இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 46

யாக்கோபு தேவனால் தேறுதல் அடைந்ததும் - தன் குடும்பத்தோடு எஜிப்த்துக்குப் போகப் புறப்பட்டதும் - ஜோசேப்பு யாக்கோபை வழியிலே சந்தித்ததும்.

1. பிறகு இஸ்றாயேல் தனக்குண்டான யாவையும் சேர்த்துப் பிரயாணமாகிப் பிரமாணிக்கக் கிணறென்னும் ஸ்தலத்திலே வந்து சேர்ந்தான். அவ்விடத்தில் அவன் தன் தந்தையாகிய இசாக்கின் தேவனுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்த பின்னர்: 

2. அன்று இராத்திரி தேவன் தரிசனமாகித் தன்னை யாக்கோபே! யாக்கோபே! என்று கூப்பிடுவதைக் கேட்டு அவன்: இதோ இருக்கி றேன் என்று பிரதிகூற,

3. கடவுள்: உன் தந்தையின் சர்வத்துக்கும் வல்ல தேவன் நாமே, பயப்படாதே; எஜிப்த்து தேசத்துக்குப் போ, ஏனென்றால் அங்கே உன்னைப் பெரிய பிரஜையாக வளரச் செய் வோம். 

4. நாம் உன்னோடு அவ்விடத்திற்கு வருவோம். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வரும்போது உன்னைக் கூட்டி வருவோம். ஜோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான் என்றார்.

5. யாக்கோபோ பிரமாணிக்கக் கிணற்று ஸ்தலத்திலிருந்து எழுந்தான். அப்பொழுது அவனுடைய குமாரர் அவனையும், அவன் பிள்ளைகளையும், மனைவிமார்களையும் பர வோன் பெரிய மனுஷனாகிய அவனுக்கு அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டு,

6. கானான் தேசத்தில் அவன் சம்பாதித்திருந்த சம்பத்துகள் யாவையும் கூடச் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியே யாக்கோபு தன் சந்ததியார் எல்லோரோடும் எஜிப்த்துக்குப் போனான்.

7. அவனுடைய குமாரரும் பேரரும் குமா ரத்திகளும் (அவனுடைய) சந்ததியார் அனை வரும் அவனோடே போனார்கள்.

8. இஸ்றாயேல் தன் புத்திரர்களோடே எஜிப்த்திலே சேர்ந்தபோது அவனுக்கு உண்டாயிருந்த புத்திரர்களின் நாமங்களாவன: மூத்த குமாரன் ரூபன்.

9. ரூபனின் புத்திரர்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மி என்பவர்களாம்.

10. சீமையோனின் புத்திரர்: ஜமுயேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோகார், கானான் ஸ்திரீயுடைய குமாரனாகிய சவுல் என்பவர் களாம்.

11. லேவியின் புத்திரர்: ஜெற்சோன், காட், மெராரி என்பவர்களாம்.

12. யூதாவின் புத்திரர்: கேர், ஓனான், சேலா, பாரேஸ், ஜாரா என்பவர்களாம்; கே ரும் ஓனானுமோ கானான் நாட்டில் இறந்து போனார்கள். எஸ்ரோன், ஆமுல் என்பவர் கள் பாரேசுக்குப் பிறந்த புத்திரர்களாம்.

13. இசக்காரின் புத்திரர்: தோலா, புவா, ஜோப், செமிரோன் என்பவர்களாம்.

14. சரேத், எலோன், ஜயேலேல் என்ப வர்கள் ஜாபுலோனின் புத்திரர்.

15. இவர்களை லீயாள் என்பவள் சீரியா விலுள்ள மெசொப்பொத்தாமியாவிலே பெற்றாள்; தீனாளும் அவளது புத்திரி. அவளால் (பிறந்த) குமாரர் குமாரத்திகளாகிய எல்லாரும் முப்பத்து மூன்று பேர்.

16. காட்டின் புத்திரர்: செப்பியோன், அஃகி, சூனி, எசபோன், கேறி, அரோதி, ஆரேலி என்பவர்களாம்.

17. அசேரின் புத்திரர்: ஜமினே, ஜெசுவா, ஜெசுவி, பெரியா என்பவர்களாம். சாராளும் இவர்களுடைய சகோதரி. ஏபேரும் மெற்கி யேலும் (இந்தப்) பெரியாவின் புத்திரர்.

18. இவர்கள் லாபான் தன் குமாரத்தி யாகிய லீயாளுக்குக் கொடுத்த ஜெல்பாளு டைய பிள்ளைகள். அவள் இந்தப் பதினாறு பேர்களையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.

19. ஜோசேப்பு, பெஞ்சமீன் என்பவர்கள் யாக்கோபின் மனைவியாகிய இராக்கேலின் புத்திரர்களே.

20. ஜோசேப்புக்கும், எஜிப்த்து தேசத்திலே புத்திரர் பிறந்தார்கள். எலியோப்பொலிசின் ஆசாரியராகிய புத்திப்பார் என்பவரின் புத்திரியான அசெனேத் அவர்களை அவனுக் குப் பெற்றனள். அவர்கள் மனாசேஸ், எப்பி ராயீம் என்பவர்களாம்.

21. பெஞ்சமீனின் புத்திரர்: பேலா, பேக்கோர், அஸ்பேல், ஜெரா, நாமான், எக்கி, ரோஸ், மொபீம், ஒபீம், ஆரேத் என்பவர்க ளாம்.

22. இவர்களே இராக்கேல் யாக்கோபுக்குப் பெற்ற புத்திரர்களாகிய பதினான்கு பேர் கள்.

23. தானுக்கு ஊசீம் என்னும் (ஒரே புத்தி ரன்) இருந்தான்.

24. நேப்தலியின் புத்திரர்: ஜசியேல், கூனி, ஜெசேல், சல்லேம் என்பவர்களாம்.

25. இவர்கள் லாபான் தன் குமாரத்தியா கிய இராக்கேலுக்குக் கொடுத்த பாளாளு டைய புத்திரர்; இவர்களை அவள் யாக்கோ புக்குப் பெற்றாள்; அவர்கள் எல்லோரும் ஏழு பேர்களாம்.

26.யாக்கோபுடைய குமாரர்களின் மனை விமார்களைத் தவிர அவனுடைய புத்திர சந்தானமாயிருந்து எஜிப்த்திலே பிரவேசித்த வர்கள் எல்லோரும் அறுபத்தாறு பேர்.

27. எஜிப்த்து தேசத்திலே ஜோசேப்புக்குப் பிறந்த புத்திரர்களோ இரண்டு பேர். (ஆகவே) எஜிப்த்தில் பிரவேசமான யாக்கோபின் குடும் பத்தார் எல்லோரும் எழுபது பேர்களாம்.

28. ஜேசேன் நாட்டில் ஜோசேப்பு தன்னை வந்து சந்திக்க வரவேணுமென்று சொல்லும் படி யாக்கோபு யூதாவை அவனுக்குத் தூதாக அனுப்பினான்.

29. இவன் அவ்விடம் சேர்ந்த மாத்திரத்தில் ஜோசேப்பு தன் இரதத்தை முஸ்திப்புப் படுத்தி, அதன் மேலேறித் தகப்பனுக்கு எதிரே போய், அவனைக் கண்டவுடன், அவன் கழுத்தின்மேல் விழுந்து அணைத்தணைத்து அழுதான்.

30. அப்பொழுது தந்தை ஜோசேப்பை நோக்கி: (அப்பா, மகனே!) உன் முகத்தை நான் கண்டேன். எனக்குப் பின் உன்னை உயிருடன் இவ்வுலகில் விடுவேன். ஆதலால் எனக்கிப்போது மரணம் வந்தாலும் சந்தோ ஷந்தான் என்றான்.

31. அவனோ தன் சகோதரரையும், தன் தந்தையின் குடும்பத்தாரையும் பார்த்து: நான் பரவோனிடத்திற்குப் போய்க் கானான் தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பனுடைய குடும்பத்தார்களும் என் னிடத்தில் வந்திருக்கிறார்கள்;

32. அவர்களாக்கும் ஆடு மேய்ப்பர்; மந்தைகளை வைத்து விசாரிப்பது அவர்களுடைய தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும், தாங்கள் கொண்டிருந்த யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குச் சமாச்சாரம் சொல்லுவேன்.

33. அவர் உங்களை வரவழைத்து: உங்கள் தொழில் என்ன என்று வினவும்போது,

34. நீங்கள் மறுமொழியாக: சிறுவயது முதல் இக்கால பரியந்தம் உமது அடிமைகளா கிய நாங்கள் எங்கள் பிதாக்களைப்போல மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல் லுவீர்கள். நீங்கள் ஜேசேன் நாட்டிலே குடியிருக்கும்படித்தானே அவ்விதமாய்ச் சொல்லுவீர்கள். ஏனென்றால், ஆடு மேய்ப்ப வர் எவர்களோ அவர்கள் எஜிப்த்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்.

* 34-ம் வசனம். ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் உணவுக்காக ஆடு மாடுகளை அடித்து மாய்த்து வருவதால், மிருகங்களைத் தேவர்களாகப் பாவித்துவந்த எஜிப்த்தியர் அவர்களின்மேல் அருவருப்புடையவர்களாயிருந்தார்கள். இஸ்றாயேலின் புத்திரர் தங்கள் ஜென்மத் தொழிலை விட்டுவிடாமலும், சர்க்கார் உத்தியோகங்களை அபேட்சியாமலும், எஜிப்த்தியருடைய அஞ்ஞான இருளில் அகப்பட்டுத் தங்கள் விசுவாசத்தைப் போக்கடிக்காமல் காப்பாற்றித் தேவ வாக்குத்தத்தத்தின் பூமியாகிய கானான் தேசத்தை அடைய வேண்டியவர்களாதலால், அவர்கள் பிரத்தியேகமாய் ஜெசேன் நாட்டில் வாசம்பண்ணுவது யோக்கியமான காரியமாயிருந்தது.