இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகோதர அன்பு 2

அம்மாத்திரமல்ல, நாம் பிறருடைய நயஞ் சுகங் களைக் கவனித்து நடப்பதும் அவசியம். நம்முடைய சொந்த நயங்களை விட்டுவிடவேண் டும் என்று சொல்லியபின், பிறரு டைய நயஞ் சுகங்களைக் கவனித்து நடக்கவேண்டும் என்றும் சொன் னால் இது விபரீதம் அல்லவோ? என்பீர்கள் ஆக்கும். இல்லை. பிறர் சினேகத்துக்கு இந்த இரண்டும் ஒருங்கே அவசியம். பிறருக்காக நம்முடைய உரிமை களை விட்டுவிட ஆயத்தமா யிருப்பதும், பிறருடைய நன்மையை எப்போதும் விரும்பி நடப்பது தான் பிறர் சினேகத்தின் லட்சணம். நம்முடைய பெரிய • பெரிய நன்மைகளையும் நாம் பிறருக்காகக் கைவிட மன தாய் இருக்கவேண்டும். ஆனால் பிறருக்கு உரிய மிகச் சிறிய நன்மைகளையும் அவர்களுக்குக் கர்த்துக் கொடுக்க வேண்டும். பிறர் சிநேகத்திலே இந்த இரண் டு அங்கமும் அடங்கியிருப்பது மிகவும் இயல்பான ஒரு காரியம். அதெப்படி? நமக்கு ஒரு ஆளிலே பிரீ தி இருந்தால், ஒரு ஆளை நாம் சினேகிதனாகப் பாவித் தால், அந்தச் சினேகிதனுடைய பேருக்காவது பொ ருளுக்காவது ஒரு அற்ப பழுதென்றாலும் வர விடு வோ மா? அவனோடு பேசும்போது எவ்வளவு மரியா தையாய்ப் பேசுவோம்! அவனுக்கு எவ்வளவு சிறுச் சிறு உதவிகளைப் பண்ணி வருவோம்! அவனைத் தெய் வத்துக்கு இரண்டாவதாக அல்லவோ பூசிப்போம்! உத்தமமான பிறர் சினேகத்திலும் இந்தக் கரிசனை இருக்கவேண்டியது. யேசுநாதசுவாமி கற்பித்தருளிய பிறர் சினே கமானது இந்த லெளகீக சினேகத்துக்குக் கீழ்ப்பட்டது ஆகவேண்டியதில்லை.

ஆனால் உங்கள் சகோதரருடைய கீர்த்தியை நீங் கள் சற்றேனும் பொருள் பண்ணாமல் அவர்கள் மதிப்பை அழிக்கக்கூடிய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தால், அவர்கள் பொருளுக்கு நட்டமாகக் கூடிய காரியங்களைத் தேடிச் செய்து கொ ண்டுவந்தால், அவர்கள் முன்னிலையிலும் அவர்களுக்கு மதிப்பில்லாமல் அவர்களுடைய உணர்ச்சிகளைப் பறு வாய் பண்ணாமல் சுடுசொற்களைச் சொல்லி மரியாதை இன்றி நடத்திக்கொண்டுவந்தால் அவர்கள் பேரிலே உங்களுக்குப் பிறர் சினேகம் உண்டென்று எப்படிச் சொல்லலாம். ஆகையால், நாம் பிறர் சினே கத்தை அனுசரிக்க விரும்பினால், நமது புறத்தியார், டை அற்ப உரிமைகளையும் நாம் அவமதிக்கப்படாது. வெ. ளித்தோற்றத்துக்கு அற்ப காரியங்களாய் இருக்கிறவைகளைப்பற்றியும் நாம் கவனமாயிருக்கவேண்டும். ஏனெனில், பாலமுறையும் நமக்கு அற்பமாகத் தோற் - றுவது பிறருடைய மனதை அதிகமாக வருத்தி, அவ 'ர்களுக்கு அதிக நட்டத்தை வருவித்துப் பிறர் சினே கத்துக்கு விரோதமான பெரிய பாவத்துக்கு வழிபா கக்கூடும். அது எப்படி.? சகோதரனே, நீ உன் அய லானைப் பற்றிக் கேலியாகச் சில வார்த்தைகளைச் சொல்லுகிறாய். அவைகளைக் கேட்டுக்கொண்டிருக் கிறவர்களுக்கு அது ஓர் முசிப்பாற்றி பாத்திரமாய் இருக்கிறது ஆனால் அக் கேலி வார்த்தைகள் உன் அயலானின் காதில் விழுகிறது. அதனாற் சில வேளை அவன் உன்னோடு பகைக்கத் தொடங்கி, உனக்கும் அவனுக்கும் சச்சரவு உண்டாகிக் கடைசியாய்ச் சீவி யகாலமெல்லாம் நிலைக்கிற ஓர் வைராக்கியமும் பிறக் கிறது பார், ஒரு சிற்ப காரியம் எவ்வளவு பெரியகேட் டுக்கு, வழியாய்ப் போகிறது! அல்லது வேறொரு உதா ரணம் : நீ உன் அயலானுக்கு இலேசாய்ச் செய்யக் 'கூடிய ஒரு உதவியைச் செய்யாமல் மறுக்கிறாய். அல் - லது, அவனுடைய மனத் துன்பத்தைக் கவனியாமல் அவன் முகங் கோடத்தக்க ஒன்றைச் செய்கிறாய். இந்த அற்ப தயவு தாட்சணியக் குறைவு அவன் மன தை வேறு படுத்தத் தொடங்கி, உன்னோடு தீராப்பகை விளையும் வித்தாகிறது. பிறர் சினேகத்துக்குப் பழு - து வருவது, பலமுறையும், பெரிய ஏச்சு வார்த்தைகளால் அல்ல; பெரிய கஷ்ட நஷ்டங்களை வருவிப்பதி - னால் அல்ல. ஒரு கேலி வார்த்தை யினால், தெருவிலே சொல்லக் கேட்டுத் திண்ணை யிலே திரும்பச் சொல் லிய ஒரு ஆவலாதியினால் ஆட்களுக்குள் ளே குடும்பங் " களுக்குள்ளே பெரும் பகை மூண்டு, பிறர் சினே கத் தின் பந்தனங்கள் தெறித்து, அக்கியானிகளும் பார்த்து நையாண்டி பண்ணத் தக்க தாறுமாறு கள், சண்டை கள், வியாச்சியங்கள் உண்டானதை அறிவோம்.

என்ன செய்யலாம்! மனுஷ சுபாவம் அப்படிப் பட்டது! நாம் எமது கீர்த்தி முதலியவைகளைப்பற்றி" எப்படிச் சுணையுள்ளவர்களாய் இருக்கிறோமோ, அப் படியே பிறரும் சுணை யுள்ளவர்கள். எவ்வளவோ சிறு காரியங்களிலேயும், ஒரு அற்ப வார்த்தையினாலோ பகி டியினாலோ அவர்களுக்கு மனநோவு உண்டாகக்கூ டும்; பிறர் சினேகத்துக்குப் பங்கம் வரக்கூடும். ஆகை யால், பிறருடைய இச் சிறு உரிமைகளைப் பற்றியும் நாம் மிகவும் சாக்கிரதையாகவே நடக்கவேண்டியது. - ஆகையால், யேசுக்கிறிஸ்துநாதருடைய முன்மா திரிகைப்படி நாம் பிறர் சினேகம் உள்ளவர்களாய் இருக்கத் தக்கதாகச் சகல வஞ்சகத்தையும் சூதையும் விட்டுவிட விரும்பி னால், நமது கீர்த்தி பொருள்களை மாத்திரமல்ல, அவ சியமானபோது, சீவனையுங் கொடுத்துப் பிறர் சினேகத் தையே காத்துக்கொள்ளுவோமாக. நமது பெரிய உரி" மைகளைத்தானும் வேண்டியபோது பாராட்டாமல் விட்டு, பிறருடைய அற்ப உரிமைகளையும் பாராட்டி. மதித்துக்கொண்டு வருவோமாக. ஏனெனில் இப்ப டிப்பட்ட லட்சணங்களை உடையதாகிய பிறர் சினே கம் நம்மிடத்தில் இல்லாதிருக்குமானால், யேசுநாதசு வாமியுடைய சீஷர் என்னும் பெயருக்கும் பாத்திர மில்லாதவர்களாய்ப் போவோம். ஆனால் நமது உடல் பொருள் ஆவி இம் மூன்றையும் இழந்து போகிலும் பிறர் சினேகத்தையோ கைவிடாதவர்களாய்ச் "சகோ தர பந்தனமாய் இங்கு வாழுவோமானால், நிச்சயமாய்ப் பரலோகத்திலும் நித்திய பேரின்ப சமாதானத்தைச் சுகிப்போம்.

ஆமென்.