தெய்வீக ஞானமானவரை அடையும் இரண்டாவது வழி: ஜெபம்!

184. கடவுளின் கொடை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதை அடைவதற்கு அதிக முயற்சி தேவைப் படுகிறது. ஆகவே, கடவுளின் கொடைகள் அனைத்திலும் மிகப் பெரியதாகிய ஞானமாகிய கொடையைப் பெறுவதற்கு அதிக ஜெபமும், மிகுந்த முயற்சியும் தேவைப்படுகிறது.

ஞானமானவரே இதுபற்றி என்ன சொல்கிறார் என்று கேட்போம். "தேடுங்கள், கண்டடைவீர்கள், தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும், கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்" (மத்.77 லூக். 11 9). நீங்கள் என்னைக் கண்டடைய ஆசித்தால், என்னை நீங்கள் தேட வேண்டும், என் அரண்மனைக் குள் பிரவேசிக்க நீங்கள் விரும்பினால், என் கதவை நீங்கள் தட்ட வேண்டும், என்னைப் பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால், என்னை நீங்கள் கேட்டு மன்றாட வேண்டும். என்னைத் தேடாதவன் எவனும் என்னைக் கண்டடைய மாட்டான். என் கதவைத் தட்டாதவன் எவனும் என் இல்லத்தில் நுழைய மாட்டான், எனக்காகக் கேட்டு மன்றாடாதவன் எவனும் என்னைப் பெற்றுக் கொள்ள மாட்டான் என்று அவர் சொல்வது போன்றது இது. ஜெபத்தின் வழியாக மட்டுமே நாம் இதைச் செய்ய முடியும்.

ஜெபம் என்னும் வழக்கமான வாய்க்காலின் வழியாகவே கடவுள் தமது கொடைகளை, சிறப்பாகத் தமது ஞானமானவரை நமக்குத் தருகிறார். நான்காயிரம் வருடங்களாக உலகம் தேவ ஞானமானவரின் மனித அவதாரத்தைக் கேட்டு மன்றாடிக் கொண்டிருந்தது. அவரைத் தன் திருவுத்தரத்தில் பெற்றுக் கொள்ளு மாறு மகா பரிசுத்த கன்னிகை பதினான்கு ஆண்டுகளாக ஜெபத்தின் மூலம் தன்னையே ஆயத்தப்படுத்தினார்கள். நீண்ட காலமாக மிகுந்த ஆர்வத்தோடு ஜெபித்த பின்னரே சாலமோன் ஞானத்தைப் பெற்றுக் கொண்டார். "நான் ஆண்டவரிடம் சென்று அவரை மன்றாடினேன், உம் சிங்காசனத்தருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்குத் தந்தருளும் என்று என் முழு இருதயத்தோடு சொன்னேன்" (ஞான. 8.21, 94). "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், கடிந்துகொள்ளாமல் யாவருக்கும் ஏராளமாய்க் கொடுக்கிற சர்வேசுரனிடம் கேட்கக்கடவான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும்" (யாக 15). "யாருக்காவது நேசமோ , தாழ்ச்சியோ, பொறுமையோ குறைவுள்ளதாயிருந்தால்...” என்று பரிசுத்த ஆவியானவர் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள். இவையெல்லாம் மிக அற்புதமான புண்ணியங்கள்தான். மாறாக, "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்...." என்று அவர் சொல்கிறார். ஏனெனில் ஞானத்தைக் கேட்பதன் மூலம், அவதரித்த ஞானமானவர் சொந்தமாகக் கொண்டுள்ள அனைத்து புண்ணியங்களையும் நாம் கேட்கிறோம். 

185. ஆகவே ஞானமானவரைச் சொந்தமாகக் கொண்டிருப் பதற்கு நாம் ஜெபிக்க வேண்டும். ஆனால் எப்படி ஜெபிக்க வேண்டும்?

முதலாவதாக, ஒரு பலமான, உயிருள்ள விசுவாசத்தோடு, எந்தத் தடுமாற்றமுமின்றி இந்தக் கொடைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். ஏனெனில், தன் விசுவாசத்தில் தடுமாறுபவன் ஆண்டவ ரிடமிருந்து எந்தக் கொடையையும் பெற முடியும் என்று எதிர்பார்க்கக் கூடாது (யாக 1:6,7)

186. இரண்டாவதாக, ஆறுதல்கள், காட்சிகள் அல்லது விசேஷ வெளிப்பாடுகள் ஆகியவற்றை எதிர்பாராமல், பரிசுத்தமான விசுவாசத்துடன் நாம் அதற்காக ஜெபிக்க வேண்டும். சில புனிதர் களின் வரலாறுகளில் நாம் காண்பது போல, இப்படிப்பட்ட காரி யங்கள் நல்லவையாகவும், உண்மையானதாகவும் இருக்கலாம் என்றாலும், அவற்றைச் சார்ந்திருப்பது எப்போதுமே ஆபத் தானது. ஏனெனில் நம் விசுவாசம் எவ்வளவு அதிகமாக இந்த அசாதாரண வரப்பிரசாதங்கள் மற்றும் உணர்வுகளைச் சார்ந்திருக் கிறதோ, அவ்வளவுக்கு அது பரிசுத்ததனத்திலும், பேறுபலனிலும் குறைவுள்ளதாக இருக்கிறது. ஞானமானவரின் மகத்துவத்தையும், அழகையும், இந்தக் கொடையை நம்மீது பொழிய கடவுளுக்கு உள்ள ஆசையையும், அதற்கான நம் தேவையையும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே அதை நாம் விரும்பச் செய்வதற்கும், மட்டற்ற விசுவாசதச்தோடும், ஆவலோடும் இந்த விசுவாசத்திற்காக ஜெபிக்கும்படி செய்யவும் போதுமான பலமான நோக்கங்களை நாம் காண்கிறோம். 

187. எளிய விசுவாசம் நம் ஆன்மாவில் ஒரே சமயத்தில் ஞானத் தின் காரணமாகவும், அதன் விளைவாகவும் இருக்கிறது. எவ்வளவு அதிக விசுவாசம் நம்மிடம் உள்ளதோ, அவ்வளவு அதிகமாக நாம் ஞானத்தைச் சொந்தமாகக் கொண்டிருப்போம். எவ்வளவு அதிக மாக அதைக் கொண்டிருப்போமோ, அவ்வளவுக்கு காண்பதோ, உணர்வதோ, சுவைப்பதோ இன்றியும், தடுமாற்றமின்றியும், நம் விசுவாசம் பலமானதாக இருக்கும் (உரோ. 1.17 காண்க.). "கடவுளை இதைச் சொல்லியிருக்கிறார் அல்லது வாக்களித்திருக் கிறார்," இந்த வார்த்தைகள் ஒவ்வொரு ஞானமுள்ள மனிதனுடை யவும் அனைத்து ஜெபங்கள் மற்றும் செயல்களின் அடிப் படையாக இருக்கின்றன. என்றாலும், ஒரு சாதாரணக் கண்ணோட்டத்தின்படி, கடவுள் அவனுடைய பரிதாபமான நிலையைக் கண்டும் காணாதவராகவும், அவனுடைய ஜெபங் களுக்குச் செவிசாய்க்காதவராகவும், அவனுடைய எதிரிகளை நசுக்க வல்லமையற்றவராகவும் தோன்றுகிறார். அவன் பராக்கு களாலும் சந்தேகங்களாலும், மனதின் இருளாலும், ரூபிகரத்தின் மாயத்தோற்றங்களாலும், கடும் சோர்வாலும், இருதயத்தின் அலுப்பாலும், ஆத்தும் வருத்தத்தாலும், ஆத்தும் வேதனை யாலும் துன்பப்படும் போதும், அவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்திலும் கூட அவர் வெறுங்கையராகத் தோன்றுகிறார்.

ஞானமுள்ள மனிதன் புனிதர்கள் கண்டுள்ளவை போன்ற அசாதாரண காரியங்களைக் காண வேண்டுமென்று கேட்பதில்லை, அல்லது தன் ஜெபங்களில் உணரக் கூடிய இனிமையைத் தான் அனுபவிக்க வேண்டுமென்று கேட்பதில்லை. அவன் விசுவாசத்தோடு தேவ ஞானத்திற்காக ஜெபிக்கிறான். ஒரு சம்மனசானவர் வந்து இந்த ஞானம் அவனுக்குத் தரப்படும் என்று வாக்களித்தால் அவன் எவ்வளவு நிச்சயமாயிருப்பானோ, அதை விட அதிகமாக, அது தன் விசுவாசமுள்ள ஜெபத்தின் வழியாகத் தனக்குத் தந்தருளப் படும் என்று அவன் அதிக நிச்சயமாயிருப்பான். ஏனெனில், சரியான முறையில் ஜெபிப்பவர்கள் அனைவரும் தாங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்வார்கள் என்று கடவுள்தாமே கூறியிருக்கிறார் (லூக். 11 10). "நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, உங்கள் பரம் பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் (ஞானத்தின்) நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார்" (லூக் 11:13). 

188. மூன்றாவதாக, இந்த ஞானத்தைப் பெற நாம் இடைவிடாது ஜெபிக்க வேண்டும். இந்தப் விலைமதிக்கப்படாத முத்தை, இந்த அளவில்லாத பொக்கிஷத்தை, சம்பாதித்துக் கொள்ள, கடவுளிடம் ஜெபிப்பதில், பரிசுத்தமான முறையில் அவரை இடைவிடாமல் நச்சரித்துக் கொண்டேயிருப்பது நமக்குத் தேவையாயிருக்கிறது. இந்த நச்சரிப்பு இன்றி அதை நாம் பெற்றுக் கொள்ள முடியாது. ஏதாவது ஒரு வரப்பிரசாதத்திற்காக ஜெபிக்கும்போது, மிக அநேகர் செய்வது போல நாமும் செய்ய லாகாது. நீண்ட காலமாக, அநேகமாக பல ஆண்டுகள் ஜெபித்த பிறகு கடவுள் இன்னும் தாங்கள் கேட்கும் வரப்பிரசாதத்தைத் தராத நிலையில், அவர்கள் அதைரியப்பட்டு, ஜெபிப்பதை நிறுத்தி விடுகிறார்கள், கடவுள் தங்கள் ஜெபத்தைக் கேட்க விரும்பவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு ஜெபத்தில் தாங்கள் பெற விரும்பிய அந்த நன்மையிடமிருந்து தங்களையே விலக்கிக் கொள்வது மட்டுமின்றி, தம்மிடம் கேட்கப்பட்ட நன்மையைத் தர விரும்புபவரும், நன்கு செய்யப் பட்ட ஜெபத்திற்கு ஏதாவது ஒரு வகையில் எப்போதும் பதில் தருபவருமான கடவுளையும் அவர்கள் நோகச் செய்கிறார்கள்.

ஆகவே, ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் சோர்வுறாமலும், அதைரியப்படாமலும் இரவும் பகலும் அதற் காக ஜெபிக்க வேண்டும். பத்து, இருபது, முப்பது ஆண்டுகள் ஜெபித்த பிறகு அல்லது அவன் சாவதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அவன் தான் மன்றாடிக் கேட்டதைப் பெற்றுக் கொள்வான் என்றால், அபரிமிதமான ஆசீர்வாதங்களை அவன் பெற்றுக்கொள்வான். இந்தப் பொக்கிஷத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் தேடி, அதற்காக ஜெபித்து, அதிகமான கடும் உழைப்பையும் துன்பத்தையும் அனுபவித்த பிறகு இந்த அற்புதமான திரவியத்தை அவன் பெற்றுக்கொள்கிறான் என்றால், நீதிப்படி இந்தக் கொடைக்கு அவன் தகுதியானவன் அல்ல என்பதையும், அது அவனுடைய எல்லா முயற்சிகளுக்கும் கிடைத்த சன்மானம் அல்ல, மாறாக, தேவ இரக்கத்தால் தனக்குத் தரப்பட்டுள்ள பிச்சை அது என்பதையும் அவன் நினைவுபடுத்திக் கொள்வானாக. 

189. இல்லை , தங்கள் ஜெபங்களிலும், தேடுதல்களிலும் கவன மற்றவர்கள் அல்ல, மாறாக, பரிசுத்த சுவிசேஷத்தில் இரவில் தன் நண்பனின் வீட்டுக்குச் சென்று மூன்று அப்பங்களுக்காக நீண்ட நேரம் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும் மனிதனைப் போன்றவர்கள்தான் ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் (லூக் 11:15 காண்க). இந்த உவமையில் அல்லது கதையில், நம் ஜெபம் கேட்கப்பட வேண்டுமானால் நாம் எப்படி ஜெபிக்க வேண்டுமென நமக்குக் கற்பிப்பவர் அதே தேவ ஞானமானவர் தான் என்பதைக் கவனியுங்கள். அகால நேரம், அதாவது நள்ளிரவு நேரமாகி விட்டது, நண்பன் ஏற்கனவே உறங்கி விட்டான். இவனோ விடாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறான். தனக்குத் தேவையானதைக் கேட்டு நச்சரித்துக் கொண்டே இருக்கிறான். விழித்துக் கொண்ட நண்பன் எரிச்சலோடு திரும்பத் திரும்ப மறுக்கிறான், போய் விடும்படியும், தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சொல்லிக் கொண்டேயிருக்கிறான். ஆனால் இறுதியில். அந்த மனிதனின் இடைவிடாத தொந்தரவு காரணமாக, அந்த நண்பன் எவ்வளவு அதிகமாக எரிச்சலடைகிறான் என்றால், அவன் எழுந்து கதவைத் திறந்து அவன் கேட்டதையெல்லாம் கொடுக்கிறான் (லூக். 11:5-8 காண்க). 

190. ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாமும் இப்படித்தான் ஜெபிக்க வேண்டும். தாம் வெகுவாகத் தொந்தரவு செய்யப் படுவதை விரும்புகிற கடவுளும் நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் எழுந்து, தமது இரக்கத்தின் கதவைத் திறந்து, ஞானத்தின் மூன்று அப்பங்களை, அதாவது, ஜீவிய அப்பத்தையும், புத்தியின் அப்பத்தையும், சம்மனசுக்களின் அப்பத்தையும் (சீராக். 15.3, அரு. 6.35).

தேவ ஞானத்தைக் கேட்பதற்கு பரிசுத்த ஆவியானவரால் இயற்றப்பட்ட ஜெபம் இதோ