இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 22

கிறீஸ்துநாதருடைய பாடுகளின் வரலாறு.

1. அப்பொழுது பாஸ்கா என்னப்பட்ட புளியாத அப்பப்பண்டிகை சமீபித்திருந்தது. (மத். 26:2; மாற். 14:1.)

* 1. மத். 26-ம் அதி. 17-ம் வசன வியாக்கியானம் காண்க.

2. பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் சேசுநாதரை எப்படிக் கொலை செய்யலாமென்று வழிதேடிக்கொண் டிருந்தார்கள். ஆயினும் ஜனத்துக்குப் பயந்திருந்தார்கள்.

3. அப்படியிருக்க, பன்னிருவரில் ஒரு வனான இஸ்காரியோத் என்னப்பட்ட யூதாஸிடத்தில் சாத்தான் புகுந்தான். ( அரு. 13:2.)

4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் போய் தான் அவரை எவ்விதமாய் அவர்களுக்குக் காட்டிக்கொடுப்பதென்று அவர்களோடு பேசினான்.

5. அதனாலே அவர்கள் சந்தோஷப் பட்டு, அவனுக்குப் பணங் கொடுக்க ஒப்பந்தஞ்செய்தார்கள். (மத். 26:14.)

6. அவனும் வாக்குக்கொடுத்து, ஜனக்கூட்டமில்லாதவேளையில், அவரைக் காட்டிக்கொடுக்கும்படி சமயந் தேடிக்கொண்டிருந்தான்.

7. அப்பொழுது பாஸ்காவைப் பலியிடவேண்டிய புளியாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.

8. சேசுநாதர் இராயப்பரையும், அருளப்பரையும் அனுப்பி: நாம் பாஸ்காவை உண்ணும்படிக்கு நீங்கள் போய், அதை ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

* 8. பாஸ்காப் பண்டிகையிலே ஒரு செம்மறிப் புருவையைப் பலியிடவேண்டுமென்று சர்வேசுரன் யூதர்களுக்குக் கற்பித்திருந்தார் (லேவி. 1:2-5.). அந்தச் செம்மறிப்புருவை சேசுநாதருக்கு அடையாளமுமாய் அந்தப் பலியானது சேசுநாதர் கபாலமலையில் செலுத்தும் பலிக்கு அடையாளமுமாய் இருந்ததென்று வேதபாரகர் எல்லாரும் ஒருவாய்ப்பட ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

9. அதற்கு அவர்கள்: நாங்கள் எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்க,

10. அவர் அவர்களை நோக்கிச் சொன்னதாவது: இதோ நீங்கள் பட்டணத்தில் பிரவேசிக்கையில் தண்ணீர்க் குடஞ் சுமந்து வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; அவன் பிரவேசிக்கும் வீட்டுக்குள் நீங்களும் அவனைப் பின்சென்று போய்,

11. அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீஷர்களோடுகூட பாஸ்காவை உண்ணும்படியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

12. அப்பொழுது அவன் விசாலமும் சிறந்ததுமான ஓர் அசனசாலையை உங்களுக்குக் காண்பிப்பான். அதிலே நீங்கள் ஆயத்தஞ் செய்யுங்கள் என்றார்.

13. அவர்களும் போய், அவர் தங்களுக்குச் சொன்னபடியே கண்டு, பாஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள்.

14. பின்பு நேரமானபோது, அவரும் அவரோடுகூடப் பன்னிரு அப்போஸ்தலரும் பந்தியமர்ந்தார்கள். (மத். 26:20; மாற். 14:17.)

15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுவதற்கு முன்னே இந்தப் பாஸ்காவை உங்களோடுகூட உண்ணும்படி ஆசைமேல் ஆசையாயிருந்தேன்.

16. ஏனெனில் இந்நேரமுதல் இது சர்வேசுரனுடைய இராச்சியத்தில் நிறைவேறுமளவும், நான் இதை உண்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

17. பின்னும் அவர் பாத்திரத்தை எடுத்து, நன்றியறிந்த தோத்திரஞ் செய்து திருவுளம்பற்றினதாவது: இதை நீங்கள் வாங்கி, உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள் ளுங்கள்.

18. ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் வருமளவும், நான் திராட்ச ரசத்தைப் பானம்பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

* 18. இனி நான் பானம்பண்ணுவதில்லை:- இந்த வாக்கியத்தை சேசுநாதர்சுவாமி தேவநற்கருணையை உண்டாக்கினபின் உரைத்ததாக அர்ச். மத்தேயு எழுதியிருக்கிறார். ஆகையால் இதை ஆண்டவர் இருமுறை உரைத்தாரென்று சொல்ல இடமுண்டாமே.

19. பின்னும் அவர் அப்பத்தை எடுத்து, நன்றியறிந்த தோத்திரஞ் செய்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என் சரீரம், என் நினைப்புக்காக இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி. 11:24; மத். 26:26-28.)

20. இந்தப்பிரகாரமாய் அசனத்துக்குப்பின், பானபாத்திரத்தையும் (எடுத்துக்கொடுத்து): இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தில் புது உடன்படிக்கையாயிருக் கிறது என்றார்.

21. ஆயினும் இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னோடு மேசையிலிருக்கிறது. (மத். 26:21; மாற். 14:20; அரு. 13:18.)

22. மனுமகன் (தம்மைக்குறித்து) நிரூபிக்கப்பட்டபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனிதனால் காட்டிக் கொடுக்கப்படுவாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ கேடு! என்றார். (சங். 40:10.)

23. அப்பொழுது அவர்கள்: நம்மில் எவன் இப்படிச் செய்யப்போகிறானென்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.

24. அல்லாமலும் தங்களில் அதிக பெரியவனாகக் காணப்படுகிறவன் யார் என்று அவர்களுக்குள்ளே ஓர் வாக்குவாதம் உண்டாயிற்று.

25. சேசுநாதரோ அவர்களை நோக்கி: புறஜாதியாருடைய இராஜாக்கள் அவர் கள்மேல் மேட்டிமையுடன் அதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்கள்மேல் அதி காரமுள்ளவர்களும் உபகாரிகளென்று அழைக்கப்படுகிறார்கள். (மத். 18:1-4.)

26. ஆனால் நீங்கள் அப்படியல்ல; உங்களுக்குள்ளே பெரியவனாயிருக்கிறவன் சிறியவனாகவும், தலைமையாயிருக்கிறவன் பணிவிடைக்காரனாகவும் இருக்கக்கடவானாக.

27. ஏனெனில் பந்தியிலிருக்கிறவ னோ, பணிவிடை செய்கிறவனோ எவன் பெரியவன்? பந்தியிலிருக்கிறவனல்லவா? ஆயினும் உ.

28. எனக்கு நேரிட்ட சோதனைகளிலே என்னோடு நிலைநின்றவர்கள் நீங்களே.

29. என் பிதாவானவர் எனக்கு இராச் சியத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

30. அதனிமித்தம் நீங்கள் என் இராச் சியத்திலே என் மேசையில் போசன பானம் பண்ணுவதுமன்றி, இஸ்ராயே லின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நடுத்தீர்க்கிறவர்களாய்ச் சிம்மாசனங் களில் உட்காருவீர்கள் என்றார்.

31. மீளவும் ஆண்டவர் திருவுளம்பற்றினதாவது: சீமோனே சீமோனே, இதோ உங்களைக் கோதுமையைப் போல புடைக்கும்படி சாத்தான் கேட்டுக் கொண்டான்.

* 31. இவ்வாக்கியத்தில் சொல்லியிருக்கிறபடியே, மனிதரைச் சோதிக்கிறதற்கு முதலாய்ப் பசாசு சர்வேசுரனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறது. நல்லவர்களுடைய புண்ணியம் விளங்கவும், அவர்களைத் தாழ்ச்சியில் உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு மோட்ச சம்பாவனையைப் பெருகப்பண்ணவும் சர்வேசுரன் அவர்களைச் சோதிக்கும்படி பசாசுக்கு உத்தரவு கொடுக்கிறார். சோதனையானது கெட்டவர்களுக்குத் தண்டனையாகவும், அவர்களுடைய ஆங்காரத்தைத் தாழ்த்தவும், நல்லவர்களுக்குப் பயனாகவும் உதவுகிறபடியினாலே பசாசு அவர்களை சோதிக்கும்படி ஆண்டவர் விடைகொடுக்கிறார்.

32. நானோ உன் விசுவாசம் தளராதபடி உனக்காக வேண்டிக்கொண்டேன். ஆகையால் நீ ஒருதரம் மனந்திரும்பினபின்பு, உன் சகோதரரை உறுதிப்படுத்து என்றார்.

* 32. இவ்வாக்கியத்தினாலே அர்ச். இராயப்பர் திருச்சபைக்குத் தலைவராயிருந்து மற்ற அப்போஸ்தலர்களையும் நடப்பிக்க அதிகாரம் பெற்றவரென்று தெளிவாய் அறிந்துகொள்ளலாம்.

33. அதற்கு அவர்: ஆண்டவரே, உம்மோடுகூட சிறைச்சாலைக்கும் மரணத்துக்கும் உள்ளாக ஆயத்தமாயிருக்கிறேன் என்று சொல்ல,

34. சேசுநாதர் அவரை நோக்கி: இராயப்பா, நீ என்னை அறியேனென்று மும்முறை மறுதலிப்பதற் குள்ளாக இன்று சேவல் கூவாதென்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர்களைப் பார்த்து: (மத். 26:34; மாற். 14:30.)

35. நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் பாதரட்சைகளுமில்லாமல் அனுப்பினபோது, ஏதேனும் உங்களுக்குக் குறைவாயிருந்ததோ என்க, (மத். 10:9.)

36. அவர்கள்: ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். அப் பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்பொழுதோ, பணப்பையை உடையவன் அதை எடுத்துக்கொள்வானாக; அப்படியே சாமான் பையையும் எடுத்துக்கொள்வானாக; பட்டயம் இல்லாத வனும் தன் அங்கியை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளக்கடவான்.

*36. லூக். 10-ம் அதி. 4-ம் வசன வியாக்கியானம் காண்க.

37. ஏனெனில் அக்கிரமிகளோடு எண்ணப்பட்டாரென்று எழுதப்பட்டிருக்கிற இந்த வாக்கியமும் என்னிடத்தில் நிறைவேறவேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதே தெனில் என்னைப்பற்றியவைகள் முடி வடைகின்றன என்றார். (இசை. 53:12.)

38. அப்பொழுது அவர்கள்: ஆண்ட வரே, இதோ இங்கே இரண்டு பட்டய மிருக்கின்றது என்றார்கள். அவரோ: போதும் என்று அவர்களுக்குச் சொன் னார்.

39. பின்னும் அவர் வெளியே புறப் பட்டுத் தம்முடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார். சீஷர்களும் அவரைப் பின்சென்று போனார்கள். (மத். 26:36; மாற். 14:32; அரு. 18:1.)

40. அவர் அவ்விடத்தில் சேர்ந்தபோது அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி,

41. தாம் அவர்களிடத்தினின்று கல்லெறிதூரம் பிரிந்துபோய், முழந்தாட்படியிட்டு வேண்டிக்கொண்டதாவது: (மத். 26:39; மாற். 14:35.)

42. பிதாவே தேவரீருக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கப்பண்ணியருளும்; ஆகிலும் என் மனதின்படியல்ல, உம்முடைய மனதின்படியே ஆகட்டும் என்றார்.

43. அப்பொழுது பரலோகத்தினின்று ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றி, அவரைத் தேற்றினார். அவரோ அவஸ் தையாகி, வெகுநேரம் ஜெபித்துக்கொண் டிருக்கையில்,

44. அவருடைய வேர்வை இரத்தத் துளிகளைப்போல நிலத்தில் விழுந்தது.

45. பிற்பாடு அவர் ஜெபத்தினின்று எழுந்து, தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித் திரை செய்கிறதைக்கண்டு,

46. அவர்களைநோக்கி: நீங்கள் நித்திரை செய்வானேன்? எழுந்திருந்து, சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபஞ் செய்யுங்கள் என்றார்.

47. அவர் இன்னம் பேசிக்கொண்டிருக்கையில், இதோ ஜனக்கூட்டந் தோன்றினது. அன்றியும் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர் களுக்கு முன்னாக நடந்து, சேசுநாதரை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் நெருங்கினான். (மத். 26:47; மாற். 14:43-45; அரு. 18:3.)

48. சேசுநாதரோ அவனைப் பார்த்து: யூதாஸே, முத்தமிட்டோ மனுமகனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

49. அப்பொழுது அவரைச்சுற்றியிருந்தவர்கள் சம்பவிக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, வாளால் வெட்டுவோமா? என்று கேட்க,

50. அவர்களில் ஒருவர் பெரிய குருவினுடைய ஊழியனைத் தாக்கி, அவனுடைய வலது காதற வெட்டினார்.

51. ஆனால் சேசுநாதர் மாறுத்தாரமாக: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு அவனைச் சொஸ்தமாக்கினார்.

52. பிற்பாடு சேசுநாதர் தம்மைப் பிடிக்கவந்த பிரதான ஆசாரியர்களை யும் தேவாலயத்தின் அதிகாரிகளையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு கள்ள னைப் பிடிக்கவருவதுபோலக் கத்தி களோடும் தடிகளோடும் வந்தீர்களோ?

53. நான் நாள்தோறும் தேவாலயத்தில் உங்களோடிருக்கையில், நீங்கள் என்னைப் பிடிக்கும்படி கைநீட்டவில்லை. ஆனால் இதுவே உங்கள் நேரமும் இருளின் வல்லமையுமாயிருக்கிறது என்றார்.

* 53. இருள் என்னும் வார்த்தையினாலே அக்கிரமிகளும், பசாசுகளும் குறிக்கப் படுகிறார்கள்.

54. அவர்கள் அவரைப் பிடித்து, பெரிய குருவின் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோனார்கள். இராயப்பரோ தூரத்திலே பின்சென்றார். (மத். 26:57; மாற். 14:53; அரு. 18:24.)

55. பின்பு அவர்கள் முற்றத்தின், நடு வில் நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி லும் உட்கார்ந்துகொண்டிருக்கையில், இராயப்பரும் அவர்கள் மத்தியிலிருந்தார். (மத். 26:69; மாற். 14:66; அரு.18:25)

56. அவர் நெருப்பண்டையில் உட்கார்ந்திருக்கிறதை ஒரு வேலைக்காரி கண்டு, அவரை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.

57. அதற்கு அவர்: ஸ்திரீயே, அவனை அறியேனென்று சொல்லி மறுதலித்தார்.

58. சற்றுநேரத்துக்குப் பின்பு, வே றொருவன் அவரைக் கண்டு நீயும் அவர்களில் ஒருவன் என்றான். ஆனால் இராயப்பர்: ஒ மனிதனே, நான் அல்ல என்றார்.

59. அதற்குமேல் இடையில் ஏறக்குறைய ஒருமணி நேரமான பின்பு வேறொருவன்: நிச்சயமாய் இவனும் அவனோடிருந்தவன், ஏனெனில் இவன் கலிலேயன் என்று சாதித்தான்.

60. அதற்கு இராயப்பர்: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றார். அவர் இன்னம் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையிலே சேவல் கூவிற்று.

61. அப்பொழுது கர்த்தர் திரும்பி இராயப்பரைக் கண்ணோக்கிப் பார்த்தார். இராயப்பரும்: சேவல் கூவுமுன் மும்முறை என்னை மறுதலிப்பா யென்று ஆண்டவர் சொல்லியிருந்த வாக்கியத்தை நினைத்துக்கொண்டு, (மத். 26:34; மாற். 14:30; அரு.13:38.)

62. உடனே வெளியிற் புறப்பட்டுப்போய், மனங்கசந்து அழுதார்.

63. சேசுநாதரைப் பிடித்த மனிதர் களோவெனில் அவரை அடித்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

64. அவருடைய கண்களையுங் கட்டி அவரை முகத்திலும் அறைந்து: உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாய்ச் சொல்லென்று அவரை வினாவி,

65. இவை முதலான அநேக காரியங்களை அவருக்கு விரோதமாய்ச் சொல்லி, தூஷணித்துக்கொண்டிருந்தார்கள்.

66. மீளவும் பொழுது விடிந்தவுடனே ஜனத்தின் மூப்பர்களும் பிரதான ஆசாரி யர்களும் வேதபாரகர்களுங் கூடி, அவரைத் தங்கள் சங்கத்தின் முன்பாகக் கொண்டுபோய்: நீ கிறீஸ்துவானால், எங்களுக்குச் சொல் என்றார்கள். (மத். 27:1; மாற். 15:1.)

67. அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொல்வேனாகில், நீங்கள் என்னை விசுவசிக்கவுமாட்டீர்கள்;

68. நான் உங்களை வினாவுவேனாகில் எனக்குப் பதில் சொல்லவுமாட்டீர் கள்; என்னைப் போகவிடவுமாட்டீர்கள்.

69. ஆகிலும் இதுமுதல் மனுமகன் சர்வேசுரனுடைய வல்லப வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருப்பார் என்றார்.

70. அப்பொழுது எல்லோரும் அவ ரைப் பார்த்து: ஆகையால் நீ சர்வேசுர னுடைய சுதனோ என்று கேட்க, சேசுநா தர்: நீங்களே சொல்லுகிறீர்கள் என்றார்.

71. அதற்கு அவர்கள்: இன்னும் நமக்குச் சாட்சிவேண்டுவதென்ன? அவன் வாயாலே நாம் கேட்டோமே என்றார்கள்.