இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 20

திராட்சத் தோட்டக்காரருடைய உவமையும், இராயனுக்கு வரிசெலுத்த வேண்டுமென்பதும், மாம்ச உத்தானமும், பேராசையுள்ள வேதபாரகர்மட்டில் எச்சரிக்கையும்.

1. பின்பு ஒருநாள் அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்துச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண் டிருந்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகர்களும் மூப்பர்களோடு கூடி வந்து, (மத். 21:23; மாற்.11:27, 28.)

2. அவரை நோக்கிக் கேட்டதாவது: நீர் எந்த அதிகாரத்தைக்கொண்டு இவைகளைச் செய்கிறீர்? அல்லது இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார் கள்.

3. சேசுநாதர் அவர்களுக்கு மாறுத்தாரமாக: நானும் உங்களை ஒரு வார்த்தை கேட்பேன். எனக்குப் பதில் சொல்லுங்கள் :

4. அருளப்பருடைய ஞானஸ்நானம் மோட்சத்திலிருந்து உண்டானதோ, மனிதர்களால் உண்டானதோ என்றார்.

5. அவர்களோ தங்களுக்குள் ஆலோ சித்து: நாம் மோட்சத்திலிருந்து உண்டானது என்போமாகில், நீங்கள் ஏன் அவரை விசுவசியாதிருந்தீர்கள் என்பார்.

6. மனிதர்களால் உண்டானது என் போமாகில், ஜனமெல்லாம் நம்மைக் கல்லாலெறியும். ஏனெனில் அருளப் பரைத் தீர்க்கதரிசியென்று அவர்கள் நிச்சயித்திருக்கிறார்கள் என்று சொல்லி:

7. அது எங்கேயிருந்து உண்டாயிற் றோ, எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.

8. ஆதலால் சேசுநாதர் அவர்களை நோக்கி: நானும் எந்த அதிகாரத்தைக் கொண்டு இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

9. மேலும் அவர் ஜனங்களுக்குப் பின்வரும் உவமையைச் சொல்லத் தொடங்கினார். அதாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சத் தோட்டத்தை நட்டு, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகையாகக் கொடுத்து, வெகுகாலம் புறதேசத்துக்குப் போயிருந்தான். (மத். 21:33; மாற். 12:1.)

10. ஆயினும், பருவகாலத்திலே குடி யானவர்கள் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தனக்கு (பாகம்) கொடுக்கும் படி அவர்களிடத்தில் ஒரு ஊழியனை அனுப்பினான். அவர்களோ அவனை அடித்து, வெறுமனே அனுப்பிவிட்டார் கள்.

11. மறுபடியும் அவன் வேறொரு ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி ஒன்றுங்கொடாமல் அனுப்பிவிட்டார் கள்.

12. அவன் மூன்றாந்தரமும் ஒருவனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.

13. அப்பொழுது திராட்சத் தோட்டத்து எஜமான் சொன்னதாவது: நான் என்ன செய்வேன்? என் நேசகுமாரனை அனுப்புவேன்; இவனையாவது அவர்கள் கண்டு, ஒருவேளை அஞ்சுவார்கள் என்றான்.

14. குடியானவர்களோ இவனைக் கண்டபோது: இவனே சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும் பொருட்டு, இவனைக் கொன்றுபோடுவோமாக என்று சொல்லி தங்களுக்குள்ளே யோசித்துக்கொண்டு,

15. அவனைத் திராட்சத் தோட்டத்துக்குப் புறம்பேதள்ளிக் கொன்று போட்டார்கள். ஆகையால் அந்தத் திராட்சத் தோட்டத்து எஜமான் அவர்களுக்கு என்ன செய்வான்?

16. அவன் வந்து, அந்தக் குடியானவர்களைச் சங்கரித்து, திராட்சத் தோட் டத்தை வேறே ஆட்களிடத்தில் கொடுப் பான் என்றார். இதைக் கேட்டு அவர்கள்: சுவாமி இரட்சிக்க! என்றார்கள்.

17. சேசுநாதரோ அவர்களை ஏறெடுத்துப் பார்த்து: அப்படியானால், கட்டு கிறவர்களாலே ஆகாதென்று தள்ளப் பட்ட கல்லே மூலைக்கு முதன்மையான கல்லாயிற்று என்று எழுதப்பட்டதின் கருத்தென்ன? (மத். 21:42; இசை. 28:16; சங். 117:22.)

18. அந்தக் கல்லின்மேல் விழுகிற எவனும் நொறுங்குண்டு போவான்; அது எவன்மேல் விழுமோ, அவனைத் தூளாக்கிப்போடும் என்றார்.

* 16-18. இந்த உவமைக்கு மத். 21-ம் அதி. 33,41,42-ம் வசன வியாக்கியானம் காண்க.

19. ஆதலால் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர் இந்த உவமையைத் தங்களைக் குறித்தே சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகை தேடினார்கள். என்றாலும் ஜனங்களுக்கு அஞ்சியிருந்தார்கள்.

20. பின்னும் அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அவரைக் கையளிக்கவேண்டுமென்று, பேச்சிலே அவரைக் குற்றம்பிடிக்கும்படியாகத் தங்களை நீதிமான்களாகப் பாசாங்கு செய்யும் வஞ்சகரை (அவரிடத்தில்) அனுப்பினார்கள். (மத். 22:15; மாற். 12:13)

21. ஆதலால் அவர்கள் அவரை வினாவி: போதகரே, நீர் சரியாய்ப் பேசி, உபதேசிக்கிறீரென்றும், முகத்தாட்சணி யமில்லாமல் சர்வேசுரனுடைய மார்க் கத்தை உண்மையாய்ப் போதிக்கிறீ ரென்றும் அறிந்திருக்கிறோம்.

22. செசார் இராயனுக்கு நாம் வரி செலுத்துவது தகுமோ, தகாதோ என்று கேட்டார்கள்.

23. அவர்களுடைய வஞ்சகத்தை அவர் அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?

24. தெனியர் என்னும் பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலுள்ள ரூபமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: செசா ருடையது என்று பதில் சொன்னார்கள்.

25. அப்பொழுது அவர்: அப்படியா னால், செசாருடையதைச் செசாருக்கும், சர்வேசுரனுடையதைச் சர்வேசுரனுக் கும் செலுத்துங்கள் என்று அவர்களுக்குச் சொன்னார். (உரோ. 13:7.)

25. செசாருக்குச் செலுத்தவேண்டியதும் சர்வேசுரனுக்குச் செலுத்தவேண்டியதும் எதுவென்றால், உலக இராச்சியத்துக்கு அடுத்ததெல்லாம் உலக அதிகாரிக்கும், வேதத்துக்கடுத்ததெல்லாம் சர்வேசுரனுக்கும் உரியவைகளாமே. ஆகையால் கிறீஸ்துவர்கள் இராஜாங்கத்துக்குரிய காரியங்களில் உலக அதிகாரிகளுக்கும், வேத காரியங்களில் சத்தியவேத அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியவேண்டியது. உலக அரசாட்சி வேத அரசாட்சிக்குத் தடைசெய்யக்கூடாது.

26. ஜனங்களுக்கு முன்பாக அவருடைய பேச்சிலே அவர்கள் குற்றம் பிடிக்கக்கூடாதிருந்ததுந் தவிர அவர் சொன்ன பதில்மொழியின் பேரிலும் ஆச்சரியப்பட்டு, வாயடைத்துப் போனார்கள்.

27. பின்பு, உத்தானமில்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து அவரை வினாவிச் சொன்னதாவது: (மத். 22:23; அப். 23:8.)

28. போதகரே, ஒருவனுடைய சகோதரன் மனைவியையுடையவனாய்ப் புத்திரசந்தானமில்லாமல் இறந்துபோ னால், அவனுடைய சகோதரன் அவனுடைய மனைவியைக் கலியாணஞ் செய்து, தன் சகோதரனுக்குப் புத்திர சந்தானம் உண்டாக்கக்கடவானென்று மோயீசன் எங்களுக்கு எழுதித்தந்திருக்கிறார். (உபாக. 25:5.)

29. அப்படியிருக்க, சகோதரர் ஏழு பேரிருந்தார்கள். முந்தினவன் ஓர் ஸ்திரீயைக் கலியாணஞ்செய்து, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

30. பிந்தினவன் அவளைக் கலியாணஞ்செய்து, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

31. மூன்றாஞ் சகோதரனும் அவளைக் கலியாணம் செய்தான். அப்படியே ஏழுபேருஞ் செய்து, புத்திரசந்தான மில்லாமலே இறந்துபோனார்கள்.

32. எல்லாருக்கும் கடைசியாய் அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

33. ஆகையால் உத்தானத்திலே அவள் அவர்களில் எவனுக்கு மனைவியாயிருப்பாள்? ஏனெனில் ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்றார்கள்.

34. சேசுநாதர் அவர்களுக்குத் திருவுளம்பற்றினதாவது: இவ்வுலக மக்கள் மணமுடிக்கிறார்கள், மணமுடிக்கவும் படுகிறார்கள்.

35. அவ்வுலகத்துக்கும், மரித்தோரிலிருந்து உயிர்த்தலுக்கும் பாத்திரவான்களாக எண்ணப்படுகிறவர்களோ வாழ்க்கைப்படுகிறதுமில்லை, பெண்கொள்ளுகிறதுமில்லை.

36. ஏனெனில் இனி அவர்கள் மரிக்கவும் மாட்டார்கள். அவர்கள் உத்தானத்தின் பிள்ளைகளானபடியால், சம்மனசுக்களுக்கு ஒத்தவர்களுமாய், சர்வேசுரனு டைய பிள்ளைகளுமாய் இருக்கிறார்கள்.

* 36. இவ்வுலகத்திலே மனுஷர் சாகிறபடியினாலே, தங்கள் புத்திரர்களில் சீவிக்கும்படிக்கும், மனுக்குலம் வர்த்தித்து நீடித்திருக்கும்படிக்கும் கலியாணம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோட்சத்தையடைந்த விசுவாசிகள் சம்மனசுக்களைப்போல சாகாவரம் பெற்று, நித்தியகாலம் வாழ்வார்களென்கிறதினாலே அவர்களுக்குள் கலியாணம் இல்லை.

37. மோயீசன் முதலாய் முட்செடியருகில் பேசுகையில், ஆண்டவரை அபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொன்னபோது மரித்தோர் உயிர்ப்பார்களென்பதைக் காட்டினார். (யாத். 3:6-15.)

38. ஏனெனில் சர்வேசுரன் மரித்தோருக்கல்ல, சீவியர்களுக்கே சர்வேசுரனாயிருக்கிறார். சகலரும் அவருக்குச் சீவியர்களாயிருக்கிறார்கள் என்றார்.

39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் மறுமொழியாக, அவரை நோக்கி: போத கரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

40. அதன்பின் அவர்கள் அவரிடத்திலே யாதொன்றையும் கேட்கத் துணியவில்லை.

41. அவரோவெனில் அவர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: கிறீஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

42-43. ஆண்டவர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாகப் போடுமட்டும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றாரெனத் தாவீதுதாமே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறாரே.

44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவருக்கு அவர் குமார னாயிருப்பது எப்படி என்றார்.

45. பின்னும் ஜனங்களெல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னதாவது:

46. வேதபாரகர்மட்டிலே நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நிலை யங்கிகளோடு திரிய விரும்பி, சந்தை களில் வந்தனங்களையும், ஜெப ஆலயங் களில் முதன்மையான ஆசனங்களையும், விருந்துகளில் முதல் இடங்களையும் இச்சிக்கிறார்கள். (லூக். 11:43; மத். 23:6.)

47. நீண்ட ஜெபம் பண்ணுகிறதாக வேஷங்காட்டி, விதவைகளின் வீடுகளை விழுங்குகிறார்கள். அவர்கள் அதிகமான ஆக்கினைத் தீர்வையடைவார்கள் என்றார். (மாற். 12:38, 39.)