இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

16-ம் கிரகோரியார்

1835-ம் ஆண்டில் முத். பவுலின் ஜாரிகோ முஞ்ஞானோ வில் அர்ச். பிலோமினம்மாள் சேத்திரத்தில் அற்புதமாய் குணமடைந்ததற்கு முதல் சாட்சியாயிருந்தவர் பாப்பரசர் 16-ம் கிரகோரியார்தான். பவுலின் ஜாரிகோவின் புதுமையான செளக்கியம் பற்றி முன்பு கூறியுள்ளோம். 19-ம் நூற்றாண் டின் புதுமை வரத்தி என்று அர்ச். பிலோமினம்மாளை அழைத்தவர் 16-ம் கிரகோரியார் பாப்புவே.

மேலும் முத். பவுலினால் தொடங்கப்பட்டிருந்த உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கத்தின் பரலோக பாதுகாவலியாக அர்ச். பிலோமினம்மாளை நியமித்து அந்தப் பட்டத்தையும் 16-ம் கிரகோரியார் அவளுக்கு அளித்தார். அதுமுதல் அவள் ஜெபமாலையை ஆயுதமாகவும் உத்தரியத் தைக் கேடயமாகவும் கொண்ட, மாதாவின் உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கத்தை மோட்சத்திலிருந்து நடத் தும் வெற்றித் தளபதியாக விளங்கி வருகிறாள். 16-ம் கிரகோரியார் 1837 ஜனவரி 30‡ம் தேதி அர்ச். பிலோமினம் மாளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுத்து செப்டம்பர் 29‡ம் தேதியை அவளது சிறப்புத் திருநாளாக நியமித்தார்.