இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 40

பரவோனுடைய இரண்டு உத்தியோகஸ்தர் அந்தச் சிறைச்சாலையிலே வைக்கப்பட்டிருந்ததும் - ஜோசேப்பு அவர்களுடைய சொப்பனத்தின் அர்த்தம் சொல்லிக்கொடுத்ததும் - அவ்விருவர்களில் ஒருவன் நன்றிகெட்டவனாகி ஜோசேப்பை மறந்ததும்.

1. இவைகள் நடந்தேறிய பிற்பாடு சம்ப வித்தது என்னவென்றால், எஜிப்த்து இராசா வுக்குப் பானாதிகாரியஸ்தனும், ரொட்டியாதி சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இரண்டு பேர் அண்ணகர் தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.

2. பரவோன் தன் பானபாத்திரங்களுக்கு அதிகாரியும் ரொட்டியாதி சுடுகிற பிரதானி யும் ஆகிய இருவர்களின்பேரில் கடுங்கோபம் வைத்து,

3. அவர்களை ஜோசேப்பு அடைபட்டி ருந்த சேனாதிபதியின் சிறைச்சாலையிலே காவல் பண்ணுவித்தான்.

4. சிறைச்சாலைத் தலைவனோவென் றால் அவர்களை ஜோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான். அவன் அவர்களை விசாரித்து வருவான். அவர்கள் சிறைச்சாலையிலிருந்த சில நாளுக்குப் பிற்பாடு,

5. இருவரும் ஒரே இராவிலே தங்கட்கு நேரிடவிருந்தவைகளைக் குறித்து வெவ்வேறு கனாவைக் கண்டார்கள்.

6. காலமே ஜோசேப்பு அவர்களிடத்தில் வந்த போது, அவர்கள் விசனமாயிருப்பதைக் கண்டு:

7. உங்கள் முகம் இன்று முன்னை விட, அதிகமாகத் துக்கமாயிருக்கிறதென்ன என்று அவர்களை வினாவ,

8. அவர்கள்: நாங்கள் சொப்பனங் கண் டோம். அதை எங்களுக்கு வியாக்கியானம் பண்ணுவாரில்லை என்று பதில் கூற, ஜோ சேப்பு அவர்களை நோக்கி: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுவது கடவுளுக்குரியதன் றோ? நீங்கள் கண்டவைகளை என்னிடத்தில் விவரித்துச் சொல்லுங்கள் என்றான்.

* 8-ம் வசனம். தேவன் அனுப்பிய சொப்பனங்களின் அர்த்தம் சொல்லுதல் தெய் வாதீனம். ஆதலால் அவைகளின் தாற்பரியத்தை அறிவதற்குப் புத்திசாலியானவர்களைப் போய்க் கேட்காமல் தேவ அருளைப் பெற்றவர்களைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

9. அப்பொழுது முதலிலே பானாதி காரி யஸ்தன் தான் கண்டதைச் சொல்லத் தொட ங்கினான். ஒரு திராட்சச் செடி எனக்கு முன் பாக இருப்பதைக் கண்டேன். 

10. அதிலே மூன்று கொடிகள் இருந்தன; அவைகள் வர வரத் துளிர்த்து அரும்பி பூத்துப் பழங்கள் பழுக்கக் கண்டேன்.

11. என் கையிலே பரவோனுடைய பான பாத்திரம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து என் கையிலிருந்த பாத்திரத்திலே பிழிந்து (அப்) பானத்தைப் பரவோனுக்குச் சமர்ப்பித்தேன் என்றான்.

12. ஜோசேப்பு அவனை நோக்கி: உன் சொப்பனத்தின் தாற்பரியமாவது: மூன்று கொடிகளும் மூன்று தினங்களாம். 

13. அவைகளின் பின் பரவோன் உன் சே வையை மனதில் நினைத்து மறுபடியும் முந்தின பதவியிலே உன்னை வைப்பார்; நீ முன் செய்து வந்ததுபோல உன் உத்தியோ கத்தின் முறைப்படி அவருக்குப் பானபாத் திரத்தைக் கையில் கொடுப்பாய்.

14. உன் காரியம் இப்படி நன்மைக்கு வந்த பின்போ, நீ என்னை மறவாமல் தயவைக் காட்டிப் பரவோன் என்னை இச்சிறைச் சாலையிலிருந்து விடுதலையாக்கும்படி பரிந்து பேச வேண்டும்;

15. ஏனென்றால், நான் எபிரேயருடைய தேசத்திலிருந்து வஞ்சகமாய்க் கொண்டு வரப் பட்டு என் பேரிலே யாதொரு குற்றமுமில் லாமல் இக்காவல் கிடங்கிலே அடைபட் டிருக்கிறேனே என்றான்.

16. ரொட்டியாதி சுடுகிறவர்களின் தலைவன் அந்தச் சொப்பனத்தின் அர்த்தம் (ஜோசேப்பு) புத்தி விவேகமாய்ச் சொல்லியதைக் கண்டு அவனை நோக்கி: நானும் சொப்பனத் திலே மூன்று மாவுக் கூடைகளை என் தலை யில் வைத்திருந்தேன்.

17. மேல் கூடையிலே பணியாரத் தொழிலுக்குரிய சகலவிதப் பலகாரங்களையும் சுமந்து கொண்டிருந்தேன். பட்சிகளோ வந்து அவற்றைப் பட்சித்தது என்றான்.

18. அதற்கு ஜோசேப்பு: அச்சொப்பனத்தின் தாற்பரியமாவது: மூன்று கூடைகளும் வரவிருக்கிற மூன்று நாளாம்.

19. அம்மூன்று நாட்களுக்குப் பின் பரவோன் உன் தலையை வெட்டி உன்னை ஒரு சிலுவை மரத்திலே தொங்கவைப்பார். அப் பொழுது பட்சிகள் வந்து உன் மாம்சங்களைக் கிழித்துத் தின்னும் என்றான்.

20. அதுக்குப் பிந்தின மூன்றாம் நாள் பரவோன் பிறந்த நாளாயிருந்தது. அவன் தன் ஊழியர்களைப் பெரிய விருந்துக்கு அழைத்திருந்தான். பந்தியிலிருக்கையிலே அவன் பானாதி தலைவனையும், பணியாராதி தலைவனையும் நினைத்துக் கொண்டவனாய்,

21. பானாதி தலைவனாயிருந்தவனைத் தனக்குப் பானபாத்திரத்தைக் கையில் கொடுக்கும்படி (வரச் சொல்லி) அவன் பதவியிலே அவனை மறுபடியும் வைத்தான்.

22. மற்றவனையோ தூக்குமரத்திலே தூக்கிப் போட்டான். அதினாலே ஜோசேப்பு நிதானித்துச் சொல்லியபடி சம்பவித்தது.

23. தனக்கு நல்லதிர்ஷ்டம் வந்திருந்தாலும் பானாதி தலைவன் சொப்பனத்தின் அர்த்தத்தை விவரித்துக்காட்டிய ஜோசேப்பை நினையாமல் மறந்துவிட்டானாம்.