இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் அநுசாரம் - முன்னுரை: தேவ நற்கருணை வாங்குவதற்கு பக்தியுள்ள புத்திமதி

(கிறீஸ்துநாதர்) ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது:

“வருந்திச் சுமைசுமக்கிறவர்களே! நீங்கள் அனைவரும் நம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு இளைப்பாற்றியைக் கட்டளையிடுவோம்.” 

“நாம் கொடுக்கும் அப்பம் உலக சீவியத்திற்காக நாம் தரும் நமது மாமிசமே.” 

“வாங்கிப் புசியுங்கள்; இது உங்களுக்காகக் கையளிக்கப் படப் போகிற நமது சரீரம். இதை நமது ஞாபகத்திற்காகச் செய்யுங்கள்.”

“நமது மாமிசத்தைப் புசித்து, நமது இரத்தத்தைப் பானம் செய்கிறவன் நமக்குள்ளே தங்குகிறான், நாமும் அவனுக்குள்ளே தங்குகிறோம்.”

“நாம் உங்களுக்குச் சொன்ன வாக்கியங்கள் ஞானமும் உயிருமாயிருக்கின்றன.” 

யோசனை

தேவ வாக்குத்தத்தங்களும், மனுக்குலத்தின் நம்பிக்கையும், பழைய ஏற்பாட்டின் உவமானங்களும், தீர்க்கதரிசனங்களும் திவ்விய நற்கருணையில் நிறைவேறுகிறது என்று காண்கிறோம். தேவனோடு மனிதனை எப்போதைக்கும் சமாதானப்படுத்துகிற மெய்யான பலி, உவமைகளாகக் குறிக்கப்பட்ட பலிகளைப் பின்தொடர்ந்து வருகின்றது. மெய்யான பாஸ்கு பலியிடப்பட்டது; பரலோக மன்னாவென்னும் போசனம் இஸ்றாயேல் மக்களுக்கு மாத்திரமல்ல, புதிய உடன்படிக்கையின் சகல சனங்களுக்கும் அதாவது விசுவாசிகளுடைய தந்தையாகிய அபிரகாமின் மெய்யான மக்களெல்லோருக்கும் உணவாகின்றது. சமாதான அரசனின் மாதிரியைப் பின்சென்று, மெல்கிசேதேக் ஒழுங்கின்படி ஆன நித்திய சிரேஷ்ட குரு உந்நத பரம கடவுளுக்கு அப்பமும் இரசமும் ஒப்புக் கொடுக்கிறார்; அது மோட்சத்தினின்று இறங்கின உயிருள்ள அப்பம்; அவர் கொடுக்கிற அப்பம் அவருடைய மாமிசமும், கொடுக்கிற இரசம் அவருடைய இரத்தமுமாயிருக்கின்றது. மெய் யாகவே, மனுமகனுடைய மாமிசத்தைப் புசித்து, அவருடைய இரத் தத்தைப் பானம் செய்தாலொழிய நாம் உயிரோடிருக்கப் போவ தில்லை; ஏனெனில் அவர் சொல்கிறபடி, “நமது மாமிசம் மெய் யாகவே போசனமும், நமது இரத்தம் பானமுமாயிருக்கின்றது; நமது மாமிசத்தைப் புசித்து, நமது இரத்தத்தைப் பானம் செய் கிறவன், நம்மிடத்தில் தங்குகிறான், நாம் அவனிடத்தில் தங்கு கிறோம். மோட்சத்தினின்று இறங்கி வந்த அப்பம் இதோ. இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் நித்தியத்திற்கும் சீவிப்பான்” என்றார். சந்தேகிக்க இடமில்லை, இந்த வார்த்தைகள் தெளிவாயிருக்கின்றன; கீழ்ப்படிய வேண்டியதுதான்; ஆண்டவரே! விசுவசிக்கிறேன், என் விசுவாசத்தை அதிகப் படுத்தும் என்று சொல்ல வேண்டியது. தீர்க்கதரிசிகள் அறிவித்தது என்ன? “தரித்திரர் புசிப்பார்கள், திருப்தி யடைவார்கள், அவர்களுடைய ஆத்துமம் நித்தியத்திற்கும் சீவிக்கும். பூமியிலுள்ள சகல செல்வந்தரும் புசித்தார்கள், ஆராதித்தார்கள்; பூமியில் வசிக்கிற சகலரும் அவருடைய சமூகத்தில் சாஷ்டாங்கம் செய்வார்கள்.” நாமும் நமது அசைக்கப்படாத விசுவாச உறுதி யினால் புசிக்கிறோம், ஆராதிக்கிறோம். சேசுகிறீஸ்துநாதராக நம்மை மாற்றும் இந்த மாமிசத்தைப் புசிப்போம், இந்த இரத்தத்தைப் பானம் செய்வோம், விலைமதிக்கப்படாத பலியாகிய அவர், நாம் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டிய கடனை, வலிய செலுத்துகிறார்; அவருடைய பலியின் பேறுபலன்களை அளவுகடந்த விதமாய் நமக்கு அளிப்பதற்காக அவரது மாமிசத்தை நமது மாமிசத்தோடும், அவருடைய ஆத்துமத்தை நமது ஆத்துமத்தோடும் ஒன்றிக்கிறார். இந்த வாக்கிலடங்காத ஒன்றிப்பினால், “அவரிடத்தில் குடிகொண் டிருக்கும் தேவத் தன்மையால் நாமும் நிரப்பப்படுகிறோம்.” ஓ! தேவ சிநேகத்தின் ஆச்சரியத்துக்குரிய பரம இரகசியமே! மனிதன் சம்மனசுக்களின் அப்பத்தைப் புசித்தான். அதெப்படி? அர்ச். அகுஸ்தீன் சொல்வது போல, அழிவில்லாத சம்மனசுக்களைத் தமது அழிவில் லாத தன்மையால் போஷிக்கிற சர்வேசுரனுடைய வார்த்தையானது மாமிசமாகி நம்முடன் வாசமாயிருந்தது. கிறீஸ்தவர்களே! தெய்வீக விருந்துக்குப் போங்கள். அதில் கிறீஸ்துநாதர் தம்மை முழுதும் உங்களுக்குக் கையளிக்கிறார்; அதில் தேவ வார்த்தையானவர் தம்மைத் தாமே கண்டுபிடிக்கக் கூடாத போசனமாக்குகிறார்; “பரலோகத் தின் மெய்யான அப்பத்தை வாங்கிப் புசியுங்கள்.” அதிலேதான் நம்பிக்கை, அதிலேதான் சீவியம், அதிலேதான் சிநேகத்தின் சம்பூரண மிருக்கிறது. நீதிக்குச் செலுத்த வேண்டிய கடனை, வலிய செலுத்துகிறார்; அவருடைய பலியின் பேறுபலன்களை அளவுகடந்த விதமாய் நமக்கு அளிப்பதற்காக அவரது மாமிசத்தை நமது மாமிசத்தோடும், அவருடைய ஆத்துமத்தை நமது ஆத்துமத்தோடும் ஒன்றிக்கிறார். இந்த வாக்கிலடங்காத ஒன்றிப்பினால், “அவரிடத்தில் குடிகொண் டிருக்கும் தேவத் தன்மையால் நாமும் நிரப்பப்படுகிறோம்.” ஓ! தேவ சிநேகத்தின் ஆச்சரியத்துக்குரிய பரம இரகசியமே! மனிதன் சம்மனசுக்களின் அப்பத்தைப் புசித்தான். அதெப்படி? அர்ச். அகுஸ்தீன் சொல்வது போல, அழிவில்லாத சம்மனசுக்களைத் தமது அழிவில் லாத தன்மையால் போஷிக்கிற சர்வேசுரனுடைய வார்த்தையானது மாமிசமாகி நம்முடன் வாசமாயிருந்தது. கிறீஸ்தவர்களே! தெய்வீக விருந்துக்குப் போங்கள். அதில் கிறீஸ்துநாதர் தம்மை முழுதும் உங்களுக்குக் கையளிக்கிறார்; அதில் தேவ வார்த்தையானவர் தம்மைத் தாமே கண்டுபிடிக்கக் கூடாத போசனமாக்குகிறார்; “பரலோகத் தின் மெய்யான அப்பத்தை வாங்கிப் புசியுங்கள்.” அதிலேதான் நம்பிக்கை, அதிலேதான் சீவியம், அதிலேதான் சிநேகத்தின் சம்பூரண மிருக்கிறது.