இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 30

இராக்கேல் தான் மலடியாயிருந்ததினிமித்தம் துக்கப்பட்டுத் தன் வேலைக்காரியாகிய பாளாளை யாக்கோபுக்குப் பெண்டாளக் கொடுத்ததும் - அவள் டான், நேப்தலி என்பவர்களைப் பெற்றதும் - லீயாள் தன் வேலைக்காரி ஜெல்பா ளென்பவளை யாக்கோபுக்குக் கொடுத்ததும் - லீயாள் இசக்கார், சபுலோன், தீனாள் என்பவர்களைப் பெற்றதும் - இராக்கேல் ஜோசேப்பைப் பெற்றதும் - யாக்கோபு தன் உபாயத்தினாலே ஐசுவரியவானானதும்.

1. இராக்கேல் தான் மலடியாயிருந்தது கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமை கொண்டு தன் பத்தாவை நோக்கி: நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும், இல்லாவிடில் நான் செத்துப்போகிறேன் என்றாள்.

2. யாக்கோபு அவள் மேல் சினந்து: உன்னைத் தேவன் மலடியாக்கினதற்கு நான் என்ன உத்தரவாதியா? என,

3. அவள்: பாளாள் என்னுந் தாதியானவள் என்னிடத்திலிருக்கிறாள். நீர் அவளோடு சயனியும்; அவள் என் மடியிலே பிரசவிக்க அவளாலே நான் பிள்ளைகளை அடையக் கடவேன் என்று,

* 3-ம் வசனம். இவ்வசனத்தையும் 9-ம் வசனத்தையும் வாசிக்கும்போது முன்னே (16:3) வசனத்துக்கடுத்த விரித்துரையில் நாம் சொல்லியதைக் காண்கவும்.

4. அவனுக்குப் பாளாளை மனைவியாகக் கொடுத்தாள். இவள்,

5. யாக்கோபோடு சயனித்து, கருக் கொண்டு ஒரு புத்திரனைப் பெற்றாள்.

6. இராக்கேலும்: ஆண்டவர் என் வழக்கைத் தீர்த்து என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு ஓர் புத்திரனைத் தந்தார், என்று சொல்லி, இதினிமித்தமாக அவனுக்கு டான் என்னும் பெயரை இட்டனள்.

7. பாளாள் மறுபடியும் கருக்கொண்டு வேறொரு (புத்திரனையும்) பெற்றாள்; 

8. இவனைக் குறித்து இராக்கேல்: ஆண்டவர் என் தமக்கையோடே என்னைப் போராடச் செய்திருக்க, நான் ஜயங் கொண்டேன் என்று அவனை நேப்தலி என்றழைத்தாள்.

9. லீயாள் தனக்குப் பிள்ளைப்பேறு நின்றுகொண்டதென்று கண்டு, தன் வேலைக்காரியாகிய ஜெஸ்பாளென்பவளைப் புருஷனுக்கு ஒப்பித்துவிட்டாள்.

10. இவள் கர்ப்பந்தரித்து ஒரு புத்திரனைப் பெற்றபோது,

11. லீயாள்: நன்றாயிற்று, என்று கூறி; குழந்தைக்கு காத் என்னும் பெயரையிட் டாள்.

12. ஜெல்பாள் பின்னும் வேறொரு புத்திரனைப் பெற்றனள்.

13. லீயாள்: இது என் பாக்கியமாயிற்று; இதனால் ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று கூறி, அவனை ஆசேர் என்றழைத்தாள்.

* 13-ம் வசனம், ஈடான்டு என்பது நீதித் தீர்வை எனவும், ஈநேப்தலிடு என்பது சமாதானமாக்குதல் எனவும் ஈகாத்டு என்பது நல்விதி எனவும் ஈஆசேர்டு என்பது பாக்கியஸ்திதி எனவும் எபிறேய பாஷையில் பொருட்படும்.

14. ரூபனோ வென்றால் கோதுமை அறுப்புக் காலத்திலே வயல் வெளிகளிலே போயிருக்க, தூதாயிக் கனிகளைக் கண்டெடுத்து, அவற்றைத் தன் தாயாகிய லீயாளிடங் கொண்டு வந்தான். இராக்கேல் இவளைப் பார்த்து: உன் மகனுடைய தூதாயிப் பழங்களில் எனக்குக் கொஞ்சந் தா என்றாள்.

15. அதற்கு அவள்: நீ என்னிடத்தினின்று என் நாயகனை அபகரித்துக்கொண்டது உனக்குச் சொற்பமாகத் தோற்றுகிறதா? இன்னும் என் மகனுடைய தூதாயிக் கனிகளையும் பறிக்க விருக்கிறாயோ? என இராக்கேல்: உன் குமாரனுடைய தூதாயிப் பழங்களுக்குப் பதிலாக அவன் இன்று இராத் திரி உன்னோடு சயனிக்கட்டும் என்றாள்.

16. அந்தி நேரத்தில் யாக்கோபு காட்டிலிருந்து திரும்பிவரும்போதே, லீயாள் அவனுக்கு எதிர்கொண்டு போய்: நீர் என்னிடத்தில் சயனிக்க வேண்டும்; ஏனென்றால் என் குமாரனுடைய தூதாயிப் பழங்களை விலையாகக் கொடுத்து உம்மை நான் கொண்டேன் என்றாள். அவன் அவ்விதமே அன்று இராத்திரி அவளோடு சயனித்தான்;

17. கடவுள் அவளுடைய மன்றாட்டுக்களை நன்றாகக் கேட்டார். உள்ளபடி அவள் கர்ப்பந்தரித்து ஐந்தாம் புத்திரனைப் பெற்று:

18. நான் என் வேலைக்காரியை என் நாயகனுக்குக் கொடுத்தமையால் கடவுள் எனக்குச் சம்பாவனையைத் தந்தார், என்று சொல்லி அவனுக்கு இசக்கார் என்னும் பெய ரையிட்டாள்.

19. மறுபடியும் லீயாள் கர்ப்பவதியாகி ஆறாம் புத்திரனைப் பெற்று:

20. கடவுள் எனக்கு நன்கொடையைத் தந்தருளினார். இம்முறையிலும் என் அன்பு டையான் என்னுடனிருப்பார், நான் அவ ருக்கு ஆறு புத்திரரைப் பெற்றேனன்றோ? என்று கூறினதினாலே அவனுக்குச் சாபு லோன் என்னும் பெயரைச் சூட்டினாள்.

21. பின்னும் அவள் ஒரு குமாரத்தியைப் பெற்றாள். அவளுடைய பெயர் தீனாள்.

22. பிறகு ஆண்டவர் இராக்கேலையும் நினைந்தருளினார். அவள் மன்றாட்டுகளுக்குச் செவிகொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும் படி செய்தார்.

23. ஆதலால் அவள் கர்ப்பவதியாகி ஒரு புத்திரனைப் பெற்று: கடவுள் என் நிந்தையை நீக்கினார் என்றும்,

24. ஆண்டவர் இன்னொரு புத்திரனை எனக்குத் தருவாராக, என்றுங் கூறி குழந்தை யை ஜோசேப் என்றழைத்தாள்.

* 24-ம் வசனம். ஈஇசக்கார்டு என்பது வெகுமானம் என்றும், ஈசாபுலோன்டு என்பது கூட விருத்தல் என்றும் ஈஜோசேப்டு என்பது வர்த்திப்பு என்றும் அர்த்தமாம்.

25. ஜோசேப் பிறந்த பின்போவெனில், யாக்கோபு தன் மாமனாரை நோக்கி: என் சுய தேசத்திற்கும், என் நாட்டிற்கும் திரும்பிப் போவதற்கு எனக்கு விடைகொடுத்தனுப்புவீராக.

26. நான் போகும்படிக்கு என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும். அவர்களுக்காக நான் உமக்கு ஊழியஞ் செய்தேன். நான் உம்மிடத்தில் சேவித்த சேவை இன்னதென்று உமக்குத் தெரியுமன்றோ? என்றான்.

27. லாபான் அவனை நோக்கி: நான் உன் சமூகத்திலே தயவுபெறக்கடவேன். உன்னிமித்தமாகவே ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என்று நான் சுயானுபவமாக அறிந் திருக்கிறேன்.

28. (ஆகையால்) உனக்கு நான் செலுத்தத் தகும் சம்பாவனை இவ்வளவென்று நீயே சொல் என,

29. அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உமது சொத்து என் சாமர்த்தியத்தினாலே விருத்தியடைந்த விதமும் நீர் அறிவீரன்றோ?

30. நான் உம்மிடத்தில் வரும் முன்னே நீர் சொற்ப ஆஸ்தியை உடையவராயிருந்தீர். இப்பொழுதோ ஐசுவரியரானீர். நான் வரவே ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்தார். இனிமேலாவது நான் சொந்தக் குடும்பத்துக்குச் சம்பாதனை தேடுவது நியாயந்தானல்லவா? என்றான்,

31. அதற்கு லாபான்: உனக்கு என்ன வேண்டும்? சொல்லென, அவன்: எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. ஆயினும் நான் சொல்லுகிறபடி நீர் செய்வீரானால், மறு படியும் உமது மந்தைகளை மேய்த்துக் கொண்டு பாதுகாப்பேன்.

* 31-ம் வசனம். யாக்கோபு தனக்கு ஒன்றுந்தேவையில்லை என்று சொல்லும்போது, லாபான் தனக்குச் செய்து வந்த வஞ்சகத்தை மறந்தானில்லை. ஆனால் மனுஷனாகிய மாமனாரிடத்தில் ஒன்றையும் கேட்காமலும், விரும்பாமலும் இதுவரையில் தன்னைக் காப்பாற்றி வந்த சுவாமியிடத்தில் மாத்திரமே தன் நம்பிக்கையை வைத்திருக்கிறதாகக் காட்டுகிறார். மனிதனை நம்புவதினால் மோசம் உண்டாகக் கூடும்; சுவாமியை நம்பின எவனும் மோசம் போகவில்லை.

32. (அதென்னவெனில்) நீர் போய் உமது எல்லா மந்தைகளையும் பார்வையிட்டு அவைகளில் வெவ்வேறு நிறமாயிருக்கிற ஆடுகளையும் பிரித்து விடும்; புள்ளிப்பட்ட ஆடுகளையும் பிரத்தியேகமாய் வையும். இனி மேல் செம்மறி ஆடுகளிலும், வெள்ளாடுகளிலும் வெள்ளையும் கறுப்பும் கலந்த குட்டிகளும் புள்ளி புள்ளியாயிருக்கும் குட்டிகளும் எனக்குச் சம்பாத்தியமாயிருக்கட்டும்.

33. பிறகு உமதிஷ்டப்படி எப்போது உடன்படிக்கைக் கெடு வருமோ அப்போது என் கபடற்றதனம் என் பாரிசத்தில் சாட்சியம் சொல்லும். அந்நாளிலே செம்மறி ஆடுகளிலும் வெள்ளாடுகளிலும் எவைகள் புள்ளி புள்ளியும் பல நிறமும் இல்லாதவைகளோ அவைகள் என்னைத் திருடனென்று சொல்லிக் காட்டுமே (என்றான்.)

34. அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என,

35. அன்று தானே அவன் புள்ளியும் மாசுமுள்ள வெள்ளாடுகளையும் செம்மறி ஆடுகளையும், வெள்ளாட்டுக்கடா, செம்மறிக் கடாக்களையும் வேறாகப் பிரித்து வைத்தான். வெள்ளை அல்லது கறுப்பு ஆகிய ஒரே நிறமாயிருந்த மந்தைகளையோ தன் மக்களுடைய காவலில் ஒப்பித்ததுமல்லாமல்,

36. தான் வசித்திருந்த ஊருக்கும் தன் மற்ற மந்தைகளை மேய்த்துக் கொண்டு வரும் தன் மருமகனுக்கும் இடையிலே மூன்று நாள் வழித் தூரம் இருக்கும்படி வைத்தான்.

37. அதைக் கண்டு யாக்கோபு (என்ன உபா யம் பண்ணினானெனில்) போப்பில், வாது மை, பிலாத்தன் என்னும் மரங்களின் பசிய மிலாறுகளை வெட்டி அவைகளில் இடை யிடையாகப் பட்டையைச் சீவி உரித்தான்; இப்படி அவன் சீவி உரித்த இடங்கள் வெள் ளையாகவும், சீவி உரியாத இடங்கள் பச்சை யாகவும் தோன்றுவதினாலே மேற் சொல்லிய மிலாறுகள் இருநிறமுள்ளவைகளாயின.

38. பின்னும் தன் மந்தைகள் குடிக்க வரும்போது ஆடுகள் மேற்படி வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, அவன் நீர் வார்க் கப்படும் தொட்டிகளிலே அம்மிலாறுகளைப் போட்டு வைத்தான்.

39. இதனால் சம்பவித்த தென்னவெனில் பொலியும் நேரத்திலே (இருநிறமான ) மிலாறு களைக் கண்டு பொலிந்திருந்த ஆடுகள் புள்ளியுள்ளதும் வரியுள்ளதும் கலப்பு நிற முள்ளதுமான குட்டிகளை ஈன்றுவந்தன.

40. யாக்கோபு பல நிறமான குட்டிகளை வேறாக வைத்து மிலாறுகளைக் கடாக்களின் பார்வைக்கு நேராகத் தொட்டிகளில் வைப் பான்; பிறகு மந்தைகள் வெவ்வேறாகப் பிரித் திருந்தமையால் எவை சுத்த வெள்ளை அல்லது சுத்த கறுப்பு நிறத்தையுடையதோ அதை லா பானுக்கும், மற்றவைகள் யாக்கோபுக்கும் உரித்தானவைகளாகும்.

41. ஆகையால் முதல் பருவத்திலே பொலி யும்போது வரியுள்ள கொப்புகளைக் கண்டே ஆடுகள் சூல்கொள்ளும் பொருட்டாக யாக் கோபு கடாக்களுக்கும் ஆடுகளுக் கும் எதிராக இரு நிறமுள்ள மிலாறுகளைப் போட்டு வைப்பான்.

42. பின்பருவத்துப் பொலிவுக்கோ சூல் கொள்ளும் தன்மையை உடைய ஆடுகளின் பார்வைக்கு எதிரே யாக்கோபு மிலாறுக ளைப் போட்டு வைக்கமாட்டான். அவ்வா றே முன் பருவத்தின் ஈற்று லாபானைச் சே ரும்; பின் பருவத்தின் ஈற்று யாக்கோபுக்குச் சொந்தமாகும்.

43. அதனால் இவன் மிகவும் ஆஸ்திக்கார னாகித், திரளான மந்தைகளையும் வேலைக் காரர்கள் வேலைக்காரிகளையும் உடையவன் ஆனான்.