பு கிடைத்தது. இருவரும் தோட்டத்தில் நின்றார்கள். அழகிய வண்ணாத்திப் பூச்சிகளை நெல்லி துரத்திக் கொண்டிருந்தாள். நேர்த்தியான மலர்களையும் இளம் செடிகளையும் ஜார்ஜ் பார்த்து மகிழ்ந்து நின்றான் :

தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தில் நேர்த்தியான பழுத்த கனிகள் நிறைந்திருந்தன. தன் தொப்பி நிறைய மரத்திலிருந்து பறித்துப்போட்டான். அவன் புறப்பட இருக்கையில் முட்களுள்ள காட்டு செடிப் பழங்கள் சிலவற்றைப் பார்த்தான். “ஆ! நெல்லிக்குப் பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது'' என அவன் சொல்லி செடியிலிருந்து சில பழங்களைப் பறித்துக்கொண்டான்.

நெல்லியைக் கண்டதும், 'வாயைத் திற, கண் களை மூடு" என்றான். அவள் சந்தேகத்துடன் தன் அண்ணனையும் பின் தொப்பியையும் நோக்கினாள். தொப்பியில் இருந்ததை அவளால் பார்க்கமுடியவில்லை; ஏனெனில் சாப்பிடக்கூடிய கனிகளுக்கு மேலே அவன் முள் நிறைந்த பழங்களை வைத்து, பெரிய இலைகளால் எல்லாவற்றையும் மறைத்து விட் டான். நெல்லி பயந்தனள். முந்தின நாள் தான் செய்த குறும்பை அவள் மறக்கவில்லை. பழிவாங்கும்படி ஜார்ஜ் ஒரு வண்ணாத்திப் பூச்சியையோ அல்லது வெட்டுக்கிளியையோ வாயிற் போட்டு விடுவான் என அஞ்சினாள்.

பயத்துடன் வாயைத் திறந்து கண்களை மெது வாக மூடினாள். தொப்பியிலிருந்த முள் நிழைந்த பழம் ஒன்றை ஜார்ஜ் எடுத்தான். நெல்லியின் முகத்தைப் பார்த்ததும் அதை அவள் வாயிற் போட மனம் வர வில்லை. தன் குற்றத்திற்காக மனஸ்தாபமும், பயமும் அவள் முகத்தில் காணப்பட்டன. தன் உள்ளத்தில் பேசிய காவல் சம்மனசின் குரலுக்கு செவிகொடுத்து முட்களிருந்த பழத்தைத் தொப்பியிற் போட்டு விட்டு, ருசியான பழம் ஒன்றை அவளுடைய வாயில் வைத் தான். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நெல்லி அதைச் சாப்பிட்டாள்.

"வாயைத் திற, கண்களை மூடு'' என ஜார்ஜ் திரும்பவும் கூறினான். இவ்விதம் திரும்பத் திரும்பச் சொல்லி நெல்லிக்கு ருசியான பழங்களைக் கொடுத் தான்.

ஜார்ஜின் உள்ளத்தில் என்றுமில்லா ஆனந்தம் குடிகொண்டது. அந்த ஆனந்தமே அவனது நற்கிரி யைக்குப் போதுமான சம்பாவனையாயிருந்தது. உப் பும் கரித்துண்டும் கொடுத்தவளுக்கு அவன் ருசியான பழங்களைத் தந்தான். தீமைக்குப்பதில் நன்மை செய் தான்.

நெல்லி தன் குற்றத்தை உணர்ந்தாள். அண்ணன் எவ்வளவு பெருந்தன்மையுள்ளவன் என்பதை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.