இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 32

யாக்கோபு தரிசனங் கண்டதும் - எசாயூவுக்குச் செய்தி அனுப்பினதும் - எசாயூ வருகிறதை அறிந்து யாக்கோபுக்குப் பயம் வந்ததும் - யாக்கோபு எசாயூவுக்கு வெகுமானம் அனுப்பினதும் - தேவதூதனோடு போராடி இஸ்ராயேல் என்று பேர் பெற்றதும்.

1. பின்னரே யாக்கோபு தான் தொடங்கின பிரயாணம் பண்ணும்படி புறப்பட்டான். தேவதூதர்கள் வழியில் அவனுக்கெதிர் கொண்டு வந்தார்கள்.

* 1-ம் வசனம். எசாயூவின் கோபத்துக்கு மிகவும் அஞ்சின யாக்கோபைத் திடப்படுத்தித் தேற்றவே அச்சம்மனசுகள் கடவுளால் அனுப்பப்பட்டார்கள். கடவுள் தம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு எவ்வளவோ தயாபரராயிருக்கிறார் என்று யோசிக்கவும்.

2. அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் தேவ சேனை என்று கூறி அந்த ஸ்தலத்திற்கு மகனாயீம், அதாவது: பாளையம் என்று பெயர் இட்டான்.

3. பிறகு அவன் ஏதோம் தேசத்திலுள்ள செயீர் என்கிற நாட்டிலிருந்த தன் தமயனான எசாயூவிடத்திற்கு ஆட்களை அனுப்பி விடுகையில்:

4. நீங்கள் என் ஆண்டவனாகிய எசாயூ விடத்திற்குப் போய் உமது தம்பியாகிய யாக் கோபு செய்தி அனுப்புகிறதேதெனில்: நான் லாபானிடம் பரதேசியாகச் சஞ்சரித்து இந் நாள் வரையிலும் அவனிடத்திலே தங்கியிருந் தேன்.

5. மாடுகளும், வேசரிகளும், ஆடுகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் எனக்கு உண்டு. இப்போதோ உமது கண் களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாய் ஆண்டவனாகிய தேவரீருக்குத் தூதனுப்புத லானேன், என்பதாகச் சொல்லுங்கள் என்று அனுப்பினான்.

6. அந்த ஆட்களோ (போய்) யாக் கோ பிடத்திற்குத் திரும்பி வந்து: நாங்கள் உமது தமயனாகிய எசாயூ என்பவர் இடத்துக்குப் போய் வந்தோம். அவர் இதோ நானூறு பேருடன் தீவிரித்து உமக்கு எதிர்கொண்டு வருகிறார் என்றார்கள்.

7. யாக்கோபு மிகவும் பயந்து திடுக்கிட்டுத் தன்னுடன் இருந்த ஜனத்தையும் ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரண்டு கூட்டமாகப் பிரித்து:

8. எசாயூ ஒரு கும்பல் மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மீதியாகிய வேறு கும்பலாவது தப்பித்துக்கொள்ளுமே என் றான்.

9. பின்னும் யாக்கோபு: என் பிதாவாகிய அபிரகாமின் தேவனும் என் தந்தையாகிய இசாக்கின் தேவனுமாயிருக்கிற கர்த்தரே! தேவரீர் என்னை நோக்கி: உன் சுய தேசத்திற் கும் உன் ஜென்ம பூமிக்கும் திரும்பிப் போ, நாம் உன்னை ஆசீர்வதிப்போம் எனத் திருவாக்கருளினீரன்றோ?

10. அடியேனுக்குத் தேவரீர் செய்து வந்த எல்லாத் தயவுக்கும், நிறைவேற்றின சத்தியத்திற்கும் நான் பாத்திரவானல்ல; நான் கோலுங் கையுமாய் (இந்நதியாகிய) யோர் தானைக் கடந்தேனே; இப்போதே இரண்டு பரிவாரக் கூட்டங்களோடு திரும்பி வரலா னேன்.

11. என் தமயனாகிய எசாயூவின் கையி னின்று என்னைத் தப்புவியும்; அவனுக்கு நான் மிகவும் பயந்திருக்கிறேனே; ஒரு வே ளை அவன் வந்து பிள்ளைகளையும் தாயை யும் சங்கரிப்பானாக்கும்;

12. தேவரீர் அடியேனுக்கு நன்மை புரிவ தாகவும், என் சந்ததியை எண்ணப்படாத கட லின் மணலைப் போலப்பெருகச்செய்வதாக வும் திருவாக்களித்தீரன்றோ? (என்று மன்றா டினான்.)

13. அன்று இராத்திரி அவன் அங்குதானே நித்திரைபண்ணித் தான் வைத்துக் கொண் டிருந்தவைகளிலே தமயனாகிய எசாயூவுக்குக் காணிக்கையாக,

14. இருபது வெள்ளாட்டுக் கடாக்களோடு இருநூறு வெள்ளாடுகளையும், இருபது செம்மறிக் கடாக்களோடு இருநூறு செம்மறி ஆடுகளையும்,

15. பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங் களையும் அவைகளின் குட்டிகளையும் நாற் பது பசுக்களையும் இருபது காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும் பத்து கழுதைக் குட்டிகளையும் பிரித்தெடுத்து,

16. ஊழியக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாய் ஒப்புவித்து: நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக் கொண்டு போங்கள் என்று சொல்லி,

17. பிறகு (யாக்கோபு) முந்திப் போகிறவனை நோக்கி: என் தமயனாகிய எசாயூ உனக்கெதிர்ப்பட்டு: நீ யாருடைய ஆள்? அல்லது, நீ எங்கே போகிறாய்? அல்லது நீ ஓட்டிச் போகிற மந்தை யாருடையது? என்று அவன் உன்னைக் கேட்டால்,

18. நீ: இவைகள் உமது அடியானாகிய யாக்கோபினுடையது; அவர் தமது ஆண்டவனாகிய எசாயூவுக்கு இவைகளைக் காணிக்கையாக அனுப்பினார். அவரும் எங்கள் பின்னாக வருகிறார் என்று பிரதி சொல்வாய் என்றான்.

19. அதேவிதமாய் யாக்கோபு இரண்டு மூன்று வேலைக்காரர்களையும் மந்தைகளை யோட்டிப்போகிற மற்றுமுள்ளோர்களையும் பார்த்து: நீங்கள் எசாயூவைக் காணும்போது இந்தப் பிரகாரமே அவரோடு சொல்ல வேண் டுமே தவிர,

20. மறுபடியும் சொல்லுவீர்கள்: இதோ உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறார்; ஏனென்றால் அவர், முன்னே வெகுமதிகளை அனுப்பித் தமய னைச் சாந்தப்படுத்திக்கொண்டபின் அல்லோ அவருடைய முகத்தைப் பார்ப்பேன் என்றும், அப்பொழுது அவர் ஒருவேளை என் மேல் இரக்கமாயிருப்பார் என்றும் நான் சொன்ன தாகச் சொல்லுங்களென்று அனுப்பினான்.

21. அந்தப்படியே காணிக்கைகள் யாக் கோபுக்கு முன் கொண்டுபோகப் பட்டன. அவனோ அன்று இராத்திரி பாளையத்திலே தங்கினான்.

22. பிறகு அவன் அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து புத்திரர் பதினொரு பேர்களை யும், தன் இரண்டு மனைவிமாரையும், இரண்டு வேலைக்காரிகளையும் அழைத்துப் புறப்பட்டு ஜாபோக் என்னும் ஆற்றின் துறையைக் கடந்த பின்னர்,

23. தனக்கு உண்டான யாவையும் ஆற் றைக் கடக்கப்பண்ணி,

24. தான் பிந்தித் தனித்திருந்தான். அப் பொழுது அதோ ஒரு புருஷன் பொழுது விடியும் அளவும் அவனோடு போராடிக் கொண்டிருந்து,

* 24-ம் வசனம். சர்வேசுரனுடைய உத்தரவினால் மனுஷ ரூபங்கொண்ட ஒரு சம்மனசு தானே யாக்கோபோடு போராடி அவன் எசாயூவுக்கு அஞ்சாதிருக்கும்பொருட்டு அவனைத் திடப்படுத்தினாரென்றறிக. யாக்கோபும் அதைக் கண்டுபிடித்தான்.

25. அவனைச் ஜெயிக்கத் தன்னாலே கூடா தென்று கண்டு, அவன் யாக்கோபின் தொ டை நரம்பைத் தொட்டான். தொடவே அது மரத்துப் போயிற்று.

26. அப்பொழுது புருஷன்: என்னைப் போகவிடு. அருணோதயமாகப் போகுதென, யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொ ழிய உம்மைப் போகவிடேன், என்று மறு மொழி சொல்ல,

27. புருஷன்: உன் பெயர் என்ன? என, அவன்: நான் யாக்கோபு என்றான்.

28. அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்றாயேல் என்னப்படும்; ஏனெனில் நீ தேவனோடு போராடி மேற்கொண்டாயென்றால் மனிதர் களை மேற்கொள்ளுவாயென்று சொல்ல வேண்டுமோ என்றார்.

* 28-ம் வசனம். இஸ்றாயேல் என்னும் நாமமானது கடவுளை எதிர்க்கும் சக்தி என்று பொருட்படும்; அத்தருண முதற்கொண்டு தேவ பிரஜைகள் அப்பெயரைப் பாராட்டித் தங்களை இஸ்றாயேலியரென்றும், சர்வேசுரனை இஸ்றாயேலின் தேவனென்றும் சொல்லிக் கொண்டு வந்தார்கள். எத்தனை நாள் அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமுள்ளவர்களா யிருந்தார்களோ, அத்தனை நாளும் அந்த இஸ்றாயேலியர் உலகத்தில் அதிக மேன்மைப் பிரதாபம் அடைந்திருந்தார்கள்; ஆனால் அவர்கள் கிறீஸ்துநாதரையும், அவரால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையையும் மறுதலித்த நாள் முதற்கொண்டு அவர்கள் உலகமெங்கும் சிதறுண்டு தங்கள் மேன்மைப் பிரதாபத்தை இழந்துபோனார்களன்றி, அவர்கள் இஸ்றாயேல் என்னும் பேருக்கு நாணிக்கொண்டு வருகிறார்கள் என்று அறிவோம்.

29. யாக்கோபு அவரை நோக்கி: தேவரீ ருக்கு நாமதேயமென்ன? அடியேனுக்கு அறிவிக்கவேண்டும் என்று வினவ, அவர்: என் பெயரை நீ கேட்பதென்ன? என்று பதில் சொல்லி அந்த ஸ்தலத்தில்தானே அவனை ஆசீர்வதித்தார்.

30. அப்பொழுது யாக்கோபு: நான் தேவ னை முகமுகமாய்த் தரிசித்தேனாயினும் உயிர் தப்பிப் பிழைத்தேனென்று சொல்லி அந்த ஸ்தலத்திற்குப் பானுவேல் என்று பெய ரிட்டான்.

* 30-ம் வசனம். பானுவேல் என்பது கடவுளைத் தரிசித்தல் என்று அர்த்தமாம்.

31. அப்புறம் அவன் பானுவேலுக் கப்பாற் சென்றவுடனே சூரியன் உதயமானது; அவனோ கால் நொண்டி நொண்டி நடப்பான்.

32. அது நிமித்தமாக, அதாவது: யாக் கோபின் தொடைச் சந்தின் நரம்பு ஒல்கிப் போனதுபற்றி, இஸ்றாயேலின் புத்திரர் இந்நாள் வரைக்கும் தொடைச் சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை. ஏனென்றால் (முன் சொல்லப்பட்ட புருஷனால் யாக்கோபுடைய நரம்பு தொடப்படவே, அது வாடி வதங்கிப் போயிற்று.