இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

1841ல் நடந்த மற்றொரு மாற்றம்

பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் சுரூபப் பேழையின் முன்பாக நின்று பார்த்தால் அர்ச். பிலோமினம்மாளைப் பக்கவாட்டில் தான் காண முடியும். இவ்வருடம் சுரூபம் ஏறக்குறைய முக்கால் பாகம் பார்க்கக்கூடியதாக தன் நிலையை மாற்றிக் கொண்டது.

இந்த மாற்றங்கள் யாரும் செய்திருக்க முடியாது. காரணம். சுரூபப் பேழை, மூன்று முத்திரைகள் இடப் பட்டு, மூன்று பூட்டுகளால் பூட்டப்பட்டு மூன்று சாவிகளும் வெவ்வேறு இடங்களில் இருக்கிற மூன்று ஞான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், முழு ஜனக்கூட்டமும் இம்மாற்றங்களைத் தரிசிக்கிறது. அத்துடன் திருச்சபை அதிகாரிகளாலும், அரச அதிகாரிகளாலும் இம்மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்பு கூறிய சங். பவுல் சலைவன் என்ற குரு தாம் முஞ்ஞானோவில் இருந்தபோது சுருபத்தின் நிறம் பிரகாச மாக பல தடவைகள் மாறியதை தாம் கண்டதாகக் கூறியுள் ளார். ஜனங்களும் இம்மாற்றங்களைக் கண்டார்கள். சுரூபத்தின் கண்கள் திறந்து மூடும், உதடுகளும் மூடியும் திறந்தும் காணப்படும். இவற்றின் பொருள் நமக்கு முழுவ தும் புலப்படாவிட்டாலும், அர்ச். பிலோமினம்மாள் நம்முடன் உயிருடன் வாழ்கின்றாள் என்பதற்கு அடையாள மாக இவற்றைக் கொள்ளலாம்.

மரியன்னா மாசூட்சியா என்ற பெண் ஒரு அவிசுவாசி. அவள் வேதகாரியங்களை அவபக்தியாய் பகடி (கேலி) செய்து பேசுவாள். பிலோமினாளின் கண் திறக்கிறது என்கி றீர்களே, அந்த மூடிய கண் இமைகளுக்கடியில் விழிகளே இல்லையே! எப்படிக் கண் திறக்கும்? காகிதக் கூழால் செய்யப்பட்ட அவள் முகத்தில் இப்படியொரு காரியம் நடக்குமா? இந்த அதிசயத்தை அவள் மற்றவர்களுக்குக் காட்டினால், எனக்கும் காட்டட்டுமே என்று பேசிய அவள், அர்ச். பிலோமினம்மாளின் சுரூபத்தின் முன்பாக வந்து நின்றாள். அப்போது அர்ச்சியசிஷ்டவளின் கண்கள் திறந்து அந்தப் பெண்ணை கூர்மையாகவும், அலட்சியத் தோடும், கடுமை பொங்கவும் பார்த்தன. பார்த்தபின் இனிமையுடன் மூடிக்கொண்டன. மரியன்னா பயந்து நடுங்கினாள். பின் அவள் தன் குற்றத்திற்காக மனஸ்தாபப் பட்டாள்.