விதைக்கிறவனுடைய உவமையும், விளக்கை மரக்காலின்கீழ் வைக்கப்படாதென்பதும், கடலின் கொந்தளிப்பை அமர்த்தினதும், பசாசுகளைத் துரத்தி அவைகளைப் பன்றிகளுக்குள் பிரவேசிக்க உத்தரவு கொடுத்ததும், பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீயைக் குணமாக்கினதும், ஜாயிரென்பவன் மகளை உயிர்ப்பித்ததும்,
1. பின்பு சம்பவித்ததேதெனில், அவர் பட்டணங்கள், ஊர்கள்தோறும் பிரயாணஞ்செய்து, சர்வேசுரனுடைய இராச்சியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டு வருவார். அவரோடு பன்னிருவரும் இருந்தார்கள்.
2. அன்றியும் கெட்ட அரூபிகளினின்றும், பற்பல வியாதிகளினின்றும் சொஸ்தமாக்கப்பட்ட சில ஸ்திரீகளும், ஏழு பசாசுகள் நீங்கின மதலேன் என்னப் பட்ட மரியம்மாளும், (மாற். 15:40; 16:9.)
3. ஏரோதனுடைய காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவான் னாளும், சூசான்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டு வந்த வேறநேக ஸ்திரீ களும் இருந்தார்கள்.
4. அப்போது ஏராளமான ஜனங்கள் கூடி, பட்டணங்களிலிருந்து அவரிடத்தில் தீவிரித்து வரவே, அவர் உவமையாகச் சொன்னதாவது :
5. விதைக்கிறவன் ஒருவன் தன் விதையை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கிறபோது சில விதை பாதையோரத்தில் விழுந்து மிதிபட்டது: ஆகாயத்துப் பறவைகள் அதைப் பட் சித்துப்போட்டன. (மத். 13:3; மாற். 4:3.)
6. சில கற்பாறையின்மேல் விழுந்து முளைத்தது; ஆயினும் அதற்கு ஈரமில் லாததினாலே காய்ந்து போயிற்று.
7. வேறு சில முட்கள் நடுவில் விழுந் தது; ஆனால் முட்களும் கூட எழும்பி, அதை அமுக்கிப்போட்டன.
8. வேறு சில நல்ல நிலத்தில் விழுந் தது; அது முளைத்து, நூறு மடங் காகப் பலனைத் தந்தது என்றார். இவைகளைச் சொல்லி: கேட்கச் செவி யுள்ளவன் கேட்கக்கடவானென்று உரக்கக் கூறினார்.
9. அப்போது அவருடைய சீஷர்கள் இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரை வினாவினார்கள்.
10. அவர்களுக்கு அவர் திருவுளம் பற்றினதாவது: சர்வேசுரனுடைய இராச்சியத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள உங்களுக்கு அருளப்பட்டிருக் கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, அவைகள் உவமைகளாகச் சொல்லப் படுகின்றன. (இசை. 6:9, 10; மத். 13:14; மாற். 4:12; அரு.12:40; அப். 28:26; உரோ. 11:8.)
* 10. மத். 13-ம் அதி. 14-ம் வசன வியாக்கியானங் காண்க.
11. இந்த உவமையின் கருத்து ஏதெனில்: விதை சர்வேசுரனுடைய வாக்கியம்.
12. பாதையோரத்தில் விதைக்கப் பெற்றவர்கள், வாக்கியத்தைக் கேட்கிற வர்களாம். பின்பு அவர்கள் விசுவசித்து, இரட்சண்யம் அடையாதபடிக்குப் பசாசு வந்து, அவர்களுடைய இருதயத்தினின்று வாக்கியத்தைப் பறித்துக்கொள்ளுகிறது.
13. கற்பாறையின்மேல் விதைக்கப் பெற்றவர்கள் வாக்கியத்தைக் கேட்கும் போது, சந்தோஷத்தோடு அதை அங்கீ கரிக்கிறவர்களாம். ஆயினும் அவர்கள் வேரில்லாதவர்களாய் தற்காலத்துக்கு விசுவசித்து,சோதனைகாலத்தில் பின் வாங்கிப் போகிறார்கள்.
14. முட்கள் நடுவில் விதைக்கப் பெற்றது வாக்கியத்தைக் கேட்கிறவர்கள் தான். ஆயினும் அவர்கள் போய், கவலை களாலும் ஐசுவரியங்களாலும் உலக வாழ்வின் இன்பசுகங்களாலும் அமுக்கப் பட்டுப் பலன் கொடாதிருக்கிறார்கள்.
15. நல்ல நிலத்தில் விதைக்கப்பெற்றதோ நல்லதும், உத்தமுமான இருதயத் தோடு வாக்கியத்தைக் கேட்டு, அதைக் காப்பாற்றிப் பொறுமையால் பலன் கொடுக்கிறவர்களாம்.
16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடவும் மாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை ஒரு விளக்குத்தண்டின் மேல் வைப்பான். (மத். 5:15.)
17. ஏனென்றால் வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை; அறியப்பட்டு வெளிக்கு வராதபடி மறைக்கப்பட்டதுமில்லை. (மத். 10:26; மாற். 4:22.)
18. ஆதலால் நீங்கள் கேட்கிற விதம் ஏதென்று பார்த்துக்கொள்ளுங்கள்; உள்ளவன் எவனோ அவனுக்குக் கொ டுக்கப்படும்; இல்லாதவனிடத்திலோ, அவன் தனக்கு உண்டு என்று நினைக் கிறது முதலாய்ப் பறிக்கப்படுமென்று திருவுளம்பற்றினார். (மத்.13:12; 25:29.)
* 18. திவ்விய கர்த்தர் அப்போஸ்தலரை நோக்கி 10-ம் வசனத்தில் மோட்ச இராச்சியத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ள உங்களுக்குக் கிருபை கிடைத்திருக்கிறதென்றும், 16-ம் வசனத்தில்: ஒருவனும் விளக்கைக் கொளுத்தி மூடிவைக்காமல் தண்டின் மேல் வைப்பானென்றும் சொன்னபின்பு, இந்த வாக்கியத்திலே: உங்களுக்குப் போதிக்கப்பட்ட வேதசத்தியங்கள் மற்றவர்களுக்கும் பிரயோசனமாகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அறிவினால் மற்றவர்களுக்கு எவ்வளவு பிரயோசனமாயிருப்பீர்களோ, அவ்வளவுக்கு அதிக அறிவு உங்களுக்குக் கொடுக்கப்படும்; அதைப் பிரயோசனமாக்கிக்கொள்ளா விட்டால், உங்களிடத்தில் உள்ள அறிவும் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெளிவிக்கிறார்.
19. பின்பு அவருடைய தாயாரும், சகோதரரும் அவரிடத்திற்கு வந்தார் கள். ஆனால், ஜனக்கூட்டத்தினிமித்தம் அவர்கள் அவரண்டையில் சேரக் கூடாதிருந்தது. (மத். 12:50; மாற். 3:31-35.)
20. அப்போது: உம்மைக் காண விரும்பி, உம்முடைய தாயாரும், உம்முடைய சகோதரரும் வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது.
21. அவரோ பிரத்தியுத்தாரமாக அவர்களை நோக்கி: சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கேட்டு, அதை அநுசரிக் கிறவர்களே என் தாயாரும், என் சகோத ரருமாயிருக்கிறார்கள் என்றார்.
* 20, 21. மத். 12-ம் அதி. 48-ம் வசன வியாக்கியானம் காண்க.
22. பின்னும் ஒருநாள் சம்பவித்ததேதெனில், அவர் தம்முடைய சீஷர்க ளோடுகூட ஓர் படகிலேறி: கடலின் அக்கரைக்குப் போவோமாக என்று அவர்களுக்குச் சொன்னார். அப்படியே புறப்பட்டார்கள். (மத்.8:23; மாற். 4:36.)
23. அவர்கள் படகிலேறிப் போகை யில், அவர் நித்திரை பண்ணிக்கொண்டி ருந்தார். அப்பொழுது கடலிலே பலத்த சுழல்காற்றுண்டாகி, படகு தண்ணீரால் நிறைய, அவர்கள் ஆபத்துக்குள்ளானார்கள்.
24. ஆகையால் அவர்கள் அவரிடத்தில் வந்து: போதகரே, சாகிறோம் என்று சொல்லி, அவரை எழுப்பினார்கள். அவரோ எழுந்து, புயலையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே புயல் ஒழிந்து, அமரிக்கையுண்டாயிற்று.
25. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர் களோ, பயந்து அதிசயித்து, ஒருவர் ஒரு வரை நோக்கி: இவர் யாரென்று நினைக் கிறாய்? காற்றுக்கும் கடலுக்கும் கட்ட ளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே என்றார்கள்.
26. பின்பு கலிலேயா நாட்டுக்கு எதிரேயிருக்கிற ஜெராசேனியருடைய நாட்டுக்கு அவர்கள் படகைச் செலுத்தி னார்கள்.
27. அவர் கரையில் இறங்கின போது, நெடுநாளாய்ப் பேய் பிடித்தவனும், வஸ்திரமணியாதவனும், வீட்டிலே தங்காமல் கல்லறைகளிலே தங்குகிறவனுமாகிய ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் சேசுநாதரைக் கண்டவுடனே, அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, பேரொலியாய்க் கூவி: சேசுவே! உன்னத சர்வேசுரனுடைய குமாரனே, உமக்கும் எனக்கும் என்ன? என்னை உபாதியாதபடி உம்மை மன்றாடுகிறேன் என்றான்.
29. அதேதெனில், அந்த அசுத்த அரூபி அந்த மனிதனை விட்டுப் போகும் படி, அவர் அதற்குக் கட்டளையிட் டிருந்தார். அது அநேக காலமாய் அவனைப் பிடித்திருந்தது. அவன் சங்கி லிகளால் கட்டுண்டு விலங்குகளால் காபந்து செய்யப்பட்டிருந்தும், கட்டு களை முறித்துப்போட்டு, பசாசினால் வனாந்தரங்களுக்குக் கொண்டு போகப் பட்டிருந்தான்.
30. சேசுநாதர் அவனை நோக்கி: உன் பெயர் என்ன என்று கேட்க, அவன்: படை என்றான். ஏனெனில் அநேகம் பேய்கள் அவனிடத்தில் புகுந்திருந்தன.
31. அப்பொழுது, தங்களைப் பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டன.
32. அங்கே திரளான பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்து கொண் டிருந்தன. அவைகளுக்குள்ளே போகும் படி தங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சிக் கேட்க, அவர் அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33. ஆகையால் பேய்கள் அந்த மனிதனைவிட்டுப் புறப்பட்டு, பன்றிகளுக்குள்ளே புகுந்தன; உடனே அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து வேகமாய்க் கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மடிந்தது. (மத். 8:32.)
* 33. மத். 8-ம் அதி. 33-ம் வசன வியாக்கியானம் காண்க. இந்த வரலாற்றை அர்ச். மத்தேயு, மாற்கு, லூக்காஸ் மூவரும் எழுதியிருக்கிறார்கள். அர்ச். மத்தேயு பேய் பிடித்த இரண்டு பேர் இருந்தார்கள் என்கிறார். இங்கேயோ ஒருவனைப்பற்றி மாத்திரம் லூக்காஸ் பேசுகிறார். ஏனெனில், ஒருவன் மற்றவனைவிட அதிக உக்கிரம வெறிகொண்டவனாய் இருந்ததாகத் தோன்றுகிறது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு ஓடிப்போய், பட்டணத்திலும், கிராமங்களிலும் இதை அறிவித்தார்கள்.
35. ஆகையால் சம்பவித்ததைப் பார்க் கத்தக்கதாக ஜனங்கள் புறப்பட்டு சேசுநாதரிடத்தில் வந்தபோது, பேய்கள் நீங்கி, விடுதலையான மனுஷன் வஸ்திர மணிந்து, புத்தித்தெளிவோடு அவரு டைய பாதத்தருகில் உட்கார்ந்திருக்கக் கண்டு, பயந்தார்கள்.
36. அவன் பேய்ப்படை நீங்கி, எப்படிச் சுகமாக்கப்பட்டானென்று கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37. அப்போது ஜெராசேனிய நாட்டிலுள்ள சகல ஜனங்களும் மிகவும் பயமடைந்ததினாலே, அவர் தங்களை விட்டுப் போகும்படி மன்றாடினார்கள். அப்படியே அவர் படகிலேறித் திரும்பிப்போனார்.
38. பேய்கள் நீங்கின மனிதன் தானும் அவரோடிருக்கும்படி அவரை மன்றாடி னான்.
39. ஆனால் சேசுநாதர் அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய், சர்வேசுரன் உனக்கு எவ்வளவு பெரிதானவைகளைச் செய்தருளினா ரென்று அறிவியயன்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அவன் பட்டண மெங்கும் போய், சேசுநாதர் தனக்கு எவ்வளவு பெரிதானவைகளைச் செய்தா ரென்று பிரசித்தமாக்கினான்.
40. சேசுநாதர் திரும்பிவந்தபோது சம்பவித்ததேதெனில், ஜனத்திரள் அவ ரை வரவேற்றினது; ஏனெனில் எல் லோரும் அவரை எதிர்பார்த்துக்கொண் டிருந்தார்கள்.
41. அப்போது இதோ, ஜெப ஆலயத் தலைவனாகிய ஜாயிர் என்ற ஒரு மனிதன் வந்து, சேசுநாதருடைய பாதத்தில் விழுந்து, தன் வீட்டிற்கு வரவேண்டுமென்று அவரை மன்றாடி னான். (மத். 9:18; மாற். 5:22.)
42. ஏனெனில் ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள ஒரே குமாரத்தி அவனுக்கிருக்க, அவளும் சாகக்கிடந்தாள். அவர் அங்கே போகும்போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக்கொண்டுபோக நேரிட்டது.
43. அப்போது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாய்த் தன்னுடைய ஆஸ்தியயல்லாம் வைத்தியர்களிடத்தில் செலவழித்திருந்தும், ஒருவனாலும் குணமாக்கக்கூடாத ஒரு ஸ்திரீ இருந்தாள்.
44. அவள் அவருக்குப் பிறகே வந்து, அவருடைய வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டாள். அத்தருணமே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45. அப்பொழுது சேசுநாதர்: என்னைத் தொட்டது யார் என்றார். எல்லாரும் தாங்கள் அல்ல என்க, இராயப்பரும் அவரோடிருந்தவர்களும்: சுவாமி, ஜனங்கள் கும்பலாய் அடர்ந்து, உம்மை நெருக்குகிறார்களே, இப்படியிருக்க: என்னைத்தொட்டது யார் என்று கேட் கிறீரே என்றார்கள்.
46. அதற்கு சேசுநாதர்: ஒருவன் என்னைத் தொட்டதுண்டு. ஏனெனில் என்னிடத்தினின்று ஒரு சக்தி புறப்பட்டதாக அறிந்திருக்கிறேன் என்றார்.
47. அப்பொழுது அந்த ஸ்திரீ (தான் செய்ததை) மறைக்கக்கூடவில்லையயன்று கண்டு, நடுங்கிவந்து, அவருடைய பாதத்திலே விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே செளக்கியப்பட்ட விதத்தையும் சகல ஜனங்களுக்கும் முன்பாகத்தெரிவித்தாள்.
48. அப்பொழுது அவர் அவளை நோக்கி: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; நீ சமாதானத்தோடே போ என்றார்.
49. அவர் இன்னும் பேசிக்கொண்டிருக்கையிலே, ஒருவன் ஜெப ஆலயத் தலைவனிடத்தில் வந்து: உம்முடைய குமாரத்தி இறந்துபோனாள், அவரை வருத்தப்படுத்தாதேயும் என்றான்.
50. சேசுநாதர் இந்த வார்த்தையைக் கேட்டு, பிள்ளையினுடைய தகப்பனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவ னாகமாத்திரமிரு, அப்போது (உன் மகள்) பிழைப்பாள் என்றார்.
51. அவர் வீட்டில் வந்தபோது, இராயப்பரையும், அருளப்பரையும், இயாகப்பரையும், பெண்ணின் தகப்பனையும் தாயையுந்தவிர வேறொருவரையும் தம்மோடு உள்ளே வரவொட்டாமல் நிறுத்தினார்.
52. அங்கே எல்லாரும் அவளைப் பற்றி அழுது புலம்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் அழ வேண்டாம்; பிள்ளை மரிக்கவில்லை, தூங்குகிறாள் என்றார்.
53. ஆனால் அவள் மரித்தாளென்று அவர்கள் அறிந்து, அவரைப் பரிகாசம் பண்ணினார்கள்.
54. அவரோ, பிள்ளையின் கரத்தைப் பிடித்து: பிள்ளையே, எழுந்திரு என்று கூப்பிட்டார்.
55. அப்பொழுது அவளுக்கு உயிர் திரும்பிவர, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
56. அப்பொழுது அவளுடைய தாயும் தந்தையும் பிரமித்து நிற்க, நடந்ததை ஒருவருக்கும் சொல்லாதபடி அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.