இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 23

கிறீஸ்துநாதருடைய பாடுகளின் தொடர்ச்சி.

1. அப்பொழுது அவர்களுடைய கூட்டமெல்லாம் எழுந்திருக்க, அவர்கள் அவரைப் பிலாத்துவினிடத்தில் கூட்டிக் கொண்டுபோய்: 

2. இவன் எங்களுடைய ஜனத்தை அடியோடு கலக்குகிறதையும், செசாருக்கு வரி செலுத்தவேண்டாமென்று விலக்குகிறதையும், தன்னைக் கிறீஸ்துவாகிய இராஜா என்று சொல்லுகிறதையும் கண்டோமென்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். (மத். 22:21; மாற். 12:17.)

* 2. செசாருக்கு வரி:- லூக். 20-ம் அதி. 25-ம் வசன வியாக்கியானம் காண்க.

3. பிலாத்து அவரைப் பார்த்து நீ யூதருடைய இராஜாவோ என்று கேட் டான். அவரோ மறுமொழியாக: நீரே சொல்லுகிறீர் என்றார். (அரு. 18:33; மத். 27:11; மாற். 15:2.)

4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், ஜனங்களையும் நோக்கி: நான் இந்த மனுஷனிடத்திலே ஒரு குற்றத்தையுங் காணேன் என்று சொல்ல,

5. அவர்கள் அதிக உக்கிரமத்தோடு: இவன் கலிலேயாநாடு தொடங்கி இவ் விடம் மட்டும், யூதேயா தேசமெங்கும் போதித்துக்கொண்டு, ஜனத்தைக் கலகப் படுத்துகிறான் என்றார்கள்.

6. ஆனால் கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டவுடனே, இந்த மனிதன் கலிலேயனோ என்று வினாவி,

7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்கு உட்பட்டவரென்று அறிந்து, அந்நாட் களிலே ஜெருசலேமில் வந்திருந்த ஏரோ தினிடத்திற்கு அவரை அனுப்பினான்.

8. ஏரோது சேசுநாதரைக் கண்டு மிகவுஞ் சந்தோஷப்பட்டான். ஏனெ னில் அவரைக்குறித்து அநேக காரியங் களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவர் ஏதேனும் புதுமை செய்வதைக் காணலாமென்று நம்பியிருந்ததினா லும், அவரைப் பார்க்கும்படி நெடு நாளாய் ஆசித்திருந்தான்.

9. ஆதலால் அவன் அநேக விஷயங்களைக் குறித்து அவரிடத்தில் கேட் டான். ஆயினும் அவர் அவனுக்கு ஒரு பதிலுஞ் சொல்லவில்லை.

10. பிரதான ஆசாரியரும், வேதபார கரும் ஓயாமல் அவர்மேல் குற்றஞ் சாட்டிக்கொண்டே நின்றார்கள்.

11. அப்பொழுது ஏரோது தன் ராணுவத்தோடுகூட அவரை நிந்தித்து, அவருக்கு ஒரு வெள்ளை வஸ்திரத்தை உடுத்திப் பரிகாசம்பண்ணி அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்தில் அனுப்பி னான்.

12. முன் ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருந்த ஏரோதும், பிலாத்தும் அன்றைக்கே சிநேகிதரானார்கள்.

13. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூட்டமாயழைத்து,

14. அவர்களை நோக்கி: ஜனங்க ளைக் கலகப்படுத்துகிறவனாக இந்த மனிதனை என் வசத்தில் ஒப்புவித்தீர்கள். ஆயினும் இதோ, நான் உங்கள் முன்பாக விசாரனை செய்தும், நீங்கள் இவன் மேலே சாட்டுகிற குற்றங்களில் ஒன்றை யும் இவனிடத்தில் காணவில்லை. (அரு. 18:38; 19:4.)

15. ஏரோது முதலாய் ஒன்றும் காணவில்லை; அவரிடத்தில் உங்களை நான் அனுப்பினேன். ஆயினும் இதோ, மரணத்துக்குரியதொன்றும் இவனுக்குச் செய்யப்படவில்லை.

16. ஆதலால் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன் என்றான்.

17. ஏனெனில் பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை விடுதலையாக்குவது அவனுக்கு அவசியமாயிருந்தது.

18. அப்படியிருக்க: இவனை நீக்கி, பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று ஜனக்கூட்டமெல்லாம் ஒருப் படக் கூவினது. (மத். 27:16; அரு. 18:40.)

19. அந்தப் பரபாயஸன்பவன் பட்டணத்திலே நடந்த ஓர் கலாபத்தையும் கொலைபாதகத்தையும்பற்றிச் சிறையில் போடப்பட்டிருந்தான்.

20. ஆயினும் பிலாத்து சேசுநாதரை விடுதலையாக்க மனதாயிருந்து மறுபடி யும் அவர்களிடத்தில் பேசினான்.

21. ஆனால் அவர்கள்: இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று திரும்பத் திரும்பக் கூக்குரலிட்டார்கள்.

22. அவன் மூன்றாமுறையும் அவர்களைப்பார்த்து: இவன் என்ன பொல்லாப்பு செய்தான்? மரணத்துக்கு ஏதுவான ஒரு குற்றமும் இவனிடத்தில் காணேன். ஆகையால் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன் என்றான். (மத். 27:23; மாற். 15:14.)

23. என்றாலும், அவர்கள் பேரிரைச்சலிட்டு, அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று சலஞ்சாதித்துக் கேட்டுக்கொண்டு நின்றார்கள். அவர்களுடைய கூக்குரல்களும் மென்மேலும் உக்கிரமமானது.

24. ஆகையால் அவர்களுடைய விண் ணப்பம் நிறைவேறவேண்டுமென்று பிலாத்து தீர்மானித்து,

25. கலாபத்தையும் கொலைபாதகத்தையும்பற்றிச் சிறைச்சாலையில் போடப் பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே விடுதலையாக்கி, சேசு நாதரை அவர்களுடைய இஷ்டத்துக்குக் கையளித்தான்.

26. அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போகும்போது, கிராமத்திலிருந்து வருகிற சீரேனேயூரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவனைப் பிடித்து, சேசுநாதருக்குப்பின்னால் சிலுவையைச் சுமக்கும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். (மத். 27:32; மாற். 15:21.)

27. அப்பொழுது ஜனங்களும் அவரைப்பற்றிப் புலம்பி அழுகிற ஸ்திரீ களும் பெருங்கும்பலாய் அவரைப் பின்சென்று போனார்கள்.

28. சேசுநாதரோவெனில் அவர்கள் முகமாய்த் திரும்பி, திருவுளம்பற்றின தாவது: ஜெருசலேம் குமாரத்திகளே, என்னைப்பற்றி அழாமல், உங்களையும் உங்கள் மக்களையும்பற்றி அழுங்கள்.

29. அதேனென்றால் மலடிகள் பாக் கியவதிகளென்றும், பிள்ளைபெறாத உதரங்களும் பாலூட்டாத கொங்கை களும் பாக்கியம் பெற்றவைகளென்றுஞ் சொல்லப்படும் நாட்கள் இதோ வரும்.

30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மூடிக்கொள் ளுங்களென்றும் சொல்லத் துவக்குவார்கள். (இசை. 2:19; ஓசே. 10:8; காட்சி. 6: 16.)

31. ஏனெனில் பச்சை மரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்ட மரத்துக்கு என்ன ஆகும் என்றார்.

32. அன்றியும் குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடு கூடக் கொலைப்படும்படி கூட்டிக்கொண்டு போகப்பட்டார்கள்.

33. அவர்கள் கபால ஸ்தலமென்னும் இடத்திலே சேர்ந்தபின், அங்கே அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர்களை யுஞ் சிலுவையில் அறைந்தார்கள். (மத். 27:33; மாற். 15:22; அரு. 19:17.)

34. அப்பொழுது சேசுநாதர்: பிதா வே! இவர்களுக்கு மன்னித்தருளும், ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்ன தென்று அறியாதிருக்கிறார்கள் என்றார். அவர்களோ அவருடைய வஸ்திரங்க ளைப் பங்கிட்டு, அவைகளின்மேல் சீட்டுப்போட்டார்கள். (மத். 5:44; அரு. 19:24.)

35. அப்போது ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடுகூட அதிகாரிகளும் அவரைப் பரிகாசஞ்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தானே, இவன் சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறீஸ்துவா னால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள்.

36. போர்ச்சேவகரும், அவரிடத்தில் நெருங்கி, அவருக்குக் காடியைக் கொடுத்து,

37. நீ யூதருடைய இராஜாவானால் உன்னை இரட்சித்துக்கொள் என்று சொல்லி, அவரைப் பரிகாசம் பண்ணினார்கள்.

38. இவன் யூதருடைய இராஜா என்று கிரேக்க, லத்தீன், எபிரேய எழுத்துக் களில் எழுதப்பட்ட பட்டயமும் அவ ருக்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது.

39. அல்லாமலுஞ் சிலுவையில் தொங் கின கள்ளர்களில் ஒருவன் அவரைத் தூஷணித்து: நீ கிறீஸ்துவானால் உன் னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்றான்.

40. மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து: நீயும் இந்த ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாயிருந்தும், சர்வேசுரனுக்குப் பயப்படுகிறதில்லை யோ?

41. நமக்கு இது நியாயந்தான். நம் முடைய செய்கைகளுக்குத் தக்க சம்பா வனையைப் பெறுகிறோம். இவரோ ஒரு பொல்லாப்புஞ் செய்தவரல்ல என்று சொல்லி,

42. சேசுநாதரை நோக்கி: சுவாமி, தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தரு ளும் என்று விண்ணப்பம் பண்ணினான்.

43. சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடுகூடப் பரகதியிலி ருப்பாயென்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

44. அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது. ஒன்பதாம் மணிவரையில் பூமண்டலமெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

45. அப்பொழுது சூரியனும் இருண் டு போயிற்று, தேவாலயத்தின் திரைச் சீலையும் நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

46. சேசுநாதரோ உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி உயிர்விட்டார். (சங். 30:5.)

47. அப்பொழுது சம்பவித்ததைச் செந்தூரியன் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தாரென்று சர்வேசுரனை ஸ்துதித்தான்.

48. இந்தக் கண்ணராவியைப் பார்க் கும்படி வந்திருந்த ஜனங்களெல்லாரும் நடந்தவைகளைக் கண்டு, தங்கள் மார்பில் அறைந்துகொண்டு திரும்பிப் போனார்கள்.

49. அவருக்கு அறிமுகமாயிருந்த சகலரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்சென்றுவந்த ஸ்திரீகளும் தூரத்தில் நின்று, இவைகளைப் பார்த்துக்கொண் டிருந்தார்கள்.

50. அப்பொழுது இதோ, யோசேப்பு என்னும் ஒருவரிருந்தார். இவர் சங்கத்தைச் சேர்ந்தவரும் நல்லவரும் நீதிமானு மாயிருந்தார். (மத். 27:57; மாற். 15:43; அரு. 19:38.)

51. இவர் யூதர்களுடைய ஆலோச னைக்கும் செய்கைகளுக்கும் உடன்பட்டவரல்ல; யூதேயாவின் ஒரு பட்டண மாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவரும், சர்வேசுரனுடைய இராச்சியத்துக்கு எதிர்பார்த்திருந்தவருமாகிய இவர்,

52. பிலாத்துவினிடத்தில் போய், சேசுநாதருடைய சரீரத்தைக் கேட்டு,

53. அதை இறக்கிப் பரிவட்டத்தினால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டதும் அதுவரையில் ஒருவனும் க்ஷேமிக்கப்படாததுமான ஒரு கல்லறையில் அவரை க்ஷேமித்தார்.

54. அந்த நாள் ஆயத்த நாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பிக்கிற வேளையாயிருந்தது.

55. கலிலேயாவிலிருந்து அவருட னேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின் தொடர்ந்து, கல்லறையையும் அதிலே சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்துக்கொண்டிருந்து,

56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் முஸ்திப்புச் செய்து, ஓய்வுநாளில் கற்பனையின்படியே ஓய்ந்திருந்தார்கள்.