முன்பு, தவமாவது என்னவென்பதை நன்றாய் விளங்கிக்கொள்ள வேண்டும். வேதசாஸ்திரியாகிய அர்ச். அக்கினா தோமையார் சொல்வதாவ து : தான் செய்த பாவங்கள் சருவேசுரனுக்கு ஏராத துரோகமென்று கண்டு துக்கிக்கிற ஆத்துமமானது, அத் துரோகத்துக்காகத் தன்னைத் தானே தண்டிக்க வேண்டுமென்று விரும்பி, ஒரு விதத்திலே தன்னிற் பழிவாங்குதலே தவமாம் என்கிறார். இது மெய்யான மனந்திரும்புதலுக்குரிய ஒருகுணம். சருவேசுரன் பக்கமாக மெய்யாகவே, முழுமனதோடும் திரும்பிவிட்டவன், தான் முன் கட்டிக் கொண்ட பாவங்களை அளவில்லாமற் பகைப்பான். ''என்னைப் படைத்தவரான நேசபிதாவுக்கு விரோதமாகத்தான் பாவத்தைச் செய்தேனே'' என்ற நினைவினால் அவன் மனமானது துடிதுடித்துப்பதைத்துக் கொண்டிருக்கும். ஆனதினாற் தான் செய்த துரோகங்களுக்காகத் தன்னிலே தானே பழி வாங்கவேண்டும் என்ற ஆசை பிறக்கும். சருவேசுரன் அளவில்லாத பரிசுத்தர் ஆனபடியால், அவர் பக்கமாய் முழுமனதோடு திரும்பிவிட்டவன், அவர் பாவத்தைப் பகைக்கிறது போலவே தானும் தன்னால், இயன்ற மட்டும் அதைப் பகைக்கத் தொடங்குவான். அவர் அளவில்லாத நீதியுள்ளவர் ஆனபடியால், அவர் நீதிக் கோபத்தோடு எழுந்து தன்னைத் தண் டிக்குமுன்னரே தானே தன்னைத் தண்டித்துக் கொள்ளத் தேடுவான் இசிறவேல் சனமே, ''எனக்கும் என்னுடைய திராட்சக் கொடிக்குமிடையில் நீங்கள் தானே நடுத் தீர்த்துக் கொள்ளுங்கள்'' என்று இசையாஸ் தீர்க்கதரிசியின் ஆகமத்திலே (இசையாஸ் 5; 3.) சொல்லியிருக்கிறபடி, மனந்திரும்பியவன், தானே சருவேசுரனுக் கும் அவருடைய திராட்சக் கொடியாகிய தன் ஆத் துமத்துக்குமிடையில் நீதியோடு, கண்டிப்போடு நடுத் தீர்த்துக்கொள் ளுவான். தன்னுடைய மன துக் கு இசைவாயல்ல சருவேசுரனுடைய நீதிக்குச் சரி யாக ; பாடுகளுக்கு அஞ்சும் தன்னுடைய கோழைத்த னத்தைப் பார்த்தல்ல, சருவேசுரனுடைய அகோர மான தீர்வைகளுக்கு இணங்க நடுத்தீர்த்துக்கொள் ளுவான். - ஆ! கிறீஸ் தவர்களே, சருவேசுரனுடைய கோ ணாத - நீதியை, பயங்கரமான தீர்வைகளை நாம் ஊன்றித் தியானிக்கிறதே யில்லை. அப் படிப்பட்ட தியான மான து நமக்கு வெகு கசப்பு, வெகு அரு வருப்பு பாவத்தோடிருக்கிற நாம் மட்டுக்கடங்காத பரிசுத்தராகிய அவரும் பாவத்தைச் சட்டை பண் ணாரென்று எண்ணிக் கொள்ளுகிறோம். ''ஆண்டவர் இரக்கமுள்ளவர் அல்லவா? அவர் பொறுத்துக்கொ ள் ளுவார்'' என்று சொல்லிக்கொள்ளுகிறோம். ஆனால் அவளும் நம்மைப்போல பலவீனரா? கோழைத் தன முள்ள வரா? அல்ல து தண்டிக்க வல்லமை யில்லாத வரா? இல்லையில்லை. பொறுக்கப்பட்ட பாவத்துக் குத்தானும் அவர் இடுகிற ஆக்கினையைக் காணும்போ து நாமெல்லாம் பயத்தினால் தம்பித்துப்போய் நிற்க வேண்டியதாயிருக்கிறதே. நமது ஆதிப்பிதாவாகிய ஆதாம் செய்த பாவம் பொறுக்கப்பட்டதல்லவா? ஆ னாலும், தலையானது செய்த அந்தப் பாவத்துக்காக அங்கங்களாகிய சகல மனிதருக்கும் இடப்பட்டிருக் கிற அபராதத்தை அறிவீர்களே! மனுக்குலத்துக்கு எத்தனை துன்ப துயரங்கள், எத்தனை கஷ்டநஷ்டங் கள், எத்தனை ஆறாட்டமான மரணம்! ஒரு மனுஷ னின் பாவத்தினால் உலகம் முழுதிலும் மரணம் பிர வேசித்திருக்கிறதே. (ரோமர் 5; 17.) ஆதாம் செய்த ஒரே பாவத்துக் கு இடப்பட்ட ஆக்கினை யை அவர்கள் பிள்ளைகளாகிய நாமெல்லோரும் இன்றைவரை க்கும் பட்டு அனுபவித்துக்கொண்டு வருகிறோமே. ஆதலால் தேவ நடுத் தீர் வைகளுக்கு அஞ்சாதிருக்கத்தக்கவன் யார் ? ஆகை யாற்தான், மெய்யாக மனந்திரும்பியவன், தன் பாவங் கள் எத்தனை பாரதூரமோ, அத்தனை கன மாய்த் தன் னை வதைத்துக்கொள்ள விரும்புவான்.
இவ்வாறாகத் தன் பேரிலே ஓர் பரிசுத்த பழிவாங் குதலைச் செய்துகொண்டுவருகிற கிறீஸ்தவனுடைய தவச் சீவியமான து சென்ற காலத்தின் நஷ்டங்களைப்பரிகரிப்பதோடு, வருங்காலத்திலே பரிசுத்ததனம் என்னும் சம்பத்தைச் சேர்ப்பதற்கும் வழியாகும். அர்ச் சின்னப்பர் புதிதாய் மனந்திரும்பியிருந் தோராகிய ரோமைச் சபையாருக்கு எழுதி: சகோ தரர்களே, நீங்கள் இதற்குமுன் உங்கள் அவயவங்களைப் பாவ அசுத்தத்துக்கும் அக்கிரமமான துர்க்கிரி யைகளுக்கும் பணிவிடை செய்யப் பாவித்திருக்கிறீர் களே, இனிமேல் அந்த அவயவங்களையே நீதியை யும் பரிசுத்தத்தையும் அடைந்து கொள்ளுவதற்கு வழியாகப் பாவித்துக்கொள்ளுங்கள் என்றார். (ரோமர் 6; 17.) இந்த உத்தமமான போதகத்தின்படி, மெய்யாக மனந் திரும்பிய கிறிஸ்தவன், முன்னே பாவத்துக்கு உதவி யாயிருந்த தன் கண்களை, செவிகளை, வாயை, மூக் கை, சரீரத்தை இனித் தேவ தொண்டுக்கு உரியவை களாகும்படியாக ஒறுத்து அச்சம் பண்ணிக் கீழ்ப் படுத்திக்கொண்டுவருவான். உள்ள படி, அவன் முந் தித் தவறி விழுந்திருந்த படுகுழி எவ்வளவு ஆழமா ன து ! அவன் விட்டு விலகிய செங்குத்தான மலைப் பாதை எவ்வளவு அபாயமானது ! இனியும் அவன் நித்திய நரகக் கிடங்குக்கு வழியாகிய அப்படுகுழியில் விழத்தக்க ஒரு காரணத்தைத் தனக்குள்ளே வைத் துக்கொள்ளுவானா? இனியும் அவன் அந்தச் செங் குத்தான மலைப்பாதையில் அடிவைப்பானா? வையா ன் வையான். ஆனால், தன் சரீரமாகிய சத்து குவும், பஞ்ச புலன்களாகிய அதன் சதிமானக் கூட்டாளி களுமே தன்னை இதற்குமுன் மடிப்புச் செய்தவர்கள் என்று அறிந்திருக்கிறபடியால், இந்தத் துரோகிக ளைத் தங்கள் தங்கள் எல்லைக்குள் அடக்கிக் கீழ்ப் படுத்தி வைத்துக்கொள்ளுவான். இவ்வகையான வரு ங்காலத்தை நோக்கிய தவமும் மெய்யான மனந் திரும்புதலுக்குரிய குணமேயாம்.
- நம்முட் பலர், மனந்திரும்பினோம், பாவசங்கீர்த் தனம் பண்ணிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும், உள் ள படி மனந்திரும்பாதவர் கள ாயிருக்கி றோம் என்பது சீக்கிரத்தில் தெரிய வருகின்ற து) அல் லவா? இதற்கு நியாயம் என்ன ? நாம் பாவசங்கீர்த் தனம் பண்ணியும் தவம் பண்ணாதவர்களாய் இருப்பது தான் நியாயம். ஒரு பாவப்பழக்கத்தை விட்டோம் என்று எண்ணிக் கொண்டு, வேறொன்றிற் போய் இறங் கிவிடுகிறோம். உதாரணமாய், வெளிக்குப் பகையை விட்டோம் என்று இருந்தாலும் உட்பகையை வளர்த்துக்கொள்ளுவோர் எத்தனை பேர்! மோகபாவத்தை விட்டோமென்று சொல்லிக்கொண்டு போசனப்பிரியத்திலே, குடிவெறியிலே கிடந்து தவழுவோர் எத்தனை பேர்! அசுத்த நடையை விட்டு விட்டோம் என்று நினைத்துக்கொண்டு, கெட்ட பார் வைகள், கெட்ட சிந்தனைகளிலே காலம் போக்குகிறவர் கள் எத்தனை பேர்! சகோதரர்களே , மோசம்போ காதிருங்கள், தவமில்லாமல் மெய்யான மனந்திரும் புதல் இல்லை. தவமில்லாமல் புண்ணிய வளர்ச்சியும் இல்லை. விசேஷமாய், நெடுங்காலத் துர்ப்பழக்கங்க ளோடு இருக்கிறவர்கள், எத்தனை செபங்களைப் பண் ணினாலும், எத்தனை கண்ணீர்களை வடித்து அழுதா லும், எத்தனை தரம் பாவசங்கீர்த்தனம் பண்ணினா லும் - அவர்கள் தங்கள் சரீரத்தை ஒறுத்து நடத்தா விட்டால், பஞ்ச புலன்களின் மேல் சாக்கிரதையான காவல் பண் ணாவிட்டால், மனம் போன போக்கெல் லாம் போவதை விட்டுக் கிறீஸ்துநாதருடைய சிலு வையைச் .' சுமந்துகொள்ளாவிட்டால், ஒரு வார்த் கதை யிலே சொல்லுகில், தவம் பண்ணாவிட்டால் - அ வர்கள் ஒருபோதும் மனந்திரும்பின வர்களே யல்ல. தவந் தான் மெய்யான மனந்திரும்புதலுக்கு அடையாளம். தவந்தான் ஒருவன் உள் ள ப டியே பாவத் தைப் பகைக்கிறான் என்பதற்கு அறிகுறி. தவந் தான் அவன் பரிசுத்தனாய்ச் சீவிக்க உண்மையான, காத் திரமான தீர்மானம் பண்ணிக் கொண்டான் என்பதை உள் ளங்கையில் நெல்லிக்கனியைப் போலக் காட் டும் அத்தாட்சி.
தவத்தின் தன்மை இது என்று அறியாமல் புறோட்டெஸ் தாந் தர் முதலிய பதிதர் : இனிப் பாவஞ்செய்யாமல் விட்டுவிடுவதே தவம், பாவத்துக்காக மனதிலே துக்கப்படுவது மாத்திரமே தவம் என்று தப்பிதமாய்ச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஆனால் வேதித் திலே சொல்லப்படுகிற தவமான து, முன் செய்த பாவங்களுக்காகத் தன்னைத் தண்டித்துக் கொள் வதிலேயும், இனிப் பாவஞ்செய்யத் தன்னை ஏ வாதபடி சரீரத்தை ஒறுத்து அடக்கிக் கீழ்ப்படுத் திவைத்துக்கொள் வதிலேயும் அடங்குமென்று இது வரையில் நாம் சொன்னவைகளால் உங்களுக்குத் தெர ளிவாய்ப்போயிருக்குமென்று நம்புகிறேன்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠