இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 37

ஜோசேப்பு தன் சகோதரரால் பகைக்கப்பட்டதும் - தான் கண்ட சொப்பனங்ளைச் சொல்லியதும் - அவன் சகோதரர் அவனைக் கொலை செய்ய யோசனை பண்ணினதும் - ரூபன் அவனை இரட்சித்ததும் - இஸ்மாயேலியரிடத்தில் அவனை விற்றுப்போட்டதும் - ஜோசேப்பு இறந்துவிட்டானென்று யாக்கோபு புலம்பினதும் - ஜோசேப்பு எஜிப்து தேசத்திலே சேர்ந்ததும்.

1. யாக்கோபோவென்றால், தன்னுடைய தகப்பன் பரதேசிபோல் தங்கிச் சஞ்சரித் திருந்த கானான் தேசத்தில் குடியேறினான்.

2. அவனுடைய சந்ததியின் வரலாறேதெ னில்: ஜோசேப்பென்பவன் பதினாறு வயதி லே தன் சகோதரருடனே தகப்பனுடைய மந் தையை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் தந்தையின் மறுமனைவிமார்களாகிய பாலாள், செல்பாள் என்பவர்களுடைய குமாரர்களோடு கூடவிருந்தான். அப்படியி ருக்கும் நாளில் ஒரு நாள் அவன் தன் சகோ தரருடைய மிகவும் அக்கிரமமானதோர் பாதகத்தைத் தந்தையிடத்தில் வெளிப் படுத்தினான்.

3. முதிர்ந்த வயதிலே ஜோசேப்பு தனக்குப் பிறந்தானென்று இஸ்றாயேல் அவனைச் சகல புத்திரர்களையும் விட அதிகமாய் நேசித்தி ருப்பான்; அவனுக்குப் பலவர்ணமான அங்கி யைச் செய்வித்திருந்தான்.

4. இவனுடைய சகோதரர்கள், தங்கள் தகப்பன் அவனை எல்லோரிலும் அதிகமாய் நேசிக்கிறானென்று கண்டு, அவனோடு ஒரு போதும் பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்து வருவார்கள்.

5. ஒருநாள் ஜோசேப்பு ஓர் சொப்பனத் தைக்கண்டு அதைத் தன் சகோதரருக்கு அறி வித்தான். அது நிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

* 5-ம் வசனம். பற்பல சமயங்களிலே கடவுள் சொப்பன வழியாகப் புண்ணிய ஆத்துமாக்களுக்கு நடக்கும் எதிர்காலச் சங்கதிகளையும் தமது விசேஷ திருச் சித்தங்களையும் அறிவித்து வருகிறார் என்பதற்கு இந்த ஜோசேப்பின் சரித்திரமானது அத்தாட்சியா யிருக்கின்றது. ஆயினும் சிலபேர்கள் சொப்பனமெல்லாம் நம்பி நடக்கிறது மகா பயித்தியம். ஏனெனில் அவைகள் சுபாவத் தன்மையாலேயாவது, பித்தத்தின் மிகுதியினாலேயாவது, பசாசின் தந்திரத்தினாலேயாவது உண்டாகும்போது அவைகளின் மட்டில் விசுவாசம் வைக்கிறது அநர்த்தம். அதுகளைத் தீர்க்கதரிசனமென்று நினைக்கிறது தேவதூஷணம். ஈநல்லோர் கொண்டவருள் தீயோர்க்கிருளாகும்டு என்கிற பழமொழிப்படி ஜோசேப்பு தேவ அருளால் தனக்கு வந்த சொப்பனத்தைத் தன் தமயருக்கு அறிவிக்கவே, அவர்கள் அவனை முன்னிலும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

6.அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:

7. நாம் வயலிலே அறுத்த அரிகளைக் கட்டுவது போல் தோன்றியது. அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு எழுந்து நிற்பது போலவும், உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றித் தொழுவது போலவுங் கண்ணுற்றேன் என்றான்.

8. அப்பொழுது அவன் சகோதரர் அவ னை நோக்கி: நீ எங்களுக்கு அரசனாகவிருப்பாயோ? உன் அதிகாரத்திற்கு நாங்கள் கீழ்ப்படுவோமோ என்று பதில் கூறினார்கள். அவ்வித சொப்பனங்களும் பல பல வார்த்தைகளும் அதிகப் பொறாமையும் பகையும் உண்டாவதற்குக் காரணமாயின.

9. பின்னும் அவன் வேறோர் சொப்பனத் தையுங் கண்டு, அதைத் தன் சகோதரர் களுக்கு அறிவித்து, சூரியனுஞ் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் தன்னை வணங்கினதுபோ ல் சொப்பனத்தில் கண்டேன் என்றான்.

10. இதை அவன் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் தெரிவித்தபோது அவனுடைய தகப்பன் அவனைக் கண்டித்து: நீ கண்ட இந் தக் கனாவின் தாற்பரியம் என்ன? நானும் உன் தாயும் உன் சகோதரர்களும் இவ்வுலகில் உன்னை வணங்கவேண்டுமோ என்னவென்றா ன்.

* 10-ம் வசனம். இவ்விடத்தில் ஜோசேப்பின் தாய் என்னப்பட்டவள் அவனைப் பெற்ற தாயல்ல, அவனை வளர்த்த செவிலித் தாயாகிய பாளாள் என்றறியவும்.

11. அதினிமித்தம் அவன் சகோதரர் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். தகப்பனோவென்றால் மவுனமாயிருந்து இவ்விஷயத்தை மனதில் வைத்து ஆலோசிக்கலானான்.

12. அப்படி இருக்கையில், அவன் சகோத ரர்கள் சிக்கேமிலிருந்து தகப்பனுடைய மந்தை களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

13. இஸ்றாயேல் ஜோசேப்பை நோக்கி: உன் சகோதரர்கள் சிக்கேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள்; அவர்களிடத்துக்கு உன்னை அனுப்பப் போகிறேன், வா என்றதற்கு அவன்:

14. இதோ போக முஸ்திப்பாயிருக்கிறேன் என, தகப்பன்: நீ போய் உன் சகோதரர் விஷ யத்திலும் எல்லாம் க்ஷேமமோவென்று விசா ரித்து, நடக்கும் சங்கதிகளை என்னிடத்தில் தெரிவிப்பாய் என்றான். அவன் எப்பிறோன் பள்ளத்தாக்கிலிருந்து அனுப்பப்பட்டு சிக்கே முக்குப் போனான்.

15. அப்பொழுது ஒரு மனுஷன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிவதைக் கண்டு: என்ன தேடுகிறாயென்று அவனைக் கேட்ட தற்கு:

16. ஜோசேப்பு: என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே மந்தைகளை மேய்க்கிறார்கள் சொல்லென்றான்.

17. அதற்கு அம்மனிதன்: அவர்கள் இவ் விடத்தைவிட்டுப் போய்விட்டார்கள். ஆனா ல் தொட்டாயீனுக்குப் போவோமென்று அவர் கள் சொல்லக் கேட்டேன் என்றான். ஆதலால் ஜோசேப்பு தன் சகோதரதைத் தொடர்ந்து போய் தொட்டாயீனிலே அவர்களைக் கண்டு பிடித்தான்.

18. அவர்கள் அவனைத் தூரத்திலே வரக் கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வரும் முன்னே அவனைக் கொல்ல சதியோசனை பண்ணி,

19. ஒருவரையயாருவர் நோக்கி: கனாக் காண்கிறவன் அதோ வருகிறான்;

20. நாம் அவனைக் கொன்று இப்பாழுங் கிணற்றிற் போட்டுவிட்டு, பிறகு ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்ததென்று சொல்லு வோம்; அப்போதல்லோ அவனுடைய சொப் பனங்கள் எப்படி முடியுமென்று விளங்கும் என்றார்கள்.

21. ரூபன் இவைகளைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவிக்கக் கருதிச் சகோ தரரைப் பார்த்து:

22. நீங்கள் அவன் உயிரைக் கொல்ல வே ண்டாம். அவன் இரத்தத்தைச் சிந்த வேண் டாம். அவனை வனாந்தரத்திலுள்ள பாழுங் கிணற்றில் அவனைப் போட்டுவிட்டால் உங் கள் கை சுத்தமாகவே இருக்கும் என்றான். ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித் துத் தகப்பனுக்கு அவனைத் திரும்பிக் கொடுக் கும்படியாகவே அவ்விதமாய்ப் பேசினான்.

23. ஜோசேப்பு தன் சகோதரர் இடத்தில் வந்து சேர்ந்தவுடனே, அவன் உடுத்தியிருந்த பல நிறமான அவனுடைய பெரிய அங்கியை அவர்கள் பலவந்தமாய்க் கழற்றி,

24. தண்ணீரில்லாத பாழுங்கிணற்றிலே அவனைத் தள்ளிப்போட்டார்கள்.

25. பிறகு அவர்கள் அப்பம் புசிக்கும்படி உட்கார்ந்திருக்கையில் அதோ, கலயாத்திலி ருந்து வருகிற இஸ்மாயேலியருடைய ஒரு கூட்டத்தைக் கண்டார்கள். அவர்கள் எஜிப் துக்குப் பரிமளவர்க்கங்களையும், பிசினியை யும், வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங் களின்மேல் சுமத்தி வருகிறார்கள்.

26. அப்போது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று அவனுடைய இரத்தத்தை மறைப் பதினால் நமக்கென்ன பிரயோசனம்? 

27. நமது கரங்களைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளும்படி, நாம் அவனை இந்த இஸ்மா யேலியருக்கு விற்றுப்போட்டால் நல்லது. ஏனெனில் அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாயிருக்கிறான் என, அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லிய நியாயங்களுக்கு இணங்கினார்கள்.

28. ஆகையால் மதியானியராகிய இந்த வியாபாரிகள் கடந்து போகிறபோது அவர்கள் ஜோசேப்பைப் பாழுங் கிணற்றினின்று தூக்கி எடுத்துக் கொண்டு அவனை (அந்த) இஸ்மாயேலியருக்கு இருபது வெள்ளிக் காசு களுக்கு விற்றுப் போட்டார்கள். அவர்கள் அவனை எஜிப்துக்குக் கொண்டு போயினர்.

29. (இதையறியாத) ரூபன் பாழுங்கிணற்றிற்குத் திரும்பிப் போய்ப் பார்த்து, ஜோசேப்பு இல்லையென்று கண்டு,

30. தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: இளை ஞன் இல்லையே, நான் எங்கே போவேன்? என்றான்.

31. பிறகு அவர்கள் ஜோசேப்புடைய அங்கியை எடுத்து, தாங்கள் அடித்திருந்த ஓர் வெள்ளாட்டுக் குட்டியின் இரத்தத்திலே அதைத் தோய்த்து,

32. தங்கள் தகப்பனிடத்திற்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம். இது தங் கள் குமாரனுடைய அங்கியோ அல்லவோ பாரும் என்று சொல்லச் சொன்னார்கள்.

33. தகப்பன் அதைக் கண்டமாத்திரத்தில்: இது என் மகனுடைய அங்கிதானே; ஒரு துஷ்ட ஜெந்து என்னமோ அவனைப் பட்சித் துப்போட்டதே, ஐயோ! ஜோசேப்பு ஒரு காட்டு மிருகத்திற்கு இரையாய்ப் போனா னேயென்று,

34. தன் வஸ்திரங்களைக் கிழித்துத் தன் அரையில் இரட்டுக் கட்டிக் கொண்டு தான் அநேக நாளுங் குமாரனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்.

* 34-ம் வசனம். பூர்வீகத்தில் ஜனங்கள் பெரிய துயரத்திற்கு அடையாளமாகத் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்து வருகிறது வழக்கம். இவ்விடத்தில் இரட்டு என்பது தவத்துக்கும், துக்கத்துக்கும் குறிப்பாகக் கட்டிக்கொள்ளப்படும் பரும்படியான ஒருவித வஸ்திரம்: யாக்கோபு அநேக நாளும் அழுதான் என்பது: ஜோசேப்பு எஜிப்த்திலே அளவற்ற பிரதாபமுடையவனாயும் சுகமாயும் இருக்கிறான் என்னுஞ் செய்தி அறிந்தானே, அந்நாள் வரைக்கும் என்றாற்போலர்த்தமாம்.

35. அவனுடைய குமாரர் குமாரத்திகள் அனைவரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த போது, அவன் எந்த ஆறுதலான வார்த்தைக்குஞ் செவிகொடாமல், நான் துக்கத்தோடே பாதாளத்தில் இறங்கி என் மகனிடத்திற்குப் போகிறேன் என்றான். அவன் இவ்விதமாய் ஜோசேப்பைப்பற்றி புலம்பி அழுதுகொண்டிருக்கையில்,

* 35-ம் வசனம். இவ்விடத்தில் பாதாளமென்னப்பட்டது: உலகம் துவக்கின நாள் முதல் திவ்விய இரட்சகர் பரலோகத்துக்கு எழுந்தருளிப்போகும் வரைக்கும் புண்ணியாத்துமங்கள் எவ்விடத்திலே காத்துக்கொண்டிருந்ததோ அந்த ஸ்தலமேயாம்.

36. மதியானித்தார் எஜிப்த்திலே சேர்ந்து பரவோனின் அண்ணகனுஞ் சேனாதிபதியுமான புத்திப்பார் என்பவனிடத்திலே ஜோசேப்பை விற்றுப் போட்டார்கள்.