இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 27

இசாக் எசாயூவை வேட்டைக்கு அனுப்பினதும் - யாக்கோபு தன்னை எசாயூவென்று சொல்லி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதும் - எசாயூ மகா துக்கம் அடைந்ததைக் கண்டு இசாக் அவனையும் ஆசீர்வதித்ததும்.

1. இசாக் வயோதிபனானதினாலே அவன் கண்கள் கெட்டுப் பார்வை அற்றுப் போ யிற்று. ஒருநாள் அவன் தன் மூத்த குமார னான எசாயூவை அழைத்து: என் மகனே! என்று கூப்பிட, எசாயூ: இதோ வருகிறே னென்று பிரதி கூறினான்.

* 1-ம் வசனம். கிழப் பிராயத்திலே இசாக் அநேகாநேக துன்பதுரிதங்களையும் அனுபவித்துக் கொண்டான்; தேவ வாக்குத்தத்தத்திற்குரிய மேன்மை இவ்வுலகத்தைச் சேர்ந்த மகிமையல்லவென்றும், துன்பத்தினாலே புண்ணியந் தழைத்தோங்கி வளரவேண்டுமென்றும் கடவுள் காட்டச் சித்தமானார்.

2. தகப்பன் அவனை நோக்கி: பார், நான் கிழவனானேன். என் மரணம் இன்னநாளில் வருமென்று அறிந்தேனில்லையாகையால்,

3. உன் ஆயுதங்களாகிய அம்புக் கூட் டை யும் வில்லையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்று, வேட்டையாடுவதில் ஏதாவது அகப் பட்டவுடனே,

4. நீ எப்படி எனக்குப் பிரியமாயிருக்கு மென்று அறிந்தாயோ, அதை (அப்படியே) சமைத்து நான் புசிக்கவும், நான் சாகுமுன்னே பூர்த்தியான பட்சத்துடன் உன்னை ஆசீர் வதிக்கவும் என்னிடத்திற் கொண்டுவா என்றான்.

5. இரெபெக்காள் அந்தப் பேச்சைக் கேட் டுக் கொண்டிருந்தனள். எசாயூ தந்தையின் கட்டளையை நிறைவேற்றும்படி வனத்திற் குப் புறப்பட்டுப் போனமாத்திரத்தில்,

6. அவள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் தமயனாகிய எசாயூவோடு பேசின பேச்சைக் கேட்டேன். அவனுக்கு அவர் சொன்னது என்னவெனில்:

7. நீ போய் வேட்டையாடி வேட்டை யில் அகப்பட்டதைச் சமைத்துக்கொண்டு வந்தால் நான் அதைப் புசித்து எனக்கு மரணம் வருமுன்னே ஆண்டவர் சமூகத்தில் உன்னை ஆசீர்வதிக்கக்கடவேன் என்று சொன்னாரே.

8. ஆதலால் என் மகனே, என் சொல்லைக் கேட்டுக் கொள்;

9. நீ ஆட்டு மந்தைக்கோடிப்போய் இரண்டு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. என்னத்திற்கென்றால் நான் அவைகளை உன் தந்தைக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.

10. நீ அவற்றை அவருக்குக் கொடுப்பாய். புசித்தான பின்பு, அவர் சாகுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கக்கடவார் என்று சொன்னாள்.

11. அவளுக்கு அவன் பிரத்தியுத்தாரமாக: என் தமயனாகிய எசாயூ உரோமமுள்ள தேகமுடையவன், நானோ உரோமமில்லா தவனென்று அறிவீரே;

12. ஒரு வேளை என் தகப்பன் என்னைத் தடவிப் பார்த்து அதைக் கண்டுபிடித்துக் கொள்வாராகில், தம்மை நான் ஏமாற்றத் துணிந்தேனென்று நினைப்பார் ஆக்கும். அப்படியானால் என் மேல் ஆசீர்வாதத் தை யல்ல, சாபத்தையே நான் வரப்பண்ணிக் கொள்ளுவேன் என்றஞ்சுகிறேன், என 

13. தாய் அவனை நோக்கி: அந்தச் சாபம் என்மேலே வரட்டும், மகனே! என் பேச்சை மாத்திரம் தள்ளாமல் நீ போய் நான் சொல்லியவைகளைக் கொண்டு வா, என்றாள்.

* 13-ம் வசனம். யாக்கோபுதானே தேவ வாக்குத்தத்தங்களுக்கு உரித்தான- வனாயிருப்பானென்று தேவ வாக்கினாலே (25:23) இரெபேக்காள் அறிந்திருந்தனள். யாக்கோபும் அவ்விஷயத்தை அவள் வாயினாலே கேட்டறிந்ததனால் அன்றே பயிற்றங்கூழைக் கொடுத்துத் தன் தமயனான எசாயூவின் தலைச்சன் சுதந்தரத்தை வாங்கியிருந்தான். இது இசாக் அறியாதிருப்பார் அல்லது மறந்திருப்பாரென்று எண்ணி அவர்கள் அவ்விதமே நடந்தார்கள். இது விஷயத்தில் அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு (9:10) வசனித்தருளிய வியாக்கியானங்களைக் காண்கவும்.

14. அவன் போய் அவைகளைக் கொணர் ந்து தாயிடங் கொடுக்க, அவள் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமாயிருக்கும்படி உருசியுள்ள பதார்த்தங்களை முஸ்திப்புப் பண்ணினாள்.

15. பிறகு வீட்டிலே தன்னிடத்தில் இருந்த எசாயூவின் மிக நல்லுடைகளை எடுத்து அவனுக்கு உடுத்தி,

16. அவன் கரங்களிலேயும், உரோமமற்ற கழுத்திலேயும் வெள்ளாட்டுக் குட்டியின் தோலைப் பந்தித்து,

17. பதார்த்தங்களையும் தான் சுட்ட அப் பங்களையும் அவனிடந் தந்தனள்.

18. அவன் அவைகளைக் கொண்டு போய்: என் அப்பா! என்றான்; அதற்கு இசாக்: காது கேட்கிறது மகனே! நீ யார்? என்று சொல்லி யதற்கு,

19. யாக்கோபு: நான் உமது சிரேஷ்ட புத் திரனாகிய எசாயூதான்; நீங்கள் எனக்குக் கற்பித்தபடி செய்தேன்; எழுந்து உட்கார்ந்து என்னை ஆசீர்வதிக்கத்தக்கதாக, என் வேட் டையைப் புசியுங்கள் என்றான்.

20. இசாக் மறுபடியும் தன் புத்திரனை நோக்கி: என் மகனே! இது உனக்கு இவ்ளவு சீக்கிரத்தில் எப்படி அகப்பட்டது? என, அவன்: சுவாமி சித்தத்தினாலே நான் விரும்பியது உடனே எனக்கு நேரிட்டது என்று பிரத்தியுத்தாரஞ் சொல்ல,

21. இசாக்: என் மகனே! கிட்ட வா, நீ என் குமாரனாகிய எசாயூதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவியே நிச்சயித்துக் கொள்ளுவேனென்றான்.

22. யாக்கோபு தகப்பன் அருகில் வந்தான்; இசாக் அவனைத் தடவிப் பார்த்து: குரலா னது யாக்கோபின் குரலாம், கைகளோ எசாயூவின் கைகள் என்று சொல்லி,

23. (ஆட்டு மயிர்களால் மூடியிருந்த அவனுடைய கைகள் மூத்தவனுடைய கைகளுக்குச் சமானமாய்த் தோன்றியதால் அவன் இன்னாரென்று அறியாமல் அவனை ஆசீர்வதித்து,

24. நீ என் குமாரனாகிய எசாயூதானா? என்று வினவ, அவன்: நான் தான் எனப் பதில் கூறினான்.

25. அப்பொழுது இசாக்: நீ பிடித்த வேட் டையைச் சமைத்திருக்கிறாயே, அதைக் கொண்டு வா மகனே! பிறகு அல்லவா நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றான். அப்படி யே சமர்ப்பிக்கப்பட்ட கறியைப் புசித்தான். பின்பு (யாக்கோபு) தன் தகப்பனுக்குத் திராட்ச இரசமும் கொணர்ந்து கொடுத்தான்; அதைக் குடித்தானவிடத்தில்,

26. (இசாக்) குமாரனை நோக்கி: மகனே! என்கிட்ட வந்து என்னை முத்தஞ் செய் என் றான்.

27. அவன் கிட்டப் போய் அவனை முத்த மிட, இசாக் அவனுடைய வஸ்திரங்களின் பரிமளசுகந்தத்தை முகர்ந்து: இதோ என் குமாரன் விடுகின்ற மணமானது ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போலிருக்கிறதே!

28. தேவன் அனுக்கிரகம் பண்ணி உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமை யையும், மிகுந்த தானியத்தையும் திராட்ச இரசத்தையும் தந்தருளுவாராக.

29. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும், ஜாதி கள் உன்னை வணங்கவுங் கடவர். நீ உன் சகோதரர்களுக்கு எஜமானாயிரு. உன் தாயா ருடைய மக்களும் உனக்குமுன் பணியக் கட வார்கள்; உன்னைச் சபிப்பவன் சபிக்கப் பட்டவனாகவும், உன்னை ஆசீர்வதிப்பவன் ஆசிகளால் நிறைந்தவனாகவும் இருக்கக் கடவான் என்று ஆசீர்வதித்தனன்.

30. இசாக் இவ்வசனத்ததைச் சொல்லி முடிந்தும் முடியாதிருக்கையிலே யாக்கோபு வெளியே போனான்; போனமாத்திரத்தில் எசாயூ வந்து, 

31. சமைத்த தன் வேட்டைப் பதார்த்தங்களைத் தகப்பனுக்குச் சமர்ப்பித்து: அப்பா! எழுந்திரும், உமது குமாரனுடைய வேட்டைப் பதார்த்தங்களைப் புசியும்; பிறகு என்னை ஆசீர்வதிக்கக்கடவீர் என்றான்.

32. இசாக் அவனை நோக்கி: என்ன? நீ யார்? என, அவன்: நான் உம்முடைய சிரேஷ்ட குமாரனாகிய எசாயூ என்றனன்.

33. இசாக் மிகுந்த பிரமிப்புற்று நினைப்பதற்கரிய ஆச்சரியமடைந்தவனாய்: ஆனால் வேட்டையாடிப் பதார்த்தம் எனக்கு இப்போது கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வரா முன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேன், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருப்பான் என்றான்.

* 33-ம் வசனம். இசாக் முதலில் வியப்புற்றுக் கோபங் கொண்டானென்பது மெய்யே. ஆனால் சிரேஷ்ட புத்திரனுக்குரித்தான ஆசீர்வாதம் யாக்கோபுக்குத் தேவ திருவுளத்தால் நேர்ந்ததென்று நினைத்துக்கொண்டபோது அவன் யாக்கோபின்மீது மனமிரங்கி அவனை முன்போல் நேசித்துவந்தான்.

34. எசாயூ தந்தையின் வார்த்தைகளைக் கேட்டுக் கோபவெறியாகிக் கர்ச்சித்தான். பிறகு ஏங்கித் தயங்கி: அப்பா, என்னையுங் கூட ஆசீர்வதிக்கவேண்டுமே என்றதற்கு,

35. அவன்: உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரித்தான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு போனானே என்று சொல்லக் கேட்டு,

36. எசாயூ: யாக்கோபு என்னும் பெயர் அவனுக்கு யதார்த்தமே. ஏனென்றால், அவன் இரண்டு முறையும் என்னை வஞ்சனை பண்ணி என்னிடமாகப் புகுந்தான். முன் என் சிரேஷ்ட புத்திரச் சுதந்தரத்தை அபகரித்துக் கொண்டான். இப்போது மறுபடியும் எனக்குரித்தான ஆசீர்வாதத்தையும் அபகரித் திருக்கிறான் என்று சொல்லித் திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்காக வேறொரு ஆசீர்வாதத்தை வைத்துக்கொள்ளவில்லையோ? என்று கேட்டதற்கு,

37. இசாக்: நான் அவனை உனக்கு ஆண்டவனாக ஏற்படுத்தினேன். அவனுக்கு அவன் சகோதரர் யாவரையும் அடிமைப்படுத்தினேன். அவனைத் தானியத்தினாலுந் திராட்ச இரசத்தினாலும் ஸ்திரப்படுத்தினேனே; அது நீங்கலாக என் மகனே! நான் உனக்குச் செய்யத்தக்கது என்னவென,

38. எசாயூ அவனை நோக்கி: அப்பா! உம்மிடம் ஒரே ஆசீர்வாதந்தானா இருக்கிறது? என்னையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறேன் என்றான். எனவே அலறிப் பதறி அழுதான்.

39. இசாக் மனமுருகி: உன் ஆசீர்வாதம் பூமிக் கொழுமையிலும் வானத்திலிருந்து பெய்யும் பனியிலும் இருக்க முடியாது.

* 39-ம் வசனம். யாக்கோபு கிறீஸ்தவர்களுக்கும் எசாயூ யூதர்களுக்கும் குறிப்படையாள முள்ளவர்களாயிருக்கிறார்கள் என்பதினால், அவ்விரண்டு பிரஜைகளில் நடக்கப் போகிற பிரதான வர்த்தமானங்கள் இவ்விருவருக்கும் வசனிக்கப்பட்ட ஆசீர்வாத வாக்கியங்களாலே காட்டப்பட்டிருக்கின்றன.

40. நீ உன் பட்டயத்தினாலே ஜீவனம் பண்ணி உன் தம்பியைச் சேவிப்பாய்; ஆனால் ஒரு காலம் வரும், நீ அவனுடைய (அதிகாரத்தின்) நுகத்தடியை உன் கழுத்தினின்று புரட்டித் தள்ளிவிடுவாய் (என்றான்.)

41. (அதுமுதல்) யாக்கோபு தந்தையுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்ததுபற்றி எசாயூ அவன்பேரில் தீராப் பகையை வைத்திருந்தான். என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் வருமே. அப்போது நான் என் தம்பியாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேனென்று தன் உள்ளத்தில் சொல்லித் தீர்மானம் பண்ணினான்.

42. இவைகள் இரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அவள் தன் மக னாகிய யாக்கோபை அழைப்பித்து: இதோ உன் தமயனாகிய எசாயூ உன்னைக் கொல்லுவதாக மிரட்டிப் பேசினான்;

43. ஆகையால், என் மகனே! நீ என் வார்த்தையைக் கேட்டு எழுந்திருந்து ஆரானூருக்கு என் தமயனாகிய லாபானிடத்தில் ஓடிப்போய், 

44. உன் அண்ணனுடைய கோபம் ஆறு மட்டுங் கொஞ்ச நாளைக்கு அவனிடத்தில் இருக்கக்கடவாயாக;

45. நீ அவனுக்கு விரோதமாய்ச் செய்ததை அவன் மறந்து கோபம் ஆறின பிறகு நான் உனக்குச் சொல்லி அனுப்பி உன்னை அவ்விடமிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்ளுவேன். நான் ஒரே நாளில் என் இரண்டு புத்திரர்களையும் ஏன் இழந்து போகவேண்டும்? என்றாள்.

* 45-ம் வசனம். எசாயூ யாக்கோபைக் கொன்றுபோட்டால் அவன் மரணத் தீர்வைக் குட்படுவான், அல்லது தாய் முகத்திலே விழிக்கத் துணியாமல் பயந்தோடிப்போய்ப் பரதேசத்தில் நாடோடியாய்த் திரிபவனாவான் என்பதினாலே இரெபெக்காள் அவ்வித வாக்கியத்தைச் சொல்லியது சகஜமே.

46. பின்னும் இரெபெக்காள் இசாக்கை நோக்கி: ஏட்டின் குமாரத்திகளினிமித்தம் என் உயிரே எனக்குச் சலிப்பாயிருக்கிறது; யாக்கோபும் இந்தத் தேசத்துப் பெண்ணைக் கொண்டானானால் உயிர் இருந்து ஆவதென்ன என்று சொன்னாள்.