இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 26

இசாக் ஜெரராவுக்குப் போனதும் - தேவன் அவனுக்கு மீண்டும் ஆசீர்வாதங்களைக் கொடுத்ததும் - அபிமெலேக் அவனுடைய பெண்சாதியைப் பிடிக்கச் செய்ததும் - இசாக்குக்கும் அபிமெலேக்குக்கும் நடந்த உடன்படிக்கையும் - எசாயூ விவாகம் பண்ணினதும்.

1. அபிரகாமின் காலத்தில் நெடுநாள் மழை பெய்யாததினாலே அப்பொழுது தேசத்திலே பஞ்சம் உண்டானது கண்டு, இசாக்கென்பவன் பிலிஸ்தீனர் அரசனான அபிமெலேக் என்பவனிடம் போக ஜெரரா வென்னுந் தேசத்திற்குச் சென்றான்.

* 1-ம் வசனம். இந்த அபிமெலேக் முன்னே 22-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அபிமெலேக்காய்தான் இருந்தாலிருக்கும், அல்லது அபிமெலேக் என்கிற பெயர் பரவோன் என்கிற பெயரைப்போலே இராசாவென்று பொருட்படும் பொதுப் பெயராயிருந்தாலும் இருக்கலாம்.

2. அப்போது ஆண்டவர் அவனுக்குத் தரிசனையாகி: நீ எஜிப்து தேசத்துக்குப் போகாமல் நாம் எந்தத் தேசத்தை உனக்குச் சொல்லுவோமோ அந்தத் தேசத்திலே குடியிரு.

3. அதிலே நீ பரதேசியாக வாசம் பண்ணுவாய்; நாம் உனக்குத் துணையாயிருப்போம்; உன்னை ஆசீர்வதிப்போம்; ஏனெனில் உன் தகப்பனாகிய அபிரகாமுக்கு நாமிட்ட ஆணையை நிறைவேற்றி அந்தத் தேசம் முழுமையும் உனக்கும் உன் சந்ததிக்குந் தருவோம்;

4. உன் சந்ததியை வான நட்சத்திரங்களைப் போல வர்த்திக்கச் செய்வோம்; உன் வம்சத்தாருக்கு அந்நாடுகளையெல்லாம் தந்தருளுவோம். பூமியிலுள்ள சகல ஜாதி ஜனங்களும் உன் சந்ததியிலே ஆசீர்வதிக்கப் படுவார்கள்.

* 4-ம் வசனம். கடவுள் அபிரகாமுக்குச் செய்தருளிய வாக்குத்தத்தத்தை இசாக்கோடே புதுப்பித்தருளினார். தேவ சாபத்தை நீக்கித் தேவ அருளை அளிக்க உலகத்தில் எழுந்தருளி வரும் திவ்விய இரட்சகர் அவன் கோத்திரத்திலே தானே பிறப்பார் என்று வசனிக்கிறார். இவ்வாக்குத்தத்தமே பிதாப்பிதாக்களின் பற்பல நடவடிக்கைகளுக்கு நிமித்தமும் விளக்கமுமாயிருக்கிறது.

5. ஏனென்றால், அபிரகாம் நம்முடைய சொல்லுக்கு அமைந்து, நமது விதிகளையும், கற்பனைகளையும் அனுசரித்து, நமது திருச்சடங்குகளையும் பிரமாணங்களையும் நிறைவேற்றி வந்தான் என்று திருவுளம் பற்றி னார்.

6. அந்தப் பிரகாரமே இசாக் ஜெரரா நாட்டிலே குடியிருந்தான்.

7. அவ்விடத்து மனுஷர் அவன் பெண் சாதியைப் பற்றி அவனை விசாரித்தபோது: அவள் என் சகோதரி என்றான். ஏனெனில், அவள் அழகுள்ளவள்; ஆனபடியால் அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தந் தன்னைக் கொல்லுவார்கள் என்று நினைத்து அவள் தன் மனைவியென்று சொல்லத் துணியவில்லை.

* 7-ம் வசனம். 20:11-12 வசனங்களையும், அவைகட்குரிய விவரங்களையும் காண்க. தமிழ்ப் பாஷையில் நாலாங்கால் வரையில் அண்ணன் என்றுந் தங்கை என்றுங் கூப்பிடுகிறதில்லையா?

8. பல தினங்கள் கழிந்தன. பின்பு அவன் அவ்விடத்தில்தானே வாசம் பண்ணிக் கொண்டிருக்கும் நாளில், (ஒரு நாள்) பிலிஸ்தீனரின் அரசனான அபிமெலேக் ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, இசாக் தன் பத்தினியாகிய இரெபெக்காளோடு சரசமாய் விளையாடுகிறதைக் கண்டான்.

9. அப்போதவன் அவனை வரவழைத்து: அவள் உன்னுடைய பெண்சாதி என்று திருஷ் டாந்தமாயிருக்கின்றதே; பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று பொய் சொன்னீர் என்று கேட்டான். அதற்கு அவன்: அவள் நிமித்தம் எனக்குச் சாவு வரும் என்கிற பயத்தினாலேதானென்று பதில் கூற,

10. அபிமெலேக்: நீர் இப்படி எங்களை ஏமாற்ற வேண்டியதென்ன? பிரஜைகளில் யாராகிலும் உன் மனைவியோடு சேர்ந்தானென்று வைத்துக் கொள்ளும்; அப்போது நீர் எங்கள் பேரில் பெரும் பழியல்லோ சுமரப்பண்ணியிருப்பீர் என்றான். இவ்வாறு பேசியான பின்பு அபிமெலேக் எல்லாப் பிரஜைகளுக்கும் கட்டளை செய்தது என்ன வென்றால்:

11. இந்த மனிதனுடைய மனைவியை எவன் தொடுவானோ, அவன் தப்பாதே சாவான் என்று விளம்பரம் பண்ணினான்.

12. இசாக்கோவெனில், அந்த நாட்டிலே விதைவிதைத்தான். ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தபடியால் அந்த வருஷத்தில் நூறு மடங்கான பலனை அடைந்தான்.

13. ஆதலால் (அவ்வுத்தம புருஷன் திரளான திரவியங்களைச் சம்பாதித்ததுமல் லாமல் வர வர அவைகள் பெருகிப் பலுகினபடியால் கடைசியில் அவன் அதிக செல்வாக் குள்ளவனானான்.

14. அதுவுந் தவிர அவனுக்கு ஆட்டு மந் தையும் மாடு முதலிய மந்தைகளும், வீட்டிலே அநேக பணிவிடைக்காரர்களும் இருந்தபடியி னாலே பிலிஸ்தீனர் அவன் பேரில் பொறாமை கொண்டு,

15. அவன் தந்தையாகிய ஆபிரகாமின் வேலைக்காரர் வெட்டியிருந்த கிணறுகள் யா வற்றையும் அவர்கள் ஒருநாள் மண்ணைப் போட்டுத் தூர்த்து விட்டுப் போனார்கள்.

16. (அழுக்காறு எவ்வளவு வளர்ந்து வந்த தெனில்,) அபிமெலேக்குங்கூட இசாக்கை நோக்கி: நீர் எங்களிலும் மகா வல்லமையு டையவராயிருக்கின்றமையால், எங்களை விட்டுப் போனால் தாவிளை என்றான்.

17. அதன்மேல் அவன் புறப்பட்டு ஜெரரா வென்னும் வெள்ளத்தண்டையில் வந்து அவ்விடத்தில்தானே வாசம்பண்ணத் துடங்கினான்.

18. அங்கே அவன் தந்தையாகிய அபிர காமின் வேலைக்காரர் முன்னாளில் வெட்டி யிருந்த வேறு கிணறுகள் (காணப்பட்டன.) அபிரகாம் தேகவியோகமான பிற்பாடு பிலிஸ்தீனர் அவைகளைத் தூர்த்துப் போட் டிருந்தார்கள். அவற்றை இசாக் மறுபடியும் வெட்டி, தன் தகப்பன் அவைகளுக்கு ஏற்கன வே எவ்விதப் பேரிட்டிருந்தாரோ அப்பெயர் களின்படியே தானும் அவைகளுக்குப் பேரிட் டான்.

19. பிறகு அவன் வேலைக்காரர் வெள்ளத் துக் கரையிலே வெட்டி அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.

20. ஆனால் ஜெரராவின் மேய்ப்பர்: இந் தத் தண்ணீர் தங்களுடையது, என்று சொல்லி இசாக்கின் மேய்ப்பர்களோடு சச்சரவு பண்ணினார்கள். இசாக் சம்பவித் ததைப் பற்றி அந்த நீரூற்றுக்கு ஈஅவதூறுடு என்று பெயரிட்டான்.

21. இன்னமும் அவர்கள் வேறொரு கிணற்றை வெட்டினபோது மறுபடியுஞ் சச் சரவு நேரிட்டபடியால், இதற்குப் ஈபகைடு என்று பெயரிட்டான். 

22. அவன் அவ்விடத்தை விட்டு வே றொரு துரவை அப்பாலே வெட்டினான்; இந்த விசை கலகம் ஒன்றும் நேரிடவில்லை, அது நிமித்தம்: ஆண்டவர் இப்பொழுது நம்மை விஸ்தரிக்கச் செய்தனர் என்று சொல்லி, அதற்கு ஈவிசாலம்டு என்று பெயரை இட்டான். 

23. பிற்பாடு அவ்விடத்திலிருந்து பெற்ச பேயுக்குப் போனான்.

24. அன்று இராத்திரியிலே ஆண்டவர் அவனுக்குத் தரிசனையாகி: உன் பிதாவா கிய அபிரகாமின் தேவன் நாமே, அஞ்சா திருப்பாயாக; ஏனென்றால் நாம் உன்னோ டிருக்கிறோம். நாமே உன்னை ஆசீர்வதித்து நமது ஊழியனாகிய அபிரகாமினிமித்தம் உனது சந்ததியைப் பெருகப் பண்ணுவோம் என்றார்.

* 24-ம் வசனம். அக்காலத்தில் மகா புண்ணியவான்களான பிதாப்பிதாக்களுக்குக் கடவுள் பலவிசையும் பலவிதமாகத் தரிசனையாகி, அவர்களைப் பட்சத்துடன் நடத்திக்கொண்டு வந்தது போல் இக்காலத்திலும் நல்ல மனதுள்ள மனிதர்களை அவர் இஸ்பிரீத்துசாந்துவின் உள்ளேவுதல் முதலிய எத்தனங்களாலே நடப்பித்து வருகிறாரென்பது உறுதி. தம்முடைய பிள்ளைகளாகிய பக்தியுள்ள சத்தியவேதத்தாரின் பேரில் அவர் விசேஷ பட்சத்தை வைத்துத் திருச்சபையின் போதனையாலும், தேவத்திரவிய அநுமானங்களாலும், பற்பல ஆச்சரியமான விதத்தினாலும் அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துத் துயரத்தை நீக்கி அவர்களுடைய புண்ணியப் பயிர் தழைத்துக் கிளைத்து விளையப் பண்ணுகிறார்.

25. இதைப்பற்றி இசாக் அங்கு ஒரு பீடத் தைக் கட்டி, ஆண்டவருடைய திருநாமத் தைப் பிரார்த்தித்துத் தன் கூடாரத்தை அடித்தான். பிறகு ஒரு துரவை வெட்டும் படி தன் வேலைக்காரருக்குக் கட்டளை கொடுத்தான்.

26. அபிமெலேக்கும், அவன் சிநேகித னான ஒக்கோஜாத்தும், சேனாதிபதியான பிக்கோலும் ஜெரராவிலிருந்து அவனிடத் திற்கு வந்திருக்கும்போது,

27. இசாக் அவர்களை நோக்கி: நீங்கள் என்னிடம் வருவானேன்? எவனை நீங்கள் விரோதித்து உங்கள் கூட்டத்தினின்று தள்ளிப் போட்டீர்களோ அவன் நான்தானன்றோ? என, 

28. அவர்கள் பிரத்தியுத்தாரமாக: ஆண்ட வர் உம்முடனே இருக்கிறார் என்று கண் டோம். ஆதலால் எங்களுக்கும் உமக்கும் ஆணையிட்டு உடன்படிக்கை உண்டாக வேண் டுமென்று தீர்மானித்தோம்.

29.(எதைக்குறித்தென்று கேட்டால்): நாங்கள் உமக்குரியவைகளில் யாதொன்றை யுந் தொடாமல் உம்மை உபாதிக்கத்தக்க எதையுஞ் செய்யாமல் ஆண்டவருடைய பூரண ஆசீர்வாதத்தை அடைந்த உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டது போல் நீரும் எங்களுக்கு யாதொரு தீமையையுஞ் செய்யாமல் இருப்பீர் என்பதைக் குறித்தே யாம் என்றார்கள்.

30. இதன்மேல் அவன் அவர்களுக்கு ஓர் விருந்து பண்ணி (யாவருஞ்) சாப்பிட்டுங் குடித்தும் ஆனபின்பு,

31. அதிகாலையில் இவர்கள் எழுந்து ஒரு வருக்கொருவர் சத்தியம்பண்ணிக் கொடுத் தார்கள். பிறகு இசாக் அவர்களைத் தங்கள் இடத்திற்குச் சமாதானத்துடன் அனுப்பி விட்டான்.

32. அதே நாளில் இசாக்கின் வேலைக்காரர், தாங்கள் வெட்டியிருந்த துரவைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து: (ஐயா) தண்ணீரைக் கண்டோம் என்றார்கள்.

33. ஆதலால் அவன் அதற்கு ஈமிகுதிடு யென்று பெயரையிட்டான்; அந்நகருக்கும் பெற்சபே என்னும் பெயர் அந்நாள்முதல் இந்நாள்வரை வழங்கிவருகிறது.

34. அது நிற்க எசாயூ நாற்பது வயதான போது, ஏட் ஊரிலிருந்த பேறி என்பவனின் புத்திரியாகிய ஜூதீத்தையும், மேற்படி ஊரில் (குடியிருந்த) எலோனின் குமாரத்தியாகிய பசெமாத்தையும் விவாகம்பண்ணிக் கொண்டான்.

35. அவர்கள் இருவரும் ஏற்கனவே இசாக்குக்கும் இரெபெக்காளுக்கும் மனம் நோகச் செய்திருந்தார்கள்.

* 35-ம் வசனம். அவ்விரு ஸ்திரீகள் கானான் நாட்டுக்காரிகளும் விக்கிரக ஆராதனைக் காரிகளுமாய் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை விவாகம் பண்ணுதல் குற்றமா யிருந்ததுமன்றி அவர்களைக் கொள்வதற்கு முன் எசாயூ சகோதரனிடம் யோசனை பண்ணாமலும் சம்மதம் கேளாமலும் விட்டமையால், இசாக் இரெபெக்காள் இருவரும் கஸ்திப்பட்டார்கள்.