(இப்பலன்களை அடைய திருச்சபையின் சாதாரண நிபந்தனைகளின்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நன்மை உட்கொண்டு, ஒரு கோவிலைச் சந்தித்து, பாப்பர சரின் சுகிர்த கருத்துகளுக்காக சற்று ஜெபிக்க வேண்டும்).
1. முதல் தடவையாக வாழும் ஜெபமாலை இயக்கத்தில் சேருகிற நாளில் ஒரு பரிபூரணப்பலன்.
2. மாதத்தின் மூன்றாம் ஞாயிறுதோறும் ஒரு பரிபூரணப்பலன்.
3. நமதாண்டவரின் திருநாட்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பரிபூரணப்பலன்.
4. மூன்று ராஜாக்கள் திருநாள், திவ்ய நற்கருணைத் திருநாள், அர்ச். தமத்திரித்துவத்தின் திருநாள், அர்ச், இராயப்பர் சின்னப்பர் திருநாள், கார்மெல் மாதா திருநாள் ஆகிறவற்றில் ஒரு பரிபூரணப்பலன்.
5. மரண சமயத்தில் ஒரு பரிபூரணப்பலன்.
6. இவற்றுடன் ஜெபமாலை சொல்வதற்கு அளிக்கப்பட்டுள்ள எல்லாப் பலன்களையும் வாழும் ஜெபமாலை உறுப்பினர்கள் அடையலாம்.
7. இத்துடன் “வாழும் ஜெபமாலை'' உறுப்பினர்கள் அர்ச். சாமிநாதர் சபைத்துறவியரின் எல்லா ஞானப் பேறுபலன்களிலும் பங்கடைகிறார்கள். இந்த சலுகை 1877 நவம்பர் 15-ல் அச்சபை அதிபரால் புதுப்பிக்கப் பட்டது.
“வாழும் ஜெபமாலை'' ஒரு போரணி - சாத்தானுக்கெதிராக இப்போரின் சிறப்பு ஆயுதம் ஜெபமாலை - “வாழும் ஜெபமாலை''யின் கேடயம் கார்மெல் உத்தரியம். இப்போரணியில் உட்படுவோர் தங்களை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணம் செய்து, அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிந்து, ஜெபமாலையைக் கைக் கொள்ள வேண்டும். அற்புத பதக்கத்தையும் ஆன்மாக்களை மனந்திரும்ப பயன்படுத்த வேண்டும்.
வாழும் ஜெபமாலை உறுப்பினர்கள். அதன் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளின் வழியாக தங்களை மாதாவின் மாசற்ற இருதயத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். கார்மெல் உத்தரியம் அணியப்படுவதின் பொருள் இதுவே.
“ஜெபமாலையைக் கொண்டும் உத்தரியத்தைக் கொண்டும் ஒரு நாள் உலகத்தைக் காப்பாற்றுவேன் என்ற மாதாவின் வாக்குறுதியின் நிறைவேற்றமே வாழும் ஜெபமாலை '' யாகும்.