இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இயாகப்பர் எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 04

பேயை எதிர்த்து, நல்லவழியில் ஒழுகக் கற்பிக்கிறார்.

1. உங்களுக்குள்ளே சண்டைகளும் வியாச்சியங்களும் எதனாலே வரு கின்றது? உங்கள் அவயவங்களில் போராடுகிற உங்கள் இச்சைகளினாலல்லவா?

2. நீங்கள் இச்சித்தும், கைக்கொள் ளுகிறதில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமைப்பட்டும் பெற்றுக்கொள் ளக்கூடாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் வழக்காடியும் போர் செய்தும், மன்றாடிக் கேளாததினாலே உங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

* 2. பற்பல காரியங்களுக்கு ஆசைப்படுகிறீர்கள். அவைகளை ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்க, நீங்கள் அதைவிட்டு, போராடி, வியாச்சியம் செய்து அடைந்துகொள்ளலாமென்று நினைக்கிறீர்கள். அதனாலே அதை அடைந்துகொள்ளாமல் போகிறீர்களென்று அர்த்தமாம்.

3. நீங்கள் கேட்டும், அடையாமல் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் இச்சை களுக்குத் திருப்தியாகவேண்டுமென்று ஆகாதவிதமாய்க் கேட்கிறீர்கள்.

4. விபசாரக்காரரே, இவ்வுலகத்தின் சிநேகம் சர்வேசுரனுக்குப் பகை யாயிருக்கிறதென்று அறியீர்களோ? ஆகையால் இவ்வுலகத்துக்குச் சிநேகித னாயிருக்க விரும்புகிறவன் சர்வேசுர னுக்குத் தன்னைப் பகைஞனாக்கிக் கொள்ளுகிறான். (லூக். 6:26; 1 அரு. 2:15.)

5. உங்களுக்குள்ளே வாசமாயிருக்கிற இஸ்பிரீத்துவானவர் பொறாமையான சிநேகமுள்ளவரென்று வேதவாக்கியம் சும்மா சொல்லுகிறதாக நினைக்கிறீர்களோ? (யாத். 20:3, 5.)

* 5. நீங்கள் உலகத்துக்கும், சர்வேசுரனுக்கும் பிரியப்படலாமென்று நினைக்கிறீர்கள். அது முற்றும் கூடாத காரியம். உலகத்தை நேசிக்கிறவன் சர்வேசுரனுக்குச் சத்துருவாய்ப்போகிறான். ஏனென்றால் உங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிற இஸ்பிரீத்துசாந்து உங்கள் இருதயத்தை முழுதும் தமக்கே சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறதல்லாதே, உலகம் சரீரம் முதலிய பிரபஞ்சத்துக்கடுத்த சிநேகமும் உங்கள் இருதயத்திலிருக்க அவர் சகிக்கிறவரல்லவென்று அர்த்தமாம்.

6. அவர் மிகுதியான வரப்பிரசாதத்தைத் தருகிறார். ஆகையால் சர்வேசுரன் ஆங்காரிகளுக்கு எதிர்த்து நின்று, தாழ்மையுள்ளவர்களுக்கு வரப் பிரசாதத்தைக் கொடுக்கிறார் என்று சொல்லிருக்கின்றது. (பழ. 3:34; 1 இரா. 5:5.)

7. ஆகையால் நீங்கள் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பசாசை யோ எதிர்த்து நில்லுங்கள். அது உங்க ளை விட்டு ஓடிப்போம். (எபே. 6:12.)

8. சர்வேசுரனை அண்டிப்போங்கள்; அவரும் உங்களை அண்டிவருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (இசை. 1:16.)

9. உங்கள் நிர்ப்பாக்கியத்தை உணர்ந்து புலம்பி அழுங்கள். உங்கள் நகைப்பு துக்கமாகவும், உங்கள் சந் தோஷம் துயரமாகவும் மாறக்கடவது.

10. ஆண்டவர் சமுகத்தில் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். ( 1 இரா. 5:6: லூக். 14:11, 18:14.)

11. சகோதரரே, ஒருவரொருவர் பேரில் புறணிசொல்லாதிருங்கள். தன் சகோதரன்பேரில் புறணி சொல்லு கிறவன் அல்லது தன் சகோதரனுக் குத் தீர்ப்பிடுகிறவன் வேதப்பிரமா ணத்தைத் தூற்றி, அதற்கே தீர்ப்பிடுகிறான். ஆனால் நீ பிரமாணத்துக்குத் தீர்ப்பிடுவாயாகில், பிரமாணத்தை அநுசரிக்கிறவனாகாமல், அதற்கு நடுவனாகிறாய்.

12. ஆகிலும் வேதப்பிரமாணத்தைக் கொடுத்தவரும், நடுத்தீர்க்கிறவரும் ஒருவரே. அவரே அழிக்கவும் இரட்சிக்கவும் வல்லவர். (மத். 7:1.)

13. பிறனை நடுத்தீர்ப்பதற்கு நீ யார்? நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்துக்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து சம்பாத்தியம் பண்ணுவோமென்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். (உரோ. 14:4; பழ. 27:1; லூக். 12:19.)

14. நாளைக்கு என்ன நடக்குமென்று அறியீர்களே. (சங். 38:6.)

15. மெய்யாகவே உங்கள் ஜீவியம் எப்பேர்ப்பட்டது? கொஞ்சநேரம் தோன்றி, பின்பு ஒழிந்துபோகும் புகையல்லோ. ஆகையால் நீங்கள் அந்தப் பேச்சைவிட்டு: ஆண்டவருக்குச் சித்த மானால், அல்லது நாங்கள் உயிரோ டிருந்தால், இதை அதைச் செய்வோம் என்று சொல்லுங்கள். (அப். 18:21.)

16. இப்பொழுதோவெனில் உங்கள் வீம்புகளில் துள்ளுகிறீர்கள். இவ் விதத் துள்ளாட்டமெல்லாம் அக்கிரம மாயிருக்கிறது.

17. ஆகையால் நன்மைசெய்ய அறிந்திருந்தும், செய்யாதவனுக்கு அது பாவமாகும். (லூக். 12:47: உரோ. 14:23.)