இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 31

யாக்கோபு லாபானை விட்டுவிட்டதும் - லாபான் அவனைப் பின்தொடர்ந்ததும் - லாபானும் யாக்கோபும் உடன் படிக்கை பண்ணினதும்.

1. ஒருநாள் லாபானின் மக்கள் தங்களுக் குள்ளே பேசி: எங்கள் தகப்பனாருக்குண்டான சொத்துக்களையெல்லாம் யாக்கோபு அபகரித்து, அவருடைய ஆஸ்தியைக் கொ ண்டு தானே ஆஸ்திக்காரனாகிப் பிரபலிய முடையவனானானென்று சொல்லியதை யாக்கோபு கேட்டிருந்ததுமல்லாமல்,

2. லாபானின் முகத்தைப் பார்த்தால் அது நேற்றும் முந்தைநாளும்போல் இராமல் வேறுபட்டிருக்கிறதையும் கண்டான்.

3. அன்றியும் ஆண்டவர் முன்னே தன்னை நோக்கி: உன் பிதாக்களின் பூமிக்கும் உன் இனத்தாரிடத்திற்குத் திரும்பிச் செல்லக் கடவாய்; நாம் உன்னோடு இருப்போம் என் றருளினாரென்று சொல்லிய வார்த்தைகளின் மட்டில் யோசனை பண்ணி,

* 3-ம் வசனம். யாக்கோபு சுவாமியின் ஏவலில்லாமல் ஒன்றையும் செய்யான், சுவாமி தனக்கு ஏவியிருப்பதை எல்லாம் நுணுக்கமாக அனுசரிப்பான் என்கிறதினாலே அவனுடைய சகல ஏற்பாடும் அனுகூலமாய்ப் போய்விடும் என்று கவனிக்கவும்.

4. இராக்கேலையும், லீயாளையும் தான் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த காட் டிற்கு வரும்படி ஆளனுப்பினான்.

5. பிறகு அவர்களை நோக்கி: உங்கள் தந்தையின் முகம் என்மட்டிலே நேற்றும் மூன்றாநேற்றும் போலிராமல் வேறுபட்டுப் போயிற்றென்று கண்டுபிடித்துக்கொண் டேன்; என் பிதாவின் தேவனானவரோ என் னுடன் இருக்கிறார்;

6. உங்கள் தந்தையருக்கு என்னால் இய ன்ற மாத்திரம் வேலை செய்தேன் என்று உங் களுக்குத் தெரியு¼ம்

7. உங்கள் தந்தையோ என்னை வஞ்சித்து என் சம்பளத்தைப் பத்து முறையும் மாற்றி னார். ஆனால் என்னை நஷ்டப்படுத்தும்படி கடவுள் அவருக்கு இடங்கொடுத்தாரில்லை;

8. உள்ளபடி: புள்ளியுள்ள குட்டிகள் உன க்குச் சம்பளமாயிருக்குமென்று அவர் சொன் னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளையே ஈன்று வந்தன. அவர் அதை மாற்றி: சுத்த வெள்ளை நிறமுள்ள குட்டிக ளெல்லாஞ் சம்பாவனைக்கு வைத்துக்கொள் ளுவாய் என்றபோதோவெனில் ஆடுகளெல் லாம் வெள்ளைக் குட்டிகளையே ஈன்றன.

9. இவ்விதமாய்த் தேவன் தானே உங்கள் தந்தையின் பொருளை எடுத்து எனக்குத் தந் தருளினார்.

* 9-ம் வசனம். சுவாமி யாக்கோபின் சுத்த மனதைக் கண்டு, அவன் மாமனாரின் உடைமைகளை அவனுக்குக் கொடுத்தருளினார் என்பது இவ்வசனத்தின் தாற்பரியம்.

10. எப்படியெனில், ஆடுகள் கருக்கொள் ளும் பருவம் வந்த போது, நான் சொர்ப்ப னத்திலே என் கண்களை ஏறெடுத்தேன்: அப்போது ஆடுகளோடு பொலியுங் கடாக்கள் புள்ளியும் வரியும் கலப்பு நிறமுள்ளவை களாய் இருக்கக் கண்டேன்;

11. அச்சொர்ப்பனத்திலும் தேவதூதன்: யாக்கோபே! என்று என்னை அழைத்ததற்கு நான்: இதோ இருக்கிறேன், என,

12. அவர்: உன் கண்களை ஏறெடுத்து, பெட்டைகளோடு பொலியுஞ் சகல கடாக் களும் பல புள்ளியும் வரியும் நானாவித நிற முடையவைகளாயிருக்கிறது பார்: ஏனென் றால் லாபான் உனக்குச் செய்த யாவையும் நாம் கண்டிருக்கிறோம்.

13. நீ பேட்டலிலே ஒரு கல்லுக்கு அபி ஷேகம் பண்ணி நமக்கு நேர்த்திக் கடனைச் செய்திருக்கிறாய் பார்; பேட்டலிலே உனக் குத் தரிசனமான தேவன் நாமே; ஆகையால் நீ உடனே எழுந்திருந்து இந்தத் தேசத்தை விட்டுப் புறப்பட்டு உன் ஜென்ம நாட்டிற்குத் திரும்பிச்செல்லக்கடவாய் என்று திருவுளம் பற்றினார்.

14. அதற்கு இராக்கேலும் லீயாளும்: எங்கள் தகப்பனாருடைய வீட்டுப் பொருட்களிலும் காணியாட்சிச் சொத்துக்களிலும் எங்கள் கையில் யாதேனுமுண்டோ?

15. அவர் எங்களை அந்நியப் பெண்களைப் போல் பாவித்து விலைக்கு விற்று எங்களை விற்ற கிரயத்தையுஞ் செலவழிக்கவில் லையா?

16. ஆனால் தேவன் எங்கள் தந்தையின் ஆஸ்திகளை எடுத்து அவைகளை நமக்கும் நம்முடைய புத்திரர்களுக்கும் ஒப்பித்தார்; ஆகையால் கடவுள் உமக்குக் கற்பித்தபடி யெல்லாஞ் செய்யும், என்றார்கள்.

17. அப்பொழுது யாக்கோபு எழுந்திருந்து தன் மக்களையும் மனைவிமாரையும் ஒட்டகங் களின்மேல் ஏற்றி வைத்துப் புறப்பட்டான்.

18. தான் மெசொப்பொத்தாமியாவிலே சம்பாதித்த பொருள் அனைத்தையும் மந்தை கள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கானான் தேசத்திலிருக்கிற தன் பிதாவாகிய இசாக்கினிடத்திற்குப் பிரயாண மாயினான்.

* 18-ம் வசனம். யாக்கோபு தன் பிதாவாகிய இசாக்கைத் தாமதமின்றிப் பார்க்க ஆசையாய்த்தானிருந்தான். ஆனால் தேவ திருவுளத்தினாலே அவன் பத்து வருஷ காலமாய்ப் பிரயாணத்திலிருந்து, சிக்கேமூரிலும் பேட்டலூரிலும் நெடுநாளாய்த் தங்க வேண்டியவ னானான்.

19. லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்திரிக்க வெளியிலே போயிருந்தான்; அந்தச் சமயத்தில் இராக்கேல் தன் தகப்பனுடைய விக்கிரகங்களைத் திருடிக்கொண்டு போனாள்.

* 19-ம் வசனம். லாபான் சத்திய கடவுளாகிய கர்த்தருக்கும் பொய்த் தேவர்களுக்கும் மாறி மாறி வழிபாடு செய்து வருவான் என்று வெட்டவெளிச்சம் பட்டப் பகலாகக் காண்கின்றதே. இந்தக் காலத்துக் கிறீஸ்தவர்களில் சிலர் புத்தி கெட்டு அவ்விதமே செய்து மெள்ள மெள்ள அஞ்ஞானிகளாகி நரகத்தில் விழத் திரிகிறார்கள் என்பது நிஜம்.

20. யாக்கோபோவெனில் தான் ஓடிப் போகிற விஷயத்தைத் தன் மாமனாருக்குத் தெரிவிக்க மனந் துணியவில்லை.

21. அவன் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்து வழிபட்டு நதியைத் தாண்டிக் கலயாத் என்னும் மலைத்திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையிலே,

22. மூன்றாம் நாளிலே யாக்கோபு ஓடிப் போனான் என்னும் சமாசாரம் லாபானுக்குத் தெரிவிக்கப்பட்டது.

23. அப்பொழுது அவன் தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு அவனை ஏழு நாளாகத் தொடர்ந்து போய் கலயாத் என்னும் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.

24. அன்று இராத்திரியில் சொர்ப்பனத் திலே தேவனைக் கண்டான். அவர் அவனை நோக்கி: நீ யாக்கோபிடத்திலே கடினமாய் யாதொன்றையும் பேசவேண்டாம், பத்திரம் என்று சொன்னார்.

25. யாக்கோபு ஏற்கனவே மலையிலே கூடாரத்தை அடித்திருந்தான்; லாபானுந் தன் சகோதரர்களுடன் அவனைக் கண்டுபிடித்த பொழுது அதே மலையாகிய கலயாத் மலையிலே தன் கூடாரம் அடித்தான்.

26. அவன் யாக்கோபை நோக்கி: நீ இப் படிச் செய்யலாமா? எனக்குச் சொல்லாமல் சண்டையில் பிடிபட்ட பெண்களைப்போல் என் குமாரத்திகளைக் கொண்டுபோகலாமா?

27. எனக்கு அறிவியாமல் நீ திருட்டுத் தனமாய் ஓடிப்போகத் தீர்மானித்ததென்ன? எனக்கு அதைத் தெரிவித்திருந்தால் நான் சங்கீதம் மேளம் தாளம் தம்புரு முழக்கத்து டன் சந்தோஷமாய் அனுப்பிவிட்டிருக்க மாட்டேனா?

28. என் குமாரத்திகளையும் (அவர்கள்) புத்திரர்களையும் நான் முத்தஞ் செய்யவொட் டாமல் போனதென்ன? நீ மதியீனனாகவே நடந்தாய்! இப்போதோ,

29. உனக்குத் தின்மை செய்ய எனக்கு வல்லமையுண்டு. ஆனால் நேற்று உன் பிதாவின் தேவனானவர் என்னை நோக்கி: நீ யாக்கோபோடு யாதொன்றையுங் கடின மாய்ப் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று திருவுளம்பற்றினார்.

30. உன் பந்துக்களிடத்திற்குப் போகவும், உன் பிதாவின் வீட்டைத் திரும்பிப் பார்க்க வும் விரும்பினாய். போகலாம், ஆனால் என் தேவர்களை ஏன் திருடிக்கொண்டு போகி றாய் என்று வினவ,

* 30-ம் வசனம். லாபானும் அவன் குடும்பஸ்தர்களுஞ் சத்திய கடவுளை ஆராதித்து வருகிறார்களென்று அறிந்தே யாக்கோபு அவன் வீட்டில் விவாகம் பண்ணியிருந்தான். ஆனால் அந்நிய தேசத்தில் வெகு நாளாய் வாசம் பண்ணின பிறகு லாபான் வர வர வேதத்தின் சத்தியங்களை மறந்து சில விக்கிரகங்களைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ளத் துணிந்தான். யாக்கோபு இந்தத் துர்மாதிரிகையினால் புத்தி மயங்காமல் சத்தியப் பிரமாணத்திலே குறைவின்றி நிலைத்துக்கொண்டான்.

31. யாக்கோபு அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: உமக்குத் தெரியாமல் நான் புறப்பட்ட தற்கு முகாந்தரம்: ஒரு வேளை நீர் உமது குமாரத்திகளைப் பலவந்தமாய்ப் பிடித்து வைத்துக்கொள்ளுவீர் என்று அஞ்சி இப்படி வந்து விட்டேன்;

32. ஆனால் நான் திருடினதாக நீர் என் பேரில் குற்றஞ் சாட்டுகிறீரே. (இதைக் குறித்து நான் சொல்லுகிறதைக் கேள்): உமது தெய்வங்களை எவனிடத்தில் கண்டுபிடிப் பீரோ அவன் நமது சகோதரர்களின் முன்பா கச் சாகடிக்கப்படக்கடவான். சோதித்துப் பாரும், உம்முடைய பொருட்களில் ஏதாவது என் வசத்தில் அகப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளும் என்றான். அவன் இவ்வாறு பேசும்போது, இராக்கேல் விக்கிரகங்களைத் திருடிக்கொண்டு வந்தாளென்று அவன் அறியாதிருந்தான்.

33. அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லீயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்து ஒன்றுங் கண்டுபிடிக்க வில்லை. பிறகு அவன் இராக்கேலுடைய கூடாரத்திற்குப் போனபோது,

34. அவள் அதிசீக்கிரத்தில் அந்த விக்கிர கங்களையெடுத்து தன் ஒட்டகச் சேணத்தின் கீழே அவைகளை ஒளித்து வைத்து அதின் மேல் உட்கார்ந்தாள்; லாபான் கூடாரமெங் குஞ் சோதித்தும் அவைகளைக் கண்டுபிடிக்க வில்லை.

35. அவள் தகப்பனை நோக்கி: நான் தங் கள் சமூகத்திலே எழுந்திருக்கவில்லை என்று தேவரீர் கோபங்கொள்ளவேண்டாம், ஏனென்றால் ஸ்திரீகளுக்குள்ள வழிப்பாடு இந்நேரம் எனக்கு நேரிட்டது என்றாள்; இவ்வாறு அவன் ஜாக்கிரதையாகச் சோதிக்க வந்திருந்தாலும் ஏமாந்து போனான்.

36. அப்பொழுது யாக்கோபு மிகவும் சின ந்து லாபானோடு வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு பகைத்து வருவதற்கு நான் என்ன குற்றம் அல்லது என்ன துரோகம் பண்ணினேன்? 

37. என் தட்டுமுட்டுகளை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே. உம்முடைய வீட்டுப் பொருளிலே எதையாவது கண்டுபிடித்தீரோ? ஆமென்றால் அதை உமது சகோதரர்களுக் கும் எனது சகோதரர்களுக்கும் முன்பாகவே இங்கே வையும், இவர்களே உமக்கும் எனக் கும் நடுத்தீர்க்கட்டும்.

38. இதற்காகத்தானோ நான் உம்மோடு இருபது வருஷமாகவிருந்தேன்? உம் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் சினைப்படாம லிருக்கவில்லையே. உமது மந்தைக் கடாக் களில் ஒன்றையும் நான் புசிக்கவில்லையே.

39. துஷ்ட மிருகங்களால் பீறுண்டவை களை நான் உமக்குத் தெரியப்படுத்தாமல் அதற்கு உத்தரவாதம் பண்ணி வந்தேனே; ஆனால் களவு போனதெல்லாவற்றையும் நீர் என் கையில் கேட்டு வாங்கினீரே.

40. நான் பகலில் வெயிலாலும் இரவில் பனியாலும் வருந்தியுழன்றேன். அதினிமித்தம் நித்திரை என் கண்களுக்குத் தூரமா- யிருந்ததே. 

41. இவ்விதமாய் நான் உமது வீட்டில் உமது குமாரத்திகளுக்காகப் பதினாலு வருஷமும், உமது மந்தைகளுக்காக ஆறு வரு ஷமும், ஆக இருபது வருஷகாலம் உம்மிடத் தில் சேவித்து வந்தேன்; நீரோ என் சம்ப ளத்தைப் பத்து விசையும் மாற்றி மாற்றி வந்தீ ரன்றோ?

42. என் பிதாவாகிய அபிரகாமின் தேவனும் இசாக்கின் பயபக்தியும் என்னை மீட்டி ரட்சித்ததே. இல்லாவிட்டால் நீர் இப்போது என்னை வெறுமையாக அனுப்பி விட்டிருந் தாலுமிருக்கலாம். ஆனால் கடவுள் எனது கஷ்டத்தையும் என் கைப்பாடுகளையும் நினைத்துக்கொண்டு நேற்று உம்மைக் கண் டித்திருக்கிறார் என்று சொன்னான்.

43. அதற்கு லாபான்: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், (அவர்கள்) பிள்ளைகள் என் பிள்ளைகள். இந்த மந்தை என் மந்தை. நீ பார்க்கிறதெல்லாம் எனக்குச் சொந்தம். அப்படியிருக்க என் குமாரத்திகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் நான் என்ன செய்யக் கூடும்?

44. நல்லது வா, உடன்படிக்கை செய்து கொள்ளுவோம். அது உனக்கும் எனக்கும் சாட்சியமாகக் கடவது என்று பிரதிசொல்லக் கேட்டு,

45. யாக்கோபு ஒரு கல்லையெடுத்து அதனை ஞாபக ஸ்தம்பமாக நிலைநிறுத்தி,

46. தன் சகோதரர்களை நோக்கி: கற்க ளைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர் கள் கற்களை வாரி எடுத்துக்கொண்டு வந்து ஒரு குவியலாக்கி அந்தக் குவியலின் மேல் போஜனம் பண்ணினார்கள்.

47. அதற்கு லாபான்: சாட்சிய மேடை என்றும், யாக்கோபு: நடுநிலைக்குவியல் என்றும் பேரிட்டார்கள். அவரவர் தம்தம் பாஷை விசேஷ குணப்படியே வெவ்வேறு விதமாய் அதைக் குறித்துப் பேரிட்டனர்.

* 47-ம் வசனம். யாக்கோபு எபுரு பாஷையிலும், லாபான் கால்தேய பாஷையிலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

48. பின்னரும் லாபான்: இம்மேடை இன்று உமக்கும் எனக்கும் சாட்சியமாகுக என்றான். ஆதலால் அதன் பெயர் கலயாத் அதாவது சாட்சிய மேடை என்னப்பட் டது.

49. நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்த பின்பு, ஆண்டவரே கண்காணித்து உனக்கும் எனக்கும் நடுநின்று நியாயந் தீர்க்கக்கடவார்.

50. நீ என் குமாரத்திகளைத் துன்பப் படுத்தி, அவர்களைத் தவிர வேறு பெண்களைக் கொள்ளுவாயானால், எங்கும் வியாபித்து (நம்மை) நோக்குகின்ற கடவுளை அன்றி, நமது வார்த்தைகளுக்கு வேறு சாட்சி யில்லை என்றான்.

51. மறுபடியும் அவன் யாக்கோபை நோ க்கி: இதோ இந்தக் கல்மேடையும் உனக்கும் எனக்கும் நடுவாக நான் நிறுத்தி வைத்த இந்தக் கற்றூணும்,

52. சாட்சியாய் நிற்கிறதே. ஆம்! (உனக் குத் தீங்கு செய்ய) நான் அவைகளைக் கடந்து போவேனாகிலும், நீ எனக்குப் பொல்லாப்புச் செய்ய அவைகளைத் தாண்டி வருவாயாகி லும், இம்மேடையும் இந்தத் தூணும் சாட்சியாயிருக்கும்.

53. அபிரகாமுடைய தேவனும் நாக்கோருடைய தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவரே நமக்குள்ளே நடு நின்று தீர்க்கக்கடவதென்றான். அப்பொழுது யாக்கோபு தன் தந்தையாகிய இசாக்கின் பயபக்தியின் பேரில் ஆணையிட்டான்.

54. பின்பு மலையின் மேல் பலிகளை இட்டு அப்பம் புசிக்கும்படித் தன் சகோதரர் களை வரவழைத்தான்; அவர்கள் சாப்பிட்ட பின்பு அங்குதானே தங்கினார்கள்.

55. லாபானோவென்றால், இருட்டோடே எழுந்திருந்து தன் புத்திரர்களையும், புத்திரிகளையும் முத்தஞ்செய்து அவர்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன் தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.