இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 36

எசாயூவின் மூன்று மனையாட்டிகளைக் குறித்ததும் - அவன் செயீர் பர்வதத்துக்குப் போய்க் குடியேறினதும் - அவன் புத்திரர்களிலும் அவனுடைய சந்ததியிலும் உண்டான பிரபுக்கள் இன்னாரென்று குறித்ததும்.

1. ஏதோமென்னப்பட்ட எசாயூ என்பவனுடைய வம்ச அட்டவணையாவது:

2. எசாயூ கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தையனாகிய ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவையனான செபெயோனின் குமாரத்தி அனாள் என்பவள் பெற்ற மகளாகிய ஒலிபமாளையும் விவாகம் பண்ணினான்.

3. மறுபடியும் இஸ்மாயேலின் குமாரத்தியும் நபயோத்தின் சகோதரியுமாயிருந்த பசெமாத்தை மனைவியாகக் கொண்டான்.

4. ஆதாளோ எலிபாசைப் பெற்றாள்; பசெமாத்தென்பவள் இராகுயேலைப் பெற் றாள்.

5. ஒலிபமாள், ஜெகூஸ், இயேலோன், கொறே என்பவர்களைப் பெற்றாள். இவர்கள் எசாயூவுக்குக் கானான் நாட்டிலே பிறந்த புத்திரர்களாம்.

6. பின்பு எசாயூ தன் மனைவிமார்களை யும், புத்திரர்களையும், புத்திரிகளையும், தன் வீட்டைச் சேர்ந்த சகல ஆத்துமங்களையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு தன் தம்பியாகிய யாக் கோபை விட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.

7. ஏனெனில் அவர்கள் இருவரும் மிகவும் ஐசுவரியவான்களாயிருந்ததினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற் போயிற்று. அவர்களுடைய மந்தை இத்தனை அத்தனை இருந்ததைப் பற்றி அவர்கள் தங்கிக்கொண் டிருந்த தேசம் இனி அவர்களுக்குப் போதா திருந்தது.

8. ஆகையால் எசாயூ செயீர் என்னும் மலையில் குடியேறினான்; அவனுக்கு ஏதோம் என்றும் பேர்.

9. செயீர் மலையிலிருக்கிற ஏதோமியரின் (குலத்) தந்தையாகிய எசாயூவின் சந்ததிகளும்,

10. அவன் புத்திரர்களின் நாமதேயங்களு மாவன: எசாயூவின் (முதல்) மனைவி யான ஆதாளின் குமாரன் எலிபாசும், அவன் (இரண்டாம்) மனைவியாகிய பசெமாத்தின் குமாரன் இராகுயேலுமாம்.

11. எலிபாசுக்கு உண்டான புத்திரர்: தேமான், ஒமார், செப்போ, காட்டஞ், கேனேசு.

12. எசாயூவின் புத்திரனான எலிபாசுக்கோ தாமினாள் என்னும் மறுமனையாட்டி இருந்தாள். இவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே எசாயூவின் மனைவி யான ஆதாளுடைய குமாரர்கள்.

13. இராகுயேலின் புத்திரரோ: நகாட், ஜாரா, சம்மா, மெசா. இவர்களே எசாயூவின் மனைவியான பசெமாத்தினுடைய குமாரர் கள்.

14. செபெயோன் குமாரத்தி அனாவின் மகளும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமா ளுக்கோ ஜெகூஸ், இயேலோன், கொறே என்பவர்கள் பிறந்தார்கள்.

15. எசாயூவின் புத்திரர்களுக்குள் பிரபுக்க ளாயிருந்தவர்கள் யாவரென்றால், எசாயூவின் மூத்த குமாரனாகிய எலிபாசின் புத்திரர்களான தெமான் பிரபுவும், ஒமார் பிரபுவும், செப்போ பிரபுவும், கெனேஸ் பிரபுவும்

16. கொறே பிரபுவும், காட்டம் பிரபுவும், அமலேக் பிரபுவுமாம்; இவர்கள் ஏதோம் நாட்டில் எலிபாசுக்குப் பிறந்த புத்திரர். இவர்களே ஆதாளின் குமாரர்கள்.

17. எசாயூவின் புத்திரனான இராகுயே லின் குமாரர்களில் நகாட் பிரபுவும், ஜாரா பிரபுவும், சம்மா பிரபுவும், மெசா பிரபுவுமாம்; இவர்கள் ஏதோம் நாட்டில் இராகுயேலின் சந்ததியும் ஏசாயூவின் மனைவியான பசெமா த் துடைய குமாரர்களுமாயிருந்த பிரபுக்கள்.

18. எசாயூவின் மனைவி ஒலிபமாளின் குமாரர்களோ: ஜெகூஸ் பிரபுவும், இயே லோன் பிரபுவும், கொறே பிரபுவுமாம்; இவர் கள் அனாவின் குமாரத்தியும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுடைய சந்ததியா யிருந்த பிரபுக்களாம்.

19. இவர்களே ஏதோம் என்னப்பட்ட எசாயூவின் சந்ததி. இவர்களே அவர்களி லிருந்த பிரபுக்கள்.

20. அந்த நாட்டின் குடிகளாயிருந்த ஓறையனான செயீரின் புத்திரர் யாரெனில்: லொத்தானும், சொபாலும், செபெயோனும், அனாவும்,

21. டிசோனும், எசேரும், டிசானுமாம்; இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த செயீரின் புத்திரராகிய ஓறையரான பிரபுக்களாம்.

22. லொத்தானுக்கு உண்டான புத்திரர் கள்: ஓரியும் ஏமானுமாம்; தமினாளோ லொத்தானுடைய சகோதரியானவள்.

23. சொபாலின் புத்திரர்கள்: அல்வானும், மனகாட்டும், ஏபாலும், செப்போவும், ஒனா முமாம்.

24. செபெயோனின் புத்திரர்களோ: அயா வும் அனாவுமாம். இந்த அனாதானே தனது தந்தையாகிய செபெயோனின் சாவேரிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது வனாந் தரத்திலே உஷ்ண நீரூற்றுக்களைக் கண்டு பிடித்தான்.

25. இவனுக்கும் டிசோன் என்னும் ஒரு புத்திரனும் ஒலிபமாள் என்னும் ஒரு புத்திரி யும் பிறந்தார்கள்.

26. டிசோனின் புத்திரரோ: ஆமிதாமும், எசெபானும், ஜெத்திராமும், காரானுமாம்.

27. எசேரின் புத்திரரோ: பாலனும், ஜவா னும், அக்கானுமாம்.

28. டிசானோ ஊஸ், ஆராம் என்ற (இரு) புத்திரரைப் பெற்றான்.

29. ஓறையரின் பிரபுக்கள் யாவரெனில்: லொத்தான் பிரபுவும், சோபால் பிரபுவும், செபெயோன் பிரபுவும், அனா பிரபுவும்,

30. டிசோன் பிரபுவும், எசேர் பிரபுவும், டிசான் பிரபுவுமாம். இவர்களே செயீர் நாட்டில் இராஜரீகம் பண்ணின ஓறையரான பிரபுக்களாம்.

31. இஸ்றாயேல் புத்திரர்களின் மேலே ஓர் அரசன் அரசாளுகிறதற்கு முன்னே ஏதோம் தேசத்திலே ஆண்டு வந்த இராஜாக்கள் யாவரென்றால்,

32. பேயோரின் புத்திரனாகிய பேலா என்பவன். இவன் இராஜதானியின் பெயர் தெனபா.

33. பேலா மரித்த பின்பு பொஸ்றா நகரத் தானும், ஜாராவின் புத்திரனுமான ஜோபாத் அவனுக்குப் பதிலாக அரசாண்டு வந்தான்.

* 33-ம் வசனம். ஜோபாத் என்பவர் ஆச்சரியத்துக்குரிய சாந்தத்துக்கும், பொறுமைக்கும் மாதிரிகையாயிருந்தார். யோப் என்னும் மகா முனிவர் அந்த ஜோபாத் தான் என்று வித்தியாபாரகரில் அநேகர் உத்தேசித்தார்கள்.

34. ஜோபாதும் இறந்த பின்னர் அவனுக்குப் பதிலாகத் தேமானரின் நாட்டானாகிய ஊசாம் அரசாண்டான். 

35. இவனும் இறந்தபின் அவனுக்குப் பதி லாகப் பதாதின் புத்திரனாகிய ஆதாத் அரசாண்டான்; இவன்தானே மொவாப் நாட்டில் மதியானியரைத் தோற்கடித்தான். இவனுடைய இராஜதானியின் பெயர் ஆவிட்.

36. ஆதாத் இறந்த பின்பு, மஸ்றேக்கா ஊரானாகிய செமிலா அவனுக்குப் பதிலாகப் பட்டம் பெற்றான்.

37. இவன் மரித்த பின்பு, ரொகொ பொட் என்னும் நதியருகில் வசித்தவனான சாவூல் அவனுக்குப் பதிலாக ஆண்டு வந்தா ன்.

38. இவன் இறந்த பின்பு அக்கொபோரின் புத்திரனான பலனான் இராஜ்ஜியபாரங் கைக்கொண்டான்.

39. இவன் இறந்த பின்பு ஆதார் அவனுக் குப் பதிலாக ஆண்டு வந்தான். இவனுடைய இராஜதானியின் பெயர் பெள. இவனு டைய மனைவியின் பெயரோ மேத்தபேலாம், இவள் மெசாபுக்கு மகளான மத்திரேத் என்பவளின் குமாரத்தி.

40. தங்களுடைய வம்சங்களின் படியேயும், வாசஸ்தலங்களின் படியேயும், நாமதேயங் களின் படியேயும் எசாயூவின் சந்ததியில் உதித்த பிரபுக்களின் பேர்கள் ஆவன: தம்னா பிரபு, ஆஸ்வா பிரபு, ஜேட்டேட் பிரபு.

41. ஒலிபமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

42. கெனேஸ் பிரபு, தெமான் பிரபு, மப் சார் பிரபு, 

43. மக்தியேல் பிரபு, கீறாம் பிரபு, இவர்கள் ஏதோமின் பிரபுக்களாய்த் தங்கள் சுயதேசத்திலே அரசாண்டு கொண்டார்கள்: இந்த ஏதோமியர்களுக்குக் (குலத்) தகப்பன் எசாயூ.

* 43-ம் வசனம். இவ்வதிகாரத்தில் பிரபு என்பது அதிகாரம் செலுத்தும் நியாயாதிபதி என்று அர்த்தமாம்.