இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 33

யாக்கோபும் எசாயூவும் பரஸ்பர அன்புடன் சந்தித்ததும் - யாக்கோபு சொக்கோட்டுக்கு வந்ததும் - சாலேமில் அவன் ஒரு நிலத்தைக் கிரயத்துக்கு வாங்கி அங்கே ஒரு பலிபீடத்தை இயற்றிக் கட்டினதும்.

1. யாக்கோபோவென்றால் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க அதோ எசாயூ நானூறு புருஷரோடு வருவதைக் கண்டான். உடனே லீயாளுடைய பிள்ளைகளையும், இராக்கே லுடைய பிள்ளைகளையும், இரண்டு வேலைக் காரிகளுடைய பிள்ளைகளையும் வெவ்வே றாகப் பிரித்து வைத்து,

2. முதல் வரிசையில் பணிவிடைக்காரிக ளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லீயாளையும் அவளுடைய பிள்ளைகளையும், கடையிலே இராக் கேலையும் ஜோசேப்பையும் இருத்தி,

3. தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய்த் தமயனை அண்டியண்டிச் செல்லு கையில் ஏழுவிசையுந் தரைமட்டும் குனிந்து (அவனை) நமஸ்கரித்தான்.

4. அதைக் கண்டு எசாயூ தம்பிக்கெதிர் கொண்டோடி, அவனை அரவணைத்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிட் டழுதான்.

5. பிறகு கண்களை ஏறெடுத்து, ஸ்திரீக ளையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு: இவர்கள் யார்? உன்னுடையவர்களா என்று கேட்க, அவன்: கடவுள் அடியேனுக்குத் தந்தருளின சிறுவர்களாம், என்று பிரதி சொன் னான்.

6. அந்நேரத்திலே பணிவிடைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகிவந்து நமஸ்கரித்தார்கள்.

7. லீயாளும் அவள் புத்திரர்களும் அணுகி அப்படியே தெண்டனிட்டு வணங்கின பிற் பாடு, கடைசியாக ஜோசேப்பும் இராக்கே லும் கிட்ட வந்து நமஸ்கரித்தார்கள்.

8. அப்போது எசாயூ யாக்கோபை நோக்கி: எனக்கு எதிர்கொண்ட அந்த மந்தைகள் என்ன? என, யாக்கோபு: என் ஆண்டவ னுடைய கண்களில் அடியேனுக்குத் தயவு கிடைக்கிறதற்குத்தானே என்று பதில் சொல்ல,

9. அவன்: தம்பீ! எனக்கு வேண்டிய பொருள் உண்டு, உன்னுடையது உனக் கிருக்கட்டும் என,

10. யாக்கோபு: அப்படி (சொல்ல) வேண்டாமென்று (உம்மை) மன்றாடுகிறேன். ஆனால் உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததாகில், இச் சொற்பமான காணிக்கையை என் கையினின்று ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால் நான் உம்முடைய சமூகத்தைக் கண்டதும் தேவனுடைய சமூகத் தைத்தரிசித்தது போலாயிற்று. நீர் எனக்குத் தயவு பண்ணி,

11. எல்லா நன்மைகளுக்கும் காரணராகிய கடவுள் எனக்கு அனுக்கிரகித்து, உமக்கு நான் கொண்டு வந்த ஆசீர்வாதத்தை நீர் ஏற்றுக் கொள்வீர் (என்றான்). அவன் தன் தம்பி இப்படி வருந்திக் கேட்டதினால் (அவற்றை) கட்டாயமாய் ஏற்றுக் கொண்டு:

12. நாம் ஒருமிக்கப் போகலாம் வா, நானும் உனக்கு வழித் துணையாயிருப்பேன் என்றான்.

13. அதற்கு யாக்கோபு: ஆண்டவனே, இளங் குழந்தைகளும் சினைப்பட்ட ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை அறிவீர். அவைகளை நான் அதிகமாய் வருத்தி ஓட்டு வேனானால் மந்தையெல்லாம் ஒரே தினத்தில் மாய்ந்துபோமன்றோ?

14. என் ஆண்டவனாகிய தேவரீர் அடியே னுக்கு முன்னே செல்வீராக; நானோவெனில் பிள்ளைகளின் கால்நடைக்குத் தக்காப்போல செயீருக்கு என் ஆண்டவனிடத்தில் சேருமள வும் மெள்ள மெள்ள தேவரீருடைய காலடிகளைப் பார்த்து நடந்து வருகிறேன் என்றான்.

15. அதற்கு எசாயூ: என்னுடனிருக்கிற புருஷர்களில் சிலராகிலும் உனக்கு வழித் துணையாக இருக்கட்டுமென்று மன்றாட, அவன்: அவசரமில்லை; தங்கள் சமூகத்தில் எனக்குத் தயவு கிடைத்தாலே போதும் ஆண்டவனே! என்றான்.

16. ஆகையால் எசாயூ அன்றுதானே புறப்பட்டுத் தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பிப் போனான்.

17. யாக்கோபும் சொக்கோட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் ஒரு வீட்டைக் கட்டிக் கூடாரங்களையும் போட்டான். ஆனது பற்றி அந்த ஸ்தலத்திற்குச் சொக்கோட், அதா வது: கூடாரம் என்று பெயரிட்டான்.

18. பிறகு அவன் சீரிய மெசொப்பொத் தாமியாவிலிருந்து திரும்பினபின்பு கானான் தேசத்தைச் சேர்ந்த சிக்கிமரின் நகரமாகிய சாலேமுக்கு வந்து ஊரைத் தாண்டி அதன் அருகில் வாசம்பண்ணினான்.

19. அப்பொழுது தான் கூடாரங்களைப் போட்ட நிலத்தின் ஒரு பாகத்தைச் சிக்கே மின் தந்தையாகிய ஏமோர் புத்திரர் கையிலே நூறு ஆட்டுக் குட்டிகளை விலைக்குக் கொ டுத்துக் கொண்டான்

20. பிறகு அவன் அங்கே ஓர் பீடத்தைக் கட்டி, அதன்மேல் இஸ்றாயேலின் சர்வ வல்லபமுள்ள தேவனைத் தொழுது தோத் திரம் பண்ணினான்.