இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வண. 9-ம் பத்திநாதர்

இந்த பாப்பரசர்தான் 1854 டிசம்பர் 8-ம் தேதியில் மாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தார்கள் என்ற அமலோற்பவ சத்தியத்தை விசுவாச சத்தியமாக்கியவர். முதலாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியவர். 1869 டிசம்பர் 8‡ல் பாப்பரசரின் தவறா வரத்தைப் பிரகடனம் செய்தவர். இவர் அர்ச். பிலோமினம்மாள் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந் தார். இவரது தாய் அர்ச். பிலோமினம்மாளிடம் வேண்டிக் கொண்டதால் அவர் சிறுவனாயிருக்கையில் ஏற்பட்ட நரம்பு நோயிலிருந்து பூரண சுகமடைந்தார். இவரே பாப்புமார்களுள் அர்ச். இராயப்பருக்கு அடுத்து, திருச்சபையை நீண்ட காலம் ஞான ஆட்சி புரிந்தவர். (1846-1878 வரை) இவர் அர்ச். பிலோமி னம்மாளின் பக்தியை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தார்.

இவர் இமோலா அதிமேற்றிராணியாராயிருந்த போது கடின நோயுற்றார். உயிர் குறைந்துகொண்டே வந்தது. தமது படுக்கையினருகே அர்ச். பிலோமினம்மாளின் சுரூபம் ஒன்றை அவர் எப்போதும் வைத்திருப்பார். அந்த சுரூபத் தில் தட்டும் சத்தம் கேட்டது. அங்கு நின்றவர்கள் அதைத் தெளிவாகக் கேட்டனர். அர்ச். பிலோமினம்மாளின் உறுதி மொழித் தட்டுதல் என்று இது அழைக்கப்படுகிறது. அர்ச். பிலோமினம்மாள் ஒரு பெரிய உதவியைச் செய்ய இருப் பதின் அடையாளமாக இத்தட்டும் சத்தம் கேட்கிறது. (சங். சலைவன் சுவாமி முஞ்ஞானோவில் திருயாத்ரீகராகச் சென் றிருந்த சமயத்தில் அவருக்கும் இத்தட்டுச் சத்தம் அடை யாளம் கொடுக்கப்பட்டதாக அவரே கூறியிருக்கிறார்.) 9-ம் பத்திநாதர் இத்தட்டும் சத்தத்தைக் கேட்டவுடனேயே அவர் நோய் நீங்கியது. சில நாள் ஓய்வுக்குப்பின் முழுத்திடனை யும் அவர் பெற்றார். 1849 நவம்பர் 7-ம் தேதி அவர் முஞ்ஞானோவுக்குச் சென்று அர்ச். பிலோமினம்மாள் பீடத்தில் திவ்விய பலிபூசை நிறைவேற்றினார்.

9-ம் பத்திநாதர் 1849ல் அர்ச். பிலோமினம்மாள் மரியாயின் பிள்ளைகளின் பாதுகாவலி என்னும் பட்டத்தை அர்ச். பிலோமினம்மாளுக்கு வழங்கினார். கடவுளின் பிள்ளைகள் யாவருமே மாதாவின் பிள்ளைகளாயிருக் கிறார்கள். ஆகவே அர்ச். பிலோமினம்மாள் தெரிந்து கொள்ளப் பட்ட ஆன்மாக்கள் அனைவருக்குமே பாதுகாவலி ஆக்கப் பட்டிருக்கிறாள். இது ஒரு சாதாரண பட்டமல்ல. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த பெயர். இதனால் அர்ச். பிலோமி னம்மாள் அனைத்து மாதாவின் மக்களையும் வழி நடத்தும் அலுவலையும் பெற்றிருக்கிறாள்.

1854-ல் அர்ச். பிலோமினம்மாளுக்கு திருச்சபையின் வழிபாட்டு முறைப்படி தனிப் பலிபூசையும் தனிக் கட்டளை ஜெபமும் நியமிக்கப்பட்டன. இந்தப் பாப்பரசர் இறக்கு முன் தாம் மார்பில் அணிந்திருந்த சிலுவையை அர்ச். பிலோமினம்மாளுக்கு அனுப்பி வைத்தார். அது அவள் சுரூபத்தின் கழுத்தில் தொங்குகிறது.