இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேதாபிமானம் 1

சத்திய வேதக்காரராய் இருப்பது நமக்கு எவ்வளவு பாக்கியம்! அக்கியானிகளைப் பாருங்கள். அவர்கள் மெய்யான சருவேசுரனையும் மோட்ச வழியையும் அறியாமல் இரண்டு கண் ணுங் கெட்ட பிறவிக் குருடரைப்போ லத் தடவித் தடவித் திரிகிறார்கள். மெய்யான சருவேசுரனை அறியாமல், அவர்கள் ளுட் சிலர் பேய்களை வணங்குகிறார்கள். சிலர் மாடு, குரங்கு முதலிய மிருகங்களைக் கும்பிடுகிறார்கள். சிலர் நாகபாம்பு முதலிய செந்துக்களை நோக்கிக் கையெடுக் கிறார்கள். சிலர் மண், கல், பொன், வெள்ளி முதலிய உயிரற்ற பொருட்களைத்தானும் பூசிக்கிறார்கள், மெய் யான மோட்சபாதையை அறியாமல், ஸ் தல யாத் திரைபண்ணி அலைக்கழிகிறவர்கள் ஒருபக்கம் ; தீர்த் தம் ஆடி உலைகிறவர்கள் ஒருபக்கம்; காவடி எடுத்து, கழுத்தை அறுத்து, நாக்கை வெட்டி, மூக்கை அரிந்து இவை முதலிய அகோர தண்டனைகளைச் செய்து கொ ள்ளுகிறவர்கள் ஒருபக்கம். இப்படியே அக்கியானி கள் மோசம் போகிறார்கள். புரோட்டெஸ் தாந்தர் முத லிய பதிதர்களைப் பாருங்கள். இவர்களும் யேசுநாத சுவாமி ஏற்படுத்திய ஏக மெய்யான திருச்சபையை விட்டுப் பிரிந்துபோனபடியினால், தங்களுக்குள்ளே நூற்றுக்கணக்கான பிரிவுகளாய்ப் பிரிந்து பூசை இல் லாமல், பிரார்த்தனை இல்லாமல், அநேக தேவதிரவிய அனுமானங்கள் இல்லாமல், மோட்சவாசிகளின் வேண்டுதல் இல்லாமல் அவமாய்க் கெட்டுப்போகிறார்கள்?

நமக்கோ சத்திய வேதத்திற் பிறக்கும் சிலாக்கிய மும் பாக்கியமும் கிடைத்தது. அல்லது, நம்முட் சிலர் இடையிட்டு ஞானஸ்நானம் பெற்றவர்களானால், அந் தத் திரு வேதத்தை இடை யிட்டாவது கண்டறிந்துகொள்ளும் " அதிஷ்டம் வருவதாயிற்று. நமக்கு மெய்யான சருவேசுரனைப் பற்றிய உண்மையான போதனை ஆதிதொட்டேகிடைத்திருக்கிறது. மோட்ச இராச்சியத்துக்கு உரிய பரம உரிமைகளை நாம் மாதாவின் முலைப்பாலோடேயே பருகினோம் என் றுஞ் சொல்லலாம். இசையாஸ் தீர்க்கதரிசி ஆகமத் தில் எழுதியிருக்கிறபடி நாம் ஒவ்வொருவரும் சருவே சுரனாலேயே போதிக்கப்பட்டிருக்கிறோம். (இசை 4; 13-ஷை 30; 21) ஏனெனில் அவர் ஸ்தாபித்த தவறாத திருச்சபையானது தேவ அதிகாரத்தோடே நமக்கு வேதத்தைப் போ தித்துக்கொண்டு வருகிறது. அந்தத் தீர்க்க தரிசி தாமே சொல்லியிருக்கிறபடி ''இதுவே வழி, இதிலே நட என் று நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற ஒரு சத்தத் தை '' அ தாவது: சத்திய திருச்சபையின் போதகக் தை நமது செவிகள் எப்போதும் கேட்கின்றன. இப் படியே சத்தியவேதக்காரராய் இருப்பது இணை யில் லாத ஒரு பாக்கியம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. - ஆனால் இத் திருவேதத்தின் மட்டில் நமக்குள்ள கடமை என்ன? ஒருவர் பெற்றுக்கொள்ளும் உபகாரத்துக்கு அள வாகச் செலுத்த வேண் டிய கடமைகளும் உண்டு அல்லவா? நாம் பெற்றுக்கொண்ட இந்த மகத்தான உபகாரத்துக்குக் கைம்மாறாகக் செய்யவேண்டியது என்ன? இந்தக் கேள்விக்கு அர்ச். சின்னப்பர் விடை சொல்லுகிறார்: நீதிமானாகும்படி இருதயத்தினால் இப் போதகத்தை விசுவசிக்க வேண் டும். இரட்சணியத்தை அடைய வாயினால் இதை அ றிக்கையிடவேண்டும் என்கிறார் (ரோமர் 10; 10.). ஆகையால், யேசுக் கிறீஸ்துநாதருடைய சத்திய வேதத்தை விசுவசிப்பது எவ்வளவு அவசியமோ, அந்த விசுவாசத்தை அறிக் கையிடவேண்டிய போது அறிக்கை யிடுவதும் அவ் வளவு அவசியமாம். அந்தத் திருவேதத்தை மனதி னுள் விசுவாசித்தால் அது நம்மைச் சீர்ப்படுத்தும். வெளியாய் அதை அறியப்பண்ணுவதினால் நாம் அதை மகிமைப்படுத்துவோம். - ஆதிக் கிறீஸ்தவர்கள் இப்படியே செய்தார்கள். சத்திய வேதத்தை அவர்கள் முழுமனதோடு விசுவ சித்து அதினால் சீர்ப்பட்டுப் பரிசுத்தவான்கள் ஆனார்கள்.. சத்திய வேதத்தை அவர்கள் இராசாக்கள் முன்னும் சகல அக்கியானிகள் முன்னும் வெளியரங்கமாய் அறிக்கையிட்டு அதை மகிமைப்படுத்தினார்கள். அவர்கள் சீவித்த காலம் அக்கியான அந்தகாரம் எங்கும் தடித்துப் பரவியிருந்த ஓர் காலம்; பொய்த் தேவ பத்தர்களான இராசாக்கள் சத்திய வேதத்தைப் பசைத்து அதை வேரோடு கழைந்து போடவேண்டும் என்று துணிந்து வேதத்தை விசுவசிப்போரை எல்லாம் பிடித்து நெரு க்கி வதைத்துக் கொலை செய்துகொண்டுவந்த காலம். ஆனாலும், கிறிஸ்தவர்கள் தாங்கள் மனதில் விசுவசித் ததை வாக்கினாலும் நடத்தையினாலும் வெளிப்படை யாய்ப் பிரசித்தப்படுத்திக்கொண்டு வந்தபடியாலே தான், சத்திய வேத ஒளியானது, எங்கும் பரந்திருந்த அக்கியான இருளின் மேற் செயங்கொண்டது. அக் காலத்திலே மேற்றிராணிமார் குருமாருடைய பிரசங்கத்தினால் மனந்திரும்பின அக்கியானிகளிலும் பார்க்க, கிறிஸ்தவர்கள் காட்டிவந்த தைரியத்தி னாலும் வேதப் பற்று தலினாலும் மனந்திரும்பியவர் களே அதிகம். வயோதிகரான ஆடவர்களும், மிருது வான பெண்களும், இளங் குமாரத்திகளும், சவலைப் பிள்ளைகளும் கூட மழுவருடைய வாளுக்கும் முட்சில் லுக்கும் செந் தீச் சூளைக்கும் அஞ்சாமல், யேசுநாத சுவாமியை அறிக்கையிட்டுக்கொண்டு நின்றபோது,அவருடைய சத்திய வேதமே மெய்யான வேதம், அதை நாம் ஒருபோதும் ஒருபோதும் கைவிடோம், அதை மறுதலிப்பதிலும் சீவனையே விடுவோம் விடு வோம் என்று தைரியமாய்ச் சொல்லிக்கொண்டு நின்ற போது- அதைக் கண்ட அக்கியானிகள் புத்தியின் கண்களைத் திறந்து பார்த்து, இப்படிப்பட்ட தைரியத் தை ஏவிக்கொடுக்கிற வேதம் மெய்யான தாகத்தானே வேண்டும் என்று தேறிக் கும்பல் கும்பலாய்ச் சத்திய வேதத்திற் சேர்ந்தார்கள். முதல், சத்திய வேதத்தை ஓர் பைத்தியம் என்று நினைத்து அவமதித்தவர்கள், பின்பு இந்த ஆதிக் கிறிஸ்தவர்களின் திடாரிக்கத்தைக் கண்டு, அதுவே மெய்ஞ்ஞானம், அதுவே சருவேசுர னால் உண்டான மார்க்கம் என்று அங்கீகரித்து அதை நாற்றிசையிலும் மகிமைப்படுத்தினார்கள்.. பிரமாணிக்கமான கிறீஸ்தவர்கள் பண்ணிய விசு வாச அறிக்கையினால் கிறிஸ்துவேதம் மகிமை அடை. ந்தது. ஆனால் கோழை நெஞ்சரான சிற்சில கிறீஸ்தவர்கள் வேதனைக் கருவிகளுக்கு அஞ்சி, இடையிடையே வேதகலாபனை நடந்த இடங்களை விட்டு ஒளித் தோடியதும் உண்டு. சிலர், மனதில் ஒன்று வாக்கில் ஒன்றாக, வேதத்தை மறு தலிப்பதுபோல் பாசாங்கு பண்ணித் தண்டனை களுக்குத் தப்பிக்கொண்ட தும் உண்டு; இடையிடையே, ஆனால் அருமையிலும் அருமையாய், வேதத்தை வெளிப்படையாகத் தூ ஷித்து மறு தலித்ததும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட ட ஒரு கோழை நெஞ்சனாலே திருச்சபைக்கு வந்த அவமானம், சில தடவைகளில், பத்து வேத சாட்சிக ளால் அதற்கு உண்டான மகிமையிலும் பெரிதுபோ லக் காணப்படும் கிரீஸ் த சகோதரர் தங்களை முட் சில்லில் வைத்து ஆட்டிய போது பட்ட வேதனையைக் காட்டிலும், இப்படிப்பட்ட துரோகிச் சகோதரராற் தங்களுக்கு உண்டான வேதனை அ திகமென்று உண ருவார்கள்.

வேதகலாபனைக் காலங்கள் கழிந்துபோய் விட்ட ன, நம்முடைய திரு வேதத்தை மகிமைப்படுத்து வதற்கு நாம் இப்போது நமது இரத்தம் என்கிற விலை யைக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனாலும், வேதத்தை உலகத்திலே சகலருக்கும் முன் பாக அறிக்கையிடுகிற கடமை அதி னால் நமக்கு இல்லாமற் போய்விட் டதா ? ஒருபோதும் போகவில்லை. அது எப்படியெனில், முதன் முதல் சருவேசுரன் உலகம் முழுதுக்கும், சகல மனிதருக் கும் கர்த்தாவாக இருக்கிறபடியால், அவருடைய திரு ச் சித்தத்தின் வெளிப்படுத்தலாகிய வேதமான து எங் கேயர்வது மறைவாக வைக்கப்பட வேண்டியதல்ல. அவரைத் தொழுகிறதும், வணங்குகிறதும் இரகசிய மாய் அல்லது யாருக்கேனும் பயந்தவண்ணமாய்ச் செய்யப்படவேண்டிய வழிபாடுகளல்ல. இராசாதிரா சாவாகிய அவருடைய ஊழியம் நீசமான - ஒளித்து மறைத்துச் செய்யவேண்டிய ஒரு ஊழியமாக மனுஷ. ருக்குத் தோற்ற விடப்படாது. ஆனால், அவருடைய அள வில்லாத மகத்துவத்துக்கு ஒத்தபடி நாம் பிரசித்தமான செபங்களினாலும், உற்சவங்' களினாலும், கொண்டாட்டங்களினாலும் அவரைத் தோத்திரிக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம். ஆகையால், ஒவ்வொரு கிறீஸ் தவனும் பிரசித்தமாய் இந்தச் சடங்குகளிலே, ஆராதனைகளி லே பங்குபற்றிக்கொண்டு, தான் மெய்யான சரு வேசுரனைத் தொழுகிறவன் என்றதை ஒருவருக்கும் மறையாமல் நடக்க அவனுக்குக் கடன் உண்டு. ஆன தினாலே தான்: மனிதர் உங்கள் வெளிச்சத்தைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற பிதாவை, மகிமைப் படுத்தும்படியாக அது சகலருக்கும் முன் பாகப் பிர காசிக்கக்கடவது என்றும், (மத். 5; 16 (மத். 10; 33) மனுஷர் முன் என்னை மறுதலிக்கிறவனை நானும் என் பிதாவின் முன் மறு த லிப்பேன் என்றும் + யேசு நாதசுவாமி சகல கிறீஸ்த வர் களுக்கும் திருவுளம் பற்றியிருக்கிறார்.

மேலும், நாம் ஞானஸ்நானத்திலே திருச்சபைக் குக் கொடுத்த வாக்குத்தத்தமும் இந்தக் கடமையை நம்மேற் சுமத்துகிறது. அப் போது நாம் உலகம், சரீரம், பிசாசு என்னும் மூவித சத்து ருக்களையும் வெறுத்துவிடுவோம் என்று தேவ சன்னி தானத்திலே பொருந்தக் கொண்டோம். அதனால் பிசா சின் சோதனைகளைச் செயிப்போம் என்றும், சரீர சிற் றின் பங்களை விட்டோம் என்றும், உலகத்தா ருடைய எண்ணங்கள் பேச்சுகளுக்கு அஞ்சாமல் அவர்களுக்கு முன்பாகக் கிறிஸ்தவர்களாய் நடப்போம் என்றும் ஏற்பாடு செய்து கொண்டோமே அல்லாமலும், நம்முடைய சகோதரராகிய மற் றக் கிறீஸ்தவர்களின் நிமித்தமாகவும், நமது விசுவா சத்தை வெளியரங்கமாய்க் காண்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், கிறிஸ்த வர்கள் எல்லாரும் ஒரு உடல் போல இருக்கிறபடியால், ஒரு உறுப்பினாலே மற்ற உறுப்புக்கள் பெலன் அடைந்த உறுதியாகிற படியே, ஒரு கிறிஸ்தவனுடைய விசுவாசத்தைக்கண்டு மற்றொருவன் விசுவாசத்தலே உறுதிப்படுவான். ஒரு ஊரில் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் தங்கள் விசு வாசத்தை வெளியரங்கமாய்க் காண்பித்து நடந்து கொண்டு வந்தால் அந்த ஊரில் அவ விசுவாசம் ஒரு போதும் தலையெடுக்கமாட்டாது, விசுவாசமே மே லோங்கி மகிமைப்படும். * இந்த விதமாக, ஆதிக்கிறீஸ்தவர்கள் விசுவாசத் 'தை வெளியரங்கமாய் அறிக்கையிட்டது போல, நாமும் நமது விசுவாசத்தை வேண்டிய வே ண்டியபோது வாயினாலும், பொதுவாக நமது பிரசித்த நடக்கையினாலும் அறிக் கை யிடக் கடன் இருக்கிறது. சருவேசுரனுடைய அளவில்லாத மகிமைக்காக நாம் அவருடைய வேதத்தை அறிக்கையிட வேண் டும். நாம் ஞானஸ்நானத்திற் சுமந்து கொண்ட கட மையின் நிமித்தம் அறிக்கையிடவேண்டும். சகோத ரரான கிறிஸ்தவர்களின் அந்நியோந்நிய முன்மாதிரி கையின் பொருட்டு அறிக்கையிடவேண்டும். விசேஷ மாய்ச் சருவேசுரனால் ஓரோர் விதத்திலே மற்றவர்க ளுக்கு மேலாக வைக்கப்பட்டிருக்கிற கிறீஸ்த பிரபுக்களே, செல்வாக்கு உள்ள வர்களே, உபாத்திமா ரே, எசமான்களே, பிதா மா தாக்களே நீங்கள் சத் திய வேதத்தை மகிமைப்படுத்த வேண்டும். நீங்கள் வேதக்காரர் என்று காட்ட - யேசுநாதசுவாமியுடைய சீஷர்கள் என்று அறிக்கையிட- ஒருபோதும் ஒஞ்சிக் கப்படாது. ஏனெனில், நீங்கள் கோழைத்தன மாய் நடந்துகொண்டால் அதனால் நீங்களே யேசுநாதசுவா மிக்கும் அவருடைய திரு வேதத்துக்கும் துரோகி கள் ஆவதோடு, உங்களைக் கண்டு பாவிக்கிற மற்றோ ரையும் துரோகிகள் ஆக்குகிறவர்கள் ஆவீர்கள்.

ஆனால், ஐயையோ இக்காலத்திலே நாம் காண்கி றது என்ன? யேசுநாதசுவாமியுடைய திரு வேதத்தையும் திருச் சபையையும் தங்கள் வெளி யரங்கமான கிறிஸ்த சீவியத்தினால் அறிக்கையிட்டு மகிமைப்படுத்தவே ண்டியவர்கள் ஆகிய கிறிஸ்தவர்கள்தாம் --- செல்வமும், செல்வாக்கும், கல்வியும், சீர் திருத்தமும் உள்ள கிறிஸ்தவர்கள் தாம் --பிரதானமாய், அதைத் தங்கள் அவ விசுவாசத்தினா லும் வேத வேண்டா வெறுப்பினாலும் ஒயாமல் அவ மானப்படுத்திக்கொண்டுவருகிறதைக் காண்கிறோம்.

தங்கள் அவவிசுவாசத்தினால் நமது வேதத்தை அவமானப்படுத்துகிறார்கள். எத்தனை முறை நாகரீகம் உள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள், பத்தி யு ள் ள வர்கள் என்று தானும் தங்களைப் பாராட்டிக் கொள்ளுகிற கிறீஸ் தவர்கள், யேசுநாதசுவாமியுடைய குருப்பிரசாதிகளைக் குறித் துப் பிரசித்தமாய் ஆவலாதி பேசுகிறார்கள்! அவ் ஆவ லாதிகளினால் குருமாருடைய திரு ஊழியம் அவமதிக் கப்பட்டுச் சத்திய வேதமும் நிந்தை அடைகிறது. எத்தனை முறை பிரசங்கங்களிலே, பிரசங்கிப்போரிலே பி ழைபிடித்துக் குறை ஆராய்ந்து திரிகிறார்கள்! அ தினால் தேவ வாக்கு மனுஷ வாக்கைப்போல் ஆகி, வேதசததி ய்ம் பழிப்புக்கு இடமாகிறது. எத்தனை முறை திருச் சபையில் உள்ள பத்திகளைப்பற்றி, சிற்சில பலனுள் ள கிருத்தியங்கள் செபங்களைப் பற்றிக் கேலி பண்ணுகி றார்கள்! அதினால் நல்ல பயபத்தியுள்ள விசுவாசிகளும் அவதைரியப்பட்டு உலக மனிதராகிப்போகிறார்கள். எத்தனை முறை அடிக்கடி பாவசங்கீர்த்தனம் பண்ணு வதை, அடிக்கடி திருச் சற்பிரசாதம் வாங்குவதை நையாண்டி பண்ணுகிறார்கள்! அதினால் யேசுநாதசுவா மிக்குத் தாம் நேசிக்கும் ஆத்துமங்களிலே அடிக்கடி எழுந்தருளுவதாகிய ஆறு தல் இல்லாமற்போகிறது.

திருச்சபையின் கற்பனைகள் ஒழுங்குகளைப் பற்றி அற்பமாய்ப் பேசுகிறவர்களும் பலர். சிலர் மேற்றிரா ணிமார் குருமாருக்கு வருகிற தரும் வருமானத்தைப் பற்றிக் குறை சொல்லுவார்கள். இவ் வருமானங்கள் அக்கியானிகளை மனந்திருப்பி இரட்சிக்கிறதற்கும், அநாதசாலைகள் கல்விச்சாலைகளை வைத்து நடத்துவ தற்கும் எவ்வளவு அ வசியம் என்பதை அவர்கள் உணருவதேயில்லை. உணர்ந்தவர்களின் மன தைப் பழு தாக்காமல் இருப்பதும் இல்லை. சிலர் திருச்சபை அதிகாரிகளின் மாற்றங்களிலே, அவர்கள் காரியம் நடத்தும் விதத்திலே எப்போதும் குற்றம் பிடித்து, தாங்களே ஏற்படுத்திக் கொண்ட அக்குற்றங்களை எங் கும் பிரசங்கமாய்ச் சொல்லிக்கொண்டு திரிவதிலேயே மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இன்னுஞ் சிலர் திருச்சபைக்கு மாறான --யேசு நா தசுவாமியுடைய திரு வேதத்துக்கு மாறான -சம்பா ஷணை களிலே சேர்ந்துகொண்டு, அக்கியானிகள் முன்பாக, பதி தர் முன்பாக அத் திரு வேதத்தை அவமா னப்படுத்துகிறார்கள். தங்களுக்குப் பிரியமானவர்கள் பொல்லாத வேதத் துரோகிகளானாலும் அவர்களோ டு விரும்பி உறவாடுகிறார்கள். வேதத்துக்கு விரோத மான சாரமுள்ள புத்தகங்கள் பத்திரிகைகளையே பா ராட்டி வாசிக்கிறார் கள். அப்புத்தகங்கள் பத்திரிகைக ளே உத்தமமான வைகள் என்று பிறர்க்குச் சொல்ல வும் கூ சாதிருக்கிறார்கள். ஓகிறீஸ்தவர்களே!-தீயோ ருடைய கூட்டத்தைப் பகைத்தேன். அவ விசுவாசிக ளுடனே உட்காரவும் மாட்டேன்'' என்று (* சங். 25 ; 5 -) தாவீது இராசா சொல்லியபோது காட்டிய வேதாபிமானம் எங்கே? யேசு நாத சுவாமியுடைய சீஷர்கள் - அ வரு டைய திரு வேதத்தை விசுவசிக்கிறவர்கள், அத் திரு வேதத்தை அவமதிக்கிறவர்களோடேயே விரும்பி உறவாடுகிறதும், அவர் தமது தேவ அதிகாரத்தின் பெலமெல்லாங்கொண்டு கண்டித்தபோதனை கள் எண் ணங்கள் அடங்கிய புத்தகங்களையே தேடி வாசிப்ப தும் வேத அபிமானமா? வேத அவமான மா? -- பின்னும், சில கிறீஸ்தவர்கள் வேத வேண்டா வெறுப்பினால் நமது திருவேதத்தை அவமானப்படுத் துகிறார்கள் என்றேன். திருச்சபையின் வாழ்விலும் தாழ்விலும் அனேகருக்கு வேண்டா வெறுப்பும் பிற சமயிகள் எவ்வளவாகச் சத்திய வேதத் தைத் தூஷித்தாலும், திருச்சபை யை, குருமாரை, தவமடங்களைப்பற்றி ஆவலாதி சொன்னாலும், சிலர்: அதைப் பற்றி எங்களுக்கு என்ன வென்று இருந்துவிடுகிறார்கள். தங்கள் எசமான்கள், அல்லது சினேகிதருக்கு முன்பாக என்றால், பலமுறையும் சத்தியவேதம் மிகவும் அவமானமாய்ப் பேசப் படுகிறதைக் கண்டும், தங்களால் அதற்கேற்ற விடை கொடுத்து அப்பேச்சைத் தடுக்கக்கூடியதாய் இருந் தும் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடுகிறார் கள். இன்ன இடத்திலே வேத விரோதிகள் திருச்ச பையைத் துன்பப்படுத்துகிறார்கள், கோயில்களைச் சுடுகிறார்கள், தகர்க்கிறார்கள், குருமாரைக் கொல்லு கிறார்கள், கிறிஸ்தவர்களை வதைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு துயரமும் இல்லை. இன்ன இடத்திலே அக்கியானிகள் மனந்திரும்புகிறார்கள், கிறீஸ்தவர்கள் ஒற்றுமையாகிறார்கள். திருச்சபை உயர்ச்சி அடைகிறது என்றால் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியும் இல்லை . - வேறு சிலருக்குச் சருவேசுரனுடைய திருநாட்களைப் பற்றி, திருச்சபைக் கொண்டாட்டங்களைப் பற்றி விருப்புமில்லை, வெறுப்புமில்லை. இவைகள் எல் லாம் தங்களைச் சாராத அலுவல்கள் என்றபடி. ஏனோ தானோ என்று இருந்துவிடுகிறார்கள். இது தானா சத் தியவேத மகிமையின் மட்டிலுள்ள அபிமானம்? ஒ! ஆதிக் கிறீஸ்தவர்கள் இப்படி நடந்திருப்பார்களா னால், இவ்வளவு அசட்டைத்தனமாய், இவ்வளவு வேண்டா வெறுப்போடு, இவ்வளவு சுயநய விருப்போ டு சீவித் திருப்பார்களானால், சத்திய வேதம் உலகத்தி லே செயங்கொண்டிருக்குமா? இக்காலத்திலே, சத் -திய போதனையை நாமே மதியாவிட்டால் பிறர் எப்படி அதை மதிப்பார்கள். ஆகையால், கிறீஸ்தவர்களே , இதிலே "நம்மிடமிருக்கிற குறைகளைக் கண்டு அவை களைத் திருத்த முயலக்கடவோம். சத்திய வேதமே ஏக உண்மையான மார்க்கம். அதை அறியும் பாக்கி யம் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆதலால், நாம் அதைப்பற்றி வெட்கப்படாமல் வேண்டிய வேண்டிய போதெல்லாம் அதை வெளியரங்கமாய் அறிக்கையிடு வோமாக.