இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 34

தீனாள் சிக்கேமென்பவனால் கற்பழிக்கப்பட்டதும் - இது நிமித்தமாக யாக்கோபின் புத்திரர் ஊரார் பேரில் பழி சுமத்தி அவர்களைச் சங்காரம் பண்ணினதும் - ஊரையும் அழித்துப் போட்டதும் - அதைப்பற்றி யாக்கோபு சீமையோனையும் லேவியையுங் கடிந்து பேசினதும்.

1. லீயாளுடைய குமாரத்தியாகிய தீனா ளென்பவள் அந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்க விரும்பி வெளியே புறப்பட்டாள்.

* 1-ம் வசனம். பார்க்க வேண்டுமென்கிற வீண் ஆசையால் தீனாள் என்பவள் மோசம்போனது போல, எத்தனையோ வாலிபப் பெண்களும் ஆண்களும் விலக்கப்பட்ட கனியைப் பார்க்க விரும்பி வாட்டமும் கோட்டமும் அடைந்து கெட்டுப் போகிறார்கள். வீண் ஆசைகளாலே வரும் பொல்லாங்குகளுக்கு நாம் தப்பிப் பிழைக்கும்படியாய் தீனாள் சிக்கேம் என்பவர்களுடைய சரித்திரம் இவ்விடத்தில் குறிக்கப்பட்டது.

2. ஏவையனான ஏமோரின் குமாரனும் அந்நாட்டின் பிரபுவுமாயிருந்த சிக்கேம் என்பவன் அவளைக் கண்டு மோகித்து, அவளைக் கிரகித்துக் கொண்டு போய் அவளுடன் சயனித்துக் கன்னிப்பெண்ணானவளைப் பலவந்தப்படுத்திக் கற்பழித்தான்.

* 2-ம் வசனம். முந்தின அதிகாரத்தின் 19-ம் வசனத்தைக் காண்க.

3. அவனுடைய மனம் அவள்பேரில் அதிகப் பற்றுதலாயிருந்தது; அவளுடைய துயரத்தை இன்பமான சொற்களாலும் லீலையாலும் ஆற்றித் தேற்றினான்.

4. பின்னும் தன் தகப்பனாகிய ஏமோரைப் போய்ப் பார்த்து: இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகக் கேட்டடைய வேண்டும், என்றான்.

5. யாக்கோபு இதைக் கேள்விப்பட்ட போது, அவன் குமாரர் தற்காலம் வீட்டிலில்லை. மந்தைகளை மேய்க்கும் அலுவலாயிருந்தார்கள். அவர்கள் திரும்பி வருமட்டும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

6. சிக்கேமின் தகப்பனாகிய ஏமோர் யாக்கோபோடே பேசும்பொருட்டுப் புறப்பட்டு வரும் வழியிலே,

7. இதோ யாக்கோபின் குமாரர்கள் காட்டிலிருந்து வந்தார்கள். இவர்கள் சம்பவித்ததைக் கேட்டறிந்த மாத்திரத்தில் சிக்கேம் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்தது செய்யத்தகாத மதிகெட்ட அக்கிரமமென்றும், அதினாலே இஸ்றாயேலுக்கு மானக்கேடு உண்டானதென்றும் சொல்லி மனங்கொதித்துக் கோபம்கொண்டார்கள்.

8. அப்பொழுது ஏமோர் அவர்களை நோக்கி: என் குமாரனாகிய சிக்கேமின் மனது உங்கள் பெண்ணின்மேல் அதி பற்றுதலாயிருக்கிறது. அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். 

9. நீங்கள் எங்களோடே விவாக சம்பந்தங் கலந்து உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுங்கள். எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுப்போம்.

10. எங்களோடே நீங்கள் வாசம் பண்ணுங்கள். இந்தத் தேசம் உங்கள் ஆதீனத்திலிருக்கிறது. அதிலே நீங்கள் கிருஷி செய்தும், வர்த்தகம் பண்ணியும் இதைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்றான்.

11. சிக்கேமும் தீனாளுடைய தகப்பனையும் சகோதரர்களையும் பார்த்து: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும். நீங்கள் எதைத் தீர்மானித்துக் கேட்பீர்களோ அதை நான் தருகிறேன்.

12. பரியத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். வெகுமதிகளையும் கேளுங்கள். நீங்கள் எவ்வளவு கேட்டாலும் அந்தப்படி நான் மனசாரத் தருவேன். அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுங்கள் என்றான்.

13. யாக்கோபின் குமாரர்கள் தங்கள் சகோ தரிக்கு வந்த அவமானத்தைப்பற்றி வயிராக்கியங் கொண்டவர்களாய், சிக்கேமை யும் அவன் தந்தையையும் பார்த்துக் கபட மாய்க் கூறிய மறுமொழியாவது:

14. நீங்கள் கேட்டபடி செய்யவும் எங்களா லாகாது; விருத்தசேதனம் செய்யப்படாத புருஷனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுக்க வே மாட்டோம். அது எங்களுக்குள்ளே மகா தோஷமும், அடாத பாதகமுமாயிருக்கும். 

15. ஆனால் நீங்களும் உங்களுக்குள்ளிருக் கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டு எங்களைப்போல் ஆகச் சம்மதித்தால், நாங்கள் உங்களோடு உடன் படிக்கை செய்துகொள்ளலாம்; 

16. அப்போது உங்களுக்கும் எங்களுக்கும் கொள்வனைக், கொடுப்பனை இருக்கும்; நாங்கள் உங்களோடே குடியிருந்து ஒரே ஜனமாயிருப்போம்.

17. நீங்கள் விருத்தசேதனப்படச் சம்மதிக் காவிட்டாலோ நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவோம் என்றார் கள்.

18. அவர்கள் சொல்லும் வார்த்தை ஏமோ ருக்கும் அவன் குமாரனாகிய சிக்கேமுக்கும் நியாயமாய்த் தோன்றியது.

19. அந்தப் பிள்ளையாண்டான் அவர்கள் கேட்டபடி செய்யத் தாமதம் பண்ணவில்லை. ஏனென்றால் அவன் அந்தப் பெண்ணை அதிகமாய் நேசித்ததுமல்லாமல் தானே தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளேயும் சிறந்தவனாயிருந்தான்.

20. அவனும் அவனுடைய தகப்பனும் நகர வாசலில் வந்து ஜனங்களை நோக்கி:

21. இந்த மனிதர்கள் நம்மோடே சமாதான மாயிருக்கிறார்கள். நம் தேசத்திற் குடியிருக்க மனமுடையவர்கள், அகலமும் விசாலமுமா ன இந்த நாட்டிலே குடிகள் பற்றாது. அவர்கள் இஷ்டப்படி பயிரிட்டாலுமிடலாம், வியா பாரம் பண்ணினாலும் பண்ணலாம்; அவர்க ளுடைய பெண்களை நாங்கள் மனைவியாகக் கொண்டு எங்கள் பெண்களை அவர்களுக்குக் கொடுப்போம்.

22. இவ்வளவு நன்மைக்குத் தடங்க லா னது என்னவென்றால், அந்த ஜாதியாருக்கு விருத்தசேதனம் பண்ணுகிறது வழக்கம். அவர்களைப் போல நம்மிலுள்ள ஆண்மக்கள் நுனித் தோலைச் சேதனம் பண்ண வேண்டு மாம்; பண்ணினால்தான்,

23. அவர்களுடைய ஆஸ்திகளும் மந்தை களும் மற்றும் சகல பொருட்களும் நம்மைச் சேரும். நாங்கள் அவர்களுக்குச் சம்மதிப் போமாகில் அவர்களும் சகவாசம்பண்ணி ஏகஜனமாயிருப்போமென்று சொன்னார் கள்.

24. இதைக் கேட்டு எல்லாரும் சரியென்று ஒத்துக் கொண்டார்களாதலால், ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப் பட்டார் கள்.

25. பிறகு அதோ மூன்றாம் நாளிலே அவர்களுக்கு அதிக நோவெடுத்துக் கொண்ட போது, யாக்கோபின் குமாரரும், தீனாளின் சகோதரருமான சீமையோன், லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன் தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு துணிகரமாய் அந்நகருட் பிரவேசித்து ஆண்மக்கள் யாவரையும் வெட்டிப்போட்டு,

26. ஏமோரையும் சிக்கேமையும்கூடக் கொலை செய்து, தங்கள் சகோதரி தீனாளைச் சிக்கேமின் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

27. இவர்கள் வெளியே போன பின்பு யாக்கோபின் மற்றுமுள்ள குமாரர்கள் வந்து வெட்டுண்டவர்களின் மேல் விழுந்து (தங்கள் சகோதரி) கற்பழிக்கப்பட்ட பாதகத்திற்குப் பழிவாங்க ஊர் முழுவதையும் கொள்ளை யிட்டார்கள்.

28. வாசிகளுடைய ஆடு மாடு வேசரிகளை யும் வீடுகளிலுள்ள எல்லாத் தட்டுமுட்டுகளை யும், வயல்வெளிகளில் இருந்தவை யாவையும் கொள்ளையிட்டார்கள்.

29. அவர்களுடைய பிள்ளைகளையும் ஸ்திரீகளையும் அடிமைகளாகச் சிறைப்பிடித் துக் கொண்டுபோனார்கள்.

30. அவர்கள் அஞ்சா நெஞ்சுடன் அவை யெல்லாம் செய்து முடித்த பிற்பாடு யாக்கோ பானவர் சீமையோனையும் லேவியையும் பார்த்து: உங்களாலே என் புத்தி கலங்கிப் போயிற்று. இந்நாட்டில் குடியிருக்கிற கானா னையரிடத்திலும் பெரேசையரிடத்திலும் என் பெயரைக் கெடுத்துவிட்டீர்கள். நாங்கள் கொஞ்ச ஜனமாயிருக்கிறோம். அவர்கள் ஒன் றாய்க் கூடி என்னை அடித்துப் போடுவார் கள். அப்புறம் நான் வெட்டுண்டு போனால் என் குடும்பம் அழியுமே என்றான்.

* 30-ம் வசனம். யாக்கோபின் குமாரர்கள் மிதமிஞ்சின கோபத்தால் வெறிகொண்டு இப் பாதகத்தைச் செய்ததைப் பற்றி யாக்கோபு மிகுந்த துயரமடைந்து சீமையோன், லேவி என்ப வர்களைக் கண்டித்ததுமல்லாமல் தான் சாகிறவரைக்கும் அவர்கள் மேலே வருத்தமுற்றவனாய்ச் சேஷ்ட புத்திரர்களுக்குரிய தத்துவங்களிலே பல அவர்களுக்குக் கொடுக்காமல் இருந்து விட்டான். (40:5,7 வசனங்களைக் காண்க.)

31. அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல் நடத்தலா மோ என்று மறுமொழி சொன்னார்கள்.