இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே!

சர்வேசுரன் தமது தாசர்களின் பொருட்டு எவ்வ ளவோ அற்புதங்களைச் செய்திருக்கிறார்; செய்துகொண் டும் வருகிறார். ஆனால் இதுவரை யாருக்குமே அளிக்கப் படாத ஒரு ஒப்பற்ற வரத்தை, பாக்கியத்தை, ஏன், ஒரு அற்புத உரிமையை தமது பரிசுத்த மாதாவுக்கு மாத்திரமே அளித்திருக்கிறார். அதுதான் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்துப் பிறக்கும் பாக்கியம்!

சிருஷ்டிகளுள் அற்புதமான சிருஷ்டி அர்ச். கன்னிமரியம்மாள். ஜென்மப் பாவத்தோடு பிறந்த பெற்றோர்களிடமிருந்து ஜென்மப் பாவமில்லாமல் பிறக்கிறார்கள் நம் பரிசுத்த தேவமாதா. இதனால்தான் அர்ச். தமாசீன் அருளப்பர்: “ஓ, மரியாயே, நீர் அலங்கிருத அற்புத சிருஷ்டி!” என வியந்துரைக்கிறார். ஆம். ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மாமரி உண்மையிலேயே அற்புதமானவர்கள்தான்.

இனி ஜென்மப்பாவம் என்றால் என்ன என்பதைப் பற்றி சற்று ஆராய்வோம்.

மனுக்குலத்தின் ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவையை சர்வேசுரன் பரிசுத்தமும், பாக்கியமுமான அந்தஸ்தில் உண்டாக்கி, அவர்களை சுபாவத்திற்கு மேலான அந்தஸ்திற்கு (றீற்ஸ்ரீerஐழிமிற்rழியி லிrder) உயர்த்தி, ஆச்சரியத்துக்குரிய வரங்களால் அலங்கரித்திருந்தார். 

சர்வேசுரன் ஆதாமுக்குக் கொடுத்த வரங்களுள் முதன் மையானது தேவ இஷ்டப்பிரசாதம். அதோடு விசேஷ அறிவு, ஆசாபாசமின்மை, சாகாமை, பாடுபடாமை, வியாதியின்மை முதலிய வரங்களையும் அளித்திருந்தார். இவற்றால் அவர்களுடைய ஆத்துமம் கடவுளுக்கு முற் றிலும் அமைந்திருந்தது. அது போலவே அவர்களுடைய சரீரமும் ஆத்துமத்திற்கு எல்லாவற்றிலும் கட்டுப்பட்டிருந்தது. 

ஆதாமிடமிருந்து உதிப்பவர்கள் எல்லோரும் இந்த வரங்களோடு ஜென்மிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் இவைகளைச் சர்வேசுரன் ஆதாமுக்குத் தந்தார். ஆதித்தாயும், ஆதித் தகப்பனும் இந்தப் பாக்கியமான அந்தஸ்தில் நிலைத்திருந்திருந்தால், மரணமின்றி ஏதேன் தோட்டத்திலிருந்து நித்திய மோட்ச பாக்கியத்திற்கு நேரே சென்றிருப்பார்கள். 

ஆனால் நடந்தது என்ன? மனுக் குலத்தின் தந்தையாகிய ஆதாம், பசாசை நம்பி, தேவ கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியைத் தின்று பாவம் கட்டிக் கொண்டார். இதுதான் “ஆதிப் பாவம்” அதாவது ஆதியிலே செய்யப்பட்ட பாவம் (நுrஷ்ஆஷ்ஐழியி விஷ்ஐ) எனப்படும். இப்பாவத்தால் சர்வேசுரன் தங்களுக்கு இலவசமாய் அளித்திருந்த அத்தனை வரங்களையும், கொடைகளையும் ஒருங்கே ஒரு நொடிப் பொழுதில் இழந்து விட்டனர்.

பெற்றோரின் தொற்றுநோய் பிள்ளைகளைத் தாயின் உதரத்திலேயே பிடிப்பது போன்று அவர்கள் கட்டிக் கொண்ட பாவமும், அப்பாவத்தின் காரணமாய் ஏற்பட்ட சாபங்களும் அவர்களின் மக்களாகிய நம் ஒவ்வொருவரையும், நாம் நமது தாயின் உதரத்தில் உற்பவிக்கும் கணத்திலேயே பீடிக்கின்றன. அத்துடன் நாம் இவ்வுலகில் பிறக்கிறோம். இதனால்தான் இது ஜென்மப் பாவமென்று சொல்லப்படுகிறது. (ஜென்மம்= பிறப்பு; ஜென்மப் பாவம்=நாம் பிறக்கும் போது நம்மோடு கூடப்பிறக்கிற பாவம்).

எனினும் இந்தச் சட்டம் ஒரே ஒரு புண்ணிய வதியை மட்டும் பாதிக்கவில்லை. அவர்கள்தான் மாசணு காத அமலோற்பவக் கன்னிமாமரி. சர்வேசுரனுடைய விசேஷ உதவியினால், தாயின் உதரத்தில் தோன்றிய கணத்திலயே ஜென்மப்பாவமின்றி காப்பாற்றப்படுகிறார்கள். ஆதலால்தான் அவர்களை “அமலோற்பவ மாதா” என்று அழைக்கிறோம். 

அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லோரும் பாவத்தோடு உற்பவித்து, பாவத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் நமது தேவ அன்னையோ, தனது தாயின் உதரத்தில் தோன்றிய நிமிஷத்திலிருந்தே சகல வரங்களாலும் புண்ணியங்களாலும் நிரப்பப் பெற்றுப் பிறக்கிறார்கள். ஆதலால்தான் அர்ச். கபிரியேல் சம்மன சானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன போது, “அருள் நிறைந்த மரியாயே வாழ்க!” என்று வாழ்த்துகிறார்.

பரிசுத்த மாமரி ஜென்மப்பாவமின்றி உற்பவித் தார்கள் என்று சொல்லும்போது நமது ஆண்டவரைப் போன்று அற்புதமாய்ப் பிறந்தார்கள் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். நமது ஆண்டவர் இஸ்பிரீத்து சாந்து வாகிய சர்வேசுரனின் வல்லமையால், பூலோக தந்தையின் உதவியில்லாமல் அற்புதமாகத் தன் தாயின் உதரத்தில் கருத்தரிக்கப்பட்டுப் பிறந்தார். 

ஆனால் நம் தேவ மாதாவுக்கோ பூலோகத் தந்தையும், தாயுமிருந்தனர். அவர்கள்தான் அர்ச். சுவக்கீனும் அர்ச். அன்னம்மாளும். தேவதாய் நாமெல்லோரையும் போலவே தாயின் வயிற்றில் கருத்தரிக்கப்பட்டார்கள். எனினும் நமக்கும் பரலோக மாதாவுக்கும் பாரதூர வித்தியாசம் உண்டு. ஏற்கனவே காண்பிக்கப்பட்டதுபோல் நாமெல்லோரும் பாவத்திலே கருத்தரிக்கப்பட்டு, ஜென்மப் பாவத்தோடு பிறக்கிறோம். 

ஞானஸ்நானம் பெறும்போது ஜென்மப் பாவத்தினின்று கழுவப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகிறோம். எனினும் ஜென்மப் பாவத்தின் விளைவான ஆசாபாசங் களும் சோதனை போராட்டங்களும் நம்மிடமிருந்து அகற்றப்படுவதில்லை. ஆனால் தேவ அன்னையோ தமது உற்பவத்தின் முதற்கண நேரத்திலேயே, ஜென்மப் பாவமின்றிக் காப்பாற்றப்பட்டு தேவ இஷ்டப்பிரசாதத்தை அடைந்தார்கள்; பாவத்தின் விளைவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

 பரிசுத்த கன்னிமாமரியின் அமல உற்பவத்தை எண்பிக்கப் போதிய சான்றுகள் வேதாகமத்தில் உள்ளன. “ஓ மரியாயே, நீர் முற்றிலும் செளந்தரியவதி; ஜென்மப் பாவத்தின் மாசு உம்மையண்டினதில்லை” (உந். சங். 44). 

“ஒரு கன்னி கர்ப்பந்தரித்து ஒரு புத்திரனைப் பெறுவாள்; அவருக்கு எம்மானுவேல் என்னும் நாமமிடுவார்கள்” (இசை. 7:14). 

இக்கன்னிகைதான் பசாசின் தலையை நசுக்க வந்த “ஜீவியத்தின் குமாரத்தி.” சர்வேசுரன் துஷ்டப் பசாசைப் பார்த்து, “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்” என்றார் (ஆதி. 3:15). இந்த ஸ்திரீ அமலோற்பவ கன்னிமாதாவேயன்றி வேறல்ல.

பரிசுத்த கன்னிகை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தார்கள் என்ற சத்தியம் 9-வது பத்திநாதரென்ற பாப்பானவரால் 1854-ம் வருஷம் விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இவ்வுண்மையை அறிந்து தான் விசுவாசிகளும், வேத சாஸ்திரிகளும் திருச்சபை உண்டான காலத்திலிருந்தே நமது பரிசுத்த அன்னையை “ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினி” என்றும், “அமலோற்பவ மாதா” என்றும் அழைத்து வந்தனர்.

அர்ச். ஜூஸ்தின், தெர்துலியன், அர்ச். இரனேயுஸ், ஆரிஜன் முதலிய பெரிய வேதசாஸ்திரிகள் தாங்கள் இயற்றித் தந்த பெரிய நூல்களில் இவ்வுண்மையை நன்கு விளக்குகிறார்கள். நான்காம் நூற்றாண்டில் அர்ச். எஃப்ரேம் என்ற வேதபாரகர் சொல்லுகிறதாவது: “மெய்யாகவே ஆண்டவரே, தேவரீரும், உமது திருமாதாவும்தான் எவ்விதத்திலும் முற்றும் அழகுவாய்ந்து விளங்குகின்றீர்கள். ஏனெனில் ஆண்டவரே, உம்மிடம் யாதொரு குறைவுமில்லை. அப்படியே உமது மாதாவிடமும் யாதொரு பாவக் கறையுமில்லை.” இவருக்குப் பிறகு தோன்றின அர்ச். அகுஸ்தீன், அர்ச். எரோணிமுஸ், அர்ச். அம்புரோசியார் போன்ற பெரிய வேத சாஸ்திரிகள் இவ்வுண்மையை விஸ்தாரமாக விளக்கிக் காட்டுகின்றனர்.

கி.பி. 5-ம் நூற்றாண்டிலிருந்தே அமலோற்பவ மாதாவின் திருநாளை விசுவாசிகள்-சிறப்பாகக் கீழ் நாட்டினர் (சிழிவிமிerஐ ளீஜுற்rஉஜு) கொண்டாடி வந்துள்ளனர். 5-ம் நூற்றாண்டில் திருச் சபையை விட்டுப் பிரிந்து போன பிரிவினைச் சபைகளிலிருந்து வந்த கிறீஸ்தவர்களும் இத்திருநாளைக் கொண்டாடி வந்தனர். 1000 ஆண்டள வாக இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் முதலிய தேசங்களில் இத்திருநாள் வழக்கத்திலிருந்து வருகிறது. ஆதலின், தேவதாயார் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித் தார்கள் என்ற உண்மை திருச்சபையால் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.

தேவமாதாவின் அமல உற்பவத்தைத் திருச்சபை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1858-ம் வருஷம் தேவமாதா தானே பிரான்ஸ் தேசத்தில் லூர்து நகரில் மசபியேல் கெபியில் பெர்னதெத் என்ற பெண்ணுக்குக் காட்சியளித்து, “நாமே அமலோற்பவம்” என்று மொழிந்தார்கள்.

ஏன் சர்வேசுரன் நமது தேவமாதாவை பாவமாசு சிறிதேனும் அணுகாமல் சிருஷ்டித்து, சகல தேவ வரங்களால் அவர்களை நிரப்ப வேண்டும்? எல்லாம் வல்ல சர்வேசுரன் ஏதாவதொன்றை சிருஷ்டிக்கும்போது ஒரு காரணத்தை முன்னிட்டுத்தான் சிருஷ்டிக்கிறார். 

உலகில் வெளிச்சத்தையும், செடி கொடிகள் தழைத்து வளர்வதற்கான சக்தியையும் கொடுப்பதற்காக சூரியனை உண்டாக்கினார். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்குச் சிறகுகளைக் கொடுத்திருக்கிறார். மனிதனுக்குப் பகுத்தறிவையும், அழியாத ஆன்மாவையும் அளித்திருக் கிறார். நாமும் ஒரு காரியத்தைச் செய்யும்போது ஆழ்ந்து யோசித்து ஒரு காரணத்தை முன்னிட்டுத்தான் செய்கிறோம். 

நம்மெல்லோரையும் உண்டாக்கியது போல் சர்வேசுரன் மாமரியை உண்டாக்கவில்லை. மாமரிக்கு ஒரு விசேஷ கடமையும் அலுவலும் இருந்தது. அதுதான் சர்வ வல்லப சர்வேசுரனுக்குத் தாயாகும் ஓர் ஒப்புயர்வற்ற தனிப் பாக்கியம். பாவத்தில் உழலும் ஒரு சிருஷ்டி தூய சர்வேசுரனின் தாயாக இருக்க முடியுமோ? 

மோட்சத்தில் கோடானுகோடி சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும், “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று ஆராதிக் கும் கடவுளுக்கு நம்மைப் போன்ற ஒரு மாது தாயாக இருக்க முடியுமோ? சர்வேசுரன் சமூகத்தில் சம்மனசுக்கள் முதலாய் அஞ்சி நடுநடுங்குகிறார்களே; அத்தகைய தூய தேவனை சீராட்டித் தாலாட்டி, அமுதூட்டி வளர்த்த ஒரு புண்ணிய ஸ்திரீ மற்ற பெண்களைப் போன்று ஒரு பாவியாக இருக்க முடியுமோ? 

சிலுவை மரத்தடியில் நின்று தமது குமாரன் மூலமாய், நம்மெல்லோரையும் பசாசின் அடிமைத்தனத்தினின்றும் மீட்டு மனுக்குலம் முழுவதற்குமே இரட்சணியம் பெற்றுத் தந்து நமக்காகப் பரிந்து பேசும் இப்புனித அன்னை நம்மைப் போல பாவ ஆசாபாசங்களில் கட்டுண்டு கிடக்க முடியுமோ? 

பிதாவாகிய சர்வேசுரனின் நேச குமாரத்தியாகவும், சுதனாகிய சர்வேசுரனின் அன்புள்ள தாயாகவும், இஸ்பிரீத்துசாந்து வாகிய சர்வேசுரனின் பிரிய பத்தினியாகவும் விளங்கிய மாசில்லா மாமரி நம்மைப் போல் பாவச் சகதியில் புரளுவது நியாயமாகுமோ? பசாசின் தலையை நசுக்கின நம் பரிசுத்த மாதா பாவத்தினால் பசாசுக்கு ஒரு நிமிஷமாவது அடிமையாவது கூடுமோ? கூடாது! கூடாது!!

“மரியாயே! நீர் முற்றிலும் செளந்தரியம் உள்ளவர். ஜென்ம மாசு அற்பமேனும் இல்லாத் தூய செல்வி நீர். அம்மா! ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அமலோற்பவ நாயகியே, நாங்கள் எல்லோரும் கண்ணீர்க் கணவாயாகிய இப்பூலோகத்தில் சோதனை சஞ்சலங் களாலும் தாக்கப்பட்டுப் பாவச் சேற்றில் உழலுகிறோம். எங்களைக் கைதூக்கி இரட்சியும் மாதாவே!”


ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!