நித்திய ஞானமானவரின் அதிசயத்திற்குரிய உன்னத நிலை!

52. ஞானாகமம் எட்டாம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவர் மிகவும் பக்திக்குரிய வார்த்தைகளில் நித்திய ஞானமானவரின் அதிசயத்திற்குரிய உன்னதத் தன்மையை எடுத்துக் காட்டுகிறார். இவை பக்திக்குரியவை என்றாலும் எந்த அளவுக்கு தெளிவா யிருக்கின்றன என்றால், ஒரு சில சிந்தனைகளோடு, அவற்றை இங்கே மேற்கோள் காட்டுவது மட்டுமே நமக்குத் தேவையா யிருக்கிறது. 

53. 1. " ஞானமானது பூமியின் ஒரு கோடியினின்று மறுகோடி வரைக்கும் பலமாய்ச் சென்று சகலமும் இனிதாய் ஒழுங்கு படுத்துகிறது."

நித்திய ஞானமானவரைப் போல இனிமையானது வேறு எதுவுமில்லை . அவர் தம் சுபாவத்திலேயே எந்தக் கசப்புமின்றி இனிமையானவராக இருக்கிறார்; தம்மை நேசிப்பவர்களுக்கு எந்த வெறுப்பும் காட்டாமல், இனிமையுள்ளவராக இருக்கிறார்; தமது நடத்தையில் இனிமையுள்ளவர், ஒருபோதும் கடுமை காட்டுவதில்லை. நீ விபத்துக்களையும், முரண்பாடுகளையும் சந்திக்கும் போது அவர் உன்னுடன் இல்லை என்று அடிக்கடி நீ நினைக்கும் அளவுக்கு அவர் மிக மென்மையானவராக இருக் கிறார். ஆனால் வெல்லப்பட முடியாத வல்லமையை சொந்த மாகக் கொண்டிருக்கும் அவர், மனிதர்கள் அறியாத வழிகளில், சத்தமின்றியும், பலனுள்ள முறையிலும் எல்லாக் காரியங் களையும் மகிழ்ச்சியான விதத்தில் முடித்து வைக்கிறார். அவரது முன்மாதிரிகையைப் பின்பற்றி, ஞானமுள்ளவன் இனிமையான முறையில் உறுதியுள்ளவனாகவும், உறுதியான முறையில் இனிமை யுள்ளவனாகவும் இருக்க வேண்டும். 

54. 2. என் வாலிபம் முதல் அவரையே நேசித்துத் தேடினேன். அவரை என் துணைவராக்கிக் கொள்ள முயன்றேன். அவரது அழகின் பேரில் ஆசை கொண்டேன்.

ஞானமாகிய இந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க விரும்புபவன் யாராயினும், அவன் சாலமோனைப் போல அவரை (அ) அதிகாலையிலும், சாத்தியமானால் இன்னும் இளமையாக இருக்கும் போதும், (ஆ) கற்புள்ள ஓர் இளைஞன் ஒரு மணவாட்டியைத் தேடுவது போல மாசற்ற விதத்திலும், ஞான முறையிலும், (இ) இறுதியாக, அவரைக் கண்டுபிடிக்கும் வரை யிலும் இடைவிடாமலும், தேட வேண்டும். நித்திய ஞான மானவர் ஆத்துமங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்றால், அவர் அவர்களை மணமுடிக்கவும் செய்கிறார், அவர்களோடு ஓர் உண்மையான, ஞான முறையிலான திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறார். உலகம் இதைப் புரிந்து கொள்ள இயலாது. வரலாறு இதற்குப் பல உதாரணங்களை நமக்குத் தருகிறது? 

55. 3. "சர்வேசுரனிடத்திலிருந்து வந்ததால், ஞானமானது தன் மேன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனதைப் பற்றி எல்லாவற் றிற்கும் ஆண்டவராயிருக்கிறவர் அதை நேசிக்கிறார்."

ஞானம் என்பது கடவுளேதான் -- அவரது மகிமையுள்ள மூலாதாரம் அப்படிப்பட்டது. பிதாவாகிய சர்வேசுரன் ஞான மானவர் மீது எப்படித் தாம் பூரண பிரியமாயிருக்கிறார் என்று சாட்சியம் கூறி, ஞானமானவர் தம்மால் நேசிக்கப்படுகிறார் என்று எண்பிக்கிறார் (அத்தியாயம் ஒன்று, மற்றும் எண் 98 காண்க). 

56. 4. " ஞானம் (கடவுளைப் பற்றிய அறிவின் ஆசிரியராக இருக்கிறது); அதுவே சர்வேசுரனை அறிவிக்கும் அவரது செயல் களை நடத்துகின்றது.''

நித்திய ஞானமானவர் மட்டுமே உலகிற்கு வரும் ஒவ்வொரு மனிதனையும் ஒளிர்விக்கிறார் (அரு.1: 9). அவர் மட்டுமே கடவுளின் இரகசியங்களைக் கற்பிக்கும்படி மோட்சத்திலிருந்து வந்தார் (காண். அரு.1:18; மத். 11:27; 1கொரி. 2:10). அவதரித்த ஞானமானவரைத் தவிர நமக்கு வேறு எந்த ஒரு நிஜமான ஆசிரியரும் இல்லை (மத். 23:8, 10). அவருடைய திருப்பெயர் சேசுக்கிறீஸ்து என்பதாகும். அவர் மட்டுமே கடவுளின் எல்லா வேலைகளையும், குறிப்பாக, புனிதர்களையும், உத்தமதனத் திற்குக் கொண்டு வருகிறார். ஏனெனில் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென அவர் அவர்களுக்குக் காட்டுகிறார், தாம் அவர்களுக்குக் கற்பித்த அனைத்தையும் மதித்து, அவற்றை அனுசரிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறார். 

57. 5. "தன் ஜீவிய காலத்தில் மனிதன் செல்வங்களை ஆசிக் கலாம் என்றாலும், சகலத்தையும் படைத்து நடத்தும் ஞானத்தை விட விலையுயர்ந்தது வேறு என்ன இருக்கிறது?"

6. "தன் புத்தி யுக்தியைக் கொண்டு மனிதன் வேலை செய்வான் என்றாலும், எல்லாவற்றையும் ஞானத்துடன் செய்தால், அதிக நலமாய் விளங்கும்.''

7. " ஞானத்தை எவனாவது நேசிப்பானாகில், அவனுடைய செயலால் பெரிதான பயன்கள் உண்டு. ஏனெனில் ஜீவிய காலத் தில் மனிதர்களுக்கு மிகவும் உதவியான மட்டுத்திட்டத்தையும், விவேகத்தையும், நீதியையும், பலத்தையும் அதுவே கற்பிக்கிறது."

நாம் ஞானமானவரை மட்டுமே நேசிக்க வேண்டும் என்பதால், ஞானமாவரிடமிருந்து மட்டுமே எல்லாக் காரியங் களையும் --உலகப் பொருட்களையும், இயற்கையின் இரகசியங் களைப் பற்றிய அறிவையும் எல்லா ஞான நன்மைகளையும், தேவ சம்பந்தமான புண்ணியங்களையும், தலையான புண்ணியங் களையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று சாலமோன் தெளிவாகக் காட்டுகிறார். 

58. 8. 'அறிவின் விசாலத்தை அறிய எவனாவது விரும்புவா னாகில், அவன் கடந்த காரியத்தை அறிவான், வருங்காலத்தைத் தீர்மானிப்பான். வார்த்தைகளில் சூட்சங்களையும், தர்க்கங் களையும், விளக்கங்களையும் கண்டுபிடிப்பான். சம்பவிப்பதற்கு முன்பே அடையாளங்களையும், அற்புதங்களையும், யுகயுகங் களிலே சம்பவிக்கப் போகிற சம்பவங்களையுமே அறிவான்."

வெறுமனே வறண்ட, பொதுவான, மேலோட்டமான அறிவையன்றி, வரப்பிரசாதம் மற்றும் இயற்கையின் பொக்கிஷங்கள் பற்றிய ஓர் ஆழமான, பரிசுத்தமான, விசேஷ அறிவை சொந்தமாகக் கொண்டிருக்க எவனாவது ஆசிப்பான் என்றால், ஞானத்தை அடைந்து கொள்ள அவன் எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும். மனிதன், மனிதர்களின் கண்களில் எவ்வளவு பெரிய அறிஞனாகத் தோன்றினாலும், அவனிடம் ஞானமானவர் இல்லையெனில், அவன் கடவுளின் பார்வையில் ஒன்றுமில்லாமையாகவே இருக்கிறான். 'அவர்கள் ... மதிப் பற்றவர்களாய் இருப்பார்கள்" (ஞான 3: 17). 

59. 9. என் ஜீவியத்தின் துணையாக ஞானத்தைச் சேர்த்துக் கொள்ள நான் தீர்மானித்தேன். ஏனெனில் தன்னால் உண்டாகும் நன்மைகளுக்கு அது என்னைப் பங்காளியாக்கும் என்றும், துக்கத்திலும், ஏக்கத்திலும் எனக்கு ஆறுதல் வருவிக்குமென்றும் நான் அறிந்திருந்தேன்.

நித்திய ஞானமானவர் மிகப் பெரும் செல்வ வளம் படைத்தவர், மிக தாராளமானவர்; அவரைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் யாரும் எப்படி ஏழையாக இருக்க முடியும்? அவர் மிகுந்த மென்மையும், கனிவும், வசீகரமும், இனிமையும் வாய்ந்தவர் அவரைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் எவனும் எப்படி மகிழ்ச்சியற்றவனாக இருக்க முடியும்? ஆனால் நித்திய ஞானமானவரைத் தேடும் அனைவரிலும் எத்தனை பேர் சாலமோ னோடு சேர்ந்து, நேர்மையான முறையில், '' அவரைச் சொந்த மாகக் கொண்டிருக்க நான் தீர்மானித்திருக்கிறேன்" என்று சொல்ல முடியும்? மனிதர்களில் பெரும்பாலானோர் நிஜமான நேர்மை யோடு இப்படிப்பட்ட தீர்மானம் செய்வதில்லை. அவர் களுடைய முடிவுகள் வெறுமனே அவர்களது விருப்பங்களைப் பற்றிய நினைவுகளாக, அல்லது பலவீனமும் தடுமாற்றமும் உள்ள தீர்மானங்களாக மட்டுமே உள்ளன. அதனால் தான் நித்திய ஞானமானவரை அவர்கள் ஒரு போதும் கண்டுபிடிப்பதில்லை. 

60. 10. " இதனால் ஜனங்களுக்குள்ளே நான் பிரகாசிப்பேன். வாலிபன் ஆனாலும், முதியவர்களிடத்தில் பெருமையடைவேன்.''

11. "நியாயத் தீர்ப்பில் என் புத்திக்கூர்மையைக் காண்பார் கள். பெரியோர்கள் என்னைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். பிரபுக்கள் என்னை உற்றுப் பார்த்து அதிசயித்துக் கொள்வார்கள்."

12. "நான் வாய் திறக்கிற வரைக்கும் எதிர்பார்த்திருப்பார்கள். நான் பேசும்போது என்னை உன்னிப்பாய்ப் பார்ப்பார்கள். பல காரியங்களைப் பற்றி நான் பிரசங்கிக்கவே, கைகளால் தங்கள் வாயை மூடிக்கவனமாய்க் கேட்பார்கள்.''

13. "இன்னும் ஞானத்தால் அழிவில்லாத கீர்த்தியை அடைவேன். எனக்குப் பின் வருபவர்களுக்கு எப்பொழுதும் என் ஞாபகம் இருக்கும்."

14. "ஜனங்களை ஆளுவேன்; தேசங்கள் எனக்குக் கீழ்ப்பட் டிருக்கும்."

அர்ச். கிரகோரியார் சாலமோனின் இந்தச் சுய புகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார்: "கடவுளின் புனித வார்த்தைகளை எழுத அவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பரிசுத்த ஆவியான வரால் நிரப்பப்படுகிறார்கள். ஒரு விதத்தில், அவர்கள் தங்களுக்கு மேலாக எழுந்து, தங்களை ஆட்கொண்டிருப்பவருக்குள்ளேயே பிரவேசிப்பவர்களாய்த் தோன்றுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கே ஒலிபெருக்கிகளாக ஆகிறார்கள், ஏனெனில் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்திலும் கடவுளை மட்டுமே தங்கள் கருத்தில் கொண்டிருக்கிறார்கள், வேறு ஒருவரைப் பற்றிப் பேசுவது போல அவர்கள் தங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.'' 

61. 15. "குரூர அரசர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்படும் போது திகிலடைவார்கள். எனது குடிமக்களுக்கு நான் நல்லவனென்றும்,

16. "என் வீட்டினுள் பிரவேசிக்கும் போது ஞானத்தோடு இளைப்பாறுவேன். ஏனெனில் அதன் பழக்கத்தில் வெறுப்புக் குரியது ஒன்றுமில்லை. அதன் சேர்க்கையிலே சலிப்புக்குரியது ஒன்றுமில்லை . சகலமும் சந்தோஷமும் ஆனந்தமுமே."

17. "இதெல்லாம் என்னுள்ளத்தில் நினைத்து, என் இருதயத் தில் தியானித்து ஞானத்தோடு ஒன்றித்திருப்பதால், கடக்கப் படாத கீர்த்தியை அடையலாமென்று யோசித்து,

18. அதன் சிநேகத்தில் பரிசுத்த ஆனந்தமும், அதன் செய்கை களில் தவறாத நேர்மையும், உரையாடல்களில் புத்தித் தெளிவும், சகவாச வார்த்தைகளில் பெரும் மேன்மையும் உண்டாகு மானதால், அதை என்னுடன் சேர்ப்பதற்கு எங்கும் தேடிச் சுற்றினேன்."

தமது முந்தின வர்ணனையைச் சுருக்கிக் கூறிய பின் சாலமோன் பின்வரும் முடிவுக்கு வருகிறார்: "நித்திய ஞானத்தைத் தேடி, அதை என்னுடன் சேர்ப்பதற்கு நான் எங்கும் தேடிச் சுற்றினேன். " அவரை நம் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, நாம் அவரை ஆர்வத்தோடு தேட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவ தானால், அவரைச் சொந்தமாகப் பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் விட்டு விடவும், எந்தத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஒரு சிலர் மட்டுமே அவருக்குத் தகுதியுள்ள முறையில் அவரைத் தேடு கிறார்கள் என்பதால், ஒரு சிலர் மட்டுமே அவரைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

62. ஞானாகமத்தின் ஏழாம் அதிகாரத்தில் , பரிசுத்த ஆவியானவர் நித்திய ஞானமானவரின் அதியற்புதமான உன்னத நிலையைப் பற்றிப் பின்வரும் வார்த்தைகளில் பேசுகிறார்: " ஞானத்தின் குணாதிசயங்களாவன : அது அறிவுடையது, பரிசுத்தமானது, ஏகமானது. பல வித நன்மைக்கடங்கியது. சூட்சமானது, திறமையுள்ளது. இலகுவானது. மாசுபடாதது. நிச்சயமானது, இனிமையானது, நன்மையை நேசிக்கும் சுறுசுறுப்புள்ளது. கூரானது, யாதொன்றாலும் தடை செய்யப்படாதது. நன்மை செய்யும் சுபாவமுள்ளது. மனிதர்மீது நேசம், தயாளம், உறுதி, மாறாமை, அமரிக்கையுள்ளது. சகலமும் செய்யும், சகலமும் பார்க்கும், சகல தன்மையும் அடங்கியது. கண்டுபிடிக்கக் கூடுமானது; சுத்தமும், நுட்பமுமானதாயிருக்கிறது. சுறுசுறுப் புள்ள வஸ்துக்கள் எல்லாவற்றையும் விட ஞானம் அதிக சுறுசுறுப் புள்ளது. தன் சுத்த குணத்தால் எங்கும் பிரவேசிக்கின்றது" (ஞான. 7:22-24).

"ஞானம் மனிதர்களுக்கு ஓர் அளவற்ற பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்தியவர்கள் கடவுளின் நண்பர்களாகி யிருக்கிறார்கள், தாங்கள் பெற்ற அறிவின் கொடையின் நிமித்தம் அவர்கள் புகழ்ச்சிக்குரியவர்களாக இருக்கிறார்கள்.'' 

63. நித்திய ஞானமானவரின் அழகு உன்னத நிலை மற்றும் பொக்கிஷங்களை எடுத்துக்காட்டும்படி பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் வலிமையான, ஆயினும் கனிவு மிக்க வார்த்தைகளை வாசித்த பிறகு அவரை நேசிக்காமலும், நம் முழு பலத்தோடும் அவரைத் தேடாமலும் இருக்க நம்மால் முடியாது. அவருக்காக உண்டாக்கப்பட்ட மனிதனுக்கு அவர் செல்வங் களின் வற்றாத ஆதாரமாக இருக்கிறார், மனிதனுக்குத் தம்மையே தர அளவற்ற ஆர்வமுள்ளவராக இருக்கிறார் என்பதால், நாம் இன்னும் அதிகமாக அவரை நேசிக்கவும், தேடவும் வேண்டியவர் களாக இருக்கிறோம்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...