இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சியில் பிரமாணிக்கமாயிருக்கும் ஆன்மாவில் அது ஏற்படுத்தும் ஆச்சரியமான விளைவுகள் - தன்னைப்பற்றிய அறிவும் வெறுப்பும்

213. அன்புள்ள சகோதரா, நான் காட்டப்போகிற இப்பக்தியின் அந்தரங்க, வெளியரங்க முயற்சிகளைக் கடைபிடிப்பதில் நீ பிரமாணிக்கத்துடன் இருந்தால் உன் ஆன்மாவில் பின் வரும் விளைவுகள் ஏற்படும்:

தன்னைப்பற்றிய அறிவும் வெறுப்பும்

பரிசுத்த ஆவியானவர் தன் பிரமாணிககமுள்ள பத்தினியாகிய மரியாயின் வழியாக உனக்குக் கொடுக்கும் வெளிச்சத்தில், நீ உன்னுடைய கேடுற்ற நிலையை அறிந்து கொள்வாய். உன் தீய சுபாவத்தையும், சுபாவத்துக்கும் வரப்பிரசாதத்துக்கும் கர்த்தராயிருக்கும் கடவுளிடமி ருந்து அல்லாத எந்த ஒரு நன்மையையும் செய்ய முடி யாத உன் இயலாத் தன்மையையும் நீ அறிந்து கொள் வாய். இந்த அறிவின் காரணமாக நீ உன்னை வெறுத்து உன்னைப் பற்றி அச்சத்தோடே நினைக்க வருவாய். எல் லாவற்றையும் தன் கூழால் அசுத்தப்படுத்துகிற நத்தை நீ யென்றும், தன் விஷத்தால் எல்லாவற்றையும் கெடுக் கிற விஷக்காளான் நீ என்றும், ஏமாற்றுவதற்கு மட்டுமே தேடுகிற தந்திரமுள்ள சர்ப்பம் நீ என்றும், உன்னையே கருதுவாய். முடிவில் தாழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள். இதனால் நீ உன்னையே வெறுப்பாய். வெறுக்கப்படுவதை விரும்புவாய். ஆனால் நீ யாரையும் வெறுக்க மாட்டாய்.