இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 44

ஜோசேப்பு தன் சகோதரனாகிய பெஞ்சமீனை நிறுத்த உபாயம் பண்ணினதும் - யூதா ஜோசேப்பை நோக்கிப் பெஞ்ச மீனுக்காகத் தைரியமாயும் உருக்கமாயும் வேண்டிக்கொண்டதும்.

1. இப்பால் ஜோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனைப் பார்த்து: அவர்களுடைய சாக்குகள் கொள்ளும் அளவாகத் தானியத்தால் நிரப்பி, அவனவனுடைய பணத்தைச் சாக்கின் வாயிலே வைத்துக் கட்டிவிடு;

2. இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானப் பாத்திரத்தையும் தானியத்திற்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டுவாயென்று கட்டளையிட்டான். ஜோசேப்பு சொன்னவாறே அவன் செய்தான்.

3. காலையிலே சூரியன் உதித்தமாத்திரத்தில், அவர்கள் தங்கள் வேசரிகளோடு அனுப்பி விடப்பட்டார்கள்.

4. அவர்கள் நகரத்துக்கு அப்பாற் சென் றவர்களாய்ச் சற்று தூரம் போய் இருக்கச் செய்தே, ஜோசேப்பு தன் வீட்டு விசாரணைக் காரனை அழைத்துச் சொல்வான்: நீ எழுந்து அம்மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தின்மையைச் செய்வது என்ன?

5. நீங்கள் திருடிவந்த பாத்திரமானது எனது எஜமான் பானம் பண்ணுகிற பாத்திரம், அதிலேயே அவர் சகுனம் பார்த்துவருகிறார். நீங்கள் அதியக்கிரமமான காரியத்தைச் செய் தீர்கள் என்று சொல்லுவாய் என்றான்.

* 5-ம் வசனம். ஜோசேப்பு சகுனம் பார்க்காதவனாயிருந்தாலும் பாசாங்கு பண்ணி அத்தேசத்து வாடிக்கையைத் தானும் அனுசரித்தாற்போல இவ்வார்த்தைகளையும், 15-ம் வசனத்தில்: சகுன சாஸ்திரத்தில் எனக்கு ஒத்தவன் ஒருவருமில்லை என்கிற வார்த்தை களையும் சொல்லித் தன்னை இன்னாரென்று மறைத்தனன். தன் சகோதரர் தன்னை வஞ்சித் துப் பகைத்ததைப் பற்றி, அவர்களுக்கு நற்புத்தியும் பாவத்தின் மீது விசனமும் உண்டாகும் பொருட்டு அவர்களைச் சோதிப்பதற்கு இவ்விதமாய்ப் பேசினான்.

6. இவன் அப்படியே செய்தான்; அவர்களைப் பிடித்து (எஜமான்) சொல்லக் கற்பித்த வார்த்தைகளை எல்லாம் சொன்னதற்கு,

7. அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப் பேசவேண்டியதேன்? அடியார்கள் அவ்வளவான பாதகத்தைச் செய்திருப்போம் என்று நினைத்தல் நியாயமா? அடியார்களின் 

8. நாங்கள் சாக்குகளின் வாயில் கண்டெடுத்த பணத்தைக் கானான் நாட்டினின்றும் தங்களிடம் கொண்டு வந்தோமே! அப்படியிருக்க, நாங்கள் தங்கள் எஜமான் வீட்டி லே தங்கமாவது, வெள்ளியாவது திருடிக் கொண்டு போவோமென்று எண்ணுவதெப் படி?

9. தங்களுடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ, அவன் கொ லையுண்ணக்கடவான். நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாகக்கடவோம் என்று பதில் சொல்லக் கேட்டு,

10.அவன்: உங்கள் தீர்மானப்படி ஆகட்டும்; அது எவனிடத்தில் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாகக் கடவான்; நீங்களோ குற்றமற்றவர்களாயிருப்பீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னான்.

11. அப்பொழுது அவர்கள் தீவிரித்துச் சாக்குகளைத் தரையில் இறக்கி வைத்து, அவன வன் தன் தன் சாக்கைத் திறந்தான். 

12. மூத்தவனுடைய சாக்கு முதல் இளை ஞனுடைய சாக்கு மட்டும் அவன் சோதிக்கும் போது பானப்பாத்திரம் பெஞ்சமீன் சாக்கிலே காணப்பட்டது.

13. அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு வேசரிகளின் மேல் சுமையை ஏற்றிக் கொண்டு நகரத்திற்குத் திரும்பினார்கள்;

14. சகோதரர் பின் செல்ல யூதா என்பவன் ஜோசேப்பிடத்தில் வந்தான். (இவன் அது வரைக்கும் அங்கேதான் இருந்தான். எல்லோரும் அவனுக்கு முன்பாகத் தரையில் விழுந்தார்கள்.

15. ஜோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் இப்படிச் செய்யத் துணிந்தீர்கள்? சகுன சாஸ்திரத்தில் என்னைப்போலொத்த மனிதனில்லையென்று நீங்கள் அறியாதிருக் கிறீர்களா என்று வினவ,

16. யூதா அவனை நோக்கி: தேவரீருக்கு அடியார்கள் என்ன மறுமொழியைச் சொல் லுவோம்? அல்லது என்னத்தைப் பேசுவோம்? எவ்வித நியாயந்தான் கூறக்கூடும்? கடவுளே அடியார்களின் அக்கிரமத்தை விளங்கப் பண்ணினார்! இதோ நாங்களும், எவனிடத் தில் பானப்பாத்திரம் கண்டெடுக்கப்பட்ட தோ அவனும் தேவரீருக்கு அடிமைகளா னோம் என்று சொல்லக் கேட்டு:

17. ஜோசேப்பு: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; பானப்பாத்தி ரத்தைத் திருடினவன் எவனோ அவனே எனக்கு அடிமையாகக்கடவான். நீங்களோ சுயாதீனராய் உங்கள் தந்தையிடத்திற்குப் போங்கள் என்றதின் பேரில்,

18. யூதா இன்னும் அவரண்டையில் சேர்ந்து துணிந்து: என் ஆண்டவரே! அடியேன் தேவரீருடைய செவியிலே ஒரு வார்த்தைச் சொல்லும்படி தாங்கள் கிருபை செய்தருளவேண்டும். என் மேல் கோபிக்க வேண்டாம். ஏனெனில், தேவரீர் பரவோனுக்கு இரண்டாவது,

19. எனது எஜமானராயிருக்கிறீர். உங்க ளுக்குத் தகப்பனாவது (வேறு) சகோதர னாவதுண்டோ? என்று தாங்கள் உம் அடி யார்களைக் கேட்டீரே. (அதற்கு)

20. நாங்கள் தேவரீரை நோக்கி: எங்களுக்கு முதிர்வயதான தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதில் பிறந்த ஒரு இளைஞனும் உண்டென்றும், இவனுடைய தமயன் இறந்து விட்டான் என்றும், இவன் ஒருவன் மாத்திர மே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதி னாலே தகப்பனார் அவன்மேல் அதியுருக்க மான பட்சம் வைத்திருக்கிறாரென்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

21. அப்பொழுது தேவரீர் எங்களை நோ க்கி: அவனை என்னிடத்திற்குக் கொண்டு வாருங்கள், நான் அவனைக் கண்ணாலே பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 

22. நாங்கள்: அந்த இளைஞன் தன் தகப் பனை விட்டுப் பிரியக்கூடாது; பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னதற்கு

23. தேவரீர்: உங்கள் இளைய தம்பி உங்க ளோடு வராவிட்டால், என் சமூகத்தைக் காண மாட்டீர்கள் என்று அடியார்களுக்குச் சொன்னீர்.

24. ஆகையால் நாங்கள் உமது ஊழியனா கிய எங்கள் தந்தையிடஞ் சேர்ந்து, தேவரீர் சொல்லிய யாவையும் அவரிடம் விபரமாய்ச் சொன்னபோது, 

25. எங்கள் தகப்பனார்: நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சந் தானியங் கொள் ளுங்கள் என்றார்.

26. நாங்கள் அவரை நோக்கி: போகக்கூ டாது, எங்கள் இளைய தம்பி எங்களோடே கூட வந்தால் கூடப் புறப்படுவோம், வரா விட்டால் இவனில்லாதே நாங்கள் அந்த மகா புருஷனுடைய முகத்தைக் காணத் துணி யோம் என,

27. அவர்: இராக்கேலென்னும் என் மனைவி, எனக்கு இரண்டு பிள்ளைகளை (மாத்திரம்) பெற்றாள் என்று உங்களுக்குத் தெரியுமே;

28. ஒருவன் வெளியே புறப்பட்டான், அவ னை ஓர் துஷ்ட மிருகம் பட்சித்துவிட்டது என்று சொன்னீர்கள். இதுவரையிலும் அவன் காணப்படவேயில்லை.

29. இப்பொழுது நீங்கள் இவனை அழைத்து போகும் வழியில் இவனுக்கு ஏதேனும் மோசம் நேரிட்டால், நரைத்த கிழவனாகிய என்னைத் துயரத்தோடே பாதாளத்தில் இறங் கப்பண்ணுவீர்கள் என்றாரே.

30. ஆகையால் இளையவனை விட்டு நான் உமது ஊழியனாகிய எங்கள் தந்தையிடத்துக்குப் போய்ச் சேர்ந்தால் (அவருடைய உயிருக்குயிராயிருக்கிற சிறுவன்)

31. எங்களோடே இல்லாதிருப்பதைக் காணவே, அவர் இறந்து போவார். இப்படி உமது அடியார்கள் நரைமயிரையுடைய கிழவனை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கச் செய்தவர்களாவோமன்றோ?

* 31-ம் வசனம். பெஞ்சமீனைக் காணாதேபோனால் யாக்கோபு ஜீவனைச் சகிக்க மாட்டாமல் வியாகுல மிகுதியால் சாகவேண்டியதாயிருக்கும் என்பதே இவ்வசனத்திலும் இதைப் போலும் மற்ற வசனங்களிலும உள்ள அர்த்தம்.

32. நானே நியாயப்படி உமது அடிமையா யிருக்கக் கடவேனாக; (ஏனென்றால்) அவ னுக்காக உத்தரவாதம் பண்ணினவனும், நான் அவனைத் திரும்பக் கூட்டிவராவிட்டால், என் தகப்பனுக்கு எந்நாளும் பாதகனா யிருப்பேன் என்று வார்த்தைப்பாடு சொன்ன வனும் நான்தானே.

33. ஆகையால் அடியேன் சிறுவனுக்குப் பதிலாய் நான் தேவரீருடைய ஊழியத்தைச் செய்யும் அடிமையாயிருப்பேன்; சிறுவனோ தனது சகோதரர்களோடே கூடப் போகும் படி மன்றாடுகிறேன்.

34. உள்ளபடி நான் சிறுவனை விட்டுத் தகப்பனிடத்திற்குப் போகவேமாட்டேன்; போனால் தகப்பனுக்கு நேரிடும் அவதியைக் கண்ணினால் எப்படிக் காண்பேன் என்றான்.