இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 38

யூதா கேர், ஓனான், சேலா என்பவர்களைப் பெற்றதும் - ஓனான் தேவனால் அழிக்கப்பட்டதும் - தாமார் யூதாவை வஞ்சித்து இரட்டைப்பிள்ளை பெற்றதும்.

1. அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டுப் புறப்பட்டு, ஒதொல்லாம் ஊரானா கிய கீராஸ் என்னும் ஒரு மனிதனிடத்திலே போய்க் குடிகொண்டான்.

2. அங்கே சூயேயென்னும் கானானியனான ஒரு மனிதனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம் பண்ணி அவளோடே வாழ்ந்து கொண்டிருக்கையில்,

3. அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்குக் கேர் என்று பேரிட்டனள்.

4. அவள் மறுபடியும் கருக்கொண்டு, பிற ந்த மகனை ஓனான் என்றழைத்தாள்.

5. பிறகு மூன்றாம் புத்திரனையும் பெற்று, அவனைச் சேலாவென்றழைத்தாள்; இவன் பிறந்த பிற்பாடு அவளுக்கு வேறு பிள்ளையில் லை.

6. யூதா தன் மூத்த மகனாகிய கேர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண் ணைக் கொடுத்தான்.

7. யூதாவின் மூத்த மகனான கேர் என்பவ னோ ஆண்டவர் சன்னிதானத்தில் பெரும் பாவியானதினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.

8. அப்போது யூதா தன் குமாரனான ஓனா னை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியை மனைவியாகக் கொண்டு அவளோடே சேர்ந்து உன் தமயனுக்குப் புத்திரசந்தானம் உண்டுபண்ணுவாய் என்றான்.

9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிரா தென்றறிந்து, அவன் தன் தமயன் மனைவியைச் சேரும்போது, தன் தமயனுக்குப் புத்திரசந்தானம் உண்டாகாதபடிக்குத் தன் வீரியத்தைத் தரையிலே விழவிட்டு வருவான்.

* 9-ம் வசனம். ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் இறந்தால் அவனுடைய சகோதரன் அவனுடைய மனைவியை விவாகம் பண்ணி இந்த விவாகத்தால் உண்டாகும் புத்திரர்கள் இறந்து போனவனுடைய சொந்தப் புத்திரர்களாக எண்ணப்படுவார்களென்று அக்காலத்திலே கற்பிக்கப்பட்டிருந்தது. ஓனானுக்குச் சம்பவித்ததைக் கண்டு சமுசாரியானவர்கள் விவாகச் சட்டதிட்டங்களுக்கு விரோதமாய் நடப்பது எவ்வளவோ பெரிய பாவமென்று கண்டுபிடிக்கக்கடவார்கள்.

10. அவன் செய்தது மகா அக்கிரமமென்று கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். 

11. ஆனபடியால் யூதா தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும் நீ உன் தகப்பன் வீட்டிலே விதவையாய்த் தங்கியிரு என்றான்; அவன் அவ்விதமாய்ச் சொன்னதற்கு முகாந்தரமேதெனில், தன் சகோதரரைப் போல் சேலாவும் சாவானாக்கும் என்று பயந்திருந்தான். அவள் (அப்படியே) போய் தன் தகப்பன் வீட்டிலே வாசம்பண்ணி வந்தாள்.

12. நெடுநாளான பின்போவெனில் சூயேயின் புத்திரியான யூதாவின் மனைவியானவள் இறந்தாள்; அவன் துக்கந் தீர்ந்து ஆறுதலான பின்னர், தன் மந்தைகளின் மேய்ப்பனான ஒதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்பவனோடு தம்னாஸிலே ஆடுகளை மயிர் கத்திரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

13. அப்போது உன் மாமனார் தம்முடைய ஆடுகளுக்கு மயிர்கத்திரிக்கத் தம்னாசுக்குப் போகிறாரென்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டபோது,

14. சேலா பெரியவனாகியும் தனக்குப் புருஷனாகக் கொடுக்கப்படவில்லையென்று மனத்தாங்கல்பட்டுத் தன் கைம்பெண்மைக் கடுத்த உடைகளைக் கழற்றிப் போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு புது வஸ்திரங்களை அணிந்தவளாய் தம்னாசுக்குப் போகும் வழியில் ஒரு சந்திப்பிலே உட்கார்ந்தாள்.

15. அவள் யாரும் தன்னை அறியாதபடிக்கு முக்காடிட்டுக் கொண்டபடியால் யூதா அவளைக் கண்டு அவள் ஒரு வேசியென்று உத்தேசித்து,

16. அவள் கிட்டப் போனான். அவள் தன் மருமகளென்றறியாமல்: நான் உன்னோடே கமனம் பண்ண இச்சிக்கிறேன். சம்மதிக்கிறாயா என்றான். அதற்கவள்: நீர் என்னோடே கமனம் பண்ணுவதற்கு எனக்கென்ன தருவீர் என்றாள்.

17. அவன்: என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கவள்: நீர் அதை அனுப்புமளவும் எனக்கு ஓர் அடைமானம் கொடுத்தாலே நான் உன் ஆசைக்கு உட்படுவேன் என,

18. யூதா: அடைமானமாக என்னத்தைத் தரக் கேட்கிறாய் என்று வினவ, அவள்: உம்முடைய மோதிரமும், உம்முடைய கைக் காப்பும், கைக்கோலுந் தரவேணும் என்றாள். இந்த ஒரே சேர்க்கையால் அவள் கற்பவதியானாள்.

19. அப்பொழுது அவள் எழுந்து போய் தன் உடையைக் களைந்து விதவைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டனள்.

20. யூதாவோவென்றால், ஸ்திரீயினிடத்தில் தான் கொடுத்திருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி ஒதொல்லாம் ஊரானாகிய மேய்ப்பன் கையிலே ஓர் வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து அனுப்பினான். அவன் (போய்) அவளைக் காணாமல், 

21. அங்கிருந்த புருஷர்களை நோக்கி: வழிச் சந்திப்பிலே உட்கார்ந்திருந்த தாசி எங்கே என்று கேட்க, அவர்கள்: ஏது! இவ்விடத்தில் வேசி கிடையாதென்றார்கள்.

22. அவன் யூதாவினிடத்திற்குத் திரும்பி வந்து, நான் அவளைக் கண்டதுமில்லை. அவ்விடத்து மனிதர் அந்த ஸ்தலத்திலே யாதொரு வேசி எப்போதாகிலும் உட்கார்ந்ததுமில்லை என்று சொன்னார்கள் என்று சொல்ல,

23. யூதா: போனால் போகுது. எப்படியும் அவள் நமது பேரில் குற்றம் சாட்டப் பரிச்சேதம் கூடாது. நான் ஆட்டுக்குட்டியை அனுப்புவதாகச் சொல்லியிருந்தேனே, அந்தப்படி அனுப்பினேன், நீயோ அவளைக் காணவில்லை என்றான்.

24. மூன்று மாதம் சென்ற பிற்பாடு: உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். அதனாலே அவள் கர்ப்பவதி ஆயினாள் போலும் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன்: அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட் டெரிக்கப்பட வேண்டுமென்றான்.

25. அவளை மரணாக்கினை ஸ்தலத்திற்குக் கூட்டிக் கொண்டு போகும்போது, அவள் தன் மாமனாரிடத்திற்கு அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ, அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த மோதிரமும், இந்தக் கைக்காப்பும், இந்தக் கைக்கோலும் யாருடையவைகளென்று பாரும் என்றனுப்பினாள்.

26. யூதா அவைகளைப் பார்த்தறிந்து: அவள் என்னிலும் நீதியுள்ளவள்; அவளை நான் என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடுக்காமல் போனேனே என்றான். ஆயினும் அப்புறம் அவன் அவளைச் சேரவேயில்லை.

27. அவளுக்குப் பிரசவகாலமானபோது அவள் உதரத்தில் இரட்டைப் பிள்ளைகள் காணப்பட்டது. அவள் பெறுகிற வேளையிலே ஒரு பிள்ளை கையை நீட்டிக் காண்பித்தது. மருத்துவச்சி அதிலே இரத்தாம்பர நூலைக் கட்டி, 

28. இது முதலாவது வெளிப்படும் என்றாள்.

29. ஆனால் அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட பின்பு, மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது மருத்துவச்சி: உன்னைப் பற்றிச் சவ்வு ஏன் பிரிந்தது? என்றாள். அது நிமித்தம் அந்தப் பிள்ளைக்குப் பாரேஸ் என்னும் பெயரையிட்டாள்.

* 29-ம் வசனம். இந்தப் பாரேஸ் வம்சத்தின் வழியே திவ்விய இரட்சகர் பிறக்கச் சித்தமா யிருப்பதினாலே இவனுடைய வம்ச வரலாறும், பிறப்பு வருமாறும் வசனிக்க வேண்டியிருந்தது. கிறீஸ்துவானவர் நல்லோர்களையும் தீயோர்களையும் ஈடேற்றத்திற்கு அழைக்க வந்ததினாலே தம்முடைய வம்ச மூதாக்களில் சில பாவிகள் இருக்கும்படி திருவுளமானார் என்றறியவும்.

30. பிறகு இரத்தாம்பர நூல் கையிலே கட்டிக்கொண்டிருந்த அவனுடைய சகோதரன் வெளிப்பட்டான்; இவனை ஜாரா என்றழைத்தாள்.