இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 39

ஜோசேப்பு புத்திப்பார் வீட்டில் மேன்மையைப் பெற்றதும் - புத்திப்பாருடைய மனைவியோடே விபசாரம் செய்யமாட்டேனென்று மறுத்ததும் - அவள், அவன் பேரில் பொய்யான குற்றம் சாட்டினதும் - ஜோசேப்பு காவலிலே வைக்கப்பட்ட தும்.

1. ஜோசேப்போவென்றால், எஜிப்த்து தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்ட போது பரவோனின் அண்ணகனும் சேனாதிபதியு மான புத்திப்பார் என்னும் எஜிப்த்து தேசத் தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டு வந்த இஸ்மாயேலியரிடத்திலே விலைக்கு வாங்கினான்.

2. கர்த்தர் ஜோசேப்போடே இருந்தார். அவன் காரிய சித்தியுள்ளவனாயிருந்தான். அவன் தன் எஜமானனுடைய வீட்டிலேயே இருந்தான்.

3. கர்த்தர் அவனோடு இருக்கிறாரென்றும் அவன் எதைச் செய்தாலும் அதைக் கர்த்தர் நிருவாகித்து வாய்க்கப்பண்ணுகிறாரென்றும் எஜமான் ஸ்பஷ்டமாய்க் கண்டறிந்து,

4. ஜோசேப்பின் மேல் தயவு வைத்து, அவ னைச் சகலத்திற்குந் தலைவனாக நியமித்தா னாதலால் ஜோசேப்பு தன் கையில் ஒப்புவிக் கப்பட்ட வீட்டையும், அதில் உண்டான எல் லாவற்றையும் நடத்தி எஜமானுக்கு நல்லூழி யம் செய்து வருவான்.

5. ஆண்டவர் ஜோசேப்பினிமித்தமாக எஜி ப்த்தானுடைய வீட்டை ஆசீர்வதித்து, வீட்டி லும் வெளியிலும் அவனுக்குண்டான சம்பத் துகளை யெல்லாம் பெருகச் செய்தனர்.

6. ஆதலால், தான் புசிக்கும் அன்னத்தைத் தவிர அவன் மற்றொன்றைக் குறித்தும் விசாரியாதிருந்தான். ஜோசேப்போ அழகான ரூபமும் செளந்தரிய முகமுமுள்ளவனாயிருந் தான்.

7. நெடுநாள் சென்ற பின்பு அவனுடைய எஜமானின் மனைவி ஜோசேப்பின் மேல் கண் போட்டு: என்னோடே சயனியென்றாள்.

8. அவன் அந்தத் துர்க்கன்மத்துக்குப் பரிச்சேதம் இணங்காமல் அவளை நோக்கி: இதோ என் எஜமான் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்புவித்திருக்கிறார். அவர் தமக்கு உண்டானவைகளைக் குறித்து விசாரிக்கிறதில்லை.

9. இவ்விடத்திலுள்ளவையெல்லாம் என் வசமாக்கினார். நீர் அவருடைய மனைவியா யிருக்கிறபடியால் உம்மைத் தவிர வேறொன் றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, நான் இந்த அக்கிரமக் கிரியை க்கு உடன்பட்டு என் தேவனுக்கு விரோத மாய்ப் பாவம் செய்வது நியாயமா என்றான்.

10. அவள் நித்தமும் அவ்விதமாய்ப் பேசி அவனை வருந்திக் கேட்டாலும் வாலிபன் அவளோடே சயனிக்கச் சம்மதப்படவில்லை.

11. இப்படியிருக்கும் நாளில் ஒரு நாள் ஜோசேப்பு செய்ய வேண்டிய சில வேலை முகாந்தரமாகத் தனியே அவள் வீட்டுக்குப் போயிருக்கையில்,

12. அவள் அவன் வஸ்திரத்தின் ஓரத்தைப் பற்றிப் பிடித்து: என்னோடே சயனி என்றாள். அவன், அவள் கையிலே தன் உத்தரியத்தை விட்டு விட்டு வெளியே ஓடிப் போனான்.

* 12-ம் வசனம். தன் வஸ்திரத்தை அவள் கையில் விட்டுவிட்டதனாலே தனக்கு மோசம் வரக்கூடுமென்று ஜோசேப்பு நன்றாய் அறிவான். ஆனால் தர்ம சங்கடத்திலே முன் பின் பாராமல் ஆத்துமத்திற்குத் தோஷம் உண்டாகாதபடிக்குத் திட்டம்பண்ணுவதே முக்கிய அவசரம்.

13. வஸ்திரந் தன் கையிலிருக்கிறதென்றும், அவன் தன்னை அசட்டை பண்ணினானென்றும் அந்த ஸ்திரீ கண்டு,

14. தன் வீட்டு மனிதர்களைக் கூப்பிட்டு: (என் கணவன்) நம்மைப் பரிகாசம் பண்ணுவதற்குத்தானோ அந்த எபிரேய மனிதனை வீட்டிலே கொண்டுவந்தார்? இதோ (ஜோசேப்பு) என்னோடே சயனிக்கும்படிக்கு என் அறையிலே வந்தான்; ஆனால் நான் சத்தமிட்டுக் கூப்பிட்டதைக்,

15. கேட்டு அவன் தன் வஸ்திரத்தை என் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடிப் போய் விட்டான் என்றாள்.

16. பிறகு அவள் தான் சொல்லுகிறது உண்மையென்று காண்பிக்க மேற்படி வஸ்திரத்தைத் தன்னிடத்திலே வைத்துக்கொண்டு தன் அன்புடையான் வீட்டுக்குத் திரும்ப வந்தபோது அதை அவனுக்குக் காட்டி: 

17. (ஐயா) நீர் கொண்டு வந்த அந்த எபிரேய வேலைக்காரன் என்னோடே சரசம் பண்ணும்படிக்கு என்னிடத்திலே வந்தான்.

18. அப்போது நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதைக் கேட்டவிடத்தில் அவன் தன் வஸ்திரத்தை என் கையிலே விட்டு விட்டு வெளியே ஓடிப்போனான் என்று முறையிட்டாள்.

19. புத்தியில்லாத எஜமான் மனைவி சொல்லிய வார்த்தை உண்மையென்று தக்ஷணமே நம்பி, மிகுந்த சினங் கொண்டு,

20. இராஜாக்கினையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் எந்தச் சிறைச்சாலையில் விலங்குண்டிருந்தார்களோ, அதிலே தானே ஜோசேப்பை ஒப்புவித்தான். அவன் அதிலே அடைக்கப்பட்டான்.

21. தேவனோவெனில் ஜோசேப்போடே இருந்து, அவன் மீது இரக்கங்கொண்டு சிறைச் சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

22. இவன் சிறைச்சாலையில் கட்டுண்டிருந்த யாவரையும் அவனுடைய கையிலே ஒப்புவித்தான். அங்கே எதை அவன் செய்யவே ண்டுமோ அதை ஜோசேப்புதான் செய்விப்பான்.

23. ஜோசேப்புடைய வசத்திலே எல்லாவற்றையும் ஒப்பித்த பிற்பாடு சிறைச்சாலைத் தலைவன் யாதொன்றையும் குறித்து விசாரிப்பானில்லை; ஏனெனில், தேவன் ஜோசேப்போடிருந்து அவன் செய்வதெல்லாம் நடத்தி வருகிறார் என்று கண்டுபிடித்தான்.