இனி, தவஞ் செய்யவேண்டிய விதத்தைப்பற் றிச் சில வார்த்தைகள் சொல்லி முடிப்போம்.
முதலாவது திருச்சபைக் கட்டளையினால் நமக்குக் கடமையான தவக் கிருத்தியங்கள் எவையெவையோ, அவைகளை நாம் கட்டாயமாய் அனுசரிக்க வேண்டியது. திருச்சபையானது இரக்கமும் விவேகமுமுள்ள ஒரு மாதாவைப்போல், கோழைத்தனம் மேலிட்ட இக்காலத்தில் இருக்கும் நமக்கு எவ்வளவோ லேசான தவக்கிருத்தயங்களை மட்டும் கற்பிக்கின்றது.
முற்காலத்திலே கிறீஸ்தவர்கள் அநேகநாள் ஒருசந்தியாக இருப்பார்கள். அநேகநாட் சுத்தபோசனங் காப்பார்கள். அதுவும் மிகவும் கடினமான ஒருசந்தி; கடினமான சுத்தபோசனம். தற்காலமோ தபசு காலத்திலே வெள்ளிக்கிழமை ஒருசந்தியும், வாரத்தின் மூன்று நாட்களிலே மாத்திரம் மாமிச விலக்கமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு சந்தியும் இயலாதவர்களுக்காக எவ்வளவோ லேசாக்கப்பட்டிருக்கிறது. காலையில் தண்ணீர் வகையையும் சொற்ப கெட்டிபோசனக்தைத்தானும், மாலையில் ஓர் சிற்றுணவையும் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது. ஆகையால் ஒரு சந்தி காக்க வயதுள்ளவர்கள் யாருக்கேனும், முற்காலத்திலே போலக் கடின ஒருசந்தி காக்கக் கூடாவிட்டால், அதற்காக அவர்கள் அதை விட்டுவிடப்படாது.
திருச்சபையான து செய்திருக்கின்ற இளக்காரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காலையில் ஏதும் சொற்ப உணவையும் மாலையில் சிற்றுணவையும் உட்கொண்டாவது ஒருசந்தி காக்க வேண்டும். தவத்தின் அவசியத்தையும், திருச்சபைக் கட்டளைகளின் கனத்தையும் நீங்கள் யோசித்துப்பார்த்தால், உத்தரவின்றி இந்த ஒருசந்திக் கடனை ஒருபோதும் அலட்சியஞ்செய்யவே மாட்டீர்கள்.
தபசு காலத்திலே கடமையான இவைகள் போ துமென்று இராமல், திருச்சபையின் கருத்துக்கிசைய வேறு தவக்கிரியை களையும் செய்யத் தகும். இந்நாட்கள் துக்கநாட்களல்லவா? இந்த நாட் களுக்கேராத உண்டாட்டுக் களியாட் டுகளையும், வேடிக்கை வினோதங்களையும், காட்சிகளையும், பராக்குகளையும் பஞ்சேந்திரியங்களுக்குக் கொடா மல் மறுக்கக்கட வோம். அன்ன பானங்களை ஒறுக்கிறது மாத்திரம் அல்ல, கண்களுக்கும் செவிகளுக்கும் அவசியமில் லாதவைகளைக் கொடாமல் மறுக்கிறதும் தவந் தானே யாகும். இந்நாட்கள் செபஞ் செய்யும் நாட்களுமாம். ஆகையால் திவ்விய பூசைகாணுதல், சிலுவைப்பாதை முயற்சி செய்தல் முதலிய பத்திக்கிருத்தியங்களையும் பசாம் வாசித்தல் முதலிய தியானங்களையும் கோவிலிலும் வீட்டிலும் செய்யக்கடவோம்.
திருச்சபைக் கட்டளையினால் இந்த நாட்களிலே செய்யவேண்டிய தவத்தைவிட, தேவகற்பனையினால் நாம் எப்போதும் செய்யவேண்டிய தவமும் ஒன்று உண்டு. அதாவது ஒவ்வொரு கிறீஸ்தவனும் தன்னைத் தானே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு நடக்க வேண்டியதாகியதவராம்.
விசேஷமாய்ப் பாவகாரணங்களாயுள்ள இன்பங்களை எப்போதும் விலக்கக் கடமையுண்டு. பாவப்பழக்கங்களிற் சிக்கிக் கொண்டவர்கள், மற்றோரிலும்பார்க்க அதிக தவம் பண்ணவும், அவசியமானால், ஊண் உறக்கத்தைக் குறைத்துச் சரீரத்தைத் தண்டிக்கவும் கடமைப்பட்டவர்கள். ஆயினும் இவர்கள் தங்கள் சுய எண்ணத்தின்படி மாத்திரம் நடந்துகொள்ளாமல் ஆத்துமகுருவின் ஆலோசனையோடு தான் இத் தவக் கிருத்தியங்களைச் செய்யத்தகும்.
கிறீஸ்தவர்களே, உங்களுக்காகக் கட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, காறி உமிழப்பட்டு, சிலுவையைச் சுமந்து, சிலுவையிலே மரித்து உங்களுக்கு மோட்ச , ராச்சியத்தைத் திறந்து விட்டவருடைய மெய்யான சீஷர்களாகவிருக்க விரும்புகிறீர்களா? விரும்பினால் நீங்களெல்லோரும் ஒவ்வொருவருக்கும் இயன்ற மட்டும் தவஞ் செய்யக்கடவீர்கள். அப்போது, ஆண்டவர் நடந்த பாதையிலேயே நீங்களும் நடக்கிறவர்களாகி, அவருடைய பேரின்ப திருமுக தரிசனத்தையும் அடைந்து கொள்வீர்கள்.
ஆமென்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠