இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 50

யாக்கோபுக்காகத் துக்கங் கொண்டாடினதும் - கானான் தேசத்திலே ஜோசேப்பு அவரை அடக்கம் செய்ததும் - ஜோசேப்பு தன் சகோதரருக்கு அபயம் கொடுத்துத் தேற்றினதும் - ஜோசேப்பு மரணம் அடைந்ததும்.

1. இதைக் கண்டு ஜோசேப்பு தந்தையின் முகத்தின்மேல் விழுந்தழுது, அவனை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.

2. பிறகு தகப்பனுடைய பிரேதத்தில் பரிமள வர்க்கங்களை இடும்படித் தன் ஊழியத்திலிருந்த வைத்தியர்களுக்குக் கற்பித்தான்.

3. அவர்கள் அந்தக் கட்டளைப்படி செய்து முடிக்க நாற்பது நாள் கழிந்தன; உள்ளபடி சவங்களைப் பரிமளவர்க்கமிட்டால் அத்தனை நாள் செல்லும்; எஜிப்த்தியர் அவனுக்காக எழுபது நாள் துக்கங் கொண்டாடி னார்கள்

* 3-ம் வசனம். எஜிப்த்து தேசத்துப் பூர்வீக முறைமைப்படி அவர்களுடைய இராஜா மரணித்தால் எழுபத்திரண்டு நாள் துக்கங் கொண்டாடுவது சட்டம். யாக்கோபுக்காக அவர்கள் காத்திருந்த துக்கம் எழுபது நாட்கள் மாத்திரம். அரசனுக்கும் யாக்கோபுக்கும் அத்தனை வித்தியாசமில்லை என்று எண்ணினதுபோலாம்.

4. துக்ககாலம் முடிந்தான பின்பு ஜோ சேப்பு பரவோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் சந்நிதியில் எனக்குத் தயவு கிடைத் தால், நீங்கள் பரவோனுடைய காதுகேட்கச் சொல்ல வேண்டியதேதென்றால்,

5. என் தகப்பனார் என்னை ஆணை யிடு வித்துக்கொண்டு: இதோ நான் சாகப் போகி றேன், கானான் தேசத்தில் நான் எனக்காக வெட்டி முஸ்திப்புச் செய்திருக்கிற கல்லறை யிலே என்னை அடக்கம் பண்ணுவாயென்று சொன்னார். ஆகையால் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவேன் என்றான்.

6. அதற்குப் பரவோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்துக் கேட்டபடியே நீ போய் அவரைஅடக்கம் பண்ணி வா என்றான்.

7. அவன் அப்படியே புறப்பட்டுப் போகையில் பரவோனுடைய அரண்மனையிலுள்ள சகல முதன்மையோரும், எஜிப்த்து இராச்சியத்திலிருந்த சகல பெரியோர்களும் அவனோடே கூடப் போனார்கள்.

8. மேலும் ஜோசேப்புடைய வீட்டார் யாவரும் அவனுடைய சகோதரர்களும் அவனைப் பின் சென்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளையும், ஆடு மாடு முதலிய மந்தைகளையும் ஜெசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

9. அன்றியும் இரதங்களும் குதிரை வீரர்களும் அநேகர் அவனோடே போனதினாலே பரிவாரக் கூட்டம் அதிகமாயிருந்தது.

10. அவர்கள் யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற அத்தாத் என்னும் களத்திலே வந்து சேர்ந்தபோது, அவ்விடத்தில் ஏழு நாள் வரைக்கும் பெரும் புலம்பலாய் இழவு கொண்டா டினார்கள். 

11. கானான் தேசத்துக் குடிகள் அதைக் கண்டு: இது எஜிப்த்தியருக்குப் பெரிய துக்கமே என்றார்கள். அதினால் அவ்விடத்திற்கு எஜிப்த்தியர் அழுகை என்று பேர் உண்டாயிற்று. 

12. பிறகு யாக்கோபுடைய குமாரர் தகப்பன் கட்டளையின்படிச் செய்து,

13. அவனைக் கானான் தேசத்துக்குக் கொ ண்டு போய், அபிரகாம் மம்பிரேயுக்கு எதிரே யிருக்கிற நிலத்தில் தனக்குச் சொந்தக் கல்ல றைப் பூமியாக ஏத்தையனான எப்பிறோ னிடத்தில் வாங்கிக்கொண்டிருந்த இரட்டைக் குகையிலே (தகப்பனை) அடக்கம் பண்ணி னார்கள்.

14. ஜோசேப்பு தகப்பனை அடக்கம் பண் ணின பின்பு, அவனும் அவன் சகோதரர் களும் அவனோடே கூடப் போனவர்கள் யாவரும் எஜிப்த்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

15. யாக்கோபுடைய மரணத்திற்குப் பிற் பாடு ஜோசேப்பின் சகோதரர்கள் ஒருவனை ஒருவன் நோக்கி: நாம் அவனுக்குச் செய்த அநியாயத்தை அவன் ஒருவேளை நினைத்துக் கொண்டாலும் கொள்ளலாம். அப்போது அவனுக்கு நாம் செய்த எல்லாப் பொல்லாங் குக்கும் அவன் சரிக்குச் சரிகட்டினாலும் கட்டலாமென்று அச்சமுற்று,

16. அவனிடத்தில் ஆளனுப்பி: உம்முடைய தகப்பனார் மரணமடையும் முன் எங்களுக் குக் கட்டளையிட்டு,

17. பின்வருமாறு சொல்லச் சொன்னார்: எப்படியென்றால்: உன் சகோதரர்கள் செய்த துரோகத்தையும் பாவத்தையும், அவர்கள் உன் மேல் பகை வைத்துப் பண்ணின அக்கிரமத்தை யும் நீ தயவு செய்து மறந்து விடு என்று சொல்லச் சொன்னார். அதுக்கொத்தபடி உம் தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியர்க ளாகிய நாங்களும் அவ்வக்கிரமத்தை மன்னிக் கும்படி உம்மைப் பிரார்த்திக்கிறோம் என்று சொல்லச் சொன்னார்கள். இந்த வார்த்தை களைக் கேட்டு ஜோசேப்பு அழுதான்.

* 17-ம் வசனம். ஜோசேப்பு தன் சகோதரர்கள் கையில் அனுபவித்திருந்த கொடூர கஷ்டங்களை யாக்கோபுக்கு அறிவித்திருந்தானென்று முன்னே கண்டோமில்லை. ஆயினும் அவர் அவைகளை அறிந்திருந்தார் என்பதற்கு அவர் ஜோசேப்பிடத்தில் வசனித்தவைகளால் (49:22, 23-ம் வசனம்.) விளக்கமாகிறது. அப்போது அவர்கள் இவ்வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினார்கள். இவைகளைத் தங்கள் சொந்த வார்த்தைகளாகச் சொன்னால் ஒருவேளை ஜோசேப்பு இரங்க மாட்டார் என்று பயந்து, தகப்பன் வசனித்திருப்பதாகச் சொல்லிப் பொறுத்தலைக் கேட்டார்கள்.

18. பின்னும் அவனுடைய சகோதரர்கள் அவனிடத்திற் போய்க் குப்புறவிழுந்து நமஸ்கரித்து: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.

19. அவன் அவர்களை நோக்கி: பயப்படா தேயுங்கள். தேவத் திருவுளத்தைத் தடுப்பது நம்மால் ஆகுமோ? 

20. நீங்கள் என்னைக் கெடுக்கச் சதியோச னை பண்ணினீர்களே; ஆனால் தேவன் தின்மையை நன்மையாக மாற்றி, அநேக பிரஜைகளை இரட்சிக்கத்தக்கதாக, நீங்கள் இந்நேரத்திலே ஸ்பஷ்டமாய்க் கண்டறிந்தபடி என்னை உணர்த்தினார்.

21. அஞ்சாதிருங்கள்; நானே உங்களையும் உங்கள் சிறுவர்களையும் போஷித்து வருவே னென்றான். பிறகு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி மதுரமாயும் இனிய குரலாயும் அவர்களுடன் சம்பாஷித்து வந்தான்.

22. ஜோசேப்பும் அவன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரும் எஜிப்த்திலே வாசம் பண்ணினார்கள். அவன் நூற்றுப்பத்து வருஷமாக உயிர்வாழ்ந்திருந்து, எப்பிறாயீ முடைய புத்திரர்களை மூன்றாம் தலைமுறை பரியந்தம் கண்டான். மனாசேயின் குமார னாகிய மக்கீருடைய புத்திரர்களும் ஜோசேப் பின் மடியில் வளர்க்கப் பட்டார்கள்.

28. இவைகள் நிகழ்ந்தபின் ஜோசேப்பு ஒருநாள் தன் சகோதரர்களை நோக்கி: நான் மரணம் அடைந்த பிற்பாடு தேவன் உங்களைச் சந்தித்து, உங்களை இந்த தேசத்திலிருந்து, தாம் அபிரகாம், இசாக், யாக்கோபு என்பவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பூமிக்குப் போகப்பண்ணுவார் என்றான்.

24. பிறகு அவன் அவர்களை ஆணையிவித்து: கடவுள் உங்களைச் சந்திப்பார்: நீங்கள் இவ் விடத்திலிருந்து புறப்படும்போது என் எலும்பு களைக் கொண்டு போகக் கடவீர்கள் என்று சொன்னவுடனே,

25. மரணமடைந்தான்; அவன் நூற்றுப் பத்து வயதுள்ளவனாயிருந்தான். அவன் பிரேதத்தில் பரிமளவர்க்கங்களையிட்டு எஜிப்த்திலே அவனை ஓர் பெட்டியில் வைத்து அடக்கம் பண்ணினார்கள். 

* 25-ம் வசனம். ஜோசேப்பு மகா பிரதாபமுள்ள பிதாப்பிதாவானவர். அவர் சேசுகிறீஸ்துநாதருக்கு உச்சிதமான அடையாளமாயிருக்கின்றார் என்று வேதசாஸ்திரிகள் நிச்சயித்துக்கொண்டு வருகிறார்கள். அதெவ்விதமெனில், ஜோசேப்பு தம் சகோதரரால் வஞ்சிக்கப்பட்டதுபோல் சேசுகிறீஸ்துநாதரும் தமது சொந்தச் சீஷனான யூதாசாலே காட்டிக் கொடுக்கப்பட்டுத் தமது சொந்த ஜாதியும் ஜனமுமான யூதர்களால் உபாதிக்கப்பட்டாரே. ஜோசேப்பு தன் சகோதரருடைய க்ஷேமத்தை விசாரிக்கத் தகப்பனால் அனுப்பப்பட்டது போல, தேவசுதனானவர் இவ்வுலகத்தில் சிதறிக் கெட்டுப்போன மனிதர்களைத் தேடும்படி பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டாரே. ஜோசேப்பு இருபது வெள்ளிக் காசுகள் விலைக்கு விற்கப்பட்டது போல், சேசுநாதர் முப்பது வெள்ளிக் காசுகள் விலைக்கு விற்கப் பட்டாரே. ஜோசேப்பு தம்மீது சாட்டப்பட்ட பொய்யான குற்றத்தை மறுதலிக்கத் தேடாமலே வாய்த் திறவாமல் அநியாயத் தண்டனைக்கு உட்பட்டதுபோல, சேசுநாதர் தமது மேல் இல்லாத குற்றங்களைச் சாட்டுபவர்களின் முன்னிலையிலே மெளனமாயிருந்தாரே. ஜோசேப்பு சிறைச்சாலையில் இரண்டு குற்றவாளிகளுடன் இருந்தார். அவர்களில் ஒருவன் விடுதலை அடைந்து, மற்றொருவன் மரணத்தீர்வை இடப்பட்டான். அதுபோல சேசுநாதரும் இரண்டு கொலைகாரரிடையில் சிலுவையிலே அறையுண்டபோது இவர்களில் ஒருவனை அவன் மூர்க்கமான கெட்டதனத்திற்கு விட்டு விட்டு மற்றவனுக்குக் கிருபை புரிந்தாரே. ஜோசேப்பு சிறைச்சாலை விட்டுநீங்கின பின்பு பிரதாபத்திற்குரிய அதிகாரத்தைப் பெற்று எல்லாரையும் தம் முன்னிலையில் பயபக்தியோடு பணிந்து நிற்பதைக் கண்டார். அவ்விதமே சேசுநாதரும் சிலுவையில் உயிரை விட்ட மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தருளி, தமது பிதாவாகிய சர்வேசுரனாலே பரலோகத்திலும் பூலோகத்திலும் சர்வ அதிகாரத்தையும் பெற்றுத் தமது திருநாமத்தின் பிரதாபத்துக்கு முன் பரமண்டலத்தாரும் பூமண்டலத்தாரும் பாதாளத்தாருமாகிய சகலரும் முழந்தாட்படியிடக் காண்கிறாரே. ஜோசேப்பு கொடுமையான பஞ்ச நெருக்கங்களினின்று அநேகப் பிரஜைகளைப் பாதுகாத்தார். சேசுநாதரும் ஞானப் பசியையுடைய நல்ல கிறீஸ்தவர்களையும் தனது ஞானப் போசனமாகிய தேவ நற்கருணையிட்டுப் போஷித்து, பசாசின் அடிமைத்தனத்தினின்றும், அஞ்ஞான இருளினின்றும், நித்திய மரணத்தினின்றும் மனிதர்களை மீட்டு இரட்சித்து வருகிறார். ஜோசேப்பு தம் சகோதரர்களுக்குப் பொறுத்தலையும், சமாதானத்தையும், நானாவித சகாயங்களையும் அளித்தார். அதுபோல் சேசுநாதர் யூதர்களையும், அஞ்ஞானி முதலியவர்களையும் தமது திருச்சபையில் சேரும்படி அழைத்துத் தம்மை அண்டினவர்களைக் கிருபாகடாட்சத்தோடு ஏற்றுக்கொண்டு பேணி வருகின்றார்.


ஆதியாகமம் முற்றிற்று