இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 15

காணாமற்போன ஆட்டையும், திராக்மா என்ற நாணயத்தையும், ஊதாரிப்பிள்ளை யையும் பற்றிய உவமைகள்.

1. அப்பொழுது அவருடைய வாக்கியங்களைக் கேட்கவேண்டுமென்று ஆயக்காரர்களும் பாவிகளும் அவரண்டையில் வந்தார்கள்.

2. அதனாலே பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களோடே அசனம் பண்ணுகிறார் என்பார்கள். (மத். 9:11; 11:19.)

3. ஆகையால் அவர் பின்வரும் உவமையை அவர்களுக்குச் சொல்லி வசனித்ததாவது:

4. உங்களில் நூறு ஆடுகளை உடைய எவனாயினும் அவைகளில் ஒன்று காணாமற்போனால், மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைக் காணுந்தனையும் தேடித்திரியானோ? (மத். 18:12-14.)

5. அதைக் கண்டுபிடித்தபின்பு, சந்தோஷமாய் அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

6. வீட்டுக்குவந்து, தன் சிநேகிதரை யும், அயலகத்தாரையும் கூட வரவ ழைத்து: காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்தேன், ஆகையால் என்னோடு கூடக் களிகூருங்களென்று சொல்லு வானல்லோ?

7. அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப்பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியி னிமித்தம் மோட்சத்திலே அதிக சந் தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* 7. மனந்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள்பேரில் சர்வேசுரன் குறையற்ற பட்சமாயிருந்தாலும் மனந்திரும்புகிற பாவி அவருடைய சந்தோஷத்துக்கு ஒரு விசேஷ காரணமாயிருக்கிறானென்று இவ்வாக்கியத்தால் விளங்குகிறது.

8. அன்றியும் பத்து திராக்மா என்னும் பணங்களையுடைய எந்த ஸ்திரீயானா லும் அதில் ஒன்று காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் காணுந்தனையும் கவலையோடு தேடாதிருப்பாளோ?

9. அதை அவள் கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும், அயல் வீட்டுக் காரிகளையுங் கூட வரவழைத்து: இதோ காணாமற்போன என் பணத்தைக் கண்டு பிடித்தேன், ஆகையால் என்னோடே கூடக் களிகூருங்களென்று சொல்லுவாளல்லோ?

10. அவ்விதமே தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கு மென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

* 10. மோட்சவாசிகளுக்கும், இவ்வுலகத்திலுள்ள கிறீஸ்துவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், ஆகையால் அவர்களை நோக்கி மன்றாடுகிறது வீணென்றும் போதிக்கிறவர்களை இந்த வாக்கியம் மறுக்கிறது.

11. மீண்டும் அவர் சொன்னதாவது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: பிதாவே, ஆஸ்தியில் எனக்குக் கிடைக்கவேண்டிய பாகத்தை எனக்குத் தரவேண்டும் என்றான். ஆத லால் அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தி யைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

13. அப்படியிருக்கச் சிலநாளைக் குப் பின்பு, அந்த இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துர்ச்சனனாய்த் திரிந்து, தன் ஆஸ்தியை நாசமாக்கினான்.

14. எல்லாவற்றையுஞ் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கடின பஞ்சம் உண்டாகவே, அவன் வறுமைப்படத் தொடங்கி,

15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒண்டினான். அந்தக் குடியானவன் தன் பன்றிகளை மேய்க்கும்படி அவனைத் தன் கிராமத்துக்கு அனுப்பினான்.

16. அங்கே பன்றிகள் தின்னும் கோதுகளால் அவன் தன் வயிற்றை நிரப்ப விரும்பினாலும், அதை அவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை.

17. அப்பொழுது அவன் புத்தி தெளிந்து, தனக்குள்ளே யோசித்துச் சொல்லுவான்: என் தகப்பனார் வீட்டில் எத்தனையோ கூலியாட்களுக்கு ஏராளமான சாப்பாடு கிடைக்கிறது; நானோ இங்கே பசியால் சாகிறேன்.

18. நான் எழுந்து, என் தகப்பனாரிடத்தில் போய்: பிதாவே, பரலோகத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் நான் பாவஞ் செய்தேன்.

19. இனி உம்முடைய பிள்ளையென்று அழைக்கப்பட நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி,

20. உடனே எழுந்து, தகப்பனிடத் திற்கு வந்தான். அவன் இன்னும் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக்கண்டு, மனதுருகி, ஓடிவந்து, அவன் கழுத்தில் தாவி விழுந்து, அவனை முத்தமிட்டான்.

21. மகன் தகப்பனை நோக்கி: பிதாவே, நான் பரலோகத்துக்கு விரோத மாகவும், உமது சமுகத்திலும் பாவஞ் செய்தேன், இனி உம்முடைய பிள்ளை யென்று அழைக்கப்படுவதற்கு நான் பாத்திரனல்ல என்றான்.

22. ஆனால் தகப்பன் ஊழியரை நோக்கி; நீங்கள் சீக்கிரமாய் முதல்தரமான வஸ்திரத்தைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்;

23. கொழுத்த கன்றையுங் கொண்டு வந்து அடியுங்கள்; உண்டு விருந்தாடுவோமாக.

24. ஏனென்றால் என் குமாரனாகிய இவன் இறந்துபோய், மறுபடியும் உயிர்த் தான்; காணாமற்போய், மறுபடியுங் காணப்பட்டான் என்றான். ஆகையால் அவர்கள் விருந்தாடத் தொடங்கினார்கள்.

25. அப்பொழுது, அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் வீட்டுக்குச் சமீபித்து வருகையில், ஆடல்பாடல்களைக் கேட்டு,

26. பணிவிடைக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.

27. அதற்கு அவன்: உம்முடைய தம்பி வந்திருக்கிறார்; அவர் சுகத்தோடு வந்து சேர்ந்ததைப்பற்றி, உம்முடைய தகப்பனார் கொழுத்த கன்றை அடிப் பித்தார் என்றான்.

28. அப்பொழுது அவன் எரிச்சல் கொண்டு, உள்ளே பிரவேசிக்க மனதில்லாதிருந்தான். ஆகையால் அவனுடைய தகப்பன் வெளியே வந்து, அவனை வருந்தி அழைக்கத் துவக்கினான்.

29. அவனோ, தகப்பனைப் பார்த்து மாறுத்தாரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய், நான் உமக்கு ஊழியஞ்செய்து, உம்முடைய கற்பனையை ஒருக்காலும் மீறாதிருந்தும், என் சிநேகிதரோடகூட நான் விருந்தாடும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டியையாவது நீர் எனக்கு ஒருபோதுந் தந்ததில்லை.

30. ஆனால் வேசிகளோடு தன் ஆஸ்தியை விழுங்கிவிட்ட உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே, கொழுத்த கன்றை அடிப்பித்தீரே என்றான்.

31. அதற்கு அவன்: மகனே, நீ எந்நாளும் என்னோடுகூட இருக்கிறாய்; எனக்குள்ள யாவும் உன்னுடையதாயிருக்கின்றது.

32. ஆனால் உன் தம்பியாகிய இவன் செத்துப் பிழைத்ததற்கும், காணாமற் போய் காணப்பட்டதற்கும், நாம் விருந்தாடிச் சந்தோஷங் கொண்டாட வேண்டுமே என்று அவனுக்குச் சொன் னான் என்றார்.