எல்லா மனிதர்களுக்கும் ஒரு நண்பர் தேவைப்படுகிறார்

பயமோ, சந்தேகமோ, துக்கமோ, நிர்ப்பாக்கியமோ நம்மை எதிர்கொள்ளும்போது, நாம் அனைவரும் ஆசித்துத் தேடுவது என்ன? நிச்சயமாக உண்மையும், பிரமாணிக் கமும், விவேகமும் நேசமும் உள்ள ஒரு நண்பனைத்தான் நாம் தேடுகிறோம். நம் வேதனையை யார்மீது ஊற்றி விட நம்மால் முடிகிறதோ, யாரிடமிருந்து ஒரு நல்ல ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள முடிகிறதோ, யார் நம்மீது இரக்கம் கொண்டு, நம்மைத் தேற்றுவானோ, அப்படிப்பட்ட ஒரு நண்பனையே நாம் தேடுகிறோம்.

நம் சுபாவங்களில் ஓர் அகத் தூண்டுதல் உறுதியாகப் பொருத்தப்பட்டுள்ளது. அது பிரச்சினையில் ஒரு நண்ப னைத் தேடும்படி நம்மைத் தூண்டுகிறது. நம் ஆத்துமத்தை நசுக்குகிற பாரத்தை இறக்கி வைக்க ஒரு நண்பனை நாம் தேடுகிறோம். அடிப்படையில் சமூக ஜீவிகளாக இருக்கிற நாம், நம் மகிழ்ச்சிகளையும், துயரங்களையும், நம் பயங் களையும், நம்பிக்கைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். வேறு யாராலும் முடியாத அளவுக்கு, தாய் தன் குழந்தைகளைத் தேற்றுகிறாள்; தன் கணவனைத் துயரத்தின் தாக்குதல் வேதனைப்படுத்தி, அவனுக்கு ஏமாற்றம் தரும்போது, கனிவும், நிதானமும், நுண்ணறிவும், பொறுமையும் உள்ள ஒரு மனைவி, அவனுக்கு ஆறுதல் தருகிறாள்; ஒருவனுடைய நல்ல நண்பன் அவனுடைய துன்ப நாட்களில்தான் தன்னை உண்மையான நண்பன் என்று நிரூபிக்கிறான்.

ஆகவே, வேறு யாரும் அறிந்திராத அளவுக்கு நம்மை அறிந்துள்ளவராகிய சேசுநாதர் நம்மிடம்: “வருத்தப் பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களாகிய நீங்கள் எல்லோரும் நம் அண்டையில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்'' (மத்.11:28) என்கிறார். இதுவே பாவசங்கீர்த்தனத்தைப் பற்றிய அவருடைய எண்ணம் ஆகும்.

தமது பிரதிநிதியாக, மற்றொரு கிறீஸ்துவாக இருக் கும்படி அவர் தமது குருவை நியமிக்கிறார். இந்தப் பிரதி நிதியின் மீது பூரணமான அதிகாரங்களை அவர் பொழிந்து, தேவ ஏவுதல்களைக் கொண்டு அவருக்கு உதவி செய்து, பல ஆண்டுகால கல்வியின் மூலம் அவரைத் தயார் செய்கிறார். எந்த மாபெரும் ஊழியத்திற்காக அவர் குருவை அழைக் கிறாரோ, அதற்கு இவையெல்லாம் அவரைத் தகுதியானவ ராக்குகின்றன.