இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 35

தேவன் யாக்கோபைப் பேட்டலுக்கு அனுப்பினதும் - யாக்கோபு தன் வீட்டிலிருந்த விக்கிரகங்களை விலக்கினதும் - பேட்டலில் ஒரு பலிபீடத்தைக் கட்டினதும் - தெபோறாள் மரித்ததும் - இராக்கேல் ஏதருக்குப் போகும் வழியில் மரித்ததும் - ரூபன் ஒரு அவலட்சண செய்கை செய்ததும் - இசாக்கு மரணம் அடைந்ததும்.

1. அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பேட்டலுக்குப் போய் அங்கே குடியிருக்கக்கடவாய்; நீ உன் அண்ணனாகிய எசாயூவுக்கு அஞ்சி ஓடியபோது உனக்குத் தரிசனமான தேவனுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டுவாய் என்றார்.

2. அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் யாவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அந்நிய தேவர்களை விலக்கிப் போட்டு உங்களைச் சுத்திகரம் பண்ணி, உங்கள் வஸ்திரங்களை மாற்றக்கடவீர்கள்.

* 2-ம் வசனம். அக்காலத்தில் நூதனமாய் உண்டாகிப் பரவானின்ற விக்கிரக ஆராதனை யாக்கோபின் வீட்டிலே கூடப் பிரவேசித்திருந்தது. லாபான் வீட்டிலே இராக்கே லும் அவள் புத்திரர்களும் அக்கியானச் சடங்குகளைச் செய்வதில் பழகிக் கொண்டிருந்தார்கள். பின்னும் சிக்கேம் என்னும் நகரத்தாரின் சங்காரத்திலே யாக்கோபின் மக்கள் அவர்களுடைய பற்பல விக்கிரகங்களை எடுத்துத் தங்களிடத்தில் வைத்திருந்தார்கள். சிலவிசை யாக்கோபு அதைக் கண்டு வியாகுலப்பட்டாலும் அதை நிறுத்த மனந் துணியாமல் இருந்துவிட்டானோ என்னமோ, எப்படியும் இந்த நல்ல சமயத்திலே அவன் அந்த விக்கிரகங்களையெல்லாம் அழித்துத் தன் வீட்டு ஜனங்கள் மனந்திரும்பிச் சத்திய தேவனுக்கு மாத்திரம் ஊழியஞ் செய்யக் கற்பித்தான்.

3. எழுந்திருந்து வாருங்கள், பேட்டலுக்குப் போய், என் துயர நாளிலே என் மன்றாட் டைக் கேட்டருளி எனக்கு வழித் துணையாயிருந்த தேவனுக்கு அவ்விடத்திலே ஒரு பலிபீடத்தை உண்டுபண்ணுவோம் என்றான்.

4. அந்தப்படி அவர்கள் தங்கள் வசத்தி லிருந்த எல்லா அந்நிய விக்கிரகங்களையும் அவைகளின் காதணிகளையும் அவன் கையிற் கொடுத்தார்கள். அவன் அவைகளைச் சிக் கேம் நகருக்குப் பின்புறமிருந்த ஒரு தரபிண்ட் என்னும் மரத்தின் கீழே புதைத்தான்.

5. பிறகு அவர்கள் புறப்பட்டுப் போனார் கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள எல்லா நகர வாசிகளுக்குந் தெய்வீகமான ஒரு பயங்கர முண்டானதினாலே அவர்களைப் பின்தொடர எவரும் துணியவில்லை.

6. இவ்வாறாய் யாக்கோபும், அவனோடே யிருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்தி லுள்ள பேட்டலென்னப்படும் லுசானுக்கு வந்து சேர்ந்தார்கள்.

7. யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலி பீடத்தைக் கட்டித், தன் சகோதரன் முகத்துக் குத் தப்பியோடின நாளில் அங்கே தேவன் தனக்குத் தரிசனமான முகாந்தரத்தைப் பற்றி அந்த ஸ்தலத்துக்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.

8. அதே காலத்தில் இரெபெக்காளின் செவிலித்தாயாகிய தெபொறாள் என்பவள் மரணமடைந்து பேட்டலுக்குச் சமீபமா யிருந்த ஒரு மலையடிவாரத்தில் ஓர் கருவாலி மரத்தடியில் சேமிக்கப்பட்டாளாதலால் அந்த ஸ்தலத்துக்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.

9. யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமி யாவிலிருந்து திரும்பிவந்த பின்போ வெனில், கடவுள் மறுபடியும் அவனுக்குத் தரிசனையாகி அவனை ஆசீர்வதித்து:

10. இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்றாயேல் என்னப் படுவாயென்று அவனுக்கு இஸ்றாயேல் என்று பேரிட்டருளினார்.

11. பின்னும் அவர் அவனை நோக்கி: நாம் சர்வத்துக்கும் வல்ல தேவன்; நீ பெருகிப் பலு கக்கடவாய்: ஜாதிகளும் பிரஜா கூட்டங் களும் உன்னிலிருந்து உற்பவமாகும். இராஜாக் களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.

12. அபிரகாம், இசாக் என்பவர்களுக்கு நா ம் அளித்த தேசத்தை உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிக்கும் கொடுப்¼Vம் என்று சொல்லி,

13. அவனை விட்டு மறைந்து போனார்.

14. அப்போது யாக்கோபு தனக்குச் சுவாமி திருவாக்கருளிய அந்த ஸ்தலத்திலே ஒரு கற்றூணை ஞாபகமாக நாட்டி, அதின்மேல் பான பலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த் தான்.

15. அந்த ஸ்தலத்திற்குப் பேட்டலென்று பேரிட்டான்.

16.பின்பு அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எப்பிறாத்தா வுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பிரசவ வேதனை உண்டாகி,

17. பிரசவ வருத்தத்தால் ஜீவன் பேதலித் துக்கொண்டிருக்கையில் மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம், ஏனெனில் இப்புத்திரனையும் பெற்றடைவீர் என்றாள்.

18. ஆனால் வேதனை மிகுதியினாலே ஆத்துமா பிரியப்போகும் மரணத் தறுவாயில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி, அதாவது: வேதனைக் குமாரன் என்று பெயரிட்டாள். தந்தையோவென்றால், அவனைப் பெஞ்சமீன் அதாவது: வலக்கர மகன் என்ற ழைத்தான்.

19. இராக்கேல் அப்போது மரணமடைந்து, எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் பண்ணப்பட்டாள்.

* 19-ம் வசனம். இந்த வசனமானது மத். (1:18) வசனத்திற்கு உரையும் விளக்கமுமாயிருக் கிறது.

20. யாக்கோபும் அவளுடைய கல்லறையின்மேல் ஓர் ஸ்தம்பம் நாட்டி வைத்தான்: இந்நாள் வரைக்கும் அது இராக்கேலுடைய கல்லறையின் ஞாபக ஸ்தம்பம் (என்று அழைக்கப்படுகிறதாம்.)

21. அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரமென்கிற கட்டுக்கோப்புக் கப்பாலே தன் கூடாரத்தை அடித்தான்.

22. அவன் அந்நாட்டில் தங்கிக் குடியிருக்கும் நாளில் ஒருநாள் ரூபன் போய்த் தன் தகப்பனுடைய மனுமனையாட்டியாகிய பாலாளோடே சயனித்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற்போகவில்லை. அவனுடைய குமாரர் பன்னிரண்டு பேர்.

* 22-ம் வசனம். இந்த அவலட்சணப் பாதகத்தினிமித்தம் ரூபன் தந்தையின் கோபத்துக்காளாகி, சேஷ்டருக்குரிய தத்துவங்களை இழந்து, தந்தையின் கடைசி ஆசீர்வாதத்தை அடையாமல், நீ வளர மாட்டாய் என்கிற பயங்கரமான தீர்வைக்குள்ளானான். (49: 3,4 வசனங்களைக் காண்க.)

23. (அதாவது) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சீமையோன், லேவி, யூதா, இஸக்கார், ஜபுலோன் என்பவர்கள். 

24. இராக்கேலின் மக்கள்: ஜோசேப்பும் பெஞ்சமீனும்.

25. இராக்கேலின் பணிவிடைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும், நேப்தாளியும்.

26. லீயாளுடைய ஊழியக்காரியாயிருந்த ஜெஸ்பாளின் குமாரர்கள்: காதும், ஆசேரும். இவர்கள் சீரிய மெசொப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.

27. அது நிற்க, யாக்கோபு ஆர்பேயின் நகரமாகிய மம்பிரேயுக்குத் தன் தகப்பனாகிய இசாக்கினிடத்தில் வந்தான். அது அபிரகாமும் இசாக்கும் தங்கியிருந்த எப்பிறோன் என்னும் ஊர்.

28. இசாக்கின் வாழ்நாள் எல்லாம் நூற்றெண்பது வருஷங்களாயின.

29. அவன் அதிகப் பிராயத்தால் துர்ப்பலமாகி மரணம் அடைந்தான். தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டபோது, அவன் விருத்தாப்பியமும், பூரண ஆயுசுமுள்ளவனா யிருந்தான். அவன் குமாரராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் பண்ணினார்கள்.