இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காணாமற்போன ஜெபமாலை

ஒருநாள் மாலையில் மரி தன் அறையில் உட்கார்ந்து இராச் செபங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். மே மாதமாகையால் ஜெபமாலையையும் அவள் நேசத் துடன் செபித்து முடித்தாள். பின் ஜெபமாலையில் தொங்கிய பாடுபட்ட சுரூபத்தை முத்தி செய்து ஜன்னலில் வைத்து நித்திரைக்குச் சென்றாள்.

மறுநாள் அதிகாலையில் மரி தன் தாயை அணுகி, "அம்மா, நீங்கள் என் ஜெபமாலையை எடுத்தீர்களா? எங்கும் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. நேற் றிரவு அது என் அறையிலிருந்தது'' என்றனள்.

தாய், “அதை எடுக்கவுமில்லை, அதை எங்கும் பார்க்கவுமில்லை. ஒருவேளை எட்மண்ட் அதை எடுத் திருக்கலாம்'' என்றாள்.

எட்மண்ட் இருந்த இடத்தை மரி கண்டு பிடித்து அவனிடம் கேட்டாள். "தம்பி, இதிலெல்லாம் நீ கேலி செய்யக்கூடாது. ஜெபமாலையை எங்கு மறைத்து வைத்தாய், சொல். புதுநன்மை வாங்கிய நாளில் கிடைத்த ஜெபமாலையல்லவா?” என்றனள்.

“உண்மையாகவே சொல்கிறேன். மரி, அதை நான் எடுக்கவில்லை. அதை நான் பார்க்கவுமில்லை. எப்படியாவது அது சீக்கிரம் அகப்படும், இது நிச்ச யம். கவலைப்படாதே'' என எட்மண்ட் கூறினான்.

பின் இருவரும் சேர்ந்து ஜெபமாலையைத் தேடி னார்கள். அவர்கள் பாராத இடமே இல்லை. வீட் டில் ஒவ்வொரு மூலையையும் பார்த்தார்கள். சாமான் களைப் புரட்டினார்கள். வீட்டுக்கு வெளியேயும் சுற் றினார்கள். ஜெபமாலை அகப்படவில்லை. இனி தேடு வதிற் பயனில்லை என நினைத்துவிட்டார்கள். "தம்பி, என்னுடன் அறைக்கு வா. ஒரு காரியம் சொல்லப் போகிறேன்'' என மரி சொல்லவே, இருவரும் மேன் மாடிக்குச் சென்றார்கள். உள் நுழைந்ததும் மரி கதவைச் சாத்தி, "நாம் இருவரும் முழந்தாளிட்டு தேவதாயை நோக்கிப் பிரார்த்திப்போமாக. தேவதாயின் உதவியால் ஜெபமாலை அகப்படும். ஐந்தா வது சந்தோஷத் தேவ இரகசியமே நல்லது. காணா மற்போன யேசுவைத் தேவதாய் தேவாலயத்தில் கண்டாளல்லவா?" என்றாள்.

மரியின் படுக்கைக்கு மேலே தேவதாயின் அழ கிய படம் ஒன்று தொங்கியது. அதை உருக்கத்து டன் நோக்கி சிறுவனின் ஜெபமாலையைப் பயன் படுத்தி இருவரும் நம்பிக்கையுடன் ஜெபித்தார்கள். “அருள் நிறைந்த மரியாயே, வாழ்க...” பத்து முறை தங்கள் இனிய குரல்களால் சிறுவர்கள் மரியன்னை யை வாழ்த்தினர். “என் ஜெபமாலை எப்படியாவது திரும்பக் கிடைக்கும். தேவதாயிடம் கேட்டால் எப் பொழுதும் கிடைக்கும், மிகவும் இரக்கமுள்ள தாயே, நாங்கள் இனி பொறுமையாய்க் காத்திருப் போம். அது அகப்படும்வரை பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பிக்கும் சகோதரியிடம் ஒரு ஜெபமாலை கேட்டு வாங்கிக்கொள்வேன்'' என மரி நம்பிக்கை யுடன் கூறி பள்ளிக்உடத்துக்குப் புறப்பட்டாள்.

அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது. திரும் பவும் தேவதாயின் மாதம், ஜெபமாலை இராக்கினி யின் மாதம். "எட்மண்ட், இன்று ஒக்டோபர் மாதத் தின் முதல் நாள். என் ஜெபமாலை சீக்கிரம் திரும்ப வரும். வந்தாக வேண்டும். “உம்மாற் கைவிடப்பட் டதாக ஒருபோதும் உலகிற் சொல்லக் கேள்விப்பட்ட தில்லை' என 'மிகவும் இரக்கமுள்ள தாயே' என்னும் ஜெபத்தில் நாம் சொல்கிறோமல்லவா?" என மரி கூறி னாள். அவள் இன்னும் தன் அழகிய ஜெபமாலையை நினைத்துக்கொண்டிருந்தாள். நம்பிக்கையுடன் காத் திருந்தாள்.

''ஒருபோதுமே அது அகப்படாமற்போனாலும் போகலாம்'' என்றான் எட்மண்ட்.

“வா, அது கிடைக்கும் என்பதைப் பற்றி எனக்கு சந்தேகமே கிடையாது. பலவித நிறங்களும் வடிவங்க ளும் அளவுகளுமுள்ள இலைகளைப் பொறுக்குவோம்" என மரி கூறியதும், இருவரும் புறப்பட்டார்கள்.

திடீரென அவள் தம்பியை அழைத்தாள். ''எட் மண்ட், எட்மண்ட், சீக்கிரம் வா; இந்த மரத்தில் ஒரு பறவையின் கூடு இருக்கிறது. அதில் பிரகாசமான பொருள் ஒன்று இருக்கிறது. அது ஒரு நகையா யிருக்கலாம்'' என்றாள்.

உடனே எட்மண்ட் மரத்தில் ஏறினான். அந்தப் பொருளை, "மரி, பிடித்துக்கொள்'' என்று போட் டான். அது என்ன? மரியின் ஜெபமாலை. 'திருச் செபமாலை இராக்கினியே, நேசத்தாயே, உமக்கு நன்றி'' என மரி கூறினாள்.