இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 42

யாக்கோபு தன் குமாரர்களை எஜிப்த்துக்குப் போகச் சொன்னதும் - ஜோசேப்பு அவர்களை வேவுக்காரரென்று காவலிலே வைத்ததும் - பெஞ்சமீனைக் கொண்டு வருகிறோமென்னும் உடன்படிக்கைப்படி அவர்கள் விடுதலை அடைந்ததும், ஜோசேப்புக்குச் செய்த அநியாயத்தைப்பற்றி அவர்கள் துக்கித்ததும் - ஊருக்குத் திரும்பிப் போய்த் தங்களுக்குச் சம்பவித்ததை யாக்கோபுக்கு அறிவிக்க, அவர் பெஞ்சமீனை அனுப்ப மனமில்லாதிருந்ததும்.

1. எஜிப்த்தில் தானியம் விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டு யாக்கோபானவர் தன் குமாரர் களை நோக்கி: நீங்கள் அசட்டையாயிருப்பா னேன்?

2. எஜிப்த்திலே கோதுமை விற்கப்படுகிற தென்று கேள்வி; நாம் பஞ்சத்தினால் சாகா மல் உயிரைக் காப்பாற்றும்பொருட்டு நீங்கள் அவ்விடத்திற்குப் போய், நமக்கு வேண்டிய வைகளை வாங்கிக்கொண்டு வாருங்கள் என் றான்.

3. ஆகையால் ஜோசேப்பின் சகோதரர்கள் பத்துப் பேரும் தானியம் வாங்கும் பொருட்டு எஜிப்த்துக்குப் போனார்கள்.

4. ஆனால் பெஞ்சமீனுக்கு ஏதோ வழி யில் மோசம் வரக்கூடுமென்று அவனுடைய சகோதரர்களுக்குச் சொல்லி, யாக்கோபு அவ னைப் போகவொட்டாமல் வீட்டிலே நிறுத்தி யிருந்தான்.

* 4-ம் வசனம். யாக்கோபு ஜோசேப்பின் மட்டில் கொண்டிருந்த பட்சமெல்லாம் பெஞ்சமீன் பேரில் வைத்துவந்தான். ஆதலால் ஜோசேப்புக்குத் தீமை நேரிட்டதுபோல் இவ னுக்கும் ஒருவேளை நேரிடக்கூடும் என்றஞ்சி இவனை ஒருக்காலும் வெளியே போகவொட் டாமல் வீட்டில்தானே மிகவும் ஜாக்கிரதையுடன் நிறுத்தி வைத்தான்.

5. யாக்கோபின் குமாரர்கள் (தானியம்) கொள்ளப்போகிற மற்றனேகரோடே கூட எஜிப்த்து தேசத்திலே பிரவேசித்தனர்; உள்ள படி கானான் நாட்டிலும் பஞ்சம் இருந்தது.

6. ஜோசேப்போ எஜிப்த்து தேசத்துக்கு அதிபதியாயிருந்தான். அவன் மனதின்படியே ஜனங்களுக்குத் தானியங்கள் விலைக்குக் கொடுக்கப்படும். அவனுடைய சகோதரர்கள் வந்து தரையில் விழுந்து நமஸ்கரித்திருக்கை யிலே,

7. அவன் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டானாயினும், அறியாதவ னைப் போலே அதி கொடூரமாய்ப் அவர்க ளோடே பேசி: நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று வினவ, அவர்கள் கானான் நாட்டிலி ருந்து ஜீவனத்துக்கு வேண்டியவைகளை வாங் கும்படியாக வந்தோம் என்று மறுமொழி கூறினார்கள்

8. ஜோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்களென்று கண்டுபிடித்தாலும் அவர்கள் அவனை அறியவில்லை.

* 8-ம் வசனம். தன் தமயரால் விற்கப்பட்டபோது ஜோசேப்பு பதினேழு வயதாகியிருந்தான். பின்பு புத்திபார் ஊழியத்தில் பத்து வருஷமும், சிறைச்சாலையில் மூன்று வருஷமும் இருந்தானாதலால் பரவோன் அரசனால் அதிகாரத்தைப் பெற்றபோது அவனுக்கு முப்பது வயதிருக்கும்.

9. ஆகையால் அவன் முன்னாளில் தான் கண்டிருந்த சொப்பனங்களை நினைத்து அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரராக்கும்; தேசம் எங்கே பலவீனமாயிருக்கிறது, அதைப் பார்க்க வந்தீர்கள் என்றான்.

10. அதற்கு அவர்கள்: ஆண்டவரே! அப்படியல்ல, உமது அடியார்களாகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.

11. நாங்களெல்லோரும் ஒரே தகப்பனுடைய குமாரர்கள். நாங்கள் சமாதானிகள். அடியார்கள் யாதொரு துரோகத்தையும் சிந்தித்தவர்களல்லவே என,

12. அவன்: அப்படியல்ல; இத்தேசத்தில் அரணில்லா ஸ்தலங்களைப் பார்த்தறியும்படி வந்தீர்கள் என்று சென்னான்.

13. அப்பொழுது அவர்கள்: அடியார்கள் பன்னிரண்டு சகோதரர்கள், நாங்கள் கானான் நாட்டிலிருக்கிற ஒரே தந்தையின் மக்களாம்; (எங்கள்) இளையவன் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான், மற்றொருவன் ஜீவித்துப்போனான் என்றார்கள்.

14. ஜோசேப்பு: நான் முன்னே சொன்னது சரி; நீங்கள் வேவுகாரர்தான்.

15. ஆனால் நான் இப்போதே உங்களைப் பரீட்சை பண்ணப் போகிறேன்: பரவோனின் ஜீவனாணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கிருந்து புறப்படுவதில்லை.

16. அவனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; நீங்கள் சொன்னது மெய்யோ, பொய்யோவென்று நிச்சயிக்கப் படுமளவும் நீங்கள் விலங்கிலே கிடக்க வேண் டும். இல்லாவிட்டால் பரவோனின் ஜீவனாணை! நீங்கள் வேவுகாரர்களேயாம் என்றான்.

17. அப்படியே அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தான்.

18. மூன்றாம் நாளில் அவர்களைச் சிறையி லிருந்து வரவழைப்பித்து: நான் சொன்னபடி செய்யுங்கள், செய்தால் பிழைக்கலாம். ஏனென்றால் நான் தேவபயமுள்ளவனா யிருக்கிறேன். 

19. நீங்கள் சாதுக்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் கட்டுண்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு வாங்கின தானியத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டுபோங்கள்.

20. பின்னும் உங்கள் இளைய சகோ தரனை என்னிடத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள்; வந்தால் உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்குவதினாலே, நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அந்தப்படி செய்தார்கள்.

21. அப்போது ஒருவரையயாருவர் பார் த்து: இந்த ஆபத்து நமக்கு நேர்ந்ததே நீதி; ஏனென்றால், நம் சகோதரனுக்குத் துரோகம் பண்ணி வந்தோமே; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனத் துயரைக் கண்டும், நாம் கேளாமல் போ னோமே. அதினாலன்றோ இந்தத் துன்பம் நம்மேல் வந்ததென்றார்கள்.

22. அவர்களில் ஒருவனான ரூபன் அவர் களை நோக்கி: சிறுவனுக்கு விரோதமாய் நீங்கள் பாவஞ் செய்யாதேயுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங் கள் கேளாமற் போனீர்களே; இதோ இப் பொழுது அவனுடைய இரத்தப்பழி வாங்கப் படுகிறது என்றான்.

23. ஜோசேப்பு துபாசியைக் கொண்டு அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தானா கையால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியுமென்று அவர்கள் அறியாமலிருந்தார்கள்.

24. அப்போது அவன் சற்றுநேரம் ஒதுங்கி அழுதான்; பிறகு திரும்பி வந்து அவர்க ளோடு சம்பாஷித்துக்கொண்டே,

25. சீமையோனைப் பிடித்து அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். பிறகு அவர்களுடைய சாக்குகளைக் கோதுமையால் நிரப்பவும், அவனவன் பணத்தைத் திரும்ப அவனவனுடைய சாக்கிலே போடவும், வழி க்கு வேண்டிய உணவுகளைக் கொடுக்கவுந் தன் ஊழியக்காரருக்குக் கற்பித்தான். அவர் கள் அப்படியே செய்தார்கள்.

26. அவர்கள் தங்கள் வேசரிகளின்மேல் தா னியத்தை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் கள்.

27. பின்பு அவர்களிலொருவன் சத்திரத்திலே தன் வேசரிக்குத் தீனியைப் போட வேண்டித் தன் சாக்கைத் திறக்கவே, சாக்கின் வாயிலே தன் பணமிருக்கிறதைக் கண்டபோது,

28. தன் சகோதரரைப் பார்த்து: என் பணம் திரும்ப வைக்கப்பட்டது, இதோ சாக்கிலே இருக்கிறது என்றான். அவர்களோ திடுக்கிட்டு மயங்கித் தயங்கி, ஒருவனோடொருவன்: தேவன் நமக்கு இவ்வாறு செய்திருக்கிறது என்னமோ என்றார்கள்.

29. அப்பால் அவர்கள் கானான் நாட்டிலே தங்கள் தந்தையாகிய யாக்கோபிடத்தில் வந்து சேரத், தங்கட்குச் சம்பவித்தவைகளையெல்லாம் விவரித்துச் சொல்லத்தொடங்கி னார் கள் .

30. எப்படியெனில்: அத்தேசத்திற்கு அதிபதியானவர் எங்களோடு கொடூரமாய்ப் பேசி, எங்களைத் தேசத்தை வேவுபார்க்க வந்தவர்க ளென்று எண்ணிக்கொண்டார்.

31. நாங்களோ அவரைப் பார்த்து: நாங்கள் சாதுக்கள், மோசக்காரர் அல்ல;

32. நாங்கள் ஒரே தகப்பனுக்குப் பிறந்த பன்னிரண்டு சகோதரர்களாயிருக்கிறோம்: ஒருவன் ஜீவித்துப் போனான். இளையவன் கானான் நாட்டிலே எங்கள் தந்தையிடத்தில் இருக்கிறான் என்று சொன்னதற்கு,

33. அவர்: நீங்கள் சாதுக்கள் என்பதை நான் நிச்சயிக்கப்போகிறேன்; எவ்வாறெ னில்: உங்கள் சகோதரர்களிலே ஒருவனை நீங் கள் என்னிடத்தில் விட்டுவிடுங்கள், பின்பு உங்கள் குடும்பத்துக்கு வேண்டிய தானியம் வாங்கி எடுத்துக் கொண்டு போங்கள்;

34. உங்கள் இளைய சகோதரனை என்னி டத்தில் அழைத்து வாருங்கள்; அதனாலே நீங்கள் வேவுகாரரல்ல வென்று நானும் கண்டு பிடிப்பேன். நீங்களும் காவலில் வைக்கப் பட்ட சகோதரனைப் பெற்றுக்கொண்டு அப்புறம் இஷ்டப்படி நீங்கள் எதை வாங்கி னாலும் வாங்கலாம் என்றார்.

35. அவர்கள் இவை சொல்லித் தங்கள் சாக் குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும் போது அவனவன் சாக்கின் வாயிலே அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. அதைக் கண்டு அவர்களெல்லோருக்குந் திகில் உண்டாயிற்று.

36. யாக்கோபாகிய தகப்பன் மக்களை நோ க்கி: என்னைப் பிள்ளையற்றவனாகச் செய் தீர்கள்; ஜோசேப்போ உயிரை இழந்தான். சீமையோனோ விலங்குண்டு கிடக்கிறான். பெஞ்சமீனையோ கூட்டிக்கொண்டு போகிறீர்களே! இந்தத் தீமைகள் எல்லாம் என் மேலே சுமந்தன என்றான்.

37. அதற்கு ரூபன்: நான் அவனை உம்மி டத்தில் திரும்பவுங் கொண்டுவராதிருப்பே னாகில், என் இரண்டு குமாரர்களையும் கொன்று போடும்; அவனை என் கையில் ஒப்பு வியும், நான் அவனை உமக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

38. அவனோ: என் மகன் உங்களோடு கூடப் போகவொட்டேன். அவனுடைய தமயன் இறந்து போனான். இவன் ஒருவன் மீதியா யிருக்கிறான். நீங்கள் போகிற ஊரிலே இவ னுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் நரைமயி ரையுடைய என்னை மனச்சஞ்சலத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்று ரைத்தான்.