இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

முதல் வெளிப்படுத்தல்

இது அர்ச். பிலோமினம்மாளை வதைத்துக் கொன்ற தியோக்கிளேஷியனின் அக்கிரமத்தினால் அவனுக்கு நேரிட்ட கேடு பற்றியது. 

இந்த வெளிப்படுத்தலைப் பெற்றது ஒரு சாதாரன தொழிலாளி. அவன் தனக்குக் கூறப்பட்டவைகளை இவ்வாறு சொல்லியுள்ளான். 

“நான் கொடுங்கோலனான தியோக்கிளேஷியனைப் பார்த்தேன். அவன் கன்னிகையான பிலோமினம்மாள் மீது வரை கடந்த ஆசை வைத்தான். அவளை அநேக வாதை களுக்கு உட்படுத்தினான். கொடுமையும், குரூரமும் எப்படி யும் கடைசியில் அவளுடைய தைரியத்தை முறித்து விடும் - தன் விருப்பத்தை அவள் ஏற்பாள் என்று தன்னையே தேற்றிக்கொண்டான். ஆனால் அவனுடைய எல்லா எதிர் பார்ப்புகளும் வீணாயின. அச்சின்ன வேதசாட்சியின் தீர்மானத்தை எதனாலும் மாற்றக்கூடவில்லை. இதை அவன் உணர்ந்ததும், பைத்தியம் அவனைப் பற்றிக் கொண்டது. அந்த அர்ச்சியசிஷ்டவளைத் தன் மனைவியாக்க முடியவில் லையே என்று அவன் ஓலமிட்டழுதான். ஒவ்வொரு வாதனை யாகச் செய்து அவளை வதைத்தான். (சாட்டைகளால் அடிப் பித்தது - நங்கூரத்தைக் கட்டி ஆற்றில் தள்ளியது - அம்பு களால் எய்தது - ஆகிய அவள் கல்லறையில் பொறிக்கப் பட்ட எல்லா அடையாளங்களின்படியும் அவளை வதைத் தான்.) இறுதியாக அவளை ஈட்டியால் கொன்றான். அப்படிச் செய்த உடனேயே அவலமான நம்பிக்கையிழப்பு அவனைப் பீடித்தது. அவன்: எனக்கு ஐயோ கேடு! பிலோமினா ஒருபோதும் என் மனைவியாகமாட்டாள். தன் கடைசி மூச்சு வரையிலும் அவள் என் விருப்பத்தை ஏற்க மறுத்து விட்டாள். நான் எப்படி உயிர் வாழ்வேன்? 

இப்படிச் சொன்ன தியோக்கிளேஷியன் பைத்தியக்கார னைப்போல் தன் தாடியைப் பிய்த்தான். மிகப் பயங்கர மான வலியால் துடித்தான். தன்னையே தரையில் சாய்த்து நான் மன்னனாயிருக்க விரும்பவில்லை என்று அலறினான்.

(இந்த முதல் வெளிப்படுத்தலில் அர்ச். பிலோமினம் மாளுடைய கன்னிமை விரதத்தின் வைராக்கியம் துலங்கு கிறது. எந்த வேதனையும், கொடூரமும், குரூரமும் அதை அசைக்க முடியவில்லை. அர்ச் பிலோமினம்மாளின் கன்னிமை அசையாத மலைபோல் ஆண்டவரையே நாடி நின்றது. இதன் காரணமாக, கடவுளுக்காக தங்கள் கன்னிமையை காக்க விரும்புவோர் அர்ச். பிலோமி னம்மாளை மன்றாடி அவளின் பேறுபலன்களால் சிறந்த உதவி பெறுகிறார்கள். தங்கள் கன்னிமை விரதத்தில் மேலும் மேலும் உறுதிகொள்கிறார்கள்)