இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சி ஒரு கிட்டத்து வழி.

155. மாதா மீது கொள்ளும் பக்தி முயற்சி சேசு கிறீஸ்துவைக் கண்டடைய ஒரு கிட்டத்து வழியாக இருக்கிறது இதிலே நாம் வீணாக அலைவதில்லை. மேலே நான் கூறியது போல் அதிக மகிழ்ச்சியுடனும் அதிக எளிதாகவும், எனவே அதிக சுறுசுறுப்பாகவும் இதில் நாம் நடந்து செல்லுகிறோம். பல வருடங்கள் நம் சுய பற்றிலும் சுய நம்பிக்கையிலும் ஊன்யிறிருந்ததைவிட, மாதாவுக்குப் பணிந்து மாதாவைச் சார்ந்திருக்கும் ஒரு குறுகிய காலத்தில் அதிகமாக முன்னேறிச் செல்கிறோம். ஏனென்றால் தேவ மாமரிக்குப் பணியும் கீழ்ப்படித லுள்ள ஒரு மனிதன் தன் எல்லா எதிரிகள் மேலும் சிறந்த வெற்றிகளைக் கொண்டாடுவான் (பழ. 21, 28). பகைவர்கள் அவனுடைய முன்னேற்றத்தைத் தடை செய்யவும் பின்னோக்கித் தள்ளவும் அல்லது அவனை விழத்தாட்டவும் முயலுவார்கள் என்பது உண்மையே. ஆனால் மரியாயின் ஆதரவுடனும் உதவியுடனும் வழி நடத்துதலுடனும் அவன் கீழே விழமாட்டான்; பின்னோக் கிச் செல்லமாட்டான்; தாமதம் கூட இல்லாமல் வெகு துரிதமாக சேசு கிறீஸ்துவிடம் செல்லுவான். சேசு எவ் வழியாய் நம்மிடம் வந்தாரோ அவ்வழியாகவே - எழுதப் பட்டுள்ளபடியே (சங். 18, 5) - பலவான்களின் நடை போல் நடந்து மிகக் குறுகிய காலத்தில் சேசுவை வந்தடைவான்.

156. சேசு கிறீஸ்து. இவ்வுலகில் சில வருடங்கள் தான் வாழ்ந்தார். அதில் ஏறக்குறைய - எல்லா ஆண்டு களும் தன் அன்னைக்குப் பணிந்து கீழ்ப்படிந்தே வாழ்ந்தார்இது ஏனென்று நினைக்கிறீர்களா? அவர் குறுகிய காலத் தில் நிறைவைப் பெற்று நீண்ட நாட்களை நிறைவு செய்தார் (ஞானா. 4, 13) ஆதாம் இழந்தவற்றை மீண்டும் அடைந்து கொடுக்க வந்த சேசு கிறீஸ்து, ஆதாம் தொளா யிரம் ஆண்டு வாழ்ந்த போதிலும், அதை விட நீண்ட நாட்களை நிறைவாக்கினார். எங்ஙனம் நீண்ட காலம் வாழ்ந்தாரென்றால், தம் பிதாவுக்கு கீழ்ப்படிந்தவராய் தன் தாய்க்குப் பணிந்து அவ்வன்னையுடன் நெருங்கிய ஐக்கியத்தில் வாழ்ந்ததினால் தான். ஏனெனில்,

1 பரிசுத்த ஆவி உரைப்பது : தன் தாயை மதிப் பவன் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும் மனிதனைப் போலிருக்கிறான். அதாவது. அவருடைய தாய் மரியாயை மதிப்பவன்-அத்தாய்க்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் ஒருவன் - வெகுவிரைவில் அளவு கடந்த செல் வந்தனாவான். ஏனென்றால் ஞானியின் கல்வெட்டில் காணப்படுகிற "தன் தாயை மகிமைப்படுத்துகிறவன் பொக்கிஷங்களைச் சேர்ப்பவனைப் போலாகிறான்'' என்ற இரகசியத்தினால் அவன் ஒவ்வொரு நாளும் திரவியத் தைச் சேர்த்துக் குவித்து வருகிறான். (சர்வ. 3, 5).

2 பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் (சங். 91, 11ம் வசனத்தில்,) இவ்வாறு காணப்படுகின்றன; ''என் முதுமை நாட்கள் நெஞ்சின் இரக்கத்தில் உள்ளன'' (''Senectus mea in misericordia uberi").- இதற்குக் கொடுக்கப்பட் டுள்ள மறை பொருளான ஓர் விளக்கத்தின்படி: மரியா யின் உதரம் ஒரு உத்தம மனிதனை தன்னுட் கொண்டு (ஜெரே. 31, 22) பிறப்பித்தது. உலகனைத்துமே கொள்ளவோ அடக்கவோ முடியாதவரை மரியாயின் உதரம் தன்னுள் அடக்கிக் கொண்டது. (மரியாயின் நேர்ச்சிப் பூசையின் படிக்கீதம்). இந்த மாதாவின் உதரத்திலேயே வயதில் இளமையாயிருப்பவர்கள் ஒளியி லும் அருளிலும் அனுபவத்திலும் ஞானத்திலும் மூப்பர் களாக ஆவார்கள். குறுகிய காலத்தில் சேசு கிறீஸ்துவின் வயதின் நிறைவை நாம் அடைகிறோம்.