இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

13-ம் சிங்கராயர், அர்ச். 10- ம் பத்திநாதர்

13-ம் சிங்கராயர்

13-ம் சிங்கராயர் பாப்பரசர் பொனவெந்தோ மேற்றி ராசன அப்போஸ்தலிக்க நிர்வாகத்தைச் செய்து வந்தபோது முஞ்ஞானோவுக்குத் திருயாத்திரை சென்றார். பாப்பரச ராக அவர் முடிசூட்டப்பட்டபோது ஒரு விலைமதிப்புள்ள சிலுவையை அர்ச். பிலோமினம்மாளுக்குக் காணிக்கையாக அனுப்பினார். இவர் அர்ச். பிலோமினம்மாளின் சபையை  சிரேஷ்ட சபையாக  உயர்த்தினார். அதில் உட்படுகிறவர்களுக்கு அதிகமான ஞானப் பலன்களை அளித்தார். அர்ச். பிலோமினம்மாளின் கயிறு என்ற அருட் கருவியை அங்கீகரித்து, ஆசீர்வதித்து அதை அணிகிறவர்களுக்கு சிறப்பான ஞானப் பலன்களையும் சலுகைகளையும் அளித்தார்.

அர்ச். 10- ம் பத்திநாதர்

அர்ச். 10-ம் பத்திநாதர் பாப்பரசர் அர்ச். பிலோமி னம்மாளின் மந்திரித்த கயிறை விசுவாசிகள் அணியும்படி தூண்டினார். தமக்கு முன்பிருந்த பாப்புமார்கள் அர்ச். பிலோமினம்மாளைப் பற்றி எடுத்திருந்த முடிவுகளையும் செய்திருந்த அறிவிப்பு பிரகடனங்களையும் யாரும் மாற்றக் கூடாது என்று ஒரு தனிக் கட்டளையைப் பிறப்பித்தார். இவர் அர்ச். பிலோமினம்மாளின் சபையை உலகளாவிய சபையாக உயர்த்தியதோடு, அதற்குப் பாதுகாவலராக அர்ச். பிலோமினம்மாளை மிகுந்த அன்புடன் வாழ்நாளெல்லாம் போற்றி வந்த அர்ச். ஜான் மரிய வியான்னியையும் நியமித்தார்.