இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 43

யாக்கோபு பெஞ்சமீனைப் போகவிட்டதும் - ஜோசேப்பு அவர்களை ஏற்றுக் கொண்டதும் - அவர்களைத் திருட்டுச் செய்ததாகக் குற்றம் சாட்டிப் போட்டதும் - அவர்களுக்கு ஒரு விருந்து செய்ததும்.

1. இடைநடுவிலே பஞ்சம் நாடு முழுவதிலும் அகோரமாயிருந்தது.

2. எஜிப்த்திலிருந்து கொண்டுவரப்பட்ட தானியம் செலவழிந்தபோது, யாக்கோபு தன் குமாரரை நோக்கி: நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சந் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூற,

3. அதற்கு யூதா: அந்த மனிதன் சத்தியம் பண்ணிக்கொண்டு: உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்துக் கொண்டு வராவிட்டால் நீங்கள் என் முகத்தைக் காணவே மாட்டீர்கள் என்று எங்களுக்கு விதித்தார்.

4. ஆதலால் நீர் அவனை எங்களோடே அனுப்பச் சம்மதித்தீரானால், நாங்கள் ஒருமித்துச் சென்று உமக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வருவோம்;

5. நீர் அவனை அனுப்பச் சம்மதியாவிட்டால் நாங்கள் போகமாட்டோம்; ஏனெனில் நாங்கள் உமக்குப் பலமுறையுஞ் சொல்லியது போல், அந்த மனிதன்: உங்கள் இளைய சகோதரன் வராவிட்டால் நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று தீர்க்கமாய்ப் பேசினார் என்று பிரத்தியுத்தரஞ் சொல்லக் கேட்டு,

6. இஸ்றாயேல் அவர்களை நோக்கி: உங்க ளுக்கு இன்னமொரு சகோதரன் உண்டென்று நீங்கள் அவருக்கு வெளிப்படுத்தினீர்களே, அது எனக்குத் துன்பமாக முடிந்ததுதானே என்று முறையிட,

7. அவர்கள்: அந்த மனிதன் எங்கள் வம்சத் தைக் குறித்து விபரமாய்க் எங்களைக் கேட் டார். உங்கள் தந்தை உயிரோடிருக்கிறாரோ என்றும், உங்களுக்கு வேறு சகோதரன் உண்டோ என்றும் வினவினதற்கு நாங்கள் அந்தக் கேள்விகளுக்குத் தக்கபடி பதில் சொன்னோம். அவர்: உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங் கள் என்று அவர் சொல்லப் போகிறார் என் பதை நாங்கள் அறிந்திருக்கக்கூடுமா? என மறுமொழி கூறினார்கள்.

8. பின்னும் யூதா தன் தகப்பனை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி நாங்கள் புறப்பட்டுப் போகவேண்டும். பிள்ளையை என்னோடே அனுப்பும்;

9. நானே அவனுக்காக உத்திரவாதம் பண்ணுகிறேன். அவனை என்னிடத்திலே கேளும். நான் அவனை உம்மிடத்திற் கொண்டு வந்து உமக்கு ஒப்பிக்காமல் இருப்பேனானால், எந்நாளும் நான் உமக்கு விரோதமான பாதகனாயிருக்கக்கடவேன்.

10. நாங்கள் தாமதியாதிருந்தோமாகில், இதற்குள்ளே இரண்டாம் விசைக்குப் போய்த் திரும்பி வந்திருக்கலாமே என்றான்.

11. அதைக் கேட்டு அவர்களுடைய தகப்ப னாகிய இஸ்றாயேல் அவர்களைப் பார்த்து அவ்வளவு அவசியமானால் நீங்கள் உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; ஆனால் இந்தத் தேசத்திலே அகப்படும் உச்சிதமான வஸ் துக்களிலே சிலதை உங்கள் பெட்டிகளிலே கொண்டுபோங்கள். (அதாவது) கொஞ்சம் குங்கிலியம், தேன், பிசின், தைலம், வெள்ளைப் போளம், தெரெபிண்ட் கொட்டைகள், வாது மைக் கொட்டைகள் ஆகிய இவைகளை அம்மனிதனுக்குக் காணிக்கையாக எடுத்துக் கொண்டு போங்கள்.

12. இதுவுமில்லாமல் பணத்தை இரட் டிப்பாய்க் கையிலே வைத்துக் கொள்ள வேண்டியதன்றிச் சாக்குகளில் கிடைத்த பணம் ஒருவேளை கைப்பிசகாய் வந்திருக்கு மோ என்னமோவென்று எண்ணி அதையும் திரும்பக் கொண்டு போங்கள்;

13. உங்கள் தம்பியையும் அழைத்துக் கொ ண்டு, அந்தப் புருஷனிடத்திற்கு மறுபடி போங் கள்.

14. சர்வத்துக்கும் வல்ல என் தேவன் அந்த மனிதனுடைய சமூகத்தில் உங்களுக்குத் தயவு கிடைக்கும்படியாகவும், சிறைக்கூடத்தில் வைக்கப்பட்ட உங்கள் சகோதரனையும் இந் தப் பெஞ்சமீனையும் உங்களோடே கூடத் திரும்பி வரும்படியாகவும் கிருபை பண்ணக் கடவாராக! நானோ பிள்ளைகளையிழந்த ஏழையைப் போலிருப்பேனே (என்றான்.)

* 14-ம் வசனம். இந்தப் பெஞ்சமீன் என்கிறவன் என்னிடந் திரும்பி வரும் பரியந் தம் என் பிரிய இராக்கேல் எனக்குப் பெற்றுக் கொடுத்த இரு பிள்ளைகளையும் நான் காணாம லிருப்பதால், புத்திரரை எல்லாம் இழந்தவனைப்போலவும், புத்திர சந்தானமற்றவனைப் போலவும் இருப்பேன் என்பதே இவ்வாக்கியத்தின் தாற்பரியம்.

15. அந்தப்படிச் செய்து அவர்கள் காணிக் கைகளையும், இரட்டிப்பான பணத்தையும், பெஞ்சமீனையும் கைக்கொண்டவர்களாய் எஜிப்த்துக்குப் போய், ஜோசேப்புடைய முன் னிலையில் வந்து நின்றார்கள்.

16. ஜோசேப்பு அவர்களையும் அவர் களு டனே பெஞ்சமீனையும் கண்டவுடன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இம்மனிதர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டுபோய், மிருகங்களை அடித்து விருந்து சோடிப்பாக ஆயத்தம் பண்ணு; ஏனென்றால், இவர்கள் மத்தியான வேளையில் என்னோடுதானே சாப்பிடு வார்கள் என்று கட்டளையிட்டான்.

17. அவன் தனக்குக் கற்பிக்கப்பட்டபடி செய்து அப்புருஷரை வீட்டினுள் அழைத்துக் கொண்டு போனான்.

18. அவர்கள் அங்கு போய்த் திடுக்கிட்டுப் பயந்து ஒருவனோடொருவன் பேசி: முன்னே நம்முடைய சாக்குகளில் நாம் கொண்டு போன பணத்தினிமித்தம் அவர் நம்மேல் இல்லாத குற்றஞ்சாட்டி, நம்மையும் வேசரி களையும் பலவந்தமாய்ப் பிடித்துச் சிறைப் படுத்தும்படி அல்லவா அழைப்பித்தார்! என் றார்கள்.

19. ஆகையால் அவர்கள் வீட்டு வாசற்படி யில்தானே வீட்டு விசாரணைக்காரனை அண்டி:

20. ஐயா! எங்களுக்குச் செவிகொடுக்கப் பிரார்த்திக்கிறோம். முன்னமே ஒருமுறை நாங் கள் தானியங் கொள்ளும்படி வந்திருந்தோம்.

21. அவைகளை வாங்கி சத்திரத்தில் போய்ச் சேர்ந்து எங்கள் சாக்குகளைத் திறந்த போது சாக்குகளின் வாயிலே பணம் இருப்பதைக் கண்டோம்; அதே நிறையின்படி அதைத் திரும்பவும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்.

22. அன்றியும் எங்களுக்கு வேண்டியவை களை வாங்குவதற்கு வேறே பணத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணம் எங்கள் சாக்குகளில் போட் டது இன்னாரென்று எங்கள் மனச்சாட்சிக் குத் தெரியாது என்றார்கள்.

23. அதற்கவன்: உங்களுக்குச் சமாதானம், அஞ்சாதிருங்கள். உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அந்தப் பணத்தை வைத்தளித்திருப்பார்; ஏனென்றால் நீங்கள் எனக்குக் கொடுத்த பணம் நான் சரியாய்ப் பெற்று வைத்துக்கொண்டிருக்கிறேன், என்று சொல்லி, சீமையோனை அழைத்து அவர்களிடத்தில் அவனை விட்டு,

24. பின்னும் அவன் அவர்களை வீட்டி னுட் பிரவேசிக்கச் செய்து, தண்ணீரைக் கொண்டு வந்தான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்ட பின்பு அவன் அவர்களு டைய வேசரிகளுக்குத் தீனியைப் போட்டான்.

25. அவர்களோ மத்தியான வேளையில் ஜோசேப்பு வரப்போகிறாரென்று காணிக்கைகளை முஸ்திப்புப் பண்ணிக் காத்திருந்தார்கள்; ஏனென்றால் தாங்கள் அங்குதானே போசனஞ் செய்யப்போகிறதாகக் கேள்விப் பட்டிருந்தார்கள்.

26. ஆகையால் ஜோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கையிலேந்தி அவருக்கு ஒப்புக்கொடுத்து, குப்புற விழுந்து வணங்கினார்கள்.

27. அவனோ சாந்தத்தோடு அவர்களுக்குப் பிரதி, உபசாரஞ் செய்து: நீங்கள் என்னோடு பேசியிருந்த முதிர்வயதான உங்கள் தகப்பன் இப்பொழுது செளக்கியமாயிருக்கிறாரோ? இன்னம் உயிரோடிருக்கிறாரோ? என்று விசாரிக்க,

28. அவர்கள்: தங்கள் அடியானாகிய எங்கள் தகப்பன் செளக்கியமாகத்தான் இருக்கிறார்; இன்னும் உயிரோடிருக்கிறார், என்று பதில் கூறித் தண்டனிட்டு அவனை வணங்கி னார்கள்.

29. ஜோசேப்போவென்றால் கண்களை ஏறெடுத்துத் தன் உடன்பிறந்த சகோதரனாகிய பெஞ்சமீனைப் பார்த்து: நீங்கள் என்னோடு பேசியிருந்த உங்கள் இளைய தம்பி இவன்தானோ? என்று கேட்ட பின்பு: பிள்ளாய்! கடவுள் உனக்குக் கிருபை புரிவாராக என்றான்.

30. அப்பொழுது ஜோசேப்பு தன் தம்பி யின் மீது இதயங்குழைந்து கண்கள் கண்ணீராயிருக்கிறது கண்டு சீக்கிரத்தில் பக்கத்துத் தன் அறைக்குள்ளே போய் அழுதான்.

31. பிறகு அவன் முகத்தைக் கழுவித் திரும்ப வெளியே வந்து தன்னை அடக்கிக் கொண்டு: போசனம் வையுங்கள் என்றான்.

32. அது வைக்கப்பட்ட மாத்திரத்தில் ஜோசேப்பு தனிப்படவும், அவன் சகோதரர்கள் தனிப்படவும், கூடச் சாப்பிட்டுக்கொண்டிருந்த எஜிப்த்தியரும் தனியாகவும் (உட்கார்ந்தார்கள்.) ஏனெனில் எஜிப்த்தியர் எபிறேயரோடு சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிடுவது தீட்டென்று எண்ணுவார்கள்.

33. அவர்கள் அப்படியே ஜோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தன் சுதந்தரப்படி முதலாகவும், இளைஞன் அவனவன் வயதின் படி வரிசையாகவும் உட்கார வைக்கப்பட் டார்கள்.

34. அவரால் தங்களுக்குப் பரிமாறுவிக்கப்பட்ட பங்குகளை வாங்கிக் கொண்டார்கள், உள்ளபடி அவர்களுடைய பங்குகளைப் பார்க்கிலும் பெஞ்சமீனுக்குக் கிடைத்த பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது? அவர்கள் அவனுடன் திருப்தியாகப் பானம் பண்ணினார்கள்.

* 34-ம் வசனம். பெஞ்சமீனுக்கு அதிகமான பகுதியை ஜோசேப்பு கொடுத்ததற்கு முகாந்தரமேதென்று கேட்கில், தனது சகோதரர்கள் முன்போல் பொறாமை காய்மகாரமுடையவர்களோ அல்லவோவென்று அவர்களைச் சோதிப்பதற்குத்தான் என்றறியவும்.